பொதிகை கல்வி
Aided School Teachers Association(ASTA) Reg.No 15/2015 J.THOMAS 9585577005 R.BALASUBRAMANIAN 9585656575 L.BHASKAR 9345658249
சனி, 7 ஜூலை, 2018
DIKSHA - New Syllabus QR code - Downloading Video - All Guide & Tutorial -Links
அனைத்து பள்ளிகளிலும் ஒரு மாதத்தில் BIO - METRIC ATTENDANCE - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!
இதுதொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்:
“அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகை பதிவு ஒருமாத காலத்தில் தொடங்கும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்டில் அதற்கானபணிகள் நிறைவடையும். காலையும், மாலையும் ஆசிரியர்கள் பயோ மெட்ரிக் முறையில் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்.

திங்கள், 11 ஜூன், 2018
கல்வித்துறையில் தமிழகம் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருக்கிறது -கவர்னர் பன்வாரிலால் புரோகித்
செயின்ட் ஜான்ஸ் பள்ளி குழுமங்களின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது.
விழாவுக்கு செயின்ட் ஜான்ஸ் பள்ளி குழுமங்களின் தலைவர் கிஷோர்குமார் தலைமை
தாங்கினார். மந்தைவெளி செயின்ட் ஜான்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர்
சுரேஷ்குமார், வில்லிவாக்கம் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியின்
தாளாளர் ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு
விருந்தினராக தமிழக கவர்னர் பன்வாரிலால் பங்கேற்றார். சிறப்பு
அழைப்பாளர்களாக வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், தமிழ்நாடு இசை
பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், செயின்ட் ஜான்ஸ் பள்ளி
முன்னாள் மாணவியுமான வீணை காயத்ரி, ஜி.எம்.ஆர். குழும கம்பெனிகளின்
இயக்குனர் ஜி.பி.எஸ்.ராஜூ ஆகியோர் பங்கேற்றனர். செயின்ட் ஜான்ஸ் பள்ளிகளின்
வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்
விருது வழங்கப்பட்டது. விருதினை பன்வாரிலால் புரோகித் வழங்கி கவுரவித்தார்.
முன்னதாக பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-
சுவாமி
விவேகானந்தர் கூறியபடி செயின்ட் ஜான்ஸ் கல்வி அறக்கட்டளை கல்வியை
மேம்படுத்த தங்களை அர்ப்பணித்து முக்கிய பங்களிப்பு அளித்து வருகிறது. நான்
கவர்னராக பொறுப்பு ஏற்று 8 மாதங்கள் ஆகின்றன. இதுவரையிலும் 17
மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளேன். கல்வித்துறையில் நமது மாநிலம்
பெற்றுள்ள வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. பள்ளிக்கு செல்லாமல் இடையில்
நிற்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
30
முதல் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் இருக்கிறார்கள். சுமார் 45
சதவீத மாணவர்கள் பள்ளி கல்வியை முடித்துவிட்டு மேல் படிப்புகளுக்கு
செல்கிறார்கள். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இங்கு ஏராளமான மருத்துவ
கல்லூரிகள் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. நாடு சுதந்திரம்
பெற்றதில் இருந்தே, தமிழக அரசு கல்வித்துறையை துடிப்புடன்
மேம்படுத்திவருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளை ஊக்குவிப்பதிலும் தமிழகம்
முன்னோடியாக திகழ்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
சமூக வலைத்தள மோசடியில் ஏமாறாமல் தப்பிப்பது எப்படி?
* மின்னஞ்சல்(இ-மெயில்) மூலம் பெறப்படும் வேலைவாய்ப்பில்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நேர்காணல் முடியும் முன்பு பணத்தை
செலுத்தக்கூடாது. வேலைவாய்ப்பு உண்மையானதா? என்று அசல் நிறுவனத்தின்
இணையதளத்தின் மூலம் சரிபார்க்க வேண்டும்.
*
குலுக்கல் பரிசு சீட்டு ‘இ-மெயில்’, ‘எஸ்.எம்.எஸ்.’ வந்தால் அதனை
நம்பக்கூடாது. பிளஸ் என்ற குறியீட்டுடன் ஆரம்பிக்கும் சில எண்களில்
இருந்துவரும் அழைப்புகள் மூலமே அதிகளவில் மோசடிகள் நடக்கின்றன. +92, +90,
+09 அல்லது +344 போன்ற தொடர்பு குறியீட்டு எண்களில் இருந்து அழைப்பு
வந்தால் நிராகரிக்க வேண்டும். திரும்ப அழைக்கவும் கூடாது.
*
இணையதளம் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும்போது பிற செயலிகளை
உபயோகப்படுத்தக் கூடாது. பொருட்களை பெற்ற பின் பணம் செலுத்தும் முறையே
இணையத்தள வழியில் பொருட்கள் வாங்குவோருக்கு சிறந்தது.
* குறைந்த வட்டி விகிதத்தில் கடன் தருகிறோம் என்று அழைப்பு வந்தால் அதனை நம்பக்கூடாது.
* கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.
*
பேஸ்-புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தலங்களில் சொந்த விவரங்களை பதிவு
செய்யக்கூடாது. அறிமுகம் இல்லாத நபர்களை இணையத்தள நண்பர்களாக
ஏற்றுக்கொள்ளக் கூடாது.
மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு சலுகை -தமிழக அரசு
அரசு துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் மாலை 5.45 மணிக்கு அலுவலகம்
முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது போக்குவரத்து மற்றும் கூட்ட
நெரிசலில் பேருந்தில் பயணம் செய்து வீட்டுக்கு செல்ல சிரமமாக உள்ளது. எனவே
மாலையில் முன்னதாக அலுவலகம் விட்டு வீடு செல்ல அனுமதி வழங்குமாறு அரசுக்கு
கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதுதொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த துறை தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை தொடர்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரிடம் குறிப்புரை கேட்ட போது, பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் தினமும் மாலையில் 15 நிமிடங்கள் முன்னதாகச் வீட்டுக்கு செல்ல அனுமதி வழங்கலாம் என பரிந்துரை செய்தார்.
மாற்றுத்திறனாளிகளுக் கான ஆணையரின் கருத்துருவை அரசு பரிசீலனை செய்தது. அதன் அடிப்படையில் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் தினமும் மாலையில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்ல அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த சலுகை குறித்து தலைமைச் செயலக அலுவலக நடைமுறை மற்றும் அரசு அலுவலக நடைமுறை நூல்களுக்கு தக்க திருத்தம் பின்னர் வெளியிடப்படும். இதுதொடர்பாக உத்தரவு நகல்கள் தலைமைச் செயலகத்தின் அனைத்து துறைச் செயலாளர்கள், துறை தலைவர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட நீதிபதிகள், ஐகோர்ட்டு பதிவாளர், ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர், சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயலாளர் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி வாரியமான, டி.ஆர்.பி., மூலம், 1,500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, ஒரு ...
-
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில்"தமிழ் கற்பித்தலில் அடிப்படைத் திறன்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் இரண்டு ந...