சனி, 31 டிசம்பர், 2016

புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடியின் உரை

புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடியின் உரை தற்போது தொடங்கியுள்ளது. ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்து 50 நாட்கள் முடிந்த நிலையில்,  ’தீபாவளி முடிந்த பின்பு, கறுப்பு பணத்தை ஒழிக்கும் தூய்மைக்கான யாகம் நடந்துள்ளது.
இதனால் நாட்டிற்கு நீண்ட கால பலன் கிடைக்கும் என்பது உறுதி. இந்த நடவடிக்கையை சிலர் அரசியலாக்கி விளையாடுகிறார்கள். நவம்பர் மாதத்திற்கு நாம் பல சவால்களை சந்தித்து வருகிறோம். மக்கள் தற்போது எதிர்கொண்ட துயரம் பிற்காலத்தில் பலனை தரும்.  கிராமங்களில் உள்ள சிறு சிறு பிரச்னைகள் முடிவுக்கு கொண்டு வரப்படும்.

மக்கள் தங்களது துக்கத்தை என்னுடன் பகிர்ந்துள்ளனர். விரைவில் வங்கிகளில் நிலைமை சீராகும். பண மதிப்பிழப்பு விவகாரம், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ரூ.500 மற்றும் 1,000 கறுப்பு பணமாக இருந்தது. அதை வைத்து தனி பொருளாதாரமே செயல்படுகிறது. கறுப்புபணம், கள்ளச் சந்தை, விலைவாசி ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். புழக்கத்தில் இருந்த கறுப்புப் பணம் தற்போது குறைந்துள்ளது.
தீமையை ஒழிக்க மக்களும், அரசும் இணைந்து போராடுவதே பண மதிப்பிழப்பு நடவடிக்கை. ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற துடிப்பு மக்களிடம் உள்ளது. நேரடி பண பரிவர்த்தனையை மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏழைகள் வாழ்க்கை முன்னேற இதுபோன்ற நடவடிக்கை தேவைப்படுகிறது. நாட்டில் 24 லட்சம் பேர்தான், தங்களது ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேலாக உள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். 
இந்த அரசு நேரடியாக மக்களின் நண்பான இருக்கிறது. தீய சக்திகள் நாட்டில் ஊடுருவுவதை நாம் தடுக்க வேண்டும். இந்த அரசு நேர்மையானவர்களை ஊக்குவிக்கும், நேர்மையற்றவர்களை திருத்தும். மக்களின் பொறுமையையும், துணிவையும் எண்ணி லால் பகதூர் சாஸ்திரி, ராம் மனோகர் லோஹியா போன்றோர் நிச்சயம் பெருமைபட்டு இருப்பார்கள் நேர்மையை கடைபிடிக்கும் மரபு காப்பாற்றப்பட்டு இருக்கிறது.  அதேபோல், காமராஜர் உயிரோடு இருந்திருந்தால் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டி இருப்பார்.
இறைவன் படைப்பில் மனிதன் நல்லவன் என்றாலும் தீமையின் பிடியில் சிக்குகிறான். குழந்தைகள் வன்முறை பாதையில் நுழைவதை தடுக்க வேண்டும். குறிப்பாக, தற்போது தொழில்நுட்ப உதவி மூலம் தவறு செய்வது தடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கும் கறுப்பு பணமே உதவியுள்ளது. விளிம்பு நிலை மக்களின் பொருளாதாராம் பலமடைந்தால், நாட்டின் பொருளாதாரமே பலமடையும்.
மக்களுடன் இணைந்து வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் பெரும் உதவி புரிந்து இருக்கிறார்கள். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தப்பிக்க முடியாது . தவறு செய்த வங்கி அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும். புதிய வருடத்தில் அரசு புதிய திட்டங்களை கொண்டுவர உள்ளது. 
நாடு சுதந்திரமடைந்து 60 வருடங்கள் ஆகியும் பல மக்கள் வீடுகள் இன்றி இருக்கின்றனர். பிரதம மந்திரி ஆவாஷ் யோஜன திட்டம் மூலம் ஏழைகளுக்கு 2 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அதன்படி, கிராமப்பகுதிகளில் ஏழைகளுக்கு வீட்டுக்கடன் வழங்கப்படும். இதில், ரூ. 9 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு 4 சதவீத வட்டியும், ரூ. 12 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு  3 சதவீதம் வட்டி விலக்கு அளிக்கப்படும். விவசாயிகள் கடனுக்கு மேலும் ரூ. 20,000 கோடி ஒதுக்கப்படும். விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு ரூபே கார்டுகளாக மாற்றப்படும். விவசாயிகளுக்கான கடன் மற்றும் மானியத்தொகை அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும். கடன் பெற்று விதை கொள்முதல் செய்தவர்களுக்கு 60 சதவீதம் வரிச்சலுகை செய்யப்படும். 
இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு கடன் வழங்க, வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறுவணிகர்களுக்கான வங்கி இருப்புத் தொகை உயர்த்தப்படும். சிறு வணிகர்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும்.
நாடு முழுவதும் 640 மாவட்டங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6,000 உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். இல்லத்தரசிகளுக்கும் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும்.
மூத்த குடிமகன்கள் வங்கிக் கணக்கில் ரூ. 7.5 லட்சம் பணத்தை 10 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால்,8 சதவீதம் வட்டி வழங்கப்படும். என்றார்.
ஆனால், நிலைமை 50 நாட்களில் சரியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், மோடி அதுகுறித்து பேசாதது சற்று வருத்தம்தான் என்றாலும், பட்ஜெட்டுக்கு முன்பாகவே பல திட்டங்களை அறிவித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் மோடி

ஜனவரி 1 முதல் ஏடிஎம்-களில் ரூ.4,500 எடுக்கலாம்

ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏடிஎம்-களில் நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், வங்கிகளில் நேரடியாக சென்று வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது.

ஏடிஎம்-மில் இருந்து ஒரு டெபிட் கார்டு மூலம் நாளொன்றுக்கு ரூ.2,500 வரை எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்க அனுமதிக்கப்படுகிறது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
அதே நேரத்தில் வங்கிகளில் நேரடியாக சென்று பணம் எடுக்கும்போது வாரத்துக்கு ரூ.24,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது.
ஆனால், இந்த 24,000 ரூபாய், புதிய 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த நவம்பர் 8-ஆம் தேதி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன் பிறகு ஏடிஎம்களில் நாளொன்றுக்கு ரூ.2,000 மட்டுமே எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

BHIM National Payments Corporation of India

CLICK HERE FOR BHIM ANDROID APP


டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஆதாருடன் இணைந்த புதிய ஆப்...'பீம்!' :டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்
செல்லாத ரூபாய் நோட்டுகளை டிபாசிட் செய்வதற்கு கடைசி நாளான நேற்று, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள, பயன்படுத்த எளிமையான, 'பீம்' எனப்படும் புதிய,' மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, ரொக்கப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.அடுத்தகட்டமாக, 'பீம்' என்ற பெயரில், புதிய மொபைல் ஆப், பிரதமர், நரேந்திர மோடியால் நேற்று, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டில்லியில் நேற்று நடந்த, டிஜிட்டல் பரிவர்த்தனை விழாவில், இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் மூலம், வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் எண் அடிப்படையில், கைவிரல் ரேகையை பதிவு செய்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.அதைத் தவிர, 'இ - வாலட்' எனப்படும், மின்னணு முறையில், பணப் பரிமாற்றம் செய்யவும், இந்த புதிய, 'ஆப்'பை பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த ஆப் பதிவிறக்கம் செய்து, நம் மொபைல் எண்ணை பதிவு செய்தால் போதும். நம் வங்கிக் கணக்கில் இருந்து, பணத்தை செலுத்துவதுடன், பணத்தையும் மிக சுலபமாக பெற முடியும்.ஆதார் மூலமாக பரிவர்த்தனை செய்யக் கூடிய இந்த மொபைல் ஆப், என்.பி.சி.ஐ., எனப்படும் தேசிய பரிவர்த்தனை வாரியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக பல்வேறு வங்கிகள் அறிமுகம் செய்துள்ள ஒருங்கிணைந்த பரிவர்த்தனை முறைகளுக்கும் பயன்படுத்தலாம்.''சட்டமேதை அம்பேத்கரின் நினைவாக, இந்த ஆப்புக்கு, பீம் என்றுபெயரிட்டுள்ளது,'' என,பிரதமர், நரேந்திர மோடி தெரிவித்தார்.இதன் அறிமுக விழாவில், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், போஸ்டர்கள், வாசகங்கள் உள்ளிட்டவற்றை வடிவமைத்தவர்களுக்கு, பிரதமர் மோடி பரிசளித்தார்.

மேலும், மத்திய அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட, டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்துவோருக்கு பரிசு அளிக்கும் திட்டத்தின்படி, முதல் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்குபரிசுகள் வழங்கப்பட்டன.விழிப்புணர்வு பிரசாரம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், 100 நாட்களுக்கு, 100 நகரங்களில், விழிப்புணர்வு விழாக்கள் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, அரசுக்கு, திட்டங்களுக்கான ஆலோசனைகளை வழங்கும், 'நிடி ஆயோக்' செய்து வருகிறது.பீம் மொபைல் ஆப் அறிமுக விழாவில், நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி, அமிதாப் காந்த் பேசுகையில், ''இன்னும் கொஞ்சம் காலம்தான்; இந்தியா டிஜிட்டல் மயமாகிவிடும். டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே என்ற நிலை மாறி வருகிறது. இதன் மூலம், ரொக்கப் பரிவர்த்தனை குறைவதால், ஊழல், லஞ்சம் போன்றவை இல்லாத சமூகமாக நாம் மாறி விடலாம்,'' என்றார்.'டவுண்லோடு' செய்வது எப்படி?மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 'பீம்' என்ற 'மொபைல் ஆப்'பை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த விளக்கம்:இந்த ஆப், ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிளின் ஐ.ஓ.எஸ்., எனப்படும் மென்பொருட்களில் இயங்கும் அனைத்து மொபைல்களிலும் பயன்படுத்தலாம்.எங்கிருந்து பதிவிறக்கம் செய்யலாம்?மொபைலில் உள்ள கூகுள் ஸ்டோர் என்ற செயலியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiappஎப்படி பயன்படுத்துவது?கூகுள் ஸ்டோரில், பீம் மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்த பிறகு, அதில், வங்கிக் கணக்கு குறித்த விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அதற்கான, ரகசிய குறியீட்டு எண்ணையும் பதிவு செய்து கொள்ளலாம். அதன்பிறகு, நம் மொபைல் போன் எண்தான், பரிவர்த்தனைக்கான முகமாக அமையும். இவ்வாறு பதிவு செய்த உடன், இந்த ஆப் பயன்படுத்தி, டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.ஆதார் அடிப்படையிலான பரிவர்த்தனை எப்படி நடக்கிறது?இந்த இ - வாலட் வசதியைத் தவிர, ஆதார் எண் அடிப்படையில், வங்கிக் கணக்கில் பதிவு செய்துள்ளவர்களும், கை விரலை பதிவு செய்து, பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

இதற்காக, வர்த்தகர்கள், தங்களுடைய மொபைலில், இந்த ஆப் பதிவிறக்கம் செய்வதுடன், கை விரல் ரேகையை பதிவு செய்யக் கூடிய கருவியை வைத்திருக்கலாம். அதில், நுகர்வோர், தங்களுடைய கை விரலை பதிவு செய்தால் போதும், நுகர்வோரின் மொபைலில் அதற்கான பரிவர்த்தனை செய்யலாம்.கடைக்கு செல்லும்போது, ஆதார் அட்டையை எடுத்து செல்ல வேண்டாம். மொபைல் போன் கையில் இல்லாவிட்டாலும், பரிவர்த்தனையை செய்ய முடியும்.பரிவர்த்தனைக்கு உச்சவரம்பு உள்ளதா?பீம் ஆப் மூலம், அதிகபட்சம், ஒரு பரிவர்த்தனைக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஒரு நாளில், 20 ஆயிரம் ரூபாய் வரையும் பயன்படுத்த முடியும்.இந்த ஆப் பயன்படுத்தி, எப்படி பணத்தை அனுப்பவது, பெறுவது?பீம் ஆப் பதிவிறக்கம் செய்து, அதில் நம் மொபைல் எண்ணை பதிவு செய்த பிறகு, இதேபோல் பதிவு செய்துள்ள நண்பர்கள், உறவினர்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து, மொபைல் எண்ணை குறிப்பிட்டு பணத்தை பெறலாம், அனுப்பலாம்.அனைத்து வங்கிகளுக்கும் இந்த வசதிஉள்ளதா?பெரும்பாலான பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிக் கணக்குகளில் இருந்து இந்த ஆப் மூலம் பணத்தை அனுப்பலாம், பெறலாம்எந்தெந்த மொழிகளில் உள்ளது?தற்போது, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது; விரைவில் பல்வேறு மொழிகளில் வர உள்ளது.எப்படி பயன்படுத்தலாம்?ஒரு கடையில் பொருட்களை வாங்கியபின், அதற்கான பணத்தை, இந்த ஆப் வைத்துள்ள அந்த வர்த்தகருடைய மொபைல் எண்ணைப் பெற்று உடனடியாக அனுப்பலாம். அந்த பணம், நம் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு, அவருடைய வங்கிக் கணக்கில் இருப்புவைக்கப்படும்.இ - வாலட்களை விட எப்படி சிறந்தது?தற்போது புழக்கத்தில் உள்ள பெரும்பாலான இ - வாலட்களில், நாம் பணத்தை முன்கூட்டியே, அதில் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

ஆனால், இந்த பீம் ஆப்பில், அது தேவையில்லை. நம் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணம் எடுத்துக் கொள்ளப்படும்.க்யூ.ஆர்., கோடு எனப்படும், குயிக் ரெஸ்பான்ஸ் கோடு மூலம், உடனடியாக பணத்தை பரிமாற்றம் செய்யும் குறியீட்டை, வர்த்தகர்கள் தாமாகவே உருவாக்கி கொள்ளும் வசதியும் உள்ளது. அதை, நம் போனில் இருந்து ஸ்கேன் செய்தால் போதும், பணத்தை அனுப்பி விடலாம்.சாதாரண போனில் பயன்படுத்த முடியுமா?ஆன்ட்ராய்டு போன் இல்லாவிட்டாலும், சாதாரண போனில் இருந்தும், இந்த வசதியை பயன்படுத்த முடியும். அதற்கு, உங்களுடைய போனில் இருந்து, *99# என்ற எண்ணை அழுத்தினால், அதில் விபரங்கள் வரும்.

அதனடிப்படையில் பரிவர்த்தனை செய்யலாம். இதற்கு இன்டர்நெட் வசதி தேவையில்லை.முக்கிய அம்சங்கள்டிஜிட்டல் பரிவர்த்தனையின் அடுத்தகட்டமாக, 'பீம்' எனப் பெயரிடப்பட்டுள்ள, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள, 'மொபைல் ஆப்'பை, பிரதமர், நரேந்திர மோடி, டில்லியில் நேற்று அறிமுகம் செய்தார்.இதன் சிறப்பம்சங்கள்:* வங்கிகள், வழக்கமான கிரெடிட், டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால், பீம் மொபைல் ஆப் பயன்படுத்தும் போது எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது* இந்த ஆப்பை, வர்த்தகர்கள், தங்களுடைய மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், 2,000 ரூபாய் மதிப்புள்ள, கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவியை வாங்கி கொள்ளலாம்* வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளவர்கள், இந்த ஆப்பை பதிவு செய்து கொள்ளலாம்.

வர்த்தக பயன்பாட்டுக்கான பரிவர்த்தனையின் போது கை விரல் ரேகையைப் பதிவு செய்தால் போதும், வங்கிக் கணக்கில் இருந்து வர்த்தகர்கணக்குக்கு பணம் சென்றுவிடும்* இந்த ஆப் மூலம் கார்டுகள், 'பாஸ்வேர்டு' எனப்படும் ரகசிய குறியீட்டு எண்போன்றவை தேவையில்லை. அதேபோல், மொபைலில் இன்டர்நெட் வசதியும் தேவையில்லை* நாடு முழுவதும், 100 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. அதில், 40 கோடி ஆதார் எண்கள், ஏற்கனவே வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளன* இந்த நிகழ்ச்சியில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோருக்கு பரிசளிக்கும் திட்டத்தின் கீழ், பரிசுகள்வழங்கப்பட்டன* சட்டமேதை அம்பேத்கரின் நினைவாக, இந்த, 'ஆப்'க்கு, பீம் என பெயரிடப்பட்டுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்தார்.முன்பெல்லாம், கட்டை விரலில் மையைத் தடவி, பரிமாற்றம் செய்தால், கைநாட்டு என்று கூறுவார்கள். ஆனால், அந்த கைநாட்டுதான், தற்போது நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு அடிப்படையாக அமைய உள்ளது.

கற்பித்தல் திறனை மேம்படுத்த பள்ளி ஆசிரியர்களுக்கு ஐனவரியில் சிறப்பு பயிற்சி: அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஏற்பாடு

தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்க ளின் கற்பித்தல் திறனை மேம்படுத்த ஜனவரியில் சிறப்பு பயிற்சி அளிக்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில்மாநில ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனமும் அனைவருக்கும் கல்வி இயக்ககமும் இணைந்து அவர்களுக்கு அவ்வப்போது பணியிடைப் பயிற்சியை அளித்துவருகின்றன.இந்த நிலையில், போட்டித்தேர்வு களுக்கு மாணவர்களை தயார்படுத்தவும், புரிதல் திறனை மேம்படுத்தவும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதம் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதுதொடர்பாக மாநில அனை வருக்கும் கல்வி திட்ட இயக்குநர்பூஜா குல்கர்னி, அனைத்து மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:மாநில அளவில் தொடக்க, நடு நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான புரிதல் மேம்பாட்டு புத்தாக்கப் பயிற்சி ஜனவரி 11-ம் தேதியும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு களுக்கான தயாரிப்பு பயிற்சி ஜனவரி 12-ம் தேதியும் நடைபெறும். கடந்த முறை மாநில அளவில் பங்கேற்ற கருத்தாளர்கள் இதில் பங்கேற்க வேண்டும்.

 மேலும், மாவட்ட அளவில் புரிதல் மேம்பாட்டு புத்தாக்கப்பயிற்சி தொடக்கநிலை ஆசிரி யர்களுக்கு ஜனவரி18-ம் தேதியும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வுகளுக்கான தயாரிப்பு பயிற்சி ஜனவரி 19-ம்தேதியும் நடத்தப் படும்.இதேபோல், குறுவள மைய அளவில் புரிதல் மேம்பாட்டு புத்தாக்கப்பயிற்சி தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு ஜனவரி 21-ம் தேதியும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வுக ளுக்கான தயாரிப்பு பயிற்சி ஜனவரி 22-ம் தேதியும் நடைபெறும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 27 டிசம்பர், 2016

வாழ்த்து

பாப்பாக்குடி உதவித்தொடக்கக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளர் திரு.கே.வி.ஆர். முருகன் அவர்கள் பணியிட மாறுதலாகிச் செல்வதையடுத்து  ASTA நிர்வாகிகள்  சந்தித்து வாழ்த்தினர்.



அரசு உதவிபெறும் பள்ளியில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது குறித்து உத்தரவு





அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள்: அமைச்சரிடம் கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமித்து 39,000 பட்டதாரிகளுக்கு வேலை அளிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாபா க.பாண்டியராஜனிடம் தமிழ்நாடு பி.எட். வேலையில்லாத கணினி பட்டதாரி ஆசிரியர்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலத்தில் அமைச்சரிடமும், முதல்வரின் தனிப் பிரிவிலும் சங்கத்தினர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-


அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சமச்சீர் கல்வியில் கொண்டு வந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப, கணினி ஆசிரியர் பணியிடங்களை நியமிக்க வேண்டும். தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தது ஒரு கணினி ஆசிரியரையாவது நியமிக்க வேண்டும்.

2006-ஆம் ஆண்டில் இருந்து புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல் நிலைப் பள்ளிகளில், கணினி பாடப்பிரிவை கொண்டு வர வேண்டும். இதனால், அரசு பள்ளியில் பயிலும் கிராம ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவர். மேலும், வேலையில்லாமல் இருக்கும் 39,000 பி.எட் கணினி அறிவியல் பட்டதாரி குடும்பங்களுக்கு வாழ்வளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு அனுமதி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அரசு மேல்நிலைப் பள்ளிக ளில் புதிதாக 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களை தோற்றுவிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு அனுமதி அளிக் கப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. நேரடி நியமனத்துக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு நடத்துகிறது. கடந்த 2015-16-ம் கல்வி ஆண்டில் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப அரசு அனுமதி அளித்தது. இதற் கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நேரத்திலும் வெளியிடலாம் என்ற சூழல் நிலவுகிறது.


ஆசிரியர் மாணவர் விகிதாச் சாரத்தின் அடிப்படையில் புதிதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க பள்ளிக்கல்வித்துறை அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. இந்த நிலையில், அனைத்து மாவட் டங்களிலும் சேர்த்து 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை புதிதாக தோற்று விக்க அரசு அனுமதி அளித்துள் ளது. இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறையின் முதன் மைச் செயலாளர் டி.சபீதா வெளி யிட்டுள்ளார்.

அதன்படி, தமிழ் பாடத்தில் 476, ஆங்கிலத்தில் 154, கணி தத்தில் 71, இயற்பியலில் 119, வேதியியலில் 125, வரலாறில் 73, பொருளாதாரத்தில் 166, வணிகவிய லில் 99 என புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிக பட்சமாக தமிழ் பாடத்தில்தான் அதிக பணியிடங்கள் (476) தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 1,591 முதுகலை பட்டதாரி பணி யிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வுக்கும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடி நியமனத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். அதன்படி, நேரடி நியமனத்துக்கு சுமார் 800 இடங்கள் ஒதுக்கப்படலாம். ஏற்கெனவே நேரடி நியமனத்துக்கு ஒதுக்கப்பட்ட காலியிடங்களான 1,062 இடங்களுக்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாததால், தற்போது புதிதாக உருவாகியுள்ள இடங்களையும் (800) சேர்த்து நேரடி நியமனம் மூலம் நிரப்பும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என தெரிகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை எதிர்பார்த்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் காத்திருக்கி றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கக் கூடிய தனியார் பயிற்சி மையங் களும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை எதிர்பார்த்துக் கொண் டிருக்கின்றன.

திங்கள், 26 டிசம்பர், 2016

அனைத்து பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை

அனைத்து பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை மட்டுமே இனி கட்டாய தேர்ச்சி முறையாக இருக்கும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது .
5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை மாற்ற மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கட்டாய தேர்ச்சி முறையால் கல்வி தரம் குறைவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

3G போனிலும் விரைவில் ரிலையன்ஸ் ஜியோ !!



ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகளை 3ஜி போனிலும் உபயோகிக்கும் வகையில் அதிவிரையில் ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் தயாரிக்கவிருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.


முகேஷ் அம்பானி தலைமையிலான
ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி தொலைத் தொடர்புச் சந்தையில் அறிமுகமானது. அறிமுகமான நான்கு மாதங்களில் சுமார் 5.5 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ நெட்வொர்க் ஈர்த்துள்ளது. மேலும், இந்த நிதியாண்டின் முடிவுக்குள் (மார்ச் 31) ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 10 கோடியாக உயர்த்த ஜியோ இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக சமீபத்தில் அதன் இலவச காலத்தை டிசம்பர் 31ஆம் தேதியிலிருந்து மார்ச் 31ஆம் தேதியாக நீட்டித்தது ஜியோ நிறுவனம்.
வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இலவசம் என்பதோடு ஜியோ 4ஜி நெட்வொர்க்கில் செயல்படுகிறது.

 எனவே 4ஜி ஏற்புடைய ஸ்மார்ட்போன்களில் மட்டுமே ஜியோ சிம் கார்டுகள் இயங்கும். இதற்காக புதிய 4ஜி ஸ்மார்ட்போன்களும் வாங்கப்படுகின்றன. எனினும், ஏற்கனவே 3ஜி ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களால் ஜியோவைப் பயன்படுத்த முடியவில்லை. இது அவர்களுக்கு ஒரு குறையாக இருப்பதோடு அவர்களால் 4ஜி ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாத சூழலும் இருக்கிறது. அதாவது மார்ச் மாதம் வரை இலவச இண்டர்நெட் வழங்கும் ஜியோவை 3ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களால் பயன்படுத்தமுடியவில்லை.
எனவே இக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், இதன்மூலம் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும் என்பதாலும் 3ஜி ஸ்மார்ட்போன்களுக்கான ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை ஜியோ நிறுவனம் வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலமாக 3ஜி ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்களும் ஜியோ சிம் கார்டைப் போட்டு உபயோகிக்க இயலும்.

வெள்ளி, 23 டிசம்பர், 2016

ஆசிரிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ASTA வின் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

ஆசிரிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ASTA வின் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

சீவலசமுத்திரம் சேகரம் -ஆசிரியர்கள் சபை ஊழியர்களின் கிருஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி

 சீவலசமுத்திரம்  சேகரம் -ஆசிரியர்கள் சபை ஊழியர்களின் கிருஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி  இன்று நடைபெற்றது.  விழாவிற்கு சேகரக் குருவானவர்  அருள்திரு. சுரேஷ்முத்துக்குமார்  அவர்கள் தலைமைவகித்தார்கள். புதுப்பட்டி தலைமையாசிரியர் திரு. அருள்மணி அகஸ்டின்,  ஓடைமறிச்சான் தலைமைஆசிரியர் திரு. ராஜம் ஜான், சீவலசமுத்திரம் தலைமையாசிரியர்  திரு. அலெக்சாண்டர்  மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.  ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. 

ஆசிரிய சகோதர சகோதரிகளுக்கு ASTA வின் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 




பாஸ்போர்ட் பெற புதிய விதிமுறைகள்


பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில்,கடந்த 21.01.1989க்கு பிறகு பிறந்தவர்கள், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, பிறப்பு சான்றிதழ் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற விதி தளர்த்தப்படுகிறது. அவர்கள், பிறந்த தேதியுடன் கூடிய கடைசியாக படித்த கல்வி நிறுவனங்கள் வழங்கும் மாற்று சான்றிதழ், பான்கார்டு எண், ஆதார் கார்டு எண், டிரைவிங் லைசென்ஸ், தேர்தல் அடையாள அட்டை, பொது காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிய, காப்பீடு ஆவணம் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம். அரசு பணியில் உள்ளவர்கள் பணி ஆவணம், பென்சன் உத்தரவு ஆவணம் ஆகியவற்றில் ஒன்றை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைனில் விண்ணப்பம் செய்பவர்கள், இனிமேல் தந்தை அல்லது தாயார் அல்லது பாதுகாவலர்கள் யாராவது ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டால்மட்டும் போதும். * பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்பவர்கள் நோட்டரி பப்ளிக், முதல் நிலை ஜூடிசியல் மாஸ்திரேட் போன்றவர்களிடம் அத்தாட்சி கையெழுத்து வாங்க தேவையில்லை. சுய சான்றிதழ் மட்டும் அளித்தால் போதும்.* திருமணமானவர்கள், திருமண சான்றிதழ் அளிக்க வேண்டிய கட்டாயமில்லை.* பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது கணவன்/ மனைவி பெயர்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. * பிறந்த தேதி தெரியாமல் காப்பகங்களில் வளர்ந்தவர்கள், தங்களது காப்பக தலைவரிடம் சான்று வாங்கி சமர்ப்பித்தால் போதும்.* உள்நாட்டில் தத்தெடுத்தவர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது, உறுதிமொழி அளித்து ஆவணம் வழங்கினால் போதும்.* உயர் அதிகாரிகளிடம் ஐடன்டி சர்டிபிகேட் வாங்க முடியாத அரசு ஊழியர்கள், அவசர தேவைக்காக உயரதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து சுய சான்றிதழ் அளித்தால் போதும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரியப்பனுக்கு ரூ.2 கோடி வழங்கினார் முதல்வர் ஓ.பி.எஸ்

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு ஊக்கத் தொகை 2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 2 கோடி ரூபாய்; வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 1 கோடி ரூபாய்; வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் என உயர்த்தி வழங்க 19.12.2011 அன்று ஆணையிட்டார். 
அதேபோன்று, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 30 லட்சம் ரூபாய், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் என ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கினார். பிரேசில் நாட்டின், ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாரா ஓலிம்பிக்ஸ் 2016 போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த த.மாரியப்பனுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு தமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று 10.9.2016 அன்று அறிவித்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பின்படி, பாரா ஓலிம்பிக்ஸ் 2016 போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற த.மாரியப்பனுக்கு உயரிய ஊக்கத் தொகையான 2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராஜேந்திர குமார், த. மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணா ஆகியோர் உடனிருந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.

NEET தமிழ் உள்பட 8 மொழிகளில் மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

2017-18-ம் கல்வி ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு தமிழ் உள்பட 8 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-


8 மொழிகளில் நுழைவுத்தேர்வு வருகிற 2017-2018-ம் கல்வி ஆண்டு முதல் அகில இந்திய அளவில் மருத்துவ இளநிலை பட்டப் படிப்புக்கான (எம்.பி.பி.எஸ்.) நுழைவுத்தேர்வை இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, வங்காளம், அசாமி ஆகிய 8 மொழிகளில் நடத்த மத்திய அரசு தீர்மானித்து உள்ளது மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநிலங்களில் உள்ள ஒதுக்கீட்டின் கீழ் சேர தகுதி பெறுவார்கள். நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை நடத்துவது குறித்து மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா டெல்லியில் கடந்த மே மாதம் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. சம வாய்ப்பு மாநில கல்வி வாரிய பாட திட்டத்தில் படித்து தேர்வான மாணவர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மருத்துவ கல்வியில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளை தவிர்க்கும் வகையிலும் மாநில மொழிகளில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அனைவருக்கும் கல்வி திட்டமானது RMSA உடன் இணைக்க மத்திய அரசு முடிவு.


DEE PROCEEDINGS- பணிமாறுதல் மூலம் புதிதாக பணியேற்றுள்ள AEEO -களுக்கு 26,27 டிசம்பர் ஆகிய இரண்டு நாட்கள் மேலாண்மை பயிற்சி -இயக்குநர் செயல்முறைகள்


ஊதியத்தை ரொக்கமாக வழங்குவதை தடை செய்யும் அவசரச் சட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கான ஊதியத்தை ரொக்கமாக வழங்குவதை தடை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியம் அளிப்பதை தடை செய்யும் அவசர சட்ட திருத்த மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காக கொண்டு வரப்பட்டது.

ஊழியர்களுக்கான ஊதியத்தை ரொக்கமாகக் கொடுக்காமல், ஆன்லைன் மற்றும் காசோலை மூலம் வழங்க அவசரச் சட்டம் வழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
ஊதியம் வழங்கல் சட்டம் 1936-இல் திருத்தம் மேற்கொள்வதற்காக மத்திய அரசு விரைவில் அவசர சட்டம் கொண்டுவர இருக்கிறது.

இதன்படி தொழில், வணிக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கான ஊதியத்தை மின்னணு முறையில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தவும், காசோலை மூலம் வழங்கவும் வேண்டும்.

இது தொடர்பான ஊதியம் வழங்கல் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கடந்த 15-ஆம் தேதி அமளிக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா இந்த மசோதாவை தாக்கல் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தால், 6 மாத காலத்துக்குள் நாடாளுமன்றத்தில் அதனை நிறைவேற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் தாரளமாகக் கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஊதியத்தை ரொக்கமாக அளிக்காமல், வங்கிக் கணக்கில் செலுத்தவும், காசோலையாக வழங்கவும் அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள் 1591 தோற்றுவிப்பு - மாவட்டம் / பாடம் வாரியான எண்ணிக்கை பட்டியல்




வியாழன், 22 டிசம்பர், 2016

புதிய தமிழக தலைமைச் செயலாளர் நியமனம்

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீட்டின் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் இன்று பிறப்பித்துள்ளதாக தமிழக முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
மேலும், நிர்வாக சீர்திருத்த ஆணையர் மற்றும் கண்காணிப்பு ஆணையர் பொறுப்பையும் கிரிஜா வைத்தியநாதன் கூடுதலாக கவனிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், ராமமோகன ராவ் நீக்கப்பட்டதாக தகவல் இதுவரை வெளியாகவில்லை.
1.7.1959ஆம் ஆண்டு பிறந்த கிரிஜா வைத்தியநாதன், 1981ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி. இவர் நலவாழ்வு பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

தமிழகத்தில் 770 அரசுப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் திட்டம் விரைவில் துவக்கம் அமைச்சர் பாண்டிராஜன் தகவல்

தமிழகத்தில் உள்ள 770 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.     தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி விதி எண் 110 ன் கீழ் பள்ளிக்கல்வித்துறையில் 770 பள்ளிகளில் மெய்நிகர் வகுப்பறைகள் அமைக்கப்படும் என அறிவித்தார். அப்போது,  தமிழக மாணவர்களுக்கு ஒரே வகையான தரமான கற்றல் கற்பித்தலைக் கொண்டு சேர்க்கும் வகையில் இன்றையத் தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு மெய்நிகர் வகுப்பறைகள் (விர்சுவல் கிளாஸ் ரூம்) ஏற்படுத்தப்படும்.

முதற்கட்டமாக 770 அரசுப் பள்ளிகளிலும், 11 மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் மெய்நிகர் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். மேலும், 11 மைய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலிருந்து நடத்தப்படும் வகுப்பறை செயல்பாடுகளை, இணையத் தொடர்பின் வாயிலாக கிராமப்புறப் பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளும் பெற்று மாணவர்கள் பயன்பெறுவர். இத்திட்டத்தினை செம்மையாக செயல்படுத்த கோயம்புத்தூர், பெரம்பலூர் மற்றும் தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு கட்டடங்கள் மற்றும் தளவாடங்கள், நூலகம் மற்றும் ஆய்வகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் . இதற்கென 33 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என கூறினார்.
அதனைத் தொடர்ந்து மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் சார்பில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 770 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் துவக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 11 மண்டலமாக பிரித்து இதற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த  மையத்திலோ அல்லது பள்ளிகளிலோ நடைபெறும் பாடத்தினைவகுப்பறையில் விடியோ கான்பரன்சிங் முறையில் பாடம் மாணவர்கள் கற்கலாம். இந்த முறையில் பெரும்பாலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் வகுப்புகள் ஆடியோ, வீடியோ, விசுவல் முறையில் நடத்தப்படும்.
இந்த வகுப்பறை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இணையத்தில் இணைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் பாடம் நடைபெறும்போது மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.    இந்த வகுப்பறை அமைக்க பள்ளியில் கணிப்பொறி, இணையம், யூபிஎஸ், பிராட்பேண்ட் வசதி கட்டாயம் இருக்க வேண்டும். இந்த வகுப்பு நடத்தப்படுவதன் மூலம் இதுவரை பாடங்களை மனப்பாடம் செய்த மாணவர்கள் இனிமேல் நேரடியாகவும்,செயல்முறையுடன் கூடிய பாடங்களை வீடியோ மூலம் பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் கற்றல் அறிவை மாணவர்களிடையே 100 சதவீதம் வளர்க்க முடியும். ஆங்கில அறிவும் எளிதில் கிடைக்கும் என்பதால் இந்த புதிய வகுப்பு முறை தமிழக பள்ளி கல்வித்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கான உபகரணங்கள் தற்பொழுது பள்ளிகளுக்கு அனுப்பபட்டு பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டிராஜன் கூறும்போது, தமிழகக்தில் 10,12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்கள் தேர்வினை எளிதாக எதிர்கொள்ளும் வகையில், விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில் துவக்கப்பட உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையிலும், மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு துவக்கப்படும் என தெரிவித்தார்

தமிழ் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது

தமிழ் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
திருநெல்வேலியைச் சேர்ந்த வண்ணதாசனின் இயற்பெயர் கல்யாணசுந்தரம். வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளும் எழுதிவருகிறார். வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரின் தந்தை மூத்த இலக்கியவாதியான தி.க.சிவசங்கரன் ஆவார். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் வண்ணதாசனுக்கு முக்கிய இடம் உண்டு. வாழ்க்கையின் நுணுக்கமான அம்சங்களைக் காட்சிகளாகத் தன் எழுத்தில் சித்தரிப்பதற்குப் பேர் போனவர்.
இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன். 2016-ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கலைமாமணி விருது பெற்றவர்.
நாவல், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், கடிதங்கள் உள்ளிட்ட பல தளங்களில் இயங்கிவருகிறார்.
எழுத்தாளர் வண்ணதாசன் 1962-ம் ஆண்டில் இருந்து இன்று வரை அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரின் பல சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 21 டிசம்பர், 2016

டிசம்பர் 30-க்கு பிறகு ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு தளர்த்தப்படும்

உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு முடிவைத் தொடர்ந்து அடுத்தடுத்துக் கட்டுப்பாடுகளாக விதித்துக் கொண்டிருந்த அருண் ஜேட்லி, ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை டிசம்பர் 30ம் தேதிக்கு மேல் தளர்த்த வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதித் துறை இணை அமைச்சர் சந்தோஷ் கங்வாலிடம், ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு தளர்த்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த சந்தோஷ் கங்வால், ஆமாம், நிச்சயமாக செய்யப்படும். இப்போதிருப்பது தாற்காலிகமானதுதான் என்று பதில் அளித்தார்.

எப்போது முதல் தளர்த்தப்படும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நானும் அதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என்று கூறினார்..

தற்போது, ஒரு வங்கிக் கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு ஏடிஎம்மில் அதிகபட்சமாக ரூ.2500 மட்டுமே எடுக்க முடியும். அதே சமயம், ஒரு வாரத்துக்கு ரூ.24,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

மின்னணு, செக் முறையில் சம்பளம் அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் செல் லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி வெளியிட்டது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் மக்களிடம் பணப்புழக்கம் ஏற்படுவதில் சிக்கல் நிலவுகிறது.அந்த சிக்கலை நிவர்த்தி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக  ரொக்கப் பணம் இல்லாமல் மின்னணு மூலம் பண பரிமாற்றம் செய்ய நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமை யில் டெல்லியில் இன்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இதற்கான அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.அனைத்து விதமான வர்த்தகத்திலும் மின்னணு மற்றும் செக் மூலம் பண பரிமாற்றம் செய்யவும், மத்திய அரசு ஊழியர்களுக்கு மின்னணு முறையில் சம்பளம் பட்டுவாடா செய்யவும் முடிவு செய்துள்ளது. 
இதற்கான அவசர சட்டம் விரைவில் பிறப்பிக்கப்படஉள்ளது.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

ரேஷன் கார்டில் 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்ட முடிவு

ஆதார் இணைப்பு பணி முழுமை பெறாததால், ரேஷன் கார்டில் அடுத்த 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்டி பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு பதிலாக, ‛ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வழங்குவதற்கான பணிகள் 320 கோடி செலவில் நடந்து வருகின்றன. எனினும், ஆதார் எண் இணைக்கும் பணி முழுமை பெறதாதால் ரேஷன் கார்டில் அடுத்த 6 மாதங்களுக்கு உள்தாள் ஒட்டி பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இதுவரை, 47 சதவீத கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்கள் வாங்கப்பட்டு உள்ளன. 46 சதவீத ரேஷன் கார்டுதாரர்களின் குடும்பங்களில், தலா ஒருவரின் ஆதார் எண் மட்டுமே பெறப்பட்டு உள்ளது.ஸ்மார்ட் கார்டு வடிவமைப்பு இன்னும் முடிவாகவில்லை. அது முடிவானதும், கார்டு அச்சிடும் பணி துவக்கப்படும்.

தற்போதைய சூழலில், புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டில் அடுத்த 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்டி பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

2018-ம் ஆண்டு முதல் சி.பி.எ.ஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது

2018-ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது என  சி.பி.எஸ்.இ. நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு வரை பொதுதேர்வு நடைப்பெற்றது. ஆனால் பல்வேறு காரணங்களுக்கு இந்த பொது தேர்வு நடைமுறை 2010-ஆம் ஆண்டோடு கைவிடப்பட்டது. இதனால் சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் நேரடியாக 12-ம் வகுப்பில் பொது தேர்வை ஏதிர்கொள்வதால் அவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக கல்வியாளர்கள் கருத்தை முன் வைத்தனர்.

இந்நிலையில், 2018-ம் ஆண்டு முதல் சி.பி.எ.ஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது என்றும், பொதுத்தேர்வை கட்டாயமாக்கும் பரிந்துரையை சி.பி.எஸ்.இ. நிர்வாகக்குழு ஏற்றதாத தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலையில் சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் தேர்வு எழுதலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மின்னணு பரிவர்த்தனையில் ஈடுபடும் சிறு வணிகர்களுக்கு வரிச்சலுகை: ஜேட்லி அறிவிப்பு

ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு நடவடிக்கையாக ரொக்கமற்ற பரிவர்த்தனையில் ஈடுபடும் சிறுவர்த்தகர்கள் குறைவான வரி செலுத்தலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

ஆண்டுக்கு ரூ.2 கோடி ரூபாய்க்குள் தொழில் செய்யும் சிறுவியாபாரிகள், வர்த்தகர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அனுமதிக்கும் பட்சத்தில் குறைவாக வரி செலுத்தினால் போதும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருக்கிறார்.

நடப்பு 2016-17-ம் நிதி ஆண்டில் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்குள் மொத்த வருமானம் இருக்கும் வணிகர்கள், தங்களது கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருக்காத பட்சத்தில் மொத்த வருமானத்தில் 8 சதவீத தொகைக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும்.

தற்போது இந்த விதிமுறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்திருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்தும் பட்சத்தில் மொத்த வருமானத்தில் 6 சதவீத தொகைக்கு மட்டும் வரி செலுத்தினால் போதும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் பணப்பரிவர்த்தனைகள் மட்டுமே செய்யும் நிறுவனம் மொத்த வருமானத்தில் 8 சதவீத தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.

டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமான இந்த 2 சதவீத சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த 2 சதவீதம் என்பது சிறு வணிகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என அருண் ஜேட்லி கூறினார்.

பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து 24-ந்தேதி முதல் 9 நாட்கள் விடுமுறை


பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து 24-ந்தேதி முதல் 9 நாட்கள் விடுமுறை 2-ந் தேதி முதல் விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு |  பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து 24-ந்தேதி முதல் 9 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. 
பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2-ந்தேதி திறக்கப்படும் அன்றே மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.பாடப்புத்தகங்கள் மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதற்காக அந்தந்த பருவத்திற்கான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 3-ம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஜனவரி 2-ந்தேதி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இப்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வுகள் 23-ந்தேதி முடிவடைந்து 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அன்றே மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.28-ந்தேதிக்குள் அனுப்ப ஏற்பாடு அதற்காக தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக தலைவர் மைதிலி ராஜேந்திரன் உத்தரவுப்படி செயலாளர் கார்மேகம் மற்றும் பாடநூல் கழக அலுவலர்கள் 60 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்க பாட நூல்கள், மற்றும் நோட்டு புத்தகங்களை அச்சடித்து அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.


பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறுகையில், அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அன்றே மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தங்களும், நோட்டுகளும் வழங்கப்பட உள்ளது. அதற்காக 28-ந்தேதிக்குள் மாவட்ட கல்வி அதிகாரிகள் அவைகளை பள்ளிகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு காஸ் மானியம் ரத்தாகிறது

ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு சமையல் காஸ் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வருமான வரித்துறை, பெட்ரோலிய அமைச்சகத்துடன் விரைவில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது. இதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் பெயர், பான் எண், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கும். இதன்மூலம், ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு தானாகவே சமையல் காஸ் மானியம் ரத்து செய்யப்படும் எனத் தெரிகிறது.
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோர் தாமாக முன்வந்து காஸ் மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் வெகுசிலரே தாமாக முன்வந்து விட்டுக்கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: தமிழகம் முதலிடம்: அமைச்சர் கே.பாண்டியராஜன் பெருமிதம்

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார். சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 10,000 சதுர அடியில் ரூ.1.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பாண்டியராஜன் ஆகியோர் திங்கள்கிழமை திறந்து வைத்தனர். பின்னர் விழாவில் அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியது:


தற்போதைய சூழலில் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் 5 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமே மாணவர் சேர்க்கை 1 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 100 மாணவர்களில் 99 பேர் 6 -ஆம் வகுப்பையும், 95 சதவீதம் பேர் 10 -ஆம் வகுப்பையும், 80 சதவீதம் பேர் பிளஸ் 2 வகுப்பையும் நிறைவு செய்கின்றனர்.

அமெரிக்காவில் கூட கல்லூரி படிப்பை 100 -க்கு 30 சதவீதம் பேர் மட்டுமே நிறைவு செய்யும் நிலையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் 45 சதவீதம் பேர் கல்லூரி படிப்பை நிறைவு செய்கின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் இதை 50 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பள்ளிக் கல்வியில் மதிப்பெண்ணுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் மாணவர்களின் கற்கும் திறனை வெளிப்படுத்தச் செய்வது, படிப்பு தவிர தனித்திறனை வளர்க்கும் செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துவது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பிளஸ் 2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றார் அவர். விழாவில் அமைச்சர் பெஞ்சமின், அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலெக்ஸாண்டர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுஎழுதும் மாணவர்கள், மதிப்பெண், டிசி உள்ளிட்ட வற்றில் இடம் பெறும் பெயர், இனிஷியல், பிறந்த தேதி ஆகியவை சரியாக உள்ளதா என்பதை திருத்தம் செய்வதற்கான கடைசி வாய்ப்பை தேர்வுத் துறை வழங்க உள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுஎழுதும் மாணவர்கள், மதிப்பெண், டிசி உள்ளிட்ட வற்றில் இடம் பெறும் பெயர், இனிஷியல், பிறந்த தேதி ஆகியவை சரியாக உள்ளதா என்பதை திருத்தம் செய்வதற்கான கடைசி வாய்ப்பை தேர்வுத் துறை வழங்க உள்ளது.


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8ம் தேதியும் தொடங்க உள்ளன. இத்தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தயாரித்தனர். அவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அந்த பட்டியல்கள் தற்போது தேர்வுத்துறையில் உள்ளது. அவற்றின் அடிப்படையில் கடந்த 16ம் தேதி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், மாணவர்களின் இனிஷியல் பிரச்னை, பிறந்த தேதி, வயது, ஊர், பெற்றோர் பெயர் உள்ளிட்டவற்றில் சில சந்தேகங்கள் இருப்பதாக தேர்வுத்துறை கருதுகிறது.

அதனால் பள்ளிகள் மூலம் வரப் பெற்ற மாணவர்கள் பட்டியல்களை திரும்பவும் பள்ளிகளுக்குஅனுப்பி உரிய முறையில் திருத்தம் செய்ய தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.இதற்கான அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. திருத்தம் செய்ய இதுதான் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்பதால், மாணவர்கள் தங்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் நியமனம் 4-ந் தேதி பதவி ஏற்கிறார்

சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ஜே.எஸ்.கேஹர் நியமிக்கப்பட்டார். அவர் ஜனவரி 4-ந் தேதி பதவி ஏற்கிறார்.

நியமனம்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் ஜனவரி 3-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அவர், அடுத்த தலைமை நீதிபதியாக, தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி ஜே.எஸ்.கேஹர் நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு சமீபத்தில் சிபாரிசு செய்திருந்தார்.

அதை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டு, ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்தது.

இந்நிலையில், புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் நேற்று நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபற்றிய அறிவிக்கையை, நீதிபதி ஜே.எஸ்.கேஹரிடம் நீதித்துறை உயர் அதிகாரி ஒருவர் இன்று காலை ஒப்படைக்கிறார்.

பதவி ஏற்கிறார்

நீதிபதி ஜே.எஸ்.கேஹர், ஜனவரி 4-ந் தேதி, சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார். அவர் நாட்டின் 44-வது தலைமை நீதிபதி ஆவார். 64 வயதான அவர், ஆகஸ்டு 27-ந் தேதிவரை, 7 மாதங்கள் மட்டுமே அப்பதவியில் இருப்பார். தலைமை நீதிபதி ஆகும் முதலாவது சீக்கியரும் இவரே ஆவார்.

நீதிபதி ஜே.எஸ்.கேஹரின் முழுப்பெயர் ஜெகதீஷ் சிங் கேஹர்.

தீர்ப்புகள்

நீதிபதிகள் நியமனம் தொடர்பான நீதித்துறை நியமன ஆணைய சட்டத்தை செல்லாது என்று தீர்ப்பு அளித்த 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சட்ட அமர்வின் தலைவராக செயல்பட்டவர், ஜே.எஸ்.கேஹரே ஆவார். கடந்த ஜனவரி மாதம், அருணாசலபிரதேச மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது செல்லாது என்று தீர்ப்பு அளித்தது, இவர் தலைமையிலான அமர்வுதான்.

சஹாரா நிறுவன தலைவர் சுப்ரதா ராயை ஜெயிலுக்கு அனுப்பிய உத்தரவை பிறப்பித்த அமர்விலும் இவர் இடம்பெற்று இருந்தார். 

பழைய ரூபாய் நோட்டுகளை ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்ய கடும் கட்டுப்பாடு புதிய நிபந்தனைகள் விதித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை 5 ஆயிரத்துக்கும் அதிகமாக வங்கிகளில் டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனைகளை விதித்து உள்ளது.

பழைய நோட்டு செல்லாது

கடந்த மாதம் 8-ந் தேதி உயர் மதிப்பு கொண்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை தடுக்கவும் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக மத்திய அரசு கூறியது.

உயர் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் டிசம்பர் 30-ந் தேதி வரை டெபாசிட் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதில் ரூ.2½ லட்சத்துக்கும் அதிகமாக பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்படும்போது, வரிவிதிப்பு முறை பின்பற்றப்படுவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தன.

புதிய நிபந்தனைகள்

இந்த நிலையில் கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கையை இன்னும் தீவிரப்படுத்தும் விதமாக பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு ரிசர்வ் வங்கி நேற்று மேலும் சில கடுமையான நிபந்தனைகளை விதித்தது. வங்கி கணக்குகளில் கருப்பு பணம் டெபாசிட் ஆகாமல் தடுப்பதற்காக இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.

இதுபற்றி ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ரூ.5 ஆயிரம் டெபாசிட்

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருக்கும் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் இனி நாள் ஒன்றுக்கு தனது கணக்கில் அதிகபட்சமாக ரூ.5,000 வரை டெபாசிட் செய்யலாம்.

அது குறித்து எந்த கேள்வியும் வங்கியால் கேட்கப்படமாட்டாது. அறிவிக்கப்பட்டு உள்ள காலக்கெடுவான டிசம்பர் 30-ந் தேதிக்குள் இதுபோல் பணத்தை செலுத்தலாம். இந்த தொகை அதுவரை வரவில் மட்டுமே வைக்கப்படும்.

ஒரே ஒரு முறைதான்

அதே நேரம், ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாடிக்கையாளர் தனது கணக்கில் இனி டெபாசிட் செய்தால் டிசம்பர் 30-ந் தேதிக்குள் அவரால் ஒரே ஒரு முறை மட்டுமே இதுபோல் பணத்தை செலுத்த முடியும்.

தவிர, ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை பழைய ரூபாய் நோட்டுகளாக டெபாசிட் செய்யும்போது அந்த பணத்தை அதுவரை மாற்றிக்கொள்ளாததற்கு உரிய காரணத்தையும் வாடிக்கையாளர் வங்கி அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும்.

அந்த காரணத்தை வங்கி அதிகாரிகள் இருவர், வாடிக்கையாளரிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து கொள்வார்கள். பின்வரும் காலங்களில் தணிக்கை பரிசோதனைக்கு இந்த விளக்கம் உதவுவதாக அமையும்.

ஒட்டுமொத்த கணக்கு

ரூ.5 ஆயிரத்துக்கும் குறைவான தொகைக்கு பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும்போது, டிசம்பர் 30-ந் தேதி வரை அதுபோல் அடுத்தடுத்து டெபாசிட் செய்யும் பணத்துடன் அந்த தொகை ஒட்டுமொத்தமாக சேர்த்து கணக்கிடப்படும்.

இதில் பழைய ரூபாய் நோட்டுகளாக செலுத்திய மொத்த தொகை ரூ.5 ஆயிரத்துக்கும் மேற்பட்டு இருந்தால், அது தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்த தொகையாக கணக்கிடப்படும்.

3-வது நபர் அவசியம்

அதேபோல் 3-ம் நபர் கணக்கில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும்போது அது 3-வது நபரின் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும். இப்படி பணம் டெபாசிட் செய்யும்போது 3-வது நபரும் உடன் இருக்கவேண்டும்.

பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த திட்டத்தின் கீழும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பட்டியலிடப்பட்ட 29 வங்கிகளில் டெபாசிட் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.

கரிப் யோஜனா திட்டம்

பிரதம மந்திரி கரிப் யோஜனா திட்டத்தின்படி கணக்கில் காட்டாத தொகையை மார்ச் 31-ந் தேதி முடிய டெபாசிட் செய்து 50 சதவீதம் வரி மற்றும் அபராதம் செலுத்தி அந்த தொகையை வெள்ளையாக மாற்றிக்கொள்ள முடியும்.

இதன் மொத்த தொகையில் 25 சதவீதத்தை 4 ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத டெபாசிட்டாக வாடிக்கையாளர்கள் வைத்திருக்கவேண்டும். வரி ஏய்ப்பு செய்து பதுக்கிய கருப்பு பணத்துக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.