வெள்ளி, 1 டிசம்பர், 2017

பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை - இயக்குநர் செயல்முறைகள்

பள்ளி, கல்லூரிகளில் கண்காட்சிக்கு தடை: மாணவன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில், அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி, பொருட்காட்சி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தை சேர்ந்த கதிர்வேல் என்ற மாணவன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தவழக்கில், வரும் 3-ஆம் தேதி திருப்பூரில் உள்ள சிக்கன்னா அரசு கலை கல்லூரியில் 45 நாட்கள் அரசு கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரியில் கண்காட்சி நடத்தினால் வகுப்புகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், கண்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை இன்று வெள்ளிக்கிழமை நீதிபதி கிருபாகரன் தலைமையினா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கண்காட்சி நடத்துவதற்கு 90 சதவீத ஏற்பாடுகள் முடிவடைந்துவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ப்பட்டுள்ளதால் திருப்பூர் சிக்கன்னா அரசு கலை கல்லூரியில் கண்காட்சி நடத்த தடை விதிக்க முடியாது.மேலும் வரும் காலங்களில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொருட்காட்சி மற்றும் கண்காட்சி நடத்ததடை விதிப்பதாக அறிவித்த நீதிபதி, இதுகுறித்து அரசு விதிமுறைகள் வகுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

புதன், 22 நவம்பர், 2017

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த ஐகோர்ட் உத்தரவு!

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதி குறித்து திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து பினாக பாணி என்பவர் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும்அடிப்படை வசதி குறித்து திடீர் ஆய்வு நடத்த வேண்டும்என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2004-ம் ஆண்டு கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கையின் படி, சம்பவத்திற்கு காரணமானவர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதேபோல தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும், 2002-2004 வரை மாவட்ட கல்வி அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வகித்த பினாகபாணி, தீ விபத்துக்குள்ளான பள்ளியை ஆய்வு செய்ய தவறி விட்டதாக கூறி அவரை பணிநீக்கம் செய்து 2012-ல் பள்ளி கல்விதுறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இந்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும், தனக்கு பணி பயன் வழங்க வேண்டும் என கோரியும் உயர்நீதிமன்றத்தில் பினாகபாணி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை நீதிபதி முரளிதரன் விசாரித்தார். அப்போது, மனுதாரரை மட்டுமே குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அரசு சார்பில், தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்படி பள்ளியை ஆய்வு செய்யமனுதாரரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் பள்ளியை முழுமையாக ஆய்வு செய்யாமல் மெத்தன போக்குடன்செயல்பட்டதால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும் 12 அதிகாரிகளின் மேல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் 6 பேர் மீது குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை, 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரருடன் பணியாற்றிய 5 பேர் நடவடிக்கையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 இவருக்கு முன் பணியாற்றிய தலைமை கல்வி அதிகாரி தான் அந்த பள்ளிக்கு அங்கீகாரம்வழங்கியுள்ளார். அதனால் இவர் மீதான நடவடிக்கை தன்னிச்சையானது. அதனால் இவரை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, 8 வாரங்களுக்குள் இவரை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராக கருதி, இவருக்கு சேர வேண்டிய பண பலனை வழங்க உத்தரவிட்டார்.மேலும், கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்றாலும் அதில் பாதுகாப்பான முறையில் கல்வி பெறுவது அடங்கும்.

பள்ளிகள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என கருத்துதெரிவித்த நீதிபதி விதிகளின்படி அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் வழங்க பெற்றுள்ளதா எனஅரசு திடீர் சோதனை நடத்த வேண்டும். விதிமீறல்கள் இருந்தால் அந்த பள்ளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் சொத்துக்களான குழுந்தைகளுக்கு பாதுகாப்பன சூழ்நிலையை வழங்க வேண்டியது அரசின் கடமை எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

சனி, 18 நவம்பர், 2017

தலைமை ஆசிரியர்களுக்கு எகிறும் சம்பளம் : கூடுதல் பொறுப்பு வழங்க அரசு திட்டம்

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், 1.25 லட்சம் ரூபாய் சம்பளம் பெற உள்ளனர். அதனால், அவர்களுக்கு கூடுதல் பணி வழங்க, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில், 57 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், 1.30 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளில், 5.58 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆறு லட்சம் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதை கணக்கிடும் போது, அதிகபட்சமாக, 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் உயர்ந்துள்ளது. இதைக் கண்டு, அதிகாரிகளே அதிர்ச்சியில் உள்ளனர். இத்துறையின் அதிகாரிகளுக்கே, அதிகபட்சம், 90 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் கிடைக்கும் நிலையில், தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுவது, பள்ளிக்கல்வி, நிதித்துறை அதிகாரிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இந்த சம்பள உயர்வால், அரசுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில், தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கலாம் என, ஆலோசனை நடந்து வருகிறது.
நகர, ஊரக பகுதிகளில், மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, கூடுதலாக சில பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் இணைத்து வழங்கலாமா அல்லது கல்வி அலுவலக பொறுப்புகளை பகிர்ந்தளிக்கலாமா என, ஆலோசனை நடந்துள்ளது.
அதேபோல், மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கும், கூடுதல் பாட வகுப்புகள் மற்றும் சிறப்பு பயிற்சி பணிகள் வழங்குவது குறித்து, அதிகாரிகள் பரிசீலினை செய்வதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

கற்றல் விளைவுகள் பயிற்சி ஒத்திவைப்பு

G.O Ms 224 - 04.11.2017 - பொது நிகழ்ச்சிகள் மற்றும் வெளி நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்லுதல் குறித்து -சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டலின் படி பள்ளிக்கல்வி துறைக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு

சனி, 11 நவம்பர், 2017

NAS 2017 - தேர்வு (13/11/2017) அன்று ஆசிரியர்களின் பணிகள்

+ Date: 13/11/2017

+ Shambling schools HM BRC யில் வினாத்தாள் வாங்கி செல்ல வேண்டும்

+ Survey யின் போது ஆசிரியர் & மாணவர் 100% வருகை தரவேண்டும்


+ Field Investigaters பணிகள்
1) தேர்வை நடத்துவது
2) 3 க்கும் 5 க்கும் OMR sheets நிரப்புவது
3) ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் Interview எடுத்து பதிதல்


+ தயார்நிலையில் இருக்க வேண்டியவை:
1) பள்ளியின் U-DISE NO
2)மாணவர்களின் DOB /ஆதார் என் / சேர்ந்த ஆண்டு / Community / special need

+ NAS questioner ஐ போட்டோ /Xerox /எடுப்பதும் what's app ல் அனுப்புவதும் தடை செய்யப்பட்டு உள்ளது

+ உதவுவோரும் உரியோரும் தண்டிக்கப் படுவர்

+ Monitoring officers:
DEE / DSE / SCERT / NCERT / MHRD அலுவலர்கள்

+ Supervising Flying squad:
BDO / REVENUE துறை அலுவலர்கள்

+ FIELD INVESTIGATER :
B.Ed பயிற்சி மாணவர்கள்

+ Portion: ஆங்கிலம் தவிர்த்த பிற பாடங்கள்

செவ்வாய், 31 அக்டோபர், 2017

கனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

* தஞ்சாவூர்  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

* திருவாரூர்  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

* விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

* கடலூர் மாவட்டத்தில் ஒன்பது ஒன்றிய பள்ளிகளுக்கு மட்டும் (கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம்) நாளை விடுமுறை

* நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை


* கனமழை எதிரொலி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு  பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
* சென்னை மாவட்ட   பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
* திருவள்ளூர் மாவட்டத்திற்கு  பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

* காரைக்கால் மற்றும் புதுச்சேரி - அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

திங்கள், 30 அக்டோபர், 2017

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பாதிப்புகள் பற்றி புகார் தெரிவிக்க உதவி எண்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை பாதிப்புகள் பற்றி 1077 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் கூறலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  044-27664177, 27666746  என்ற எண்களில் புகார் கூறலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவமழை பாதிப்புகள் பற்றி 1077 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் கூறலாம், 044-27237107, 27237207 என்ற எண்களில் புகார் கூறலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 

 வடகிழக்கு பருவமழை தொடர்பான புகார்களை பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1913 மூலமும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044-25367823, 25384965, 25383694 25619206 மூலமும் வாட்ஸ்-அப் எண்கள் 9445477662 மற்றும் 9445477205 மூலமும் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. சென்னையில் கனமழையால் மழைநீர் தேக்கம், தண்ணீர் அடைப்பு தொடர்பாக 105 புகார்கள் பெறப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TN 7th PAY COMMISSION - IMPLEMAENTATION TOSALARY - ORDERS ISSUED

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள்: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடி உத்தரவு.

தமிழகத்தில் சமீபகாலமாக பழமையான பராமரிக்கப்படாத கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்கள் குறித்தும், அதனை இடிப்பது குறித்தும் அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

கட்டிடம் இடிந்து விழுந்து இனியும் ஒரு உயிர் கூட பலியாக கூடாது என்று தமிழக அரசின் அனைத்து துறைகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அனைத்து துறை செயலர்களுக்கு அறிவுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி பார்வை அறிக்கை படிவம் ( Surprise visit Form)

NMMS online entry செய்ய அனைத்து மாவட்டத்திற்கும் user id & password

சனி, 21 அக்டோபர், 2017

7வது ஊதியக்குழுவில் ஊதியஉயர்வு, ஊதிய நகர்வு சில தகவல்கள்

ஊதியஉயர்வுorஊதியநகர்வு
=========================

 1) வளரூதியம்(Increment)
      ===================
Increment கணக்கீட்டில் நாம்  3%கணக்கிடும்போது, அவ்வாரு வரும், புதியஅடிப்படை ஊதியம்தான்  ஊதியஅணியில் (paymatrix) நமக்கான நிலைக்குநேராக மேலிருந்துகீழ் தொடா்ச்சியாக கொடுக்கப்பட்டுள்ளது,
என்பதால் இனி Increment சமயங்களில் தனியாக கணக்கீடுகள் மேற்கொள்ள
தேவை இல்லை.

எனவே 3% Increment எணில் தற்போது பெரும் புதிய ஊதியத்திற்கு அடுத்த ஊதியத்தைப் புதிய அடிப்படை ஊதியமாக எடுத்து கொள்ளவேண்டும்.

2)ஊக்கவளரூதியம்(Incentive)
    =======================
      ஊக்க வளரூதியம் எனில் 3%+3% தற்போது பெரும் புதியஊதியத்திறக்கு அடுத்த இரண்டாவது ஊதியத்தை எ.டு;10 ம் Pay cell ஊதியம் பெற்றால் 12ஆம் Pay Cell ஊதியத்தை அடிப்படை ஊதியமாக எடுத்துக்கொள்ள வேண்டும்

3)தோ்வுநிலை(Selectiongrade)
    =======================

4) சிறப்புநிலை(Specialgrade)
    =======================
         Rs 1300முதல்Rs 5700 வரையிலான தரஊதியம்(Gp) அதாவது Level 1 முதல் 23 வரை நமது துறையைப் பொருத்தவரை OA முதல் Add.To &AO வரை ஒரே பணியிடத்தில் 10 ஆண்டுகள் (தோ்வுநிலை)20 ஆண்டுகள் (சிறப்புநிலை)பணிபுரிந்தால், வழக்கத்தின்படியே 3%+3%, ஊதியஉயர்வு பெற்றுக்கொள்ளலாம்.

எனவே இதனையும் தனியே கூட்டிப் பெருக்காமல்,ஒவ்வொரு 3%திற்கும் ஊதியஅணியில் (Paymatrix)தான் உள்ள ஊதிய நிலையின் அடுத்த ஊதியத்திற்கு நகா்ந்து விடலாம்.இது3%+3% என்பதால் ஊதிய அணியில்
(Paymatrix) தற்போதுபெற்றுள்ள புதிய ஊதீயத்திலிருந்து2வது ஊதியத்திற்கு நகர வேண்டும்.

அதாவது 12 ஆம் Pay cellஐ அடிப்படையாக கொண்ட நபர் 14 ஆம் அணிஊதியத்திற்கு நகர்ந்து அதையே அடிப்படை ஊதியமாகப் பெருவாா்.

5)தேக்கவளரூதியம்(Stagnaton Increment)
     ========
                    
தரஊதியம் Rs. 6000முதல் 10000 அதாவது (Level 24 முதல் 32 வரை) உள்ளோா்.நமது துறையைப் பொருத்தவரை கரூவூல அலுவலா்&CAO பணியிடம் மற்றும் அதற்கும் மேல் உள்ள பணியிடங்களில்,ஒரே பணியிடத்தில் தொடா்ந்து 10 ஆண்டுகள் பணி முடித்தால் ஒவ்வொரு 10 ஆண்டு முடிவிலும்,3%தேக்க வளரூதியம் அனுமதிக்கபடும்.அவரது நிலையில், 14 ஆம்அணி ஊதியம்(PayCell) பெருபவர் 15 ஆம் அணிஊதியத்திற்கு(Paycell) நகர்த்ப்படுவாா்.

6)வெகுமதி வளரூதியம்
 ========= ===========
(Bonus Increment)
===============
 ஒரே பணியிடத்தில் தொடா்ந்து 30 ஆண்டுகள் பணிமுடித்திருந்தால்,30 ஆம்
ஆண்டு முடிவில் 3%Bonus Increment அனுமதிக்கப்படும். Paymarrix ல் உள்ள Paycellல் 15 ஆம் அணி(PayCell) ஊதியம் பெருபவர் 16 ஆம் நிலை ஊதியத்திற்கு நகா்த்தப்படுவாா்.

7)கூடுதல் வளரூதியம்
    =================
    (Additional Increment)
    ==================
         01.01.2016 ல்  பழைய ஊதிய அடிப்படையில் தனது நிலைக்கான உச்சபச்சஊதியத்தை, அடைந்தால் அதாவது 5200−20200 என்பதில் 20200
என்ற உச்சபச்சத்தை அடைந்ததால் 2 ஆண்டுகள் ஊதிய உயர்வின்றி இருப்பவருக்கு 01.01.2016 ல் புதிய ஊதியத்தை நிர்ணயித்தபிண் கூடுதலாக
ஒரு 3% Increment அளிக்கவேண்டும்.இவர் 2 ஆண்டிற்கும் மேலாக இதே நிலையில் (20200) இருந்திருப்பாரேயானால் .ஒவ்வொரு 2ஆண்டு முடிவிற்கும்3% Increment அனுமதித்து புதிய ஊதியம் நிர்ணயிக்கப்படவேண்டும்.

8)முத்தோா் இளையோா் ஊதிய முரண்பாடு
    ==================
(Junior get MorePay)
=======================

இதற்கு 3%Increment மட்டும் அனுமதிக்கப்படும். அதாவது இளையோரை விட
முதியவருக்கு Pay Cellல் ஒரு Cell அதிகரிக்கப்படும். இளையோா் 15 ஆம் PayCell என்றால் மூத்தோா்16 ம் Pay செல்லில் வைக்கபடுவாா்.

9)தனிஊதியம்( Personal Pay)
   =======================
        ஆசிரியர்,BDO, Thashiltar, போன்றோா் பெற்றுவந்த தனிஊதியம் 500&750 தொகையானது 1300&2000 மாக உயர்த்தபட்டுள்ளது. ஆனால் 6 ம் ஊதியக்குமு
போன்று 7 ம் ஊதியக்குமுவில் தனி ஊதியஉயர்வு கணக்கீட்டிற்கு,(எந்தவிதமான ஊதியஉயர்வு கணக்கிட்டிற்கும்), இத்தொகையை எடுத்துக்கொள்ளக்கூடாது.

10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் உள்ள ஆசிரியர்கள் பட்டியல் சேகரிக்க உத்தரவு.

23ம் தேதி முதல் ஆலோசனை துவக்கம்

தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, சென்னையில் நடக்கிறது.
தமிழகத்தில், 24 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில், 63 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். ௨௩ மாணவர்களுக்கு, ஓர் ஆசிரியர் என, உள்ளனர். ஆனால், மத்திய அரசு விதிகளின்படி, ௩௫ மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என, 43 ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தால் போதும். தற்போது, இப்பள்ளிகளில் கூடுதலாக, 20 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர்.

பட்டியல் தயாரிப்பு : பல பள்ளிகளில், ஒரு மாணவர் முதல்,10 மாணவர்கள் வரை உள்ளனர். அவற்றில், இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளும் உள்ளன. எனவே, உபரியாக, 'சும்மா' இருக்கும் ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து, அவர்களை, ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிக்கு மாற்றலாமா என, தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆலோசிக்கிறது. இதற்காக, மாவட்ட வாரியாக, அனைத்து பள்ளிகளிலும், வகுப்பு வாரியாக படிக்கும் மாணவர்களின் சரியான எண்ணிக்கையை, உரிய ஆதாரத்துடன் வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.

அறிவுறுத்தல் : எந்த தில்லுமுல்லும் இன்றி, பட்டியலை தயாரித்து, சென்னையில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில்பங்கேற்க அறிவுறுத்தப் பட்டு உள்ளது.இந்த உபரி ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, மாவட்ட வாரியாக நடக்க உள்ளது. இந்த கூட்டத்திற்கு பின், உபரி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது

வியாழன், 19 அக்டோபர், 2017

31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை

தமிழக பள்ளிக் கல்வி துறையின், ஒருங்கிணைந்த புதிய இணைய தளத்தின் செயல்பாட்டை, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், துவங்கி வைத்தார்.இதில் 'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி திட்டத்திற்கு, புதிய இணையதளத்தில், 'ஆன்லைன்' பதிவும் துவங்கியது. இது குறித்து, அமைச்சர், செங்கோட்டையன் கூறுகையில், ''மாணவர்கள்தங்கள் பள்ளி வழியாக, பயிற்சியில் சேர, பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து, 3,000 ஆசிரியர்களுக்கு, பிற மாநில நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிமுடிந்ததும், அந்த ஆசிரியர்கள், தமிழக மாணவர்களுக்கு, வார இறுதி நாட்களில் சிறப்பு பயிற்சி அளிப்பர்,'' என்றார்.

இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் வழியாக பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தை நாடி அதில் விண்ணப்பிக்கலாம்.பள்ளிக் கல்வியின், http://tnschools.gov.in என்ற புதிய இணையதளத்தில், மாணவர்கள், தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக, பெயர் மற்றும் பயிற்சி மைய விபரங்களை பதிவு செய்யலாம். இதற்கு, வரும், 26ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்தார். விண்ணப்பித்த உடன் விண்ணப்பித்தற்கான அடையாள சீட்டு கிடைக்கும். அதைக்கொண்டு எந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற விரும்புகிறார்களோ அந்த மையத்திற்கு செல்லலாம். தினமும் பள்ளிக்கூடம் விட்ட பிறகு மாலையில் இந்த பயிற்சி அளிக்கப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலும், மாலையிலும் பயிற்சி அளிக்கப்படும் இந்த நிகழ்ச்சியில், 31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை வழங்கப்பட்டது.

வெள்ளி, 13 அக்டோபர், 2017

G.O No. 302 Dt: October 11, 2017-Ad-hoc Increase – CONSOLIDATED PAY / FIXED PAY / HONORARIUM – Employees drawing revised Consolidated Pay / Fixed Pay / Honorarium - Ad-hoc Increase from 01.07.2017 - Orders - Issued

மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித்தொகை பெற வருமான உச்சவரம்பு ₹25000/- லிருந்து ₹72000/- ஆக உயர்வு - அரசாணை நிலை எண்: 56 நாள்: 26.09.2017

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய விரைவில் குழு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்வது குறித்து அறிக்கை அளிப்பதற்கான குழு சில தினங்களில் அமைக்கப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கரூரில் நேற்று நடைபெற்ற 45-வது ஜவஹர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்கான குழு 2 அல்லது 3 தினங்களில் அமைக்கப்படும். 15 நாட்களுக்குள் இக்குழுவிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
2013-ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வாகி வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அரசு பரிசீலிக்கும்.
9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்புகள் அனைத்தும் ரூ.400 கோடியில் கணினிமயமாக்கப்படும். வெளிநாடுகளில் உள்ள கல்வி முறை குறித்து அறிந்துவருவதற்காக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர்கள் கல்வித் துறை சார்பில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என்றார்.