செவ்வாய், 31 ஜனவரி, 2017

TNTET- 2017:ஆசிரியர் தகுதித் தேர்வு 2017 விண்ணப்பங்கள் 15 முதல் விநியோகம் செய்யப்படலாம்?

TNTET 2017 - ஆசிரியர் தகுதித் தேர்வு 2017 - ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது.
இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் டிஆர்பி அலுவலகத்தில் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வெள்ளிக்கி அன்று காலை 11 மணியவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிர்யர் தகுதித் தேர்வு 2017:

- TNTET 2017 தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறலாம்.
தேர்வுகள்:
- தாள் I - 29.04.2017
- தாள் II - 30.04.2017
- தாள்  I மற்றும் தாள் IIக்கான தனித்தனியான விண்ணப்பங்கள் வெளியிடப்படும்.
- மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் 15.02.2017 அன்று முதல் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் கடந்த தேர்வை போலவே இம்முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும்.
- மாவட்ட அளவில் இப்பணிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் தலைமை தாங்குவார்.
- விண்ணப்பங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகம் செய்யப்படும். பிப்ரவரி மாதம் இறுதி வரை விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.
- ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே விநியோகம் செய்யப்படும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகத்தில் மட்டுமே ஒப்படைக்கப்பட வேண்டும்.
- அதிகபட்சமாக 7 லட்சம் விண்ணப்பங்கள் விற்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் எதிர்பார்ப்பு.
- தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 4 ஆயிரம் மையங்கள் மூலம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.
- தேர்வு பணியில் ஏறத்தாழ 40 ஆசிரியர்கள் பன்படுத்தப்படலாம்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று அதற்கான ரசீது வழங்க மாவட்ட கல்வி அலுவலகத்தில் 13 குழுக்கள் (தாள் 1க்கு 6 குழுக்களாகவும், தாள் 2க்கு 7 குழுக்களாக அமைத்து செயல்படும். தேவைப்பட்டால் குழுக்களின் எண்ணிக்கை மாற்றியமைக்கப்படலாம்.
- விண்ணப்பங்கள் விற்கப்படும் இறுதி தேதி: 08.03.2017
- நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மீண்டும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
குறைந்த கல்வி தகுதியான 10th +2 mark waitage கணக்கிடும்போது employment seniority, PG ,மற்றும் பணி அனுபவம், Med, M PHI,L,மற்றும் பல ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் பணி புரிந்தும், அதிக ஆண்டு SSLC பொது தேர்வு விடைதாள்கள் திருத்திய வர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கி முன்உரிமை வழங்க வேண்டும்,இல்லை என்றால் WAITAGE தவறு என்றுஆகும்,,,,,,அதற்கான தீர்வு காண ................ பட்டதாரி ஆசிரியர்கள் அதிக தகுதி இருந்தால் கூடுதல் சம்பளம் வழங்கும்போது கூடுதல் தகுதிக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கவில்லை எனில் கூடுதல் சம்பளம் வழங்க கூடாது என்று வழக்கு வரலாம்

TEACHER ELIGIBILITY TEST SYLLABUS(2013)

திங்கள், 30 ஜனவரி, 2017

ஜியோ அதிரடியை சமாளிக்க.. ஐடியாவுடன் கைகோர்க்கும் வோடபோன்

யோவின் அதிரடி இலவச சேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது. முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்த ஆண்டு 4ஜி சேவையை நாடு முழுவதும் தொடங்கியது. இலவச சிம், இலவச கால் அழைப்புகள், இலவச டேட்டா சேவை என பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்தது.

வாடிக்கையாளர்களுக்கு அறிமுக சலுகை அளித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை அதிகரித்து வருவது ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. எனவே தொலைதொடர்பு தொடர்பு சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க ஐடியாவுடன் இணைய வோடபோன் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஆதித்யா பிர்லா குழுமத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. வோடாபோனைப் பொறுத்த வரை இந்தியாவில் உள்ள 22 தொலைத்தொடர்பு வட்டங்களில் 20 கோடி வாடிக்கையாளர்களுடன் இயங்கி வருகிறது. அதேபோல் ஐடியா தொலைபேசி நிறுவனமும் இதே அளவு வாடிக்கையாளர்களுடன் 22 தொலைத்தொடர்பு வட்டங்களில் இயங்கி வருகிறது. தற்போதைய நிலையில், ஏர்டெல் நிறுவனத்திடம் 27 கோடி வாடிக்கையாளர்களும், ரிலையன்ஸ் ஜியோ 7.2 கோடி வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளள்ளன. வோடபோன் மற்றும் ஐடியா இணைப்பில் இக்கூட்டணி நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 39 கோடியாக உயர்ந்து இந்திய சந்தையில் முதல் இடத்தைப் பிடிக்க உள்ளது.

ரூபெல்லா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை

மீசெல்ஸ் - ரூபெல்லா தடுப்பூசி மருந்து குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ் எச்சரிக்கை விடுத்தார்.
மகாத்மா காந்தியின் நினைவுதினம், தொழுநோய் தடுப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி 14 நாட்களுக்கு தொழுநோய் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும், நோய் கண்டறியும் முகாம் உள்ளிட்டவைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னையில் கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நடைபெற்ற தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தொழுநோய் தடுப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அமைச்சர், தமிழகத்தில் தொழுநோயை ஒழிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்துவருவதாகவும், மீசெல்ஸ் - ரூபெல்லா தடுப்பூசியால் எந்த பிரச்னையும் குழந்தைகளுக்கு வராது என்றும், ரூபெல்லா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

உள்ளாட்சி தேர்தலை ஏப்ரல் மாதத்துக்குள் நடத்த இயலாது சட்டசபையில் மசோதா தாக்கல்

இன்று தமிழ்நாடு ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி திருத்த சட்ட முன் வடிவுகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்தார் சட்டசபையில் . அந்த சட்ட மசோதாவில் கூறி இருப்பதாவது:-

2017-ஆம் ஆண்டு மார்ச் 2-ம் நாள் மற்றும் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கிடையில் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு 12-ம் வகுப்பு (எச்.எஸ்.சி.) மற்றும் 10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி. )உள்ளடங்கலாக நடைபெறும் பெரும்பாலான வாக்குப்பதிவு அலுவலர்கள் பள்ளிக்கல்வி துறையின் தேர்வு பணியினை பார்த்துக் கொண்டிருப்பர்.

அதன் காரணமாக அவர்களை ஊரக உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல்களை நடத்துவதற்காக தேர்தல் பணிகளுக்காக அமர்த்த முடியாது  மிகப் பெரும்பாலான பள்ளிக் கட்டிடங்கள் கணக்குச் சாவடியாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதாலும் அவைகள் ஆண்டுத் தேர்வுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி முடிவடைந்த பின்னரே கிடைக்கக் கூடியதாக இருக்கும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

எனவே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதியன்று தனி அலுவலர்களின் பதவி காலம் முடிவதை கருத்தில் கொண்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அலுவல்களை நிர்வகிக்க பொருத்தமான ஏற்பாடுகளை செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.இதேபோல் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி வரம்பிற்குட்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட தேர்தல் ஆணையராக இருக்கும் அதிகாரிகளும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர்.

தனி  அதிகாரிகளின் பதவி காலத்தை 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-க்கு அப்பால் 2017-ம் ஆண்டு ஜுன் 30-ந்தேதி வரை 6 மாத காலத்திற்கு தனி அதிகாரிகளின் பதவி காலத்தை நீடிப்பதென அரசு முடிவு செய்துள்ளது.இந்த சட்டம் பிறப்பிக்கப் பட்டபோது சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறாததால் அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டியதாயிற்று.

ஆசிரியரின்றி உபரிப் பணியிடங்களை காலிப்பணியிடங்களாக இனிவரும்காலங்களில் காண்பிக்க கூடாது - அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.


ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதியாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதியாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு கொண்டு வந்த அறிவிப்பாணையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. இதையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளிப்பதும் தள்ளி போனது. இதனால், தமிழக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜன., 17 ம் தேதி முதல், 23ம் தேதி வரை சென்னை மெரினா, மதுரையில் அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.


இதையடுத்து மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. ஜன.,23ல் இதற்கான சட்டமுன்வடிவு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிரந்த சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த சட்டத்தை ஜனாதிபதி ஒப்புதலுக்கு கவர்னர் வித்தியாசாகர் ராவ் அனுப்பினார். மிருகவதை தடுப்பு சட்டம் - 217( தமிழ்நாடு திருத்தம்) என்ற சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று(ஜன.,30) ஒப்புதல் அளித்தார்.


ஜல்லிக்கட்டு தொடர்பான மனுக்கள், நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்புக் கணக்கிலிருந்து ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்: ஆர்பிஐ அறிவிப்பு

வங்கி நடப்புக் கணக்கிலிருந்து ஏடிம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் நீக்கப்படுவதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது.

வங்கி நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் மற்றும் வங்கி நடப்புக் கணக்குகளிலிருந்து பணம் எடுப்பதற்கு இருந்து வந்த கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்படுவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

ஏடிஎம்-களிலிருந்து நடப்பு கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான வரம்பு ரூ.10,000ஆக இருந்தது, தற்போது இந்த வரம்பு நீக்கப்பட்டுள்ளது. ஆனால் சேமிப்புக் கணக்குகளிலிருந்து வாரம் ரூ.24,000 எடுக்கும் கட்டுப்பாட்டில் மாற்றமில்லை.

“சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் இப்போதைக்கு நீடிக்கும், இந்தக் கட்டுப்பாடுகளும் விரைவில் நீக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது” என்று மத்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

நவம்பர் 8-ம் தேதி பணமதிப்ப்பு நீக்கத்திற்கு முன்பு இருந்தது போல் வங்கிகள் தங்கள் ஏடிஎம்களிலிருந்து பணம் எடுப்பதற்கான தங்கள் சொந்த உச்ச வரம்பை நிர்ணயித்துக் கொள்ளலாம்.

TNTET: (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை), பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வை (தாள்-2) ஏப்ரல் 30-ம் தேதியும் (ஞாயிற்றுக் கிழமை) நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்.

இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 29-ம் தேதியும்,பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 30-ம் தேதியும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இதற்காக 11 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்படுகின்றன.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் எனப்படும் ஆசிரியர் தகுத்தேர்வு கட்டாயமாக் கப்பட்டுள்ளது. தமிழகத் தில் டெட் தேர்வு நடத்தும் பொறுப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஆண்டுக்கு 2 தடவை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) விதிமுறை. ஆனால், நீதிமன்ற வழக்குகள் காரண மாக தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு களாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை.
தற்போது வழக்குகள் முடிவடைந்து விட்டதால் டெட் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தேர்வை ஏப்ரல் 29-ம் தேதியும் அதேபோல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வை ஏப்ரல் 30-ம் தேதியும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.
டெட்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர் பாக பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் இறுதி வாரத்தில் நடத்துமாறு பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை), பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வை (தாள்-2) ஏப்ரல் 30-ம் தேதியும் (ஞாயிற்றுக் கிழமை) நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. தேர்வுக் கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து மாவட்டங்களிலும் பிப்ரவரி 15 முதல் மார்ச் 8-ம் தேதி வரை விற்பனை செய்யப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.மொத்தம் 150 மதிப்பெண்களைக் கொண்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமானால் 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வரும் ஏப்ரல் மாதம் நடத்தப் படவுள்ள டெட் தேர்வு 3-வது டெட் தேர்வாகும். தமிழகத்தில் முதலாவது டெட் தேர்வு கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதமும், அந்த தேர்வில் நேரக்குறைவு காரணமாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கைமிகவும் குறைவாக இருந்த காரணத்தினால் நேரத்தை அதிகரித்து அதே ஆண்டு அக்டோ பர் மாதம் துணை தேர்வாக இன்னொரு தேர்வும், அதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் என 3 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக் கென சிறப்பு டெட் தேர்வு 2014-ம்ஆண்டு மே மாதம் நடந்தது. பொதுவான டெட் தேர்வு என்று பார்த் தால் இதுவரை 3 டெட் தேர்வுகள் நடத்தப்பட்டுள் ளன. ஏற்கெனவே நடத்தப்பட்ட டெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சுமார் 30 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள்அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.
7 ஆண்டுகள் செல்லத்தக்கது
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் உடனடியாக ஆசிரியர் வேலை கொடுக்கப்படுவதில்லை. வெயிட்டேஜ் மார்க் அடிப்படையில்தான் ஆசிரியர் கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி, டெட் தேர்வு மதிப்பெண் 60 சதவீதமும், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் படிப்பு மதிப்பெண் 40 சதவீதமும் (இடைநிலை ஆசிரியர்கள் எனில் பிளஸ் 2, இடைநிலை ஆசிரியர் படிப்பு மதிப்பெண்) கணக்கில் எடுக்கப்பட்டு மெரிட் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. .டெட் தேர்வு தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது ஆகும். எனினும் தேர் வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் தங்கள் மதிப் பெண்ணை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பினால் எத்தனை முறை வேண்டு மானாலும் டெட் தேர்வு எழுதலாம்.

நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க விரைவில் சட்டம்:தமிழக அரசு தகவல்.

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க 2 சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்.பி.பி.எஸ் மற்றும் மேற்படிப்புக்கென தனித்தனியாக இரு சட்டங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நீட் தேர்வு நடத்தப்பட்டால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் எழுந்துள்ளது.

இதனால் தமிழக மாணவர்களை காக்கும் வகையில் இரு சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.எனவே நீட் தேர்வின்றி, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த ஏதுவாக இச்சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. திமுக உள்ளிட்ட கட்சிகளும் நீட் தேர்வை எதிர்ப்பதால் இச்சட்டங்கள் பேரவையில் ஒருமனதாக நிறைவேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குடியரசுதலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகு இச்சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற பேரவை கூட்டத் தொடர் ஓரிரு நாள் நீட்டிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநில மாணவர்களுக்கே முன்னுரிமை

'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, 'நீட்' தேர்வு வந்தாலும், 85 சதவீத, அரசு இடங்கள் மாநில அரசால் நிரப்பப்படும்,'' என, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர் தெரிவித்தார்.சென்னையில், 'தினமலர்' நடத்திய, 'நீட்' தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சியில், சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் பேசியதாவது:'நீட்' தேர்வில், விதிமுறைகளில், இந்த ஆண்டு மாற்றம் வர வாய்ப்புள்ளது. இளநிலை படிப்பு மட்டுமின்றி, முதுநிலை படிப்புக்கும், 'நீட்' தேர்வு உண்டு. கடந்த ஆண்டு முதல், இந்த நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த ஆண்டு, அனைத்து மாநிலங்களிலும், 'நீட்' தேர்வு கட்டாயமாகும் என, தெரிகிறது. ஆனாலும், மாநில அரசின் இட ஒதுக்கீடுகளில் பெரிய அளவில் மாற்றம் வராது. மத்திய அரசின், 15 சதவீத இடங்களுக்கு, 'நீட்' மதிப்பெண்ணின் படி, அகில இந்திய அளவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.மற்ற, 85 சதவீத மாநில இடங்களில், 'நீட்' தேர்வு மதிப்பெண் படி, அந்தந்த மாநில அரசுகளே, மாநில மாணவர்களுக்கு, 'அட்மிஷன்' வழங்கும். வெளிநாட்டு மாணவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, 'நீட்' தேர்வு கிடையாது; மாணவர் சேர்க்கையும் கிடையாது. 'எய்ம்ஸ்' எனப்படும், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், ஜிப்மர் எனப்படும், ஜவஹர்லால் நேரு மருத்துவ உயர்கல்வி நிறுவனத்தில் சேர, 'நீட்' மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படாது. அவற்றுக்கென தனியாக தேர்வு நடத்தப்படுகிறது. ஜிப்மர் தேர்வில், புதுச்சேரி மாணவர்களுக்கு மட்டும், மதிப்பெண்ணில் சலுகை அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.'எய்ம்ஸ்' தேர்வும் எழுதலாம்

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அரசாணை

தமிழகத்தில் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் அரசாணை
வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி நேரு விளையாட்டு அரங்கம் அருகே புதிய உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் இடத்தை பள்ளிக் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர்.
இதுகுறித்து மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
விளையாட்டுத் துறையை மேம்படுத்த தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானங்கள், உள்விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், கோவை மாவட்டத்தில் சர்வதேசத் தரத்துடன் கூடிய உள்விளையாட்டு அரங்கம் ரூ. 3.85 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக நகரின் மையப் பகுதியில் 5.63 ஏக்கர் பரப்பிலான மாநகராட்சி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், நீச்சல் குளம், கைப்பந்து, டென்னிஸ், தடகளத் தளங்களுடன் பல்வேறு உள்அரங்குகளும், விடுதி வசதியும் அமைக்கப்படவுள்ளன என்றார்.
பின்னர், தமிழகத்தில் உரிய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் அரசாணை வெளியிடப்படும் என செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட மைய நூலகத்துக்குச் சென்று அரசு அருங்காட்சியகத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
அப்போது, அவர்கள் கூறியதாவது: கொங்கு நாட்டு வரலாறு அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடையும் விதமாக ரூ. 2 கோடி மதிப்பில் புதிய அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும். தவிர ஒரே இடத்தில் எல்லோரும் காணும் விதமாக அகழாய்வு அருங்காட்சியகமும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, அம்மன் அர்ச்சுணன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, விளையாட்டுத் துறை மண்டல முதுநிலை மேலாளர் ராஜமகேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஸ்டான்லி மேத்யூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

TNTET - 2017 :இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.

TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.

TNTET – 2017 குறித்த  தகவல்கள்
>> TNTET – 2017 Tamil Nadu Teacher Eligibility Test – 2017 is going to be conducted in the last week of April.

>> Separate Application Forms are designed for TNTET Paper I and Paper II.

>> Application Forms allocated to each Revenue District will be delivered to the Chief Educational Officers on or before 10.02.2017.

>> CEO has to allot to each DEO and then to each school.

>> Chief Educational Officers should handover theApplication Forms to the District Educational Officers in their jurisdiction and coordinate with the sale of Application Forms.

>> This time also like the previous TNTET, it is decided to sell the TNTET Application forms through selected Hr. Sec. Schools.

>> Application Forms should be shared between schools as and when there is necessity.

>> A Coordinator can be appointed for 10 schools each with the officers like the District Elementary Education Officers, Personal Assistants and Deputy Inspectors with the work of sending the Application Forms to needy schools from the Chief Educational Offices.

>> TNTET Application Forms should be sold in theselected Hr. Sec. Schools from 9.00 AM to 6.00 PM from mid February'2017 to end of February'2017 tentatively 27.02.2017.

>> Selected Hr. Sec. School should sell the Application Forms from 09.00 AM to 06.00 PM onall working days (including Saturdays) with at least two staff members on duty.

>> It is strictly instructed that only ONE Application Form should be sold to each candidate.

>> Announcements may be made on the notice boards of Hr. Sec. Schools about the separate application forms for Paper I and Paper II and about the submission of filled-in Application Forms only in the District Educational Offices.

>> Chief Educational Officers should take personal care on the sale and receipt of Application Forms. II. Receipt of Filled-in Application Forms in the District Educational Offices. 1. At least 13 Teams (6+7 Teams for Paper I and Paper II) or more as per need may be formed for the receipt of Filled-in Application Forms in the District Educational Offices.

>> These Teams should check the filled-in Application Forms to ensure whether all the particulars are filled-in and the Challan for the payment of examination fee is attached.

>> The Teams should issue an acknowledgement on the xerox copy of the Application Form as prescribed by the TRB (in Annexure III) and it should be duly signed by the head of the Team without fail.

>> Last date for Sale of Application Forms tentatively 27-02- 2017 and receipt of Filled-in Application forms in the District Educational Offices on 28.02.2017 should be closed at 05.00 PM without fail.

TRB-CONDUCT OF TNTET 2017-TRB CHAIRMAN LETTER(TRB TET DATE APRIL 29 and 30)


வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயருமா?

மத்திய பட்ஜெட் தாக்கலாகிறது. முதன்முறையாக, ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் ஆகிய இரண்டும் கலந்த ஒருங் கிணைந்த பட்ஜெட், தாக்கலாக உள்ளது; இதில், வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப் படுமா என்ற எதிர்பார்ப்பு, மாத ஊதியதாரர் களிடையே ஏற்பட்டுள்ளது.
பட்ஜெட்டில், என்னென்ன விஷயங்கள் இடம் பெறும் என்பது குறித்த எதிர்பார்ப்பு, இப்போதே துவங்கி விட்டது. வழக்கம் போல், மாத ஊதிய தாரர்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட, பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள், இந்த பட்ஜெட்டில், தங்களுக்கு சாதகமான அம்சங்கள் வந்துவிடாதா என, ஆவலுடன் காத்திருக்கின் றனர். கடந்த சில ஆண்டுகளாக, ஆண்டு வருமான வரி உச்சவரம்பு, 2.5 லட்சம் ரூபாயை தாண்ட மறுக்கிறது. கடந்த ஆண்டும், ஏமாற்றமே மிஞ்சியது. அதனால், இந்த ஆண்டு, அது நிச்சயம் உயரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாத வருவாயும், கடந்த சில ஆண்டுகளில், குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வரு கிறது. அதனால், குறைந்தபட்சம், 4.5 லட்சம் ரூபாய் முதல், ஐந்து லட்சம் ரூபாய் வரை யாவது, வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மாத ஊதியதாரர்கள்,80 - சி பிரிவில், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ செலவு, வீட்டுக் கடன் மாதத் தவணை, எல்.ஐ.சி., உள்ளிட் டவை, வரிக்கழிவிற்கு உதவுகின்றன. இதில் அதிகபட்சம், 1.5 லட்சம் ரூபாய் மட்டும் கழிக்க முடியும். இதை, 2.5 லட்சம் முதல், மூன்று லட்சம் ரூபாய் வரை உயர்த்தினால், மக்கள் சேமிப்பில் ஆர்வம் காட்டுவர்.

குறிப்பாக,இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு தனிக் கழிவு, 1 லட்சம் ரூபாய் வரை கொடுத்தால், சேமிக் கும் வழக்கம் மக்களிடம் அதிகரிக்கும்; சமூக பாது காப்பும் கிடைக்கும்.

இந்த பிரிவில், மருத்துவ செலவுகளுக்காக கழிக்கப்படும் தொகை, 15 ஆயிரம் ரூபாயாக, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது; அது, 30 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும். இது போல், மற்றோர் பிரிவான, 80 டிடிஏ - வில், வங்கி சேமிப்பு மீதான வட்டிக்கான வரி விதிப்பு குறைக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அப்படி செய்தால், 'செட்டில்மென்ட்' பணத்தின் மீதான வட்டியை நம்பியிருக்கும், 60 வயதிற்கு, மேற்பட்டோர் பயனடைவர்.
 புதிய,'பென்ஷன்' திட்டத்தில் சேர்ந்தால்,ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை, 80 சிசிடி (1பி) பிரிவின் கீழ், வருமான வரி கழியும். இந்த பட்ஜெட்டில், முதலீடு தொகை முழுவதற்கும், நிதியமைச்சர் ஜெட்லி, விலக்களிக்க முயற்சிப்பார் என, தெரிகிறது.

வீட்டுக்கடன்வட்டிக்கான உச்சவரம்ரபு, பிரிவு 24 - ன் கீழ், 2 லட்சம் ரூபாயாக உள்ளது. வீடு விலை ராக் கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது; எனவே, அதை உயர்த்த வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.நாட்டில், நான்கு கோடிக்கும் குறைவானவர் களே, குறிப்பாக, மாத வருமானம் பெறுவோர் தான், வரி செலுத்துகின்றனர். வருமான வரி வரம்பிற்குள்
வரக்கூடிய, மருத்துவர், வியாபாரிகள், சுய தொழில் வருவாய் மற்றும் வீட்டு வாடகை வருவாய் ஈட்டுவோர் உட்பட, 50 கோடிக்கும் அதிகமானோர், வருமான வரித்துறை வளையத்திற்குள் இன்னும் வரவில்லை.

அவர்களையும், வரிவிதிப்பு முறையின் கீழ் கொண்டு வர வேண்டும். அதற்கு, வரி விதிப்பு முறை எளிதாக வேண்டும். அதாவது, வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும்.

மேலும், ஐந்து லட்சத்திற்குள் வருமானம் இருந்தால், 10 சதவீத வரி விதிப்பு; ஐந்து லட்சத் திற்கு மேல், 20 சதவீதம்; 10 லட்சத்திற்கு மேல், 30 சதவீதம், வரி என்பதை குறைக்க வேண்டும். அப்போது தான், குடிமக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படும் நிலை உருவாகும்.


பண மதிப்பிழப்பிற்கு பின், ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாற, அரசு ஊக்குவிப்பதால், 'கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங்' உள்ளிட்டவை போன்ற பரிவர்த்தனைக்கு, அரசு அதிக சலுகை அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


சனி, 28 ஜனவரி, 2017

தொடக்கக் கல்வி - தீண்டாமை எதிர்ப்பு தினம் - 30.01.2017ம் நாளினை தீண்டாமை எதிர்ப்பு தினமாக அனுசரித்தல் சார்ந்த செயல்முறைகள்...






EMIS- UPDATE LINK

கடன் வட்டி கணக்கிடும் சூட்சுமம்!

டன் அளிக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம் எப்படி வட்டியைக் கணக்கிடுகிறது என்பதைக் கவனிப்பது முக்கியம். அதாவது, மொத்தக் கடன் தொகைக்கும் ஆரம்பத்திலேயே வட்டியைக் கணக்கிடும் முறையில் வட்டி கணக்கிடப்பட்டால் உங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படும். இந்த முறையை ஆங்கிலத்தில் ஃப்ளாட் ரேட் (Flat Rate) என்பார்கள்.

வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் குறிப்பிட்ட ஆண்டுக்கு வட்டியைக் கணக்கிடுகிறார்களா அல்லது கடன் தொகைக்கு ஆண்டுக்கு ஒருமுறை, அரையாண்டுக்கு ஒருமுறை, காலாண்டுக்கு ஒரு முறை, மாதத்துக்கு ஒருமுறை என எந்த முறையில் கணக்கிடுகிறார்கள் என்று பாருங்கள்.

உதாரணமாக, ஒருவர் 10 லட்சம் ரூபாய் கடன் (14% வட்டி) வாங்கி, அதனை 5 ஆண்டுகளில் திரும்பக் கட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இதில் ஃப்ளாட் ரேட்டில், (10,00,000 x 0.14 x 5) + 10,00,000) / 60= 28,333. மாதத் தவணை 28,333 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும்.

இதுவே மாதம் ஒரு முறை என்கிற ரீதியில் வட்டியைக் கணக்கிட்டால் மாதத் தவணை ரூ.23,270 கட்ட வேண்டும். ஃப்ளாட் ரேட்டுக்கும் மாதம் ஒரு முறை வட்டியைக் கணக்கிடும் முறைக்கும் வட்டி வித்தியாசம் ரூ.5,063. எனவே, இதைத் தேர்வு செய்யக் கூடாது. மாதம் ஒரு முறை வட்டி கணக்கிடுவதே லாபகரமாக இருக்கும். இதைவிட லாபகரமாக தினசரி வட்டிக் குறையும் முறை இருக்கும்.
   
எனவே, எந்தக் கடனாக இருந்தாலும் அதற்கான வட்டியை எந்த முறையில் கணக்கிடுகிறார்கள், மாதத் தவணை எவ்வளவு என்பதை அறிந்து வாங்கினால், வட்டியைக் கணிசமாக மிச்சப்படுத்த முடியும். வாகனக் கடன், நுகர்வோர் பொருட்களை கணக்கிடும்போது ஃப்ளாட் ரேட் முறையைப் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதுபோன்ற சமயங்களில் உஷாராக இருப்பது நல்லது.

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் மதிப்பெண் முறையை ரத்து செய்து விட்டு தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு அடுத்த இரு நாட்களில்
வெளியிடப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்திருக்கிறார். தகுதித் தேர்வு நடத்தும் தமிழக அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.
தமிழகத்தி வெற்றி பெற்ற 30,000 பேருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்பதால், அவர்களைக் கொண்டே தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், புதிதாக தகுதித் தேர்வு நடத்தப்படாது என்றும் அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருந்தார்.
அவர் கூறிய தகவல்கள் அறியாமையில் வெளிப்பட்டவை என்பதையும், ஆண்டுக்கு ஒரு முறை தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டியது சட்டப்படி கட்டாயம் என்பதையும் கடந்த 13-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ஆதாரங்களுடன் விளக்கியிருந்தேன். அதை ஏற்றுக் கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன், தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். முந்தைய அமைச்சர்களைப் போல பிடிவாதம் பிடிக்காமல் தவறை ஒப்புக்கொண்டதுடன், அதை திருத்திக் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதாக அறிவித்திருப்பது நல்ல அறிகுறியாகத் தோன்றுகிறது.
அதேநேரத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் இழைக்கப்படும் சமூக அநீதி ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதால் மட்டும் தீர்ந்து விடாது. ஆசிரியர் தகுதித் தேர்வே சமூக நீதிக்கு எதிரானது; அத்தேர்வு ஒழிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு ஆகும்.
ஆனால், அது உடனடியாக சாத்தியமில்லை என்பதால் தான் ஆசிரியர் தகுதித் தேர்வு நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும்; அதில் எடுக்கப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி, அனைத்துப் பிரிவினருக்கும் ஒரே மாதிரியான தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கக் கூடாது; இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தனித்தனியாக தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும் என பாமக வலியுறுத்தியது. அதையேற்று இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்ணை 5% குறைத்த அரசு, அதற்குப் பதிலாக ஆசிரியர்கள் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தியது தான் அநீதியாகும்.
வெயிட்டேஜ் மதிப்பெண் முறைப்படி தகுதித் தேர்வு மதிப்பெண்களில் 60 விழுக்காடு மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மீதமுள்ள 40% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு, பட்டப்படிப்பு, பி.எட். தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. 12- வகுப்பு பொதுத்தேர்வாக இருந்தாலும், பட்டப்படிப்பாக இருந்தாலும் 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டதை விட இப்போது தாராளமாக மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதனால் 10 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் படிப்பு படித்தவர்களை விட, இப்போது ஆசிரியர் படிப்பு படித்தவர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்கள் மிகவும் எளிதாக தேர்ச்சி பெறுவர்.
ஆனால், பத்தாண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண் குறைவு என்பதால் அவர்களுக்கு வேலை கிடைக்காது.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர்கள் நியமனத்தின் போது தகுதித் தேர்வில் 150க்கு 85 மதிப்பெண் எடுத்த பலருக்கு அவர்கள் 12-ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்ததால் எளிதாக வேலை கிடைத்து விட்டது. அதேநேரத்தில் தகுதித் தேர்வில் 120 மதிப்பெண் எடுத்த பலருக்கு, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் குறைவாக இருந்ததால் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய வினோத முறை கடைபிடிக்கப்படுவதில்லை. பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வு மதிப்பெண்களில் நம்பிக்கை இல்லாமல் தான் தகுதித் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. ஆனால், தகுதித் தேர்வு மதிப்பெண்களில் முழு நம்பிக்கையில்லாமல் அதில் 60% மதிப்பெண்களையும், பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் 40% மதிப்பெண்களையும் எடுத்துக் கொள்வது கேலிக்கூத்தானது. இது தகுதித் தேர்வு கொண்டு வரப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே சிதைத்துவிடக் கூடியதாகும்.
எனவே, ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்து விட்டு தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் தகுதித் தேர்வு முறையையும் ரத்து செய்து விட்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

2017-18 பட்ஜெட்டில் என்ன மாற்றங்கள், அறிவிப்புகள், அம்சங்கள் இருக்கும்​ ? - படிக்க மிஸ் பண்ணிடாதீங்க...

பிப்ரவரி 1-ந்தேதி தாக்கலாகும் பொது பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிதிப்பற்றாக்குறை, ரூபாய் நோட்டு தடை அறிவிப்பின் பாதிப்பு, வேலைவாய்ப்பு, வரி உயர்வு, வரி குறைப்பு உள்ளிட்ட பல அறிவிப்புகளும், பலசலுகைகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் பல எதிர்ப்புகள் , விமர்சனங்கள் வெளியாகின. . அந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையிலும், பணப்பரிமாற்றத்தை குறைக்கும் வகையிலும் சலுகைகள், அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரெடிட், டெபிட் கார்டுகள், இ-வாலட்கள், மின்னனு பரிமாற்றம் ஆகியவைகள் மூலம் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க பலசலுகைகள், வரி குறைப்புகளை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. ஜி.எஸ்.டி. வரி(சரக்கு மற்றும் சேவை வரி)
வரும் ஏப்ரல் மாதம் ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாநிலங்கள், மத்தியஅரசு இடையே சில விசயங்களில் கருத்து வேற்றுமை நிலவியதால், ஜூலை முதல் நடைமுறைக்கு வருகிறது. அது குறித்த வரி வீதம், மாநில அரசுகள் எவ்வளவு வரிவருவாயை பிரித்துக்கொள்ளும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகலாம். நாடுமுழுவதும் ஒரே சீரான மறைமுக வரி அமலுக்கு வருவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
3. வருமான வரி
ஜி.எஸ்.டி. வரியைத் தொடர்ந்து, வருமானவரியில் மிகப்பெரிய அளவில் சீர்த்திருத்தம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைப்புத்தொகை, காப்பீடு ப்ரீமியம் எடுத்தல், பரஸ்பர நிதி ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில் வரிச்சலுகை இருக்கும். வருமான வரி உச்சரவரம்பும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.
4. கார்ப்பரேட் வரி
கார்ப்பரேட் வருமானவரியை பட்ஜெட்டில் 1.25 சதவீதம் முதல் 1.50 சதவீதம் வரை குறைத்து 28.50 சதவீதமாகக் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், புதிய நிறுவனங்களை சந்தைக்குள் கொண்டு வருவதற்கான சலுகை அறிவிப்புகளும் இருக்கும் எனத் தெரிகிறது.
5. ரெயில்வே
ரெயில்வே பட்ஜெட், பொதுபட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு முதல் முறையாக தாக்கல் செய்யப்படுகிறது. இந்த முறையால், ரெயில்வேயின் தனித்தன்மை பாதிக்கப்படாது என்றபோதிலும், ஆண்டுக்கு ஈவுத்தொகையாக ரூ. 10 ஆயிரம் கோடி அரசுக்கு கொடுப்பதை ரெயில்வே கொடுக்கத் தேவையில்லை. பயணிகளின் வசதிக்கும், பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பயணிகள் கட்டணம் உயர்த்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
6. விவசாயம்
ரூபாய் நோட்டு தடையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சுமையையும், வேதனையையும் குறைக்க நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பல சலுகைகளை அறிவிப்பார் எனத் தெரிகிறது. ஏற்கனவே நவம்பர்,டிசம்பர் மாத கடன் வட்டி தள்ளுபடி கொடுக்கப்பட்ட நிலையில், பல புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கலாம் .
7. தொழில்துறை, உற்பத்திதுறை
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்வகையில் தொழில்துறைக்கும், வேலைவாய்ப்பை பெருக்கவும் அதிகமான சலுகைகள் அறிவிக்கப்படலாம். வேலைவாய்ப்பை அதிகரித்து, ஏற்றுமதியை ஊக்குவிக்க தனித்திட்டம் வகுக்கப்படலாம். சீனாவைப் போல், தொழிற்சாலைகளுடன், தொழிலாளர்களுக்கு தங்கும் இடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு வசதிகள், மால்கள் என அனைத்தும் ஒருங்கே இருக்கும் வகையில் திட்டம் அறிமுகமாகலாம்.
8. அன்னிய முதலீடு
வெளிநாடு வாழ் இந்தியர்கள், அன்னிய நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து முதலீட்டை ஈர்க்க திட்டங்கள், சலுகைகள் அளிக்கப்படலாம். அவர்கள் அதிகளவு முதலீடு செய்யும் வகையில், விதிகள் தளர்த்தப்படலாம்.
9. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்.
புதிய தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்தவும், வளர்ச்சிக்கு கொண்டு செல்லவும் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கலாம். புதிய தொழில் தொடங்க விரும்பம் உள்ளவர்கள் அரசிடமிருந்து தேவையான உதவிகள், ஒப்புதல்களை வேகமாக பெறுதல், வரிச்சலுகையை ்3 ஆண்டில இருந்து 5 ஆண்டாக அதிகரிப்பது உள்ளிட்ட பல விசயங்கள் இருக்கும்.

தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு : ஒரே ஆண்டில் 20 ஆயிரம் குழந்தைகள் இடைநின்றது அம்பலம்

கடந்த 2000ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி தொடக்க கல்வியில் புதிய கற்றல் முறைகள் கொண்டு வருவது, கற்பித்தல் முறைகள் புகுத்துவது, அடிப்படை வசதிகள் செய்வதற்காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி வழங்கி வந்தது.  இந்நிலையில், 2010ம் ஆண்டு இந்த திட்டம் முடிவுக்கு வந்த நிலையில் மேலும், அந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தை கண்காணிக்க மாநில திட்ட இயக்ககம் சென்னை கல்லூரி சாலையில் டிபிஐ வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

தற்போது தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் இடையில் பள்ளியில் இருந்து நின்று விடுகின்றனர். இதை தடுக்க பல முயற்சிகள் நடக்கின்றன.  மாணவர்கள் இடைநிற்றல் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பது குறித்த தகவல் மத்திய மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும் நிதியில் செய்யப்பட்ட பணிகள் என்ன, எவ்வளவு செலவானது என்பது குறித்தும் மத்திய அரசுக்கு விவரம் தர வேண்டும். 
அப்போதுதான் அடுத்த கல்வி ஆண்டுக்கான நிதியை மத்திய அரசு  வழங்கும். அதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் கணக்கெடுக்கெடுக்கப்படுகிறது. அதில் மாணவர்கள் பெயர், குடும்ப சூழல், பள்ளிக்கும் மாணவர் இருப்பிடத்துக்கும் உள்ள இடைவெளி, பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை திரட்டி பதிவு செய்ய வேண்டும். அந்த விவரங்கள் அனைத்தும் மாநில திட்ட இயக்குநருக்கு செல்லும். அவர் மத்திய அரசுக்கு அனுப்புவார்.
 இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு தற்போது முடிந்துள்ளன. இந்த வார இறுதிக்குள் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இந்த பட்டியலை மாநில திட்ட இயக்ககத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாநில திட்ட  இயக்குநர் பூஜாகுல்கர்னி உத்தரவிட்டுள்ளார். 
இந்த கணக்கெடுப்பின்படி  பார்த்தால் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 20 ஆயிரம் குழந்தைகள், மாணவ, மாணவியர் இடையில் நின்றுள்ள அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
* ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை 240 மாணவ, மாணவியர் இருப்பதற்கு பதிலாக 200 மாணவர்கள்தான் உள்ளனர்.
* ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் 150 குழந்தைகளுக்கு பதிலாக 100 அல்லது 120 குழந்தைகள் உள்ளனர்.

உங்கள் குழந்தைக்கு இருக்கும் திறமையை கண்டுபிடிப்பது எப்படி?

என் குழந்தை படிப்பில் சுட்டி, விளையாட்டிலும் படுசுட்டி." என்று பெற்றோர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்லி பெருமைப்படுவது உண்டு. தன் குழந்தையிடம் என்ன திறமையிருக்கிறது என்று தெரியாமலே புலம்பி, குழம்புகிறவர்களும் உண்டு.
திறமை எல்லோரிடமும் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட துறையில் இந்த திறமை அதிகமாக இருக்கும். அது எந்த துறை என்பதை உணர்ந்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின்பு அதை வளர்ப்பதற்கு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றுவது என்று யோசிக்க வேண்டும்.
அதற்கு நாம் அந்த துறையைப் பற்றிய தகவல்களை விரல்நுனியில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் விரும்பிய துறையில் ஜொலிக்க முடியும்.
உங்கள் குழந்தைகளிடம் இருக்கும் திறமையை கண்டுபிடிப்பது எப்படி?
அ. சில குழந்தைகள் கையில் பேனா, குச்சி போன்ற ஏதாவது ஒரு எழுதுபொருள் கிடைத்துவிட்டால் சிலேட்டிலோ அல்லது தாளிலோ கிறுக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த குழந்தைகளுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருக்கிறது என்பதை அவர்களது பெற்றோர்கள் தெரிந்து கொண்டு அந்த துறையில் அவர்களை ஊக்கப்படுத்தலாம். கிறுக்கிக் கிறுக்கி வரையும் போது ஓவியத்திறமை வெளிப்படும். இதைத்தான் 'சித்திரமும் கைப்பழக்கம்' என்று கூறுவர்.
ஆ. சிலருக்கு பாடுவதில் மிகவும் ஆர்வம் இருக்கும். அவர்களுக்கு பிடித்த பாடல் எங்கேயாவது கேட்டுவிட்டால், அதே ராகத்துடனே இவர்களும் சேர்ந்து பாட ஆரம்பித்து விடுவர்.
இ. மிமிக்ரி, நடனம், நடிப்பு, இசை, தையல், விளையாட்டு, பேச்சுக்கலை, விண்வெளி ஆராய்ச்சி, இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சி, சமூக சேவை என்று அவர்களுக்கு எந்தெந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பதை அவர்களது செயல்பாடுகளை வைத்தே கண்டுபிடித்து விடலாம்.
ஈ. உங்கள் குழந்தைகளின் ஆர்வம் எந்த துறையில் உள்ளது என்பது பற்றி நீங்களே உணர்ந்தாலும்கூட, குழந்தைக்கு அதில் மிகுந்த ஆர்வம் உள்ளதா என்று அவர்களிடமே கேட்டு அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உ. எந்தவிதக் கட்டாயத்தின் பேரிலும், மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளின் திறமையை ஒப்பிட்டு அவர்கள் முன் குறை சொல்லி விடாதீர்கள்.
ஊ. பக்கத்து வீட்டு குழந்தைகள் பாடுவதில் கில்லாடியாக இருக்கலாம். உங்கள் குழந்தைக்கு பாடுவது சிரமமான காரியமாக இருக்கும். அதற்காக அந்த குழந்தையைப் போல் உங்கள் குழந்தையையும் பாட்டு கிளாசில் சேர்த்து அவர்களை சிரமப்படுத்தாதீர்கள். உங்கள் குழந்தைக்கு எதில் ஆர்வம் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு அவர்கள் விரும்பும் துறையில் சேர்த்து விடுங்கள்.
எ. உங்கள் குழந்தை திறமையை வெளிப்படுத்தி பரிசு வாங்கி வரும்போது அவர்களை பாராட்டத் தயங்காதீர்கள். அதேபோல் தோல்வியடைந்தாலும் தட்டிக்கொடுத்து அடுத்த முறை நீதான் வெற்றி பெறுவாய் என்று ஆறுதலான வார்த்தைகளைக் கூறி உற்சாகப்படுத்துங்கள்.
ஐ. 'வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு' என்று அவ்வப்போது உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள். 'தோல்விகள்தான் வெற்றியின் படிக்கற்கள்'. 'தோல்வியில் இருந்துதான் வெற்றிக்கான பாடம் கற்க முடியும்' என்றும் எடுத்துக் கூறி உங்கள் குழந்தையின் மனதை இளமையிலேயே திடப்படுத்துங்கள்.
ஒ. தன்னம்பிக்கையையும், வீரத்தையும் ஊட்டி வளர்க்கும் விதத்தில், ஜான்சி ராணி லெட்சுமிபாய், வீரசிவாஜி, நெப்போலியன், மாவீரன் அலெக்சாண்டர் போன்றவர்களின் வீரத்தைச் சுட்டிக்காட்டும் சம்பவங்களை கூறுங்கள்.
ஓ. உங்கள் குழந்தைகளிடம் உள்ள திறமை சார்ந்த தகவல்களையும், அந்த துறையில் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களையும் அவ்வப்போது எடுத்துக் கூறுங்கள்.

வானிலை முன்னறிவிப்பு: தென் தமிழகத்தில் மழை தொடரும்

கன்னியாகுமரி அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் தமிழகத்தில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''நேற்று மன்னார் வளைகுடா முதல் வட தமிழக கடற்கரை வரை நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தற்போது கன்னியாகுமரி அருகே நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து மேற்கு திசையில் நகர்வதால், அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும்'' என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

'மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி பாதுகாப்பானது'

தமிழகம் முழுவதும், பிப்., முதல் வாரத்தில், மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் துவங்கும். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது; வதந்திகளை நம்ப வேண்டாம்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும், பிப்., முதல் வாரத்தில், 'மீசில்ஸ் ரூபெல்லா' தடுப்பூசிக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த தடுப்பூசி தொடர்பாக, விஷமிகள் சிலர், 'வாட்ஸ் ஆப்' மூலம், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.



இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கம்: ஐ.நா.,வின் உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து, தமிழக அரசின் மீது வைத்த நம்பிக்கையால், 'மீசில்ஸ் ரூபெல்லா' தடுப்பூசி திட்டத்தில், தமிழகம் முதற்கட்டத்திலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒன்பது மாதம் முதல், 15 வயது குழந்தைகள் வரை, அனைவருக்கும், மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி போடும் திட்டம், பிப்., முதல் வாரம் துவங்கி, ஒரு மாதம் நடக்கிறது. வழக்கமாக, 10 முதல் 12 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு, முதல் தவணையும், 16 முதல், 24 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு, இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடப்படுகிறது. ஏற்கனவே தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், இத்திட்டத்தில் தடுப்பூசி போடப்படும். எந்த குழந்தையும் விடுபடாத வகையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இத்திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும். மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய் வராமல் தடுக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



இது தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசியால், குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அது குழந்தை களுக்கு கொடிய நோய்களை வராமல் தடுக்கும்,'' என்றார்.



உயிருக்கே ஆபத்தாகும் :

மீசில்ஸ் என்பது தட்டம்மை நோய். இது காய்ச்சல், உடல் வலியை ஏற்படுத்தி, உடல் முழுவதும் தடிமனை உருவாக்கும். நோய் வீரியமானால், நிமோனியா ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகும்

ரூபெல்லா என்பது கர்ப்பிணிகளை தாக்கினால், பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் உறுப்பில் ஊனம் ஏற்படும்; கருக்கலைப்புக்கு காரணமாகும். உலக சுகாதார நிறுவன ஆய்வுப்படி, உலகில் ஆண்டு தோறும், ஒரு லட்சம் குழந்தைகள், ரூபெல்லா பாதிப்புடன் பிறக்கின்றன. இதைத் தடுக்க, தடுப்பூசியே ஒரே வழி.

வெள்ளி, 27 ஜனவரி, 2017

அகஇ - 2017-18 - PINDICS - QMT - வழிக்காட்டுதல் சார்ந்த நெறிமுறைகள்




ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்-30 தேதிக்குள் நடத்தப்படும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன்

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன்,

ஒட்டுமொத்த ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்-30 தேதிக்குள் நடத்தப்படும். தகுத்தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் விரைவில் களையப்படும். கால அட்டவணை தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வு வெற்றி பெற்றவர்களை கொண்டு நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பான் கார்டு ஏன் அவசியம் என்பதற்கான முக்கியமான காரணங்கள்..!

எந்த ஒரு நாடும், அந்த நாட்டின் குடிமக்கள் சரியாக வரி கட்டுகின்றனரா என்பதைக் கண்காணிக்கவும், அவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதைத் தடுக்கவும் பல்வேறு வழி முறைகளைப் பின்பற்றுகின்றனர்.
இந்தியத் திருநாட்டின் அத்தகைய ஒரு அரும் பெரு முயற்சியே பேன் கார்ட் ஆகும்.
இது உள்நாட்டு அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நிதி ஆதாரங்கள் மற்றும் பரிமாற்றங்களைக் கண்காணிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த அட்டை இந்திய வருமான வரித்துறையினால் வழங்கப்படும் ஒரு நிரந்தரக் கணக்கு எண் உடைய பிளாஸ்டிக் அட்டை ஆகும்.

10 இலக்க எண்
ஒவ்வொரு நிரந்தரக் கணக்கிற்கும் ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்களை உள்ளடக்கிய 10 இலக்க எண் வழங்கப்படும். இந்த அட்டை மற்றும் நிரந்தரக் கணக்கு எண் ஒவ்வொருவருடைய பரிவர்த்தனைகள் 50000 அல்லது அதற்கு மேல் செல்லும் பொழுது, அவர்களின் நிதி பரிமாற்றங்களைக் கண்காணிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
 

எப்போது பான் கார்டு தேவைப்படும்?
நீங்கள் ஒரு சொத்து வாங்கும் போது, ஒரு புதிய தொலைப்பேசி இணைப்பு பெறும் பொழுது, ஒரு புதிய வங்கி கணக்கு ஆரம்பிக்கும் பொழுது, எந்த ஒரு புதிய முதலீடு செய்யும் பொழுது அல்லது எந்த ஒரு கட்டணம் செலுத்தும் போது உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் அட்டை நகல் தேவைப்படுகிறது. எனவே, நீங்கள் இன்னும் அதை வாங்கவில்லை என்றால் உடனடியாக அதை வாங்க வேண்டும்.

சொத்து வாங்க மற்றும் விற்க
சொத்துச் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைக்கு நிறையப் பணம் தேவைப்படுகிறது. எனவே நீங்கள் 5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடைய அசையா சொத்தினை வாங்க வேண்டும் எனில் நீங்கள் உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் அட்டை நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
 

மோட்டார் வாகனம் வாங்க மற்றும் விற்க
இரண்டு சக்கர வாகனம் அல்லது கழற்றி மாட்டக்கூடிய கூடுதல் சக்கரம் உடைய வாகனங்களைத் தவிர்த்து பிற மோட்டார் வாகனங்களை நீங்கள் வாங்க அல்லது விற்க முயலும் பொழுது, நிரந்தரக் கணக்கு எண் அட்டை நகலைச் சமர்ப்பிக்க வேண்டும். பெரும்பாலும், நீங்கள் 5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடைய ஒரு மோட்டார் வாகனத்தை வாங்கும் போது, உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயம் ஆகிறது.
 

வங்கி கணக்கு துவக்க
நீங்கள் ஒரு புதிய வங்கிக் கணக்கு துவக்கும் பொழுது அதாவது அரசு, தனியார், கூட்டுறவு அல்லது மற்ற வங்கிகளில் ஒரு புதிய வங்கி கணக்கு துவக்கும் பொழுதும், அதற்குரிய விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.
உங்களுடைய வங்கிக் கணக்கை திறந்த பிறகு, நீங்கள் உங்களுடைய வங்கிக் கணக்கில் 50000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையைச் செலுத்தும் பொழுது அல்லது 50000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கு வரைவு ஓலைப் பெறும் பொழுது, உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கும் போது, நீங்கள் உங்கள் நிரந்தரக் கணக்கு எண் அட்டை விவரங்களை வழங்க வேண்டும்.

 
புதிய தொலைப்பேசி இணைப்பு பெற
நீங்கள் உங்களுடைய வீட்டிற்கு அல்லது வணிக நோக்கத்திற்காக ஒரு புதிய தொலைப்பேசி இணைப்புப் பெற்றுக்கொள்ள விரும்பினால், நீங்கள் தொலைப்பேசி அல்லது ஒரு செல்லுலார் தொலைப்பேசி நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது, நீங்கள் விண்ணப்பப் படிவத்தில் உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.

பயணம் மற்றும் விடுதிகளில் தங்கும் பொழுது
இந்தியா அல்லது வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது, உங்களுடன் உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் அட்டையை எடுத்துச் செல்ல மறவாதீர்கள். ஏனெனில், உங்களுடைய பயணம் மற்றும் விடுதி வாடகை 25000 அல்லது அதற்கு மேல் செல்லும் பொழுது, நீங்கள் உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் அட்டையின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும். அதோடு கூட நீங்கள் ஏதாவது அயல் நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளும் பொழுது ஒரே நேரத்தில் 25000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடைய தொகையைச் செலுத்தும் போது, நீங்கள் உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் அட்டையின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
 

வங்கி மற்றும் அஞ்சலகத் திட்ட வைப்பு நிதி தொடங்க
அனைத்து வகையான வைப்பு மற்றும் சேமிப்பு கணக்கு தொடங்க நிரந்தரக் கணக்கு எண் அட்டை நகலை வழங்க வேண்டும். எனவே 50000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடைய வைப்புநிதி முதலீடு அல்லது வேறு வகையான முதலீடுகளை வங்கி அல்லது அஞ்சலகங்களில் மேற்கொள்ளும் பொழுது, உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் அட்டை நகலைக் கண்டிப்பாக வழங்க வேண்டும்.
 

முதலீடுகள் செய்ய
வரி தாக்கல் செய்யும் சமயத்தில், மக்கள் வரியில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இஎல்எஸ்எஸ் நிதியில் மொத்தமாகப் முதலீடு செய்வர். எனவே, நீங்கள் 50000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடைய அலகுகள் வாங்கும் போதெல்லாம், அதாவது பரஸ்பர நிதிகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்யும் போது, உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் விவரங்களை வெளியிடுவது அவசியமாகின்றது.
நீங்கள் ஒரு லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடைய பங்குகளை வாங்கும் பொழுது அல்லது விற்கும் பொழுது, நீங்கள் உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் விவரங்களைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

 

ஒரு நிறுவனம் அல்லது வியாபாரிகளுக்குப் பணம் கொடுக்க
நீங்கள் 50000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகைகளைப் பின்வரும் காரணங்களுக்காகச் செலுத்தும் பொழுது, நீங்கள் உங்கள் நிரந்தரக் கணக்கு எண் அட்டை நகலைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
அ. ஒரு நிறுவனத்திற்கு, அவர்களால் வெளியிடப்படும் பங்குகள், கடன் பத்திரங்கள், அல்லது கடன் திட்டங்களை வாங்கும் பொழுது அல்லது பெறும்போது.
ஆ. ரிசர்வ் வங்கியில் பணம் செலுத்தும் பொழுது
இ. ஒரு வருடத்தில் மொத்தமாக 50000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடைய தொகைக்கு, ஆயுள் காப்பீட்டுப் பாலிசிக்கான பிரீமியம் செலுத்தும் பொழுது .
ஈ. 5 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடைய தொகையை வியாபாரி அல்லது நிறுவனத்திடம் செலுத்தும் பொழுது அல்லது 5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடைய தங்கத்தை மொத்தமாக வியாபாரியிடம் இருந்து வாங்கும் பொழுது

புதன், 25 ஜனவரி, 2017

தேசிய வாக்காளர் தினம்



தேசிய வாக்காளர் தினம் இன்று  அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமைஆசிரியர் திரு. ம. ராம் சந்தர் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் திருமதி.செண்பகம் முன்னிலை வகித்தார்.ஆசிரியை திருமதி. ஜேஸ் மாலா வரவேற்புரை ஆற்றினார். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்தனர். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.ஆசிரியை திருமதி. முத்துச்செல்வி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி, திருமதி. மணிமேகலை, திருமதி. இன்பரசி , சத்துணவு அமைப்பாளர் திருமதி. மாரியம்மாள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2016-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பெரிய வடகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மூத்த மகன் மாரியப்பன் தங்கவேலு  (வயது 21).  பிரேசில் நாட்டில் ரியோ நகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

இதை தொடர்ந்து மத்திய-மாநில அரசுகள் பல்வேறு பரிசுகளை அறிவித்தன. இந்த நிலையில் மத்திய அரசு மாரியப்பனுக்கு தற்போது பத்ம ஸ்ரீ விருது வழங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாரியப்பன், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை  தீபா கர்மாகர் உள்பட  2ப0 பேருக்கு பத்ம  ஸ்ரீ விருது அறிவிக்கபட்டு உள்ளது.

எய்ட்ஸ் நோய்க்கு எதிராக போராடிய தமிழகத்தை சேர்ந்த  டாக்டர் சுனிதி சாலமனுக்கு அவரது மறைவுக்கு பின்  பத்ம ஸ்ரீ விருது அறிக்கபட்டு உள்ளது.

களரி கற்றுகொடுக்கும் கேரளாவை சேர்ந்த மீனாட்சி அம்மாளுக்கு பத்ம  ஸ்ரீ விருது  அறிவிக்கபட்டு உள்ளது.


பத்ம ஸ்ரீ விருது க்கு அறிவிக்கபட்டு உள்ளவர்கள்

 * கேரளா களறி பயிற்றுக் கலைஞர் மீனாட்சி அம்மாள்
 * சிண்ட கிண்டி மல்லேசம் அறிவியல் மற்றும் பொறியியல்
 * தார்பள்ளி ராமையா -சமூக சேவை
 * பிபின் கனட்ரா சமூக சேவை   
 * எய்ட்ஸ் ஆராய்ச்சி மருத்துவர் சுனிதி சாலமன்
 * டாக்டர் சுப்யரோதோ தாஸ்மருத்துவம்
 * டாக்டர் பக்தி யாதவ் மருத்துவம்
 * அனுராதா கொய்ராலா சமூக சேவை
 * ஹரிமுல் ஹக் -சமூக சேவை
 * மாரியப்பன் தங்க வேலு
 * எழுத்தாளர் இலி அகமது
 * ஜிதேந்திர ஹரிபால்- இசை
 * சுகுரி பொம்ம கவுடா- -இசை
 * தீபா கர்மக்கர்- ஜிம்னாஸ்டிக் விளையாட்டு
 * அனந்த் அகர்வால் கல்வி
 * விவசாயம் ஜெனாபாய் தர்காபாய் படேல் விவசாயம்
 * பல்பீர் சிங் சேச்சிவால்  சமூக சேவை
 * ஹரீஷ் பரத்வாஜ் சமூக சேவை

பிரபல கர்நாடக இசைக் கலைஞரும், பின்னணிப் பாடகருமான கே.ஜே.யேசுதாஸுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் - பள்ளிக்கல்வி அமைச்சர் மா.பாண்டியராஜன்

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மா.பாண்டியராஜன் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று தந்தி டிவிக்கு பேட்டியளித்தார்.

யேசுதாசுக்கு பத்ம விபூஷண்; சோவுக்கு பத்ம பூஷண் விருதுகள்

பாடகர் கே.ஜே.யேசுதாசுக்கு பத்ம விபூஷண் விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு. மேலும், சத்குரு ஜக்கி வாசுதேவ், முரளி மனோகர் ஜோஷி, சரத் பவார், முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமிக்கு பத்ம பூஷண் விருதும், இசைக் கலைஞர் டி.கே.மூர்த்தி, விராட் கோலி, இலக்கியத்துறையை சேர்ந்த மைக்கேல் டேனினோ, சாக்‌ஷி மாலிக், இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஶ்ரீஜேஷ், சமூக சேவைக்காக நிவேதிதா ரகுநாத், பாடகி அனுராதா பட்வால் ஆகியோருக்கு பத்மஶ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

G.O(Ms) No.10 datd: 11.01.2017 - School Education Department - Definition of out of school/Drop out -order issud by the government




செவ்வாய், 24 ஜனவரி, 2017

அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வீரவநல்லூர் ALFA முஹம்மது ஹுசைன் அறக்கட்டளை நிர்வாகத்தினை தென்மண்டல அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆசிரியர் சங்கம் வாழ்த்துகிறது.

அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வீரவநல்லூர்  ALFA  முஹம்மது ஹுசைன் அறக்கட்டளை நிர்வாகத்தினை தென்மண்டல அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆசிரியர் சங்கம் வாழ்த்துகிறது.

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

நாளை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் - தமிழக அரசு அறிவிப்பு

ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர நீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கீழ் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் நாளை வழக்கம் போல இயங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

 

சனி, 21 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் பிறப்பிப்பு

மதுரை அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் (ஜனவரி-16) ஜல்லிக்கட்டு நடைபெறும். சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக அங்கு ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டு தடை நீக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நடக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.

இதனையடுத்து அலங்காநல்லூரில் பொதுமக்கள் ஒன்று திரண்டு தொடர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு வெடித்த போராட்டம் தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவி நடந்து வருகிறது. சென்னை மெரினாவில் போராட்டம் உச்சம் அடைந்தது. தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் 5 நாட்களை கடந்தது. இருப்பினும் எந்தவித சோர்வும் இல்லாமல் போராட்டம் நீடித்தது.

 இந்நிலையில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்று நேற்று அறிவித்தார். முதல்-அமைச்சர் அறிவிப்பைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் நடக்கும் போராட்டம் கைவிடப்படும் என்று, போலீசார் எதிர்பார்த்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “வாடிவாசலில் காளையை திறந்து விடும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்று அறிவித்து விட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். 

இதற்கிடையே ஜல்லிக்கட்டு தொடர்பான வரைவு அவசர சட்டம் தமிழக அரசின் உயர் அதிகாரிகளால் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. வரைவு அவசர சட்டத்துக்கு உள்துறை அமைச்சகம், சட்டத்துறை, சுற்றுச்சுழல் அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கின. இதன் மூலம் வரைவு அவசர சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தது. ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இச்சட்டத்துக்கு ஜனாதிபதி சார்பில் மத்திய உள்துறை அமைச்சகமே ஒப்புதல் அளிக்கலாம் எனத் தெரிய வந்தமையால், அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்டு நேரடியாக இன்று காலை சென்னை அனுப்பப்பட்டது.

மிருகவதை தடுப்பு சட்டத்தில் உள்ள காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளை நீக்கப்படுவதுதான் அந்த வரைவு அவசர சட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும். 

தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கும் மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ் இதற்காக மும்பையில் இருந்து சென்னை திரும்பினார். இப்போது அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறப்பித்தார்.
அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக நீடித்து வந்த தடையானது நீக்கியது. 3 ஆண்டுகளுக்கு பின்னர் வாடிவாசல் திறக்கப்பட உள்ளது. காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலில் இருந்து காளை நீக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் கொண்டுவரப்பட்டு உள்ள அவசரச் சட்டமானது 6 மாத காலங்களுக்கு செல்லும்.

இதற்கிடையில் அலங்காநல்லூரில் காளைகளை அவிழ்த்து விடும் வாடிவாசல் பகுதி முழுவதும் ஆய்வு செய்யப்படுகிறது.

மதுரை விருந்தினர் மாளிகையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி குழு, மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தமிழகம் முழுவதும் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் நாளை காலை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு கமிட்டி குழுவினரும் போட்டியை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்து உள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. போட்டியை சிறப்பாக நடத்துவதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

ஜல்லிக்கட்டு போட்டிக்கு நீடித்து வந்த தடையை காளையர்கள் உடைத்து வெற்றிக்கண்டனர். 
 
பன்னீர் செல்வம் தொடங்கி வைக்கிறார்

முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு 8.45 மணிக்கு மதுரை செல்கிறார். ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். 

தடை நீங்கியது

ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது என முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் அறிவித்து உள்ளார். நாளை அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வெள்ளி, 20 ஜனவரி, 2017

NMMS தேர்வு நுழைவுச் சீட்டு 23.01.2017 முதல் பதிவிறக்கம் செய்யலாம்

NMMS தேர்வு நுழைவுச் சீட்டு  23.01.2017 முதல் பதிவிறக்கம் செய்யலாம் .DOWNLOAD FOR HALL TICKET(FROM 23.01.2017)

EMIS - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் EMIS பதிவில் புதிய மாணவர்களை சேர்க்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கோக், பெப்சி விற்கத் தடை!

வெளிநாட்டு நிறுவனமான பீட்டா அமைப்பு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை வாங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் இளைஞர்கள் பீட்டா அமைப்புக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கும் விதமாக, ஜனவரி 26-ம் தேதி முதல் பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களைத் தமிழகத்தில் விற்க தடை விதிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

'எங்களுக்கு மெரினா தான் மாஸ்'' போராட்டத்தின் வலிமையை காட்டும் கூகுள்!

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூகுள் மேப்ஸ் மூலம் ட்ராபிக் மற்றும் அங்குள்ள கூட்டத்தை கணக்கிட முடியும்.  அதன்படி தற்போது கூகுள் மேப்ஸ் சென்று பார்த்தால் மெரினாவில் குவிந்துள்ள போராட்டக்காரர்களின் வலிமையை படம் போட்டு காட்டுகிறது கூகுள் மேப்ஸ்!
கூகுள் மேப்ஸ் எப்படி காட்டும்?
2009-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் Crowdsourcing என்று கூறப்படும் தொழில்நுட்பத்திற்கு மாறியது. அதாவது மக்களிடமிருந்தே தகவலை பெற்று அதனை சீர் செய்து மக்களுக்கே திரும்பி அளிக்கும் முறை. இதற்கு முதல் தேவை மக்களின் மொபைல் போனில் “லொக்கேஷன்” வசதி ஆன் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் எங்கு இருக்குறீர்கள், எந்த வேகத்தில் நகர்கிறீர்கள் என்பது குறித்த தகவல் கூகுளை சென்றடையும். அது மட்டுமின்றி ஒரே இடத்திலிருந்து பல வாகனங்களின் லொக்கேஷன் வந்து சேருமாயின் அந்த இடத்தில் எத்தனை வாகனங்கள் இருக்கின்றன, என்ன வேகத்தில் நகர்கின்றன என்ற தகவல்களை கூகுள் எளிதாக பெறும்.
நீங்களும், உங்கள் முன்னால் இருக்கும் வாகனமும், அதற்கு முன்னால் இருக்கும் வாகனமும் என பல பேர் ஒரே நேரத்தில் தகவல்களை பகிர்வீர்கள். இது மட்டுமின்றி மெதுவாக அனைத்து வாகனமும் நகர்வது போக்குவரத்து நெரிசலை குறிக்கும். இங்கே கூகுள் நிறுவனம் செய்யும் வேலை என்னவென்றால், எத்தனை வாகனங்கள் இருக்கின்றன, எவ்வாறு நகர்கின்றன என்பதனை வைத்து போக்குவரத்து நெரிசலில்லை, சிறிய அளவு நெரிசல், மிக நெரிசல் என கணக்கிடுவது தான்.
இந்த முறையில் தான் கூகுள் மெரினாவின் கூட்டத்தையும் காட்டுகிறது. போராட்டத்தில் இருக்கும் நபர்களில் 90 சதவிகிதம் பேர் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள். ஈஸியாக மக்கள் கூட்டத்தை காட்டுகிறது.
கூகுள் மேப்ஸில் ட்ராஃபிக்கை பார்ப்பது எப்படி?
maps.google.com என்ற தளத்தில் உள்ள Menu-வை க்ளிக் செய்து Traffic-ஐ தேர்ந்தெடுக்கவும். சென்னையின் மற்ற இடங்களின் டிராபிக்கையும் தற்போது பார்க்கலாம். ஆனால் போராட்டக்காரர்கள் அதிகம் குவிந்திருக்கும் மெரினா கடற்கரையை காட்டும் போது, சிவப்பு நிறத்தில் காட்டுகிறது கூகுள்.

பாரதத்தின் அக்கினிக்குஞ்சுகளுக்கு தென்மண்டல அரசு உதவிபெறும் பள்ளிகள் ஆசிரியர் சங்கம் (ASTA)பாராட்டு

ஜல்லிக்கட்டை வலியுறுத்தியும், பீட்டாவை தடை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும்  எவ்வித அரசியல், மத கலப்பு இல்லாமல்  இளைஞர்களின் போராட்டம் நடந்து வருகிறது. இதில் ஏராளமான இளைஞர்கள் அமைதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரை, மதுரையில் அலங்காநல்லூர் தமுக்கம் மைதானம், கோவை ,திருச்சி, தேனி ,நெல்லை வ.உ.சி மைதானம் என அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. மெரினா கடற்கரையில் 5வது நாளாக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரையிலும் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை.
மாணவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் அமைதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும் மாணவர்கள் உதவி வருகின்றனர். போராட்டகளத்தில் குவியும் குப்பைகளையும் மாணவர்களே அப்புறப்படுத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளின் போராட்டம் போல் அல்லாமல், மாணவர்களின் போராட்டம் அமைதியாக நடப்பதற்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தால், நாடு முழுவதையும் தமிழகம் நோக்கி பார்க்க வைத்துள்ளனர். பாரதத்தின் அக்கினிக்குஞ்சுகளுக்கு  தென்மண்டல அரசு உதவிபெறும் பள்ளிகள் ஆசிரியர் சங்கம் பாராட்டுக்களும், முழு ஆதரவினையும் தெரிவித்துக்கொள்கிறது.

ஜெ.தாமஸ்  தலைவர், இரா. பாலசுப்பிரமணியன்  செயலாளர், லே.பாஸ்கர் பொருளாளர் .

அவசர சட்டத்திற்கு உள்துறை சம்மதம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரும் முயற்சிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி அளித்தார் என துணை சபாநாயகர் தம்பித்துரை நிருபர்களிடம் கூறினார்.ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தம்பித்துரை தலைமையில் எம்.பி.,க்கள் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினர். சந்திப்பிற்கு பின் அவர் நிருபர்களிடம் பேசுகையில்;

அவசர சட்டம் தொடர்பாக அமைச்சரிடம் பேசினோம். தமிழகத்தில் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு உதவ வேண்டும். என மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தோம், தடை பட்டியலில் இருந்து காளைகளை நீக்கிட வலியுறுத்தினோம். இத்தனை ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தான் தமிழர்களுக்கு இன்னல் தந்தது.

இவர்களுடன் கூட்டணி வைத்திருந்த திமுகவும் மக்களை ஏமாற்றியது. இவர்கள் தான் தடைக்கு காரணம். 2014 க்கு பின்னர் பா.ஜ.,வும் முழு அக்கறை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இதற்கிடையில் இந்த அவசர சட்ட திருத்தம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்தது.

இளைஞர்களின் போராட்டத்தால் பெருமை கொள்கிறேன்: ஏ.ஆர்.ரஹ்மான்

இளைஞர்களின் அமைதியான போராட்டத்தைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள். இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருந்தார்.
மாலை 6 மணியளவில் PERISCOPE இணையம் லைவ்வில் பேசினார். அப்போது, "காலை 4:30 மணிக்குப் பிறகு இப்போது தான் ஜூஸ் அருந்தவுள்ளேன். மகன் அமீனும் என்னோடு உண்ணாவிரதம் இருந்தார்.
இளைஞர்களின் அமைதியான போராட்டத்தைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. அனைத்தும் நல்லபடியாக முடிவு வரும் என நம்புகிறேன்" என்று பேசினார்.
தனது பேச்சின் இடையே "தமிழா.. தமிழா கண்கள் கலங்காதே" என்ற பாடலை சில வரிகள் பாடினார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த உண்ணாவிரதத்துக்கு ஜி.வி.பிரகாஷ் நேரில் நன்றி தெரிவித்தார். "உலக தமிழர்களுக்காக எனது மாமா உண்ணாவிரதம் இருந்ததிற்கு நன்றி தெரிவிக்கவே வந்தேன்" என்று தெரிவித்தார் ஜி.வி.பிரகாஷ்.

வாடிவாசல் திறக்கப்படும். காளைகள் துள்ளிக்குதிக்கும். நானே ஜல்லிக்கட்டை துவக்கி வைப்பேன்'- தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

வாடிவாசல் திறக்கப்படும். காளைகள் துள்ளிக்குதிக்கும். நானே ஜல்லிக்கட்டை துவக்கி வைப்பேன்' என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்த நிலையில், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறார் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா, கடந்த இரு ஆண்டுகளாக நடக்காத கவலையில் இருக்கிறார்கள் தமிழக மக்கள். இரண்டாவது ஆண்டாக இந்தாண்டும் ஜல்லிக்கட்டு நடக்காததால் ஆவேசமடைந்த மக்கள் கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தின் எல்லா சாலையும் போராட்ட களத்தை அடையும் அளவுக்கு போராட்டங்கள் பரவலானது. அரசியல் கட்சிகளையும், அரசையும் இந்த போராட்டங்கள் அதிர வைத்தது.

மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்ற இந்த போராட்டம் அரசை பணியவும் வைத்தது. டெல்லியில் தமிழக முதல்வர் பன்னீர்ச்செல்வம் பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு எந்த பலனும் இல்லாததால் போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டியது. இதையடுத்து, தமிழகம் திரும்பாமல் டெல்லியிலேயே தங்கிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்ட ஆலோசனை நடத்தி, வரைவு அவசரச் சட்டம் ஒன்றை தயார் செய்து அதை ஒப்புதலுக்கு மத்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்தார். இதற்கு மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ள நிலையில் விரைவில் அவசரச்சட்டம் இயற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்தே தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய பின்னர் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,  'வாடிவாசல் திறக்கப்படும். காளைகள் துள்ளிக்குதிக்கும். நானே ஜல்லிக்கட்டை துவக்கி வைப்பேன்' என அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூரில் உள்ள ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ஆய்வு செய்தார். ஜல்லிக்கட்டு நடக்குமா என பலரால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த திடீர் ஆய்வு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ், "ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்ற தமிழக அரசு முயன்றுவருகிறது. அதனால் இன்று மதுரையில் அவனியாபுரம் , பாலமேடு அலங்காநல்லூர் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வந்துள்ளேன். அரசு ஆணை பிறப்பித்தால் அதனை உடனடியாக செயல்படுத்த நாங்கள் எல்லா ஏற்பாடுகளையும் தயார் நிலையில் செய்து வருகிறோம். மதுரையில் எல்லா இடங்களிலும் மாணவர்களும், பொதுமக்களும் அமைதியான முறையில் போராடி வருகின்றனர். அசாதாரண சூழ்நிலை ஏற்படவில்லை. அதனால் பயப்படத்தேவையில்லை" என்றார்.
முதல்வரின் அறிவிப்பும், ஆட்சியரின் ஆய்வும் முதல் கட்ட வெற்றியாக பார்க்கத்துவங்கி விட்டார்கள் மக்கள். ஆனாலும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 'பீட்டாவை விரட்டுவோம். வாடிவாசல் திறக்கும் வரை போராட்டங்கள் தொடரும்' என முழக்கங்கள் எழுப்பியபடியே இருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு' தடை நீக்க அவசரச் சட்டம் மட்டுமே தீர்வாகுமா?

ல நூறு ஆண்டுகளாக நாம் தவறாமல் நடத்தி வந்த ஜல்லிக்கட்டு, தற்போது சில அமைப்புகளால் தடை செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது அவசரச் சட்டம் பிறப்பித்து, ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்ற கருத்து மேலோங்கி இருப்பதை காண முடிகிறது.
"ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்துவதற்குரிய அவசர சட்டத்தினை கொண்டு வரக்கூடிய ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளேன். சட்ட முன்வடிவுகள் மத்திய அமைச்சரவைகளின் ஒப்புதலையும், குடியரசுத்தலைவரின் ஒப்புதலையும் பெற்று, உரிய சட்டத்திருத்த அவசர சட்டமாக பிறப்பிக்கப்படும். உறுதியாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். வாடிவாசல் விரைவில் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டுக் காளைகள் துள்ளிக்குதித்து வரும்" என்றார் தமிழகத்தின் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
ஜல்லிக்கட்டு நடக்கும் என்பது மகிழ்ச்சியான செய்தி தான். ஆனால் இந்த அவசரச் சட்டம் மட்டுமே நமக்கு பலனளிப்பதாக இருக்காது என்பது தான் இப்போதைய மிகப்பெரிய சிக்கல். அப்படி என்ன என்ன சிக்கல் என தெரிந்து கொள்வதற்கு முன்னர், ஜல்லிக்கட்டுக்கு நடப்பதற்கு எப்படி இந்த பிரச்னை வந்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜல்லிக்கட்டு தடை எப்படி வந்தது தெரியுமா?
ஜல்லிக்கட்டுக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது என்பது தெரியுமா?. அதற்கு பல காரணங்கள் எல்லாம் இல்லை. ஒற்றை காரணம் தான். காட்சி விலங்குகள் பட்டியலில் காளை மாட்டை சேர்த்தது தான் ஜல்லிக்கட்டு மீதான தடைக்கான காரணம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, அப்போதைய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், காளை மாடுகளை 2011 ஜூலை 11-ம் தேதி, காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்த்தார். அதாவது சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, குரங்கு ஆகிய வனவிலங்குகள் இடம்பெற்ற அந்த பட்டியலில், காளைகளையும் சேர்த்தனர்.
இதையடுத்து வனவிலங்குகள் பாதுகாப்புச்சட்டம் காளைகளுக்கும் அமலானது. அதாவது இந்த விலங்குகளை பழக்கப்படுத்தி, பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பங்கேற்க வைப்பதோ, காட்சிப்படுத்தவோ கூடாது என்ற உத்தரவும் அமலானது. இதை அடிப்படையாக வைத்து, ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதித்தது உச்சநீதிமன்றம். தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் நாம் முறையிட்ட போதும், தடை நீங்காமல் போனதற்கு காரணம் இது தான்.
காளையை காட்சிப்படுத்துதல், அவற்றை போட்டிகள் மற்றும் கண்காட்சிகளில் பயன்படுத்துதல் போன்றவை தடை செய்யப்பட, வன விலங்குகள் துன்புறுத்தல் தடைச் சட்டப்பிரிவுகளே காரணமாக இருந்தன. இப்போது அந்த சட்டங்கள் அப்படியே தான் இருக்கின்றன. காளையும் இந்த காட்சி விலங்குகள் பட்டியலில் அப்படியே இருக்கிறது.

தேவை சட்ட திருத்தம்...
2011ம் ஆண்டு காட்சி விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்ட உடன் சிக்கல்கள் துவங்கி விட்டன. அப்போதே விலங்கு ஆர்வலர்கள், பிராணிகள் நல வாரியம் மூலம் ஜல்லிக்கட்டுக்கு நெருக்கடி துவங்க ஆரம்பித்தது. ஆனால் அப்போதெல்லாம் விதிமுறைகளை ஒழுங்குபடுத்தி, அதைக்காரணம் காட்டி தான் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தினோம். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் நம்மிடம் இருந்தது. ஆனால் நம் பதில்களுக்கு காத்திராமல் ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த முடியாமல் செய்தனர். அதற்கு அப்போது காட்சி விலங்குகள் பட்டியலில் காளைகள் இருந்தது தான் காரணம். காளைகள் மட்டும் காட்சி விலங்குகள் பட்டியலில் இல்லை என்றால்... என கேட்கிறீர்களா? எந்த சந்தேகமும் இல்லாமல் நாம் ஜல்லிக்கட்டை நடத்த முடியும்.  நம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது.
அப்படியானால் அவசரச் சட்டம் இதற்கு பலனளிக்காதா என கேட்கிறீர்கள். நிச்சயம் பலனளிக்காது. 2011ம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளைகள் இடம்பெற்றன. அதன்பின்னர் 3 ஆண்டுகள் நாம் ஜல்லிக்கட்டை நடத்துவதே பெரும்பாடாக போனது.
அவசரச் சட்டம் கொண்டுவரலாம். உச்சநீதிமன்றத்தில் அதைக் காட்டி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம். ஆனால் இது தற்காலிக தீர்வாகத்தான் அமையும். அவசரச் சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிகளை, விதிமுறைகளை முறையாக வகுத்து, ஒழுங்குபடுத்தி கனக்கச்சிதமாக நடத்தினாலும், காட்சி பட்டியலில் காளைகள் இடம்பெற்றுள்ளதை காரணம் காட்டி, பிராணிகள் நல வாரியத்தினர் அங்கு வருவார்கள். ஆய்வு செய்வதாக சொல்வார்கள். அவர்களை நாம் தடுக்க முடியாது.
ஆய்வை முடித்து விட்டு, வழக்கம் போல் காளைகள் துன்புறுத்தப்படுகிறது என்பார்கள். மக்களின் மகிழ்ச்சிக்காக காளைகள் போட்டியில் இறக்கி விடப்பட்டு அவதிப்படுத்தப்படுவதாக சொல்வார்கள். மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை வரும். இவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது தான். நாம் சொல்வதை அவர்கள் செவிமடுத்து கேட்கவே இல்லை. கேட்கவும் மாட்டார்கள். இது இப்போது மீண்டும் நடக்கும்.
எனவே அவசரச் சட்டம் என்பது இப்போதைக்கு ஜல்லிக்கட்டை நடத்த வழி செய்யுமே தவிர, தொடர்ந்து நாம் ஜல்லிக்கட்டை நடத்தவும், நிரந்தரமாக எந்த தடையும் இல்லாமல் நாம் ஜல்லிக்கட்டை நடத்தவும் பலன் தராது. அதற்கு காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்பட வேண்டும். அதற்கான சட்ட திருத்தம் செய்யப்பட வேண்டும்.
அவசரச்சட்டம் தற்காலிக தீர்வை மட்டுமே தரும். நிரந்தர தீர்வை அல்ல.

பள்ளிகள் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம்

தனியார் பள்ளி சங்கத்தினர் விடுமுறை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விட மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அரசுத் துறை வட்டாரங்கள் கூறியது:
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் ஏதேனும் ஒரு மாவட்டத்தில் இயற்கைச் சீற்றமோ அல்லது அசாதாரண சூழ்நிலையோ ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டால் அங்கு விடுமுறை விடுவதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பள்ளி கல்வி இயக்ககத்தின் அனுமதியோ, தமிழக அரசின் ஆலோசனையோ கேட்க வேண்டியதில்லை. மாவட்ட நிலைமையை ஆராய்ந்து ஆட்சித் தலைவரே முடிவெடுத்து அறிவிக்கலாம் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மெரினாவில் நள்ளிரவிலும் குடும்பம் குடும்பாக குவிந்த மக்கள் பேரலை... மிரளும் வங்கக் கடல்!

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நள்ளிரவு நேரத்திலும் மெரினாவில் இளைஞர்களும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் மனித தலைகளாக காணப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு வழக்கறிஞர்கள், வியாபாரிகள் தனியார் வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டம் வலுத்து வருவதால் ஏராளமான கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் 4வது நாளை எட்டியுள்ளது. நள்ளிரவு நேரம் என்றும் பாராமல் சென்னை மெரினா கடற்கரைக்கு ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குவிந்து வருகின்றனர். பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிகின்றனர்.சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் மெரினாவுக்கு படையடுத்து வருகின்றனர். இதனால் சென்னை கலங்கரை விளக்கம் முதல் எம்ஜிஆர் நினைவிடம் வரை மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மெரினாவில் குவிந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/students-are-coming-marina-at-night-times-also-272183.html

உலகுக்கே எடுத்துக்காட்டாய் அமைதியாக போராடுபவன்... தமிழன்டா!:கலவரம், வன்முறையின்றி ஒன்று கூடிய இளைஞர்கள்:பாரம்பரியத்தை நோக்கி ஒற்றுமையுடன் வீர பயணம்

'உலகுக்கே எடுத்துக்காட்டாய், அமைதியாக போராடத் தெரிந்தவன் தமிழன்' என்ற நற்பெயரை, ஜல்லிக்கட்டு போராட்டம், ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும் பெற்று தந்துள்ளது. கலவரம், வன்முறையின்றி, பாரம்பரியத்தை காக்க, ஒற்றுமையுடன் ஒன்றுகூடிய இளைஞர்களின் வீரப் பயணம், மூன்றாவது நாளை கடந்து, இன்றும் தொடர்கிறது. 

உச்ச நீதிமன்ற உத்தரவால், தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடத்த தடை உள்ளது. அதை நீக்கக் கோரியும், தடைக்கு காரணமான, 'பீட்டா' விலங்குகள் நல அமைப்பை தடை செய்யக் கோரியும், மதுரையில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அவர்களுக்கு ஆதரவாக, சென்னை, மெரினா வில், 17ம் தேதி, மாணவர்கள் போராட் டத்தில் குதித்தனர். அதையடுத்து, மாணவியர், இளைஞர்கள், பெண்கள் என, அனைத்து தரப்பி னரும், மெரினாவில் திரண்டனர். இரவு, பகல் என, மூன்றாவது நாளாக, நேற்றும் இந்த போராட்டம் அமைதி வழியில் தொடர்ந்தது. 
இது குறித்து, சென்னை போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை, மெரினா கடற்கரை சாலை வழி யாகத் தான் முதல்வர், அமைச்சர்கள், உயரதி காரிகள், தலைமைச் செயலகமும்; நீதிபதிகள், உயர் நீதிமன்றத்துக்கும் செல்வர். இதனால், அந்தசாலையில், 10 பேர் கும்பலாக நிற்க அனு மதி கிடையாது. இங்கு, 17ம் தேதி காலையில் இருந்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு விடுப்பு: அரசு ஊழியர்கள் அறிவிப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, அரசு ஊழியர்கள், இன்று ஒரு நாள், தற்செயல் விடுப்பு எடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். தமிழக அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள், இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு, ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர்.
அதே போல, அரசு அலுவலர் ஒன்றியமும், ஆதரவு தெரிவித்துள்ளது. இதில் உறுப்பினராக உள்ள, எட்டு லட்சம் பேர், இன்று தற்செயல் விடுப்பு எடுப்பர் என, அறிவித்துள்ளனர்.
கறுப்பு 'பேட்ஜ்' : ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சென்னை, தலைமை செயலக ஊழியர்கள் இன்று, கறுப்பு, 'பேட்ஜ்' அணிந்து பணிபுரிய முடிவு செய்துள்ளனர். அரசு பணியாளர் சங்கம் சார்பில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், அந்த சங்கம் தெரிவித்துள்ளது. 

வியாழன், 19 ஜனவரி, 2017

ஜூன் 30 வரை இலவசங்கள் தொடரும்.. ஜியோ-வின் புதிய ஆஃபர்..!

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் சேவைப் பிரிவான ஜியோ, வாடிக்கையாளர்களைப் பெறவும், 
தக்கவைத்துக்கொள்ளவும் வெல்கம் ஆஃபர் மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆஃப்ர் ஆகியவற்றை அறிவித்துச் சுமார் 7 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் வருகிற மார்ச் 31ஆம் தேதி முதல் ஹேப்பி நியூ இயர் ஆஃப்ர் முடிவடைவதால், ஜூன் 30ஆம் தேதி வரையிலான புதிய இலவச திட்டத்தை வடிவமைத்துள்ளது ஜியோ.
இதன் மூலம் மார்ச் 31ஆம் தேதிக்குப் பின்னும் ஜியோ வாடிக்கையாளர்களுக்குக் கொண்டாட்டம் தான்.
இலவச திட்டம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் பிரிவான ஜியோ அறிமுகத்தின் போது இந்திய டெலிகாம் சந்தையில் இருக்கும் போட்டியை சமாளிப்பது கடினம் என்பதால் அதிக வாடிக்கையாளர் கொண்ட தளத்தை உருவாக்குவதே தனது முதல் திட்டமாக இருந்தது.
இதற்காகவே இலவசங்களை வாரி வழங்கியது.
2 திட்டங்கள்.. 6 மாதம்
அதிகளவிலான வாடிக்கையாளர் தளத்தை அமைக்க ஜியோ அறிமுகத்தின் போது, டேட்டா முதல் வாயஸ் கால் வரை அனைத்தையும் இலவசம் என வெல்கம் ஆஃப்ராக அறிவித்தது. இது டிசம்பர் 31 வரை நீடித்தது.
அதன்பின் ஹேப்பி நியூ இயர் என்ற பெயரில் இண்டர்நெட் டேட்டா பயன்பாட்டு அளவை மட்டும் குறைத்து வாய்ஸ் முற்றிலும் இலவசம் என்ற ஆஃபரை வழங்கியது. இந்த ஆஃபர் வருகிற மார்ட் 31ஆம் தேதி முடிய உள்ளது.
அடுத்த என்ன????
புதிய ஆஃபர்
தற்போது திட்டமிட்டுள்ள திட்டம் ஜூன் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கும். இதில் இண்டர்நெட் டேட்டா மட்டும் குறைவான விலையில் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம் என்ற புதிய திட்டத்தை ஜியோ வடிவமைத்துள்ளதாக தெரிகிறது.
100 ரூபாய் மட்டுமே
முகேஷ் அம்பானி தலைமையில் இயங்கும் ஜியோ நிறுவனத்தின் இப்புதிய திட்டம் ஜூன் 30ஆம் தேதி வரை நீடிக்கும் என இத்திட்டத்தைக் குறித்த அறிந்த சில உயர் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்புதிய திட்டத்தில் இண்டர்நெட் டேட்டாவிற்கு மட்டும் மாதம் 100 ரூபாய் வசூல் செய்யப்படலாம் எனவும் கூறியுள்ளனர்.
பிஸ்னஸ் ஸ்டார்ட்ஸ்
ஜியோ அதிகாரி ஒருவர், இப்புதிய திட்டத்தைக் குறித்து எக்னாமிக்ஸ் டைம்ஸ் கேட்டபோது மார்ச் 31ஆம் தேதிக்குப் பின் ஜியோ பணத்தை சம்பாதிக்கத் துவங்கும். இனி உண்மையான பிஸ்னஸ் துவங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
போட்டி
ஜியோவின் இலவசங்கள் மூலம் இந்நிறுவனம் சுமார் 7.2 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. மேலும் இதன் போட்டியை சமாளிக்க இந்தியாவில் மொபைல் சேவை அளிக்கும் ஏர்டெல், ஐடியா, வோடாபோன் ஆகியவை இண்டர்நெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் கட்டணத்தைக் குறைத்துள்ளது.
குறிப்பு: நேற்று ஏர்டெல் நிறுவனம் 4ஜிபி 3ஜி/4ஜி டேட்டாவிற்கு வெறும் 157 ரூபாய் கட்டணத்தை மட்டுமே வசூலித்துள்ளது. (மை ஏர்டெல் மூலம் ரீசார்ஜ் செய்யப்பட்டவை)
ஆபத்து
ஜியோ நிறுவனத்தில் இருக்கும் 7.24 கோடி வாடிக்கையாளர்கள் 90 சதவீதம் பேர் ஜியோவை பிரதான இணைப்பாகக் கருதவில்லை, இலவசங்களுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் ஜியோ தனது வாடிக்கையாளர்களை எப்போது வேண்டுமென்றாலும் இலக்க நேரிடலாம் என அச்சம் இந்நிறுவனத்தின் மத்தியில் நிலவி வருகிறது.
முதலீடு
ஜியோ நிறுவனத்தில் ஏற்கனவே இதன் தலைவர் முகேஷ் அம்பானி 1.7 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில், தற்போது புதிதாக 30,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார் முகேஷ்.
நிதி திரட்டல்
இப்புதிய முதலீட்டைத் தனது உரிமைகள் விற்பனை மூலம் திரட்டவும் அதனை நிறுவனத்தின் வளர்ச்சிக்காக முதலீடு செய்யவும் ஜியோ நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சேவை விரிவாக்கம்
ஜியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அதன் வளர்ச்சிக்கும், நெர்வொர்க் மேம்பாடு மற்றும் அளவுகளை உயர்த்த இப்புதிய முதலீடு பயன்படுத்த திட்டமிட்டுள்ள ஜியோ.