இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “நாங்கள் உள்நாட்டு ரோமிங் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளது.
Aided School Teachers Association(ASTA) Reg.No 15/2015 J.THOMAS 9585577005 R.BALASUBRAMANIAN 9585656575 L.BHASKAR 9345658249
செவ்வாய், 28 பிப்ரவரி, 2017
ஏர்டெல் அதிரடி அறிவிப்பு - ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரோமிங் கட்டணம் ரத்து
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “நாங்கள் உள்நாட்டு ரோமிங் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மார்ச் முதல் வாரத்தில் மழை - வரலாற்றில் இடம்பெறும்.
அச்சிட்ட 'டெட்' தேர்வு விண்ணப்பங்கள் சிறிய மாறுதலுடன் பயன்படுத்த முடிவு
பள்ளிகளில் யோகா வகுப்பு கொண்டு வர பரிசீலனை !!
TNTET : கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை: அமைச்சர் செங்கோட்டையன்
சனி, 25 பிப்ரவரி, 2017
பிஎஃப் வசதியை கொண்டு தொழிலாளர்களுக்கு சொந்த வீடு: ஏப்ரலில் அறிமுகம்
குறைந்த வருவாய் கொண்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த வீட்டுக் கனவை நனவாக்க உதவும் வகையில் இந்த புதிய வசதியை ஈபிஎஃப்ஓ அமைப்பு ஏப்ரலில் அறிமுகம் செய்யவுள்ளது.
பள்ளி வாகனங்களில் 'சிசிடிவி'; சி.பி.எஸ்.இ., அதிரடி உத்தரவு
பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதை தடுக்கும் வகையிலும், மாணவர்களின் நலன் கருதியும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அனைத்து பள்ளி வாகனங்களிலும், பாதுகாப்பான வகையில் ஜன்னல்கள் அமைந்திருக்க வேண்டும். பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில், வேகக் கட்டுப்பாடு கருவி கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மணிக்கு, 40 கி.மீ., வேகத்திற்கு மேல் செல்லாத வகையில், வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்தியிருக்க வேண்டும்.
'சிசிடிவி' எனப்படும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வாகனம் எங்கு செல்கிறது என்பதை அறியும் வகையில், அதில், ஜி.பி.எஸ்., கருவி இடம் பெற்றிருக்க வேண்டும். பள்ளிக் குழந்தைகளை வாகனத்தில் சரியாக ஏற்றி, இறக்க, ஒரு பெண் உதவியாளர் பணியமர்த்தப்பட வேண்டும்.
வாகனத்தின் டிரைவரை பணியமர்த்தும் முன், அவரின் நன்னடத்தை குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும்; அதன் பின்னரே பணியமர்த்த வேண்டும். இந்த அம்சங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என, பள்ளி நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒரு விஷயத்தில் குறை ஏற்பட்டாலும், அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், உ.பி., மாநிலம் எடா எனும் இடத்தில், பள்ளி மாணவர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில், டிரைவர் உட்பட, 12 பேர் பலியாகினர்; 35 பேர் படுகாயம் அடைந்தனர். இது, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பள்ளி வாகனங்களில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து வரையறுக்க, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் உத்தரவிட்டார். மத்திய அமைச்சகத்தின் உத்தரவை அடுத்து, சி.பி.எஸ்.இ., இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது
EMIS சார்பான தகவல்கள்.
வெள்ளி, 24 பிப்ரவரி, 2017
வியாழன், 23 பிப்ரவரி, 2017
உங்கள் குழந்தையை ஒரு பொம்மையைப் போல தயார் செய்யாதீர்கள்! vikatan.com
நம்ம செல்ல குட்டீஸ்கள் எல்லாம் ஸ்கூலுக்கு போய்ட்டு வர்றாங்க. அவங்கள எப்படி ஸ்கூலுக்கு கிளப்பணும். ஸ்கூல் விட்டு வந்ததும் எப்படி அவங்கள கவனிக்கணும். ஸ்கூல்ல இருந்து என்ன மாதிரியான பிரச்னைகள் வரும்? குழந்தைகள் படிக்க துவங்கும் போது என்ன மாதிரியான சிரமங்கள் வரும்? அதனை எப்படி எதிர் கொள்ளலாம் என்பதைப் பற்றி மதுரை மனோதத்துவ நிபுணர் ராணி சக்கரவர்த்தி சொல்வதைக் கேட்கலாம்: ‘குழந்தைங்க பள்ளிக்கு போகும் போது தான் சமூகத்துல முதல் தடவையாக நுழைய போறாங்க. ஸ்கூல்னா மிஸ் திட்டுவாங்க. மத்த பிள்ளைகள் சண்டை போடுவாங்க. அமைதியா இருக்கணும். நல்லா படிக்கணும்.பேசக்கூடாது. இப்படி நிபந்தனைகளோட நெகடிவ்வா பேசாம நீங்க முதன் முதல்ல ஸ்கூலுக்கு போகப் போறீங்க. அங்க உங்களுக்கு நிறைய ப்ரண்ட்ஸ் கிடைப்பாங்க. எல்லார்கிட்டையும் நல்லா பழகணும். அன்பா நடந்துக்கணும். மிஸ் ரொம்ப நல்லவங்க. ஸ்கூல்ல எல்லாரும் உங்களை நல்லா வச்சுக்குவாங்க. அங்க விளையாடலாம். மிஸ் நிறைய புது விஷயங்கள் சொல்லித் தருவாங்க. கத்துக்கணும் என பாசிட்டிவா பேசி ரிலாக்சாக ஸ்கூலுக்கு செல்ல தயார் படுத்தணும். ஸ்கூல்குள்ள குழந்தைங்க போனதும் குழந்தைகளுக்குள்ள சின்ன சண்டை, ஒருத்தரை, ஒருத்தர் அடிப்பது, கடிப்பது வரலாம். உங்க குழந்தைங்க உங்களுக்கு எப்படி செல்லமோ? அதே மாதிரி ஒவ்வொரு வீட்டு குழந்தைகளும் அந்தந்த வீட்டுக்கு செல்லம் தான். அதனை பெரிது படுத்தாமல் பாசிடிவ்வா சமாளிக்கணும். ஸ்கூலுக்கு கிளப்பும் போது அவதி, அவதியா பொம்மையை ரெடி பண்ற மாதிரி செய்யக்கூடாது. ஆரம்பத்தில் குழந்தைகளை கிளப்புவதற்கென தனியாக நேரம் ஒதுக்கணும். அவங்களே ப்ரஷ் பண்ண, டாய்லெட் போக என தங்கள் வேலைகளை தாங்களே செய்ய கற்றுத் தரணும். குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளையே சாப்பாடாக வழங்க வேண்டும்.
பள்ளியை விட்டு வந்ததும் பள்ளியில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி கேட்க வேண்டும். சின்ன, சின்ன விஷயங்களையும் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். தனிக்குடும்பங்களில் தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தையெல்லாம் கிடையாது. அப்பா, அம்மா இருவரும் வேலைக்கு போறவங்களா இருக்காங்க. இல்லாட்டி அப்பா வேலைக்கு போய்டுவாரு. அம்மா வீட்ல வேலை பார்ப்பாங்க. வீட்டு வேலையை செய்யணும்னேனு டிவியை போட்டு உட்கார வச்சுடுவாங்க. இல்ல செல்போன், லேப்டாப், வீடியோ கேம்னு கைல வச்சுட்டு இருப்பாங்க. இது மாதிரி அதிகப்படியான எலக்ட்ரானிக் பொருட்கள் பயன்பாடு குழந்தைகளோட மூளையில ஹைப்பர் ஆக்டிவ்வை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. இதனால் கவனச்சிதறல் அதிகமாகுது. துறுதுறுப்பு அதிகமாகுது. ஆங்கிரி பேட் கேம் விளையாடுறது, கார்ட்டூன் சேனல்கள் அதிகமா பார்க்கும் போது நாளடைவில் குழந்தைகள் ஒரு மாய உலகில் இருப்பது போல் பாவித்துக் கொள்வார்கள். இதனால் குழந்தைகளோட குழந்தைத்தன்மை போயி எதற்கெடுத்தாலும் கோபம், டென்சன் வருது. அளவுக்கு அதிகமா அடம் பிடிக்கிறது அதிகமாகுது. வீட்டில் குழந்தைகள் இருக்கின்ற ஒவ்வொரு நேரமும், பெற்றோர்கள் உடன் இருப்பது போல் அமைப்பது அவசியம். ஓடி, ஆடி விளையாடுதல், ஒளிந்து விளையாடுதல் அவசியம். அப்போது தான் அவர்களிடம் இருக்கின்ற பிடிவாதம், கவனச்சிதறல் குறையும்.
பள்ளிக்கு சென்றதும் சில குழந்தைகளுக்கு கற்பதில் சிரமம் இருக்கும். இக்குழந்தைகளால் ஒரு 5 முதல் 10 நிமிடம் கூட உட்கார இயலாது. கவனச்சிதறல் அதிகமாக இருக்கும். கற்றலில் ஆர்வம் இல்லாமல் குறைவாக இருக்கும். ஆனால் நல்ல தெளிவாக பதிலளிக்கும் திறமையும், அறிவுக்கூர்மையும் அதிகமாக இருக்கும். கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். எழுத்துக்களை எழுதுவதிலும், வார்த்தைகளை உச்சரிப்பதிலும் சிரமம் இருக்கும். எழுத்துக்களை தலைகீழாக எழுதுவது, கோட்டின் மேல் எழுதாத சூழல் இருக்கும். எல்லாக் குழந்தைகளும் துவக்கத்தில் இதே மாதிரி எழுதுவார்கள். ஒரு 6 அல்லது 8 மாத பயிற்சிக்குப் பின்னர் சரியாக எழுதுவார்கள்.
கற்றலில் குறைபாடு(லேர்னிங் டிஸ்எபிளிட்டி) உள்ள குழந்தைகள் தொடர்ந்து இந்த தவறுகளை செய்வதைக் காணலாம். இக்குழந்தைகளை அடிக்கக்கூடாது. அவர்களைப் புரிந்து கொள்ள முயல வேண்டும். சிலருக்கு இடது கை பழக்கம் இருக்கும். அப்பழக்கத்தை வலது கை பழக்கமாக மாற்ற முயலக்கூடாது. இவர்களிடம் நீச்சல், டான்ஸ், மியூசிக் என ஏதாவது ஒரு திறனில் அபரிமிதமான ஆற்றல் இருக்கும். இவர்கள் எந்தத் துறையில் ஆர்வமாக உள்ளனர் என்பதைக் கண்டறிந்து அத்திறனை வளர்க்க வேண்டும். அதோடு கொஞ்சம், கொஞ்சமாக பொறுமையுடன் படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்களை படிப்பதற்கு கட்டாயப்படுத்தாமல் ஆர்வமூட்ட வேண்டும். பள்ளியில் ஆசிரியர்கள் இவர்களை புரிந்து கொள்ளாமல் ஸ்லோ லேனர்ஸ், லோ அச்சீவர்ஸ், டிஸ்லெக்சியா என குறை சொல்வர். மற்ற குழந்தைகள் முன்பு மட்டம் தட்டுவார்கள். அவ்வாறு செய்வதை பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது.
ஆசிரியர்கள் இக்குழந்தைகளை தனிமைப்படுத்தாமல் ஊக்குவித்து கற்றுத்தர வேண்டும். ஆய்வுப்படி 100 குழந்தைகளில் 2 அல்லது 3 பேருக்கு கற்றலில் குறைபாடு இருக்கிறது. அப்படியானால் பெரும்பாலனவர்களுக்கு இப்பிரச்னை இருக்கிறது என்றே அர்த்தம். இவர்கள் எதுக்குமே லாயக்கில்லாத படிக்காத முட்டாள் என நினைத்தால் தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டீன், வால்ட் டிஸ்னி, மைக்கேல் ஏஞ்சலோ இன்னும் எத்தனையோ பேர் இந்த வகையை சேர்ந்தவர்களே. இவர்களை பெற்றோர்கள் புரிந்து கொண்டு நல்ல மனோதத்துவ நிபுணரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெற்று பயிற்சி வழங்க வேண்டும். ஆலோசனைப்படி பொறுமையுடன் பாடம் கற்றுத் தந்து, அவர்களிடம் இருக்கும் தனித்திறமையை மேம்படுத்தினால் நாளடைவில் கற்பதில் ஏற்படும் குறைபாடு படிப்படியாக குறையும். அதனை விடுத்து படிப்பு மட்டுமே பிரதானம். படிக்கவில்லை என அடித்து துன்புறுத்துதல், மற்றவர்கள் முன்பு கேவலமாக பேசுதல் என செய்தால் எதிர்காலத்தில் மனநோயாளியாகவோ, குற்றவாளியாகவோ மாற வாய்ப்புள்ளது" என்றார்.
குழந்தை என்பது நமது உடலில் இருந்து உருவான ஜீவன். அதற்கென தனியாக அனைத்து உறுப்புகளும் உள்ளன. அதே போல் அதற்கென விருப்பு, வெறுப்புகள் உள்ளது. அதனை பெற்றோர்களும், ஆசிரியர்களும் புரிந்து கொள்ள வேண்டும். நமது தேவைகளையும், ஆசைகளையும் குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது. அவர்களின் தனித்திறனை, ஆற்றலை கண்டறிந்து ஊக்குவித்து மேம்படுத்த உதவ வேண்டும்.
உங்களின் குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் இதெல்லாம் இருக்கலாமே! vikatan.com
* குழந்தைகள் எண்ணெயில் பொரித்த பண்டங்களை ‘ஸ்நாக்ஸாக’ கொண்டு செல்வதற்கே விரும்புவர். இவற்றில் எவ்வித சத்தும் கிடைப்பது இல்லை. காய்கள், பழங்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு வழங்கலாம்.
* சுண்டல், பாசிப்பயறு, தட்டைப்பயறு போன்ற பயறு வகைகளை வேக வைத்து தாளித்து, சிறிது தேங்காய் துறுவல் சேர்த்து ஸ்நாக்ஸாக கொடுக்கலாம்.
ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களை சிறிது, சிறிதாக நறுக்கியும், மாதுளையை உரித்தும், சிறிது மிளகு, சீரகத்தூள் மற்றும் உப்பு தூவி வழங்கலாம்.
* வெள்ளரி, காரட்டை நறுக்கி சிறிது மிளகு, சீரகத்தூள் மற்றும் உப்பு தூவி கொடுத்தால் சுவை கூடும்.
* வேர்க்கடலையை வேகவைத்து உறித்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளியை நன்கு வதக்கி, உறித்த வேர்கடலையை அதனுடன் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்தால் போதும் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
* பச்சரிசி மாவில் சிறிது வெல்லம், பொரிகடலை தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கொழுக்கட்டை பிடித்து, இட்லிப் பாத்திரத்தில் வேக வைத்து வழங்கலாம்.
* பொரி கடலையை மிக்சியில் நைசாக அரைத்து கொள்ள வேண்டும். அதே அளவு சர்க்கரையையும் நைசாக அரைத்து, இரண்டையும் மிக்ஸ் செய்து சூடான நெய்யை விட்டு உருண்டை பிடித்து வழங்கலாம். இத்துடன் உலர் முந்திரி, திராட்சையை கலந்து வழங்கலாம். பொரி கடலைக்கு பதிலாக பாசிப்பயறு மற்றும் பாசிபருப்பையும் பயன்படுத்தலாம்.
சில குழந்தைகள் மதிய உணவிற்கு டிபன் அயிட்டங்கள் கொண்டு செல்ல விரும்புவார்கள். அவர்களுக்கு,
* இட்லியை கத்தியால், பல துண்டுகளாக கட் செய்து அதன் மேல் சிறிது நெய், சாம்பார் ஊற்றி கொடுக்கலாம். போர்க் ஸ்பூன் கொடுத்தால் ஆசையாக எடுத்து சாப்பிடுவார்கள்.
சப்பாத்தி மாவோடு சிறிது பீட்ரூட் துருவல்/ காரட் துருவல்/ கீரைகள் சேர்த்து தேய்த்து சாப்பாத்தி போட்டு தரலாம்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி தாளித்து வேகவைத்த உருளை/பட்டர் பீன்ஸ்/பட்டாணி/பீன்ஸ், காரட் போன்ற காய்கறிகளை சேர்த்து, சிறிது மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இந்த கலவையை சப்பாத்தி அல்லது தோசைக்குள் மடித்து கொடுத்தால் மசாலா சாப்பாத்தி போல் விரும்பி உண்பார்கள்.
* லெமன் சாதம் செய்யும் போது சிறிது நிலக்கடலை, முந்திரி பருப்பு சேர்த்து வழங்கலாம். இதே போல் புளி சாதம் மற்றும் தேங்காய் சாதத்திலும் கலந்து வழங்கலாம். போதிய சத்துக்களும் கிடைக்கும்
* ஒரு டம்ளர் அரிசியுன், அரை டம்ளர் துவரம் பருப்பு, சிறிது வெங்காயம், புளிக்கரைசல், தக்காளி, பீன்ஸ், காரட், தேவையான மிளகாய்த்தூள், உப்பு, சீரகம், வெந்தயத்தூள் சேர்த்து அளவாக தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து இறக்கினால் கம, கம சாம்பார் சாதம்.
* வாணலியில் வெங்காயம், தக்காளி வதக்கி அதனுடன் பீன்ஸ், காரட் சேர்த்து வதக்கவும். இத்துடன் 2 முட்டைகளை உடைத்து நன்கு வதக்கி இத்துடன் மிளகுத்தூள், உப்பு சேர்க்க வேண்டும். தனியாக வேக வைத்த சாதத்துடன், இக்கலவையை கலந்து வழங்கலாம். இதே முறையில் பாஸ்மதி ரைஸ் கலந்து ப்ரைடு ரைஸ் கொடுக்கலாம்.
* வெஜிடபிள் ரைஸ் செய்யும் போது, மீல் மேக்கர் கலந்து செய்து வழங்கினால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.
புதன், 22 பிப்ரவரி, 2017
ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்: அமைச்சர் செங்கோட்டையன்
தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்
வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு கட்டாயமாகிறது.
. இனி வரும் காலங்களில் விளையாட்டில்
எடுக்கப்படும் மதிப்பெண்களும் தேர்வின் போது கணக்கில் எடுக்கப்படும்.

இதுகுறித்து விளையாட்டுத் துறை செயலர் இன்ஜெட்டி சினிவாஸ் கூறுகையில் "இந்தத் திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் அமலுக்கு வரும். இது நம் கல்வி முறையில் பெரும் மாற்றத்தை கண்டிப்பாக கொண்டுவரும்`` என்றார்.
Jio வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த புதிய கட்டண விவரங்கள் அறிவிப்பு வெளியீடு
EMIS இணையதளத்தில் 1முதல் 8 வகுப்புவரை புதிய மாணவர் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
CLICK HERE FOR EMIS UPDATE
7வது ஊதிய குழு பரிந்துரையின் சீராய்வு முடிந்தது; மத்திய அரசு ஊழியர்கள் ‘அலவன்ஸ்’ உயருகிறது!
7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழகஅரசு,30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தரவு.
7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி மு பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், அரசுப் பணியாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அவருடைய அறிவிப்பை செயல்முறைபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எனது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று இன்று நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க “அலுவலர் குழு” ஒன்றை உடனடியாக அமைக்க உத்திரவிட்டுள்ளேன். இக்குழுவில் கீழ்கண்ட அலுவலர்கள் உறுப்பினர்களாக இருப்பர் :
1. கூடுதல் தலைமை செயலாளர், நிதித்துறை
2. முதன்மை செயலாளர், உள்துறை
3. முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை
4. செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை
5. Dr. பி.உமாநாத், – உறுப்பினர் செயலாளர்.
2) இந்த “அலுவலர் குழு” மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்குழு, இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்கும்.
3) அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம் / ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4) இக்குழு தனது அறிக்கையை நான்கு மாத காலத்திற்குள், அதாவது 30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
திங்கள், 20 பிப்ரவரி, 2017
மெய்நிகர் வகுப்பறை பயிற்சி (Smart Virtual Class Room)
21.02.2017 அன்று காலை 11 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் வைத்து நடைபெறும் மெய்நிகர் வகுப்பறை பயிற்சி (Smart Virtual Class Room) யி ல் வெப்பம், வெப்பநிலை, வெப்ப சலனம் , வெப்ப கதிர்வீச்சு என்னும் தலைப்பில் பாடம் நடத்தும் பாப்பாக்குடி சரகம் ஓடைக்கரைதுலுக்கப்பட்டி இந்து நடுநிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியரும் தென்மண்டல அரசு உதவிபெறும் ஆசிரியர் சங்க(ASTA) மாநில செயலாளருமான திரு. இரா. பாலசுப்பிரமணியன் அவர்களை ASTA வாழ்த்துகிறது
ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017
கொத்தமல்லித்தழை கட்டுக்குள் பார்த்தீனியம்... உஷார்! #HighAlert- VIKATAN.C0M
http://www.vikatan.com/news/health/81272-parthenium-which-spoils-the-health-of-women.html
பார்த்தீனியம் பார்க்க அவ்ளோ அழகு. வெண் மொட்டுக்கள் கண் திறந்தது போன்ற பூக்களால் தலை அசைக்கும். ஆனால், இந்தப் பார்த்தீனியம் பண்ணும் வேலையோ பயங்கரம். வயல்வெளி, வரப்புகள் என எங்கும் பறந்து விரிந்து வளர்ந்து நிற்கிறது இந்த நச்சு செடி. அப்புறப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் வளர்ந்து நிற்கும்.
பார்த்தீனியத்தை ஒழிக்கும் அவசியம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஒழிக்கும் வேலையோ
இந்தப் பார்த்தீனியம் எங்கிருந்து வந்தது தெரியுமா? இதுவும் அமெரிக்கா நமக்கு அளித்த பரிசுதான். மெக்சிகோ வளைகுடா பகுதியில் இருந்து கோதுமையோடு நம் நாட்டுக்கு அனுப்பப்பட்ட விஷப் பரிசு.
இந்தப் பார்த்தீனியத்தில் உள்ள நச்சுப்பொருள்கள்களின் ஆதிக்கத்தால் நம் நாட்டின் பல நூறு தாவர இனங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இவ்வளவு அபாயம் மிகுந்த பார்த்தீனியம் நம் வீட்டு ரசத்தில் மிதக்கிறது என்றால், நினைக்கும்போதே பதறுகிறது அல்லவா?
''எவ்வளவு விழிப்புணர்வுடன் செயல்பட்டாலும் பார்த்தீனியம் தன் வில்லத்தனத்தை விடுவதாக இல்லை. கீரைப்பாத்திகளில் வளர்ந்து நம் வீட்டு சமையல் அறைக்கு வந்துவிடுகிறது. குறிப்பாக, இந்தப் பார்த்தீனியம் கொத்தமல்லித்தழையை ஒத்திருப்பதால், கொத்தமல்லிக் கட்டில் தொற்றிக்கொண்டு வந்துவிடுகிறது. நாம் செய்யும் குழம்பு, ரசத்தோடு கலந்து, ஆரோக்கியத்தின் ஆயுளையே ஆட்டம் காணவைத்துவிடுகிறது'' என்கிறார் அரசு சித்த மருத்துவர் வெற்றிவேந்தன்.
இந்தப் பார்த்தீனிய இலைகளை உட்கொண்டால் என்னவெல்லாம் ஆகும்?
‘‘கால்நடைகள் மேய்ச்சலின்போது இந்தப் பார்த்தீனியத்தை உட்கொண்டால், வாய் மற்றும் குடல் பகுதிகளில் அல்சர் புண்ணை ஏற்படுத்தும். பெரும்பாலும் அவை உண்பதில்லை. ஆனால், பார்த்தீனிய செடிகளைக் கடந்து செல்லும்போது மாட்டின் மடியில் பார்த்தீனிய செடிகள் வருடினாலே ஜூரம் போன்ற பாதிப்புகளைச் சந்திக்கின்றன.
அப்படி இருக்கையில், நாம் உணவோடு உட்கொண்டால் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று யோசித்துப் பாருங்கள். பார்த்தீனியம் செடியில் இருக்கும் பூக்களின் மகரந்தத்தை நுகர்வதால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. நுரையீரலுக்கு காற்றுச் செல்லும் மூச்சுக்குழல்கள் சுருங்கி விரியும் தன்மையை குறைக்கிறது. இதுவே காலப்போக்கில் அலர்ஜி மற்றும் ஆஸ்துமாவாக உருவெடுக்கிறது.
மஸ்ட் எனும் செல்களின் உற்பத்தியை குறைக்கிறது. இதனாலும் மூச்சுத்திணறல் வரலாம். கொத்தமல்லி மற்றும் கீரை வகைகளுடன் கலந்துவிடும் பார்த்தீனியத்தால், சாப்பிடும் கீரை மற்றும் காய்கறிகளில் இருந்து நமக்கு கிடைக்கும் சத்துக்களும் பாதிக்கப்படுகிறது. காய்கறி மற்றும் கீரைகளைச் சமையலுக்குப் பயன்படுத்தும் முன்பு அதை வெளிச்சத்தில் வைத்து சுத்தம் செய்யுங்கள்பார்த்தீனியம் இலைகளை அடையாளம் தெரிந்துக்கொண்டு கவனித்து அகற்றுங்கள். நம் ஆரோக்கியத்தை காக்க நாம்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்'' என்கிறார் வெற்றிவேந்தன்..
பி.எப்., கணக்குடன்ஆதாரை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு
பள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.
இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பள்ளிகளில், மாணவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து, விரிவான ஆய்வு நடத்த வேண்டும்.
நீர்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவு நீர் தொட்டி மற்றும் நீர்த்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்து, அவை மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில், மாணவர்கள் குளிப்பதை தவிர்க்க, அறிவுரை வழங்க வேண்டும்.
பள்ளியை விட்டு செல்லும் போது, பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது அருகாமையில் செல்வதோ கூடாது என, எச்சரிக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில், மரங்கள் விழும் நிலையில் இருந்தால், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி கட்டிடங்கள் பாதுகாப்பாக உள்ளதாக என்பதை யும் ஆய்வு செய்ய வேண்டும்.
இதுபோன்று, பல, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சனி, 18 பிப்ரவரி, 2017
போர்க்களமானது தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது... எதிரணியில் அமளியில் ஈடுபட்டதோடு, சபாநாயகரின் நாற்காலி, மைக்கை உடைத்தனர். சட்டப்பேரவை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டதால் தலைமைச் செயலகத்தில் துணை ராணுப்படையினர் குவிக்கப்பட்டனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவுசெய்யப்பட்டது. காலை 9.30 மணி முதல் உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தலைமைச் செயலகத்துக்கு வரத்தொடங்கினர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சட்டப்பேரவைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நேப்பியர் பாலத்துக்கு முன்பே சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பின்னர், கோட்டைச் சாலையில் செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர்.
ஒவ்வொரு வாகனமாக தலைமைச் செயலகத்துக்கு வந்துகொண்டிருந்தது. காலை 10 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் காரில் வந்தனர். அப்போது, அனைத்து வாகனங்களையும் காவல்துறையினர் சோதனை செய்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த மு.க.ஸ்டாலின், கோட்டைக்கு முன்பு உள்ள பிரதான நுழைவு வாயிலுக்கு முன்பே காரை நிறுத்திவிட்டு எம்.எல்.ஏ.க்களுடன் சட்டப்பேரவைக்கு நடந்தே சென்றார். இதன் பிறகு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். மு.க.ஸ்டாலினுடன் வந்த எம்.எல்.ஏ.க்கள், பன்னீர்செல்வத்துடன் வந்த எம்.எல்.ஏ.க்களுடன் சிரித்துக்கொண்டே கைகுலுக்கிக்கொண்டனர். பின்னர் அவர்கள் பேரவைக்குள் சென்றனர்.
காலை 11 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியது. அப்போது, செம்மலை பேசியபோது அமளி ஏற்பட்டது. அப்போது பேசிய சபாநாயகர், "பொறுமையாக இருங்கள். நான் சபையை அமைதியாக நடத்த விரும்புகிறேன்" என்றார். இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அமைதி காத்தனர். பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் தொடங்கிவைத்தார். அப்போது, எதிரணி உறுப்பினர்கள், 'வாக்கெடுப்பு நடத்தக்கூடாது' என்று கோரி அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கிடையே சபாநாயகர், எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களை நிற்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது, ஒவ்வொரு பிளாக்காக எம்.எல்.ஏ.க்கள் எழுந்து, ஆதரவு... ஆதரவு என்று கூறினர். மூன்றாவது பிளாக்கில் 33 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் எழுந்து நிற்க முயன்றபோது, அவையில் கடும் அமளி ஏற்பட்டது. "வாக்கெடுப்பு நடத்தக்கூடாது. நாங்கள் இன்னும் பேசவேயில்லை. எப்படி வாக்கெடுப்பு நடத்த அனுமதிப்பது" என்று கூறி எதிரணியினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, தி.மு.க உறுப்பினர் பூங்கோதை, மேஜையின் மீது ஏறி கோஷமிட்டார்.
அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "உறுப்பினர்கள் அனைவரும் தொகுதி மக்களைச் சந்திக்க வேண்டும். 19 நாள்கள் ஏன் எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்திருந்தார்கள்" என்று பேசினார். இதற்கு சபாநாயகர், "எந்த எம்.எல்.ஏவும் அடைத்து வைக்கப்படவில்லை. அதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது. நீங்கள் ஆதரவா, எதிர்ப்பா என்பதை மட்டும் இங்கே தெரிவியுங்கள்" என்றார். "இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம், வாக்கெடுப்பை ஒத்திவையுங்கள். இன்னொரு நாள் வாக்கெடுப்பு நடத்துங்கள்" என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.அடுத்து பேசிய காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் ராமசாமி , "வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். ஆனால் சபாநாயகர், "இது என்னுடைய முடிவு. இன்று காலையில் எடுத்த முடிவு கிடையாது. இரண்டு நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. அப்போது யாரும் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. வாக்கெடுப்பில் கலந்துகொள்கிறோம். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றுதான் கூறினீர்கள். இப்போது, வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று சொல்கிறீர்கள். இது என்னோட முடிவு" என்றார்.
ஆனாலும், "ரகசிய வாக்கெடுப்புதான் நடத்த வேண்டும்" என்று எதிரணியினர் கூறினர். இந்தக் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததால் அவையில் அமளி நிலவியது. இதனிடையே, எடடிப்பாடிக்கு ஐந்து உறுப்பினர்கள்தான் ஆதரவு தேவை. ஆனால், எதிரணியினர் அமளியில் ஈடுபட்டதோடு, சபாநாயகரை முற்றுகையிட்டு நாற்காலி மற்றும் மைக்கை உடைத்தனர். அப்போது, நேரம் 12 மணியாக இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பகல் 12 மணி முதல் 1 மணி வரை அவர் அவையில் இருக்க மாட்டார். இந்தச் சூழ்நிலையில், அவையை ஒரு மணி வரை ஒத்திவைப்பதாகக் கூறிவிட்டு, சபாநாயகர் அவையில் இருந்து வெளியேறினார். ஒன்று, இரண்டு, மூன்று பிளாக் எண்ணிக்கை முடிவடைந்துவிட்டது. இன்னும் நான்கு, ஐந்து பிளாக் எண்ணிக்கை மட்டும்தான் முடியவேண்டும். அதற்குள் அவை ஒத்திவைக்கப்பட்டது. நான்கு, ஐந்து பிளாக்குகள் பன்னீர் ஆதவுர மற்றும் திமுக உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், தலைமைச் செயலகத்துக்கு துணை ராணுப்படை, அதிவிரைவுப்படையினர் எட்டு வாகனங்களில் வந்து குவிந்துள்ளனர். தொடர்ந்து தலைமைச் செயலக வளாகம் பரபரப்புடன் காணப்படுகிறது.
வெள்ளி, 17 பிப்ரவரி, 2017
சுற்றுச் சூழல் மன்றம் - மரம் நடு விழா
அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி H .K . சங்கர சுப்பிரமணிய அய்யர் -மீனாட்சி அம்மாள் நினைவு விளையாட்டு மைதானத்தில் சுற்றுச் சூழல் மன்றம் சார்பில் மரம் நடு விழா நடைபெற்றது. பள்ளி செயலர் திரு. டி .வி . சுப்பிரமணியன் அவர்கள் மரக்கன்றுகளை நட்டார். விளையாட்டு மைதானத்தில் மொத்தம் 25 மரங்கள் நட திட்டமிட்டு முதற்கட்டமாக 7 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது. மிகுந்த மகிழ்ச்சியான நாளாக இன்று அமைந்தது. விழாவிற்காக உழைத்த எம் பள்ளி ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி, திருமதி.ஜேஸ் மாலா , திருமதி. முத்து செல்வி,திருமதி. மணிமேகலை , செல்வி. இ ன்பரசி சத்துணவு அமைப்பாளர் திருமதி. மாரியம்மாள் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ம. ராம் சந்தர்
தலைமையாசிரியர்
கல்விக் கடன் வசதிக்கு தனி இணையதளம்: மத்திய நிதித்துறை இணை அமைச்சர் தகவல்
நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றிய முழு விவரம்.. சந்தேகங்களும், பதில்களும்
சென்னை: நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கையை கோரி தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது அவர் உரையாற்றுவார். அப்போது எம்எல்ஏக்கள் அனைவரும் தனது அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார்.
அவரை தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் வெவ்வேறு சட்டமன்ற கட்சி தலைவர்கள் பேச வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள்.
இதையடுத்து, முதல்வர் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் ப.தனபால் உத்தரவிடுவார். இது ரகசிய வாக்கெடுப்பாக இருக்குமா அல்லது, வெளிப்படையானதாக இருக்குமா என்பதை சபாநாயகரே நாளை முடிவு செய்வார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த கேள்விகளையும் அதற்கான பதில்களையும் பார்க்கலாம்:
நம்பிக்கை வாக்கெடுப்பு என்றால் என்ன?
ஓர் ஆட்சிக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதா என்ற சந்தேகம் எழும்போது, அதனை நிரூபிப்பதற்கும், தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதற்கும் அரசியல் சட்டம் வழங்கி இருக்கும் வாய்ப்பே நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற நடைமுறை.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஓர் அரசை யார் கோர முடியும்?
ஓர் அரசு பெரும்பான்மை ஆதரவின்றி, சட்டசபையின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக கருதப்படும் நிலையில், அந்த அரசை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி தனது பலத்தை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிடுவார். குறிப்பிட்ட ஒரு பிரச்சினையில் ஆளும் அரசு நம்பிக்கையை இழந்துவிட்டதாக கருினால், அதன் அடிப்படையில் சட்டசபை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரலாம். அதை ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும் சபாநாயகருக்கு உரிமை உண்டு.
நம்பிக்கை வாக்கெடுப்பில் யாரெல்லாம் பங்கேற்க முடியும்?
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கலாம்.
சுயேட்சை உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம். அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்றால், கொறடா உத்தரவுப்படி வாக்களிக்க வேண்டும்.
நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும்?
அனைத்து உறுப்பினர்களும் இருக்கைகளில் அமர்ந்த பின்னர், சட்டசபையின் கதவுகள் மூடப்படும். சட்டசபை செயலாளர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான நடைமுறைகளை தொடங்குவார். 234 உறுப்பினர்களும் ஆறு பிரிவாக அமர வைக்கப்பட்டிருப்பர். முதலில் ஆதரவு, பிறகு எதிர்ப்பு பிறகு நடுநிலை வகிப்போரை எழுந்து நிற்க சபாநாயகர் உத்தரவிடுவார். எழுந்து நின்று தங்கள் நிலைப்பாட்டை தெரியப்படுத்துவோர் தலைகள் எண்ணப்பட்டு வாக்கெடுப்பு நடைபெறும்.
சபாநாயகருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளதா?
முடிவை தீர்மானிக்க கூடியது ஒரு வாக்கு வித்தியாசமாக இருக்கும்பட்சத்தில் சபாநாயகர் வாக்களிக்கலாம். ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்களிக்கலாம்.
வெற்றி, தோல்வி முடிவுகளை யார் அறிவிப்பார்?
சபாநாயகர்தான் முடிவை அறிவிப்பார். விவரங்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.
எழுத்துப்பிழை இருப்பதால் திருப்பி அனுப்ப உத்தரவு : ஆசிரியர் தகுதி தேர்வுக்கான 7 லட்சம் விண்ணப்பம் வீணானது!!!
வியாழன், 16 பிப்ரவரி, 2017
TET 2017 Exam - தேர்வு தேதியும் மாற வாய்ப்பு ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களை மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு..
-
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி வாரியமான, டி.ஆர்.பி., மூலம், 1,500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, ஒரு ...
-
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில்"தமிழ் கற்பித்தலில் அடிப்படைத் திறன்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் இரண்டு ந...





