வெள்ளி, 31 மார்ச், 2017

நிதியாண்டின் கடைசி நாளான இன்று (மார்ச் 31) பல முக்கிய திட்டங்கள் மற்றும் சலுகைகளுக்கான காலகெடு முடிவடைகிறது.

பழைய ரூபாய் நோட்டுக்கள் : பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கு அரசு அளித்திருந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. நாளை முதல் 10 க்கும் அதிகமாக பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை வைத்திருந்தால் அபராதம் முதலான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வருமான வரி : கறுப்பு பணம் வைத்திருப்போர், மத்திய அரசின் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் தாமாக முன் வந்து தங்களின் வருமானம் தொடர்பாக கணக்கை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அளிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் வருமான வரி செலுத்துவதற்கு அரசு விதித்திருந்த கால கெடு இன்றுடன் முடிவடைகிறது.
பிஎஸ் 3 மாடல் வாகனங்கள் : சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிஎஸ் 3 மாடல் வாகன விற்பனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இந்த வாகனங்களை விற்பனை செய்வதற்கான கால கெடுவும் இன்றுடன் முடிவடைகிறது.
ஜியோ இலவச சலுகை : மொபைல் போன் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சலுகையும், பிரைம் வாடிக்கையாளர் ஆவதற்கான கால கெடுவும் இன்றுடன் முடிகிறது. நாளை முதல் ஜியோ ஏற்கனவே அறிவித்துள்ள திட்டங்களின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது

ஜியோ இலவசங்கள் இன்றுடன் நிறைவு பெறுகிறது: நாளை முதல் ஜியோ திட்டங்களின் நிலை?

ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவைகள் ஆறு மாதங்களாக இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று இரவு 11.59 மணியுடன் அவை நிறைவு பெற்று விடும் என ஜியோ அறிவித்துள்ளது. ஜியோ கட்டண சேவைகள் நாளை முதல் துவங்கவுள்ளது. 

இந்நிலையில், ஜியோ வாடிக்கையாளர்கள் சேவையை தொடர்ந்து பயன்படுத்த ஜியோ பிரைம் திட்டத்தில் இன்று இரவு 11.59க்குள் ரீசார்ஜ் செய்யலாம். இவ்வாறு செய்யவில்லை எனில் உங்களது ஜியோ சேவைகள் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு வேலை செய்யும். அதாவது சிம் கார்டு ஆக்டிவாக வைக்கப்பட்டிருக்கும், எனினும் டேட்டா, உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த பிரைம் அல்லாத ரீசார்ஜ்களை செய்ய வேண்டும். 

ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு அதிகளவு சலுகைகளை வழங்குவதாக ஜியோ அறிவித்துள்ளதை தொடர்ந்து 5 கோடி பேர் ஜியோ சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த கட்டணம் செலுத்தியுள்ளனர். பிரைம் திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய தவறியவர்களுக்கு சேவைகளின் விலையில் பிரைம் வாடிக்கையாளர்களை விட அதிகமாக இருக்கும்.
பிரைம் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு ரூ.303 ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்டுகிறது. இத்துடன் ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்ற சலுகையும் வழங்கப்படுகின்றது, இதனால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மொத்தமாக 28 நாட்களுக்கு 33 ஜிபி 4ஜி டேட்டா பெற முடியும். 

பிரைம் திட்டத்தில் சேராதவர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், எஸ்எம்எஸ் உள்ளிட்டவைகளோடு 28 நாட்களுக்கு 2.5 ஜிபி 4ஜி டேட்டா மட்டுமே வழங்கப்படும். இதே போன்று ஜியோவின் அனைத்து திட்டங்களிலும் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜியோ பிரைம் மற்றும் சாதாரண ஜியோ திட்டங்களின் விலை ரூ.19 முதல் துவங்கி அதிகபட்சம் ரூ.9,999 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் வேலிடிட்டி குறைந்த பட்சம் ஒரு நாள் மற்றும் அதிகபட்சம் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது ஆகும்.

வரலாறு ஆசிரியர் பதவி உயர்வு : மீண்டும் தலைதூக்குது 'CROSS MAJOR'

அரசுப் பள்ளி முதுநிலை வரலாறு ஆசிரியர் பதவி உயர்வில்மீண்டும் 'கிராஸ் மேஜர்,' 'சேம் மேஜர்' பிரச்னை தலைதுாக்கியுள்ளது.முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், மற்ற பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மூலமும் நிரப்பப்படும்.
பதவி உயர்வு மூலம் நிரப்புவதில், வரலாறு முதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தது.


இதையடுத்து, இளநிலையில் ஏதாவதொரு பட்டத்தை முடித்து, முதுநிலையில் வரலாறு, புவியியல், பாடப்பிரிவுகளை படித்தோரை (கிராஸ் மேஜர்) மூன்று பங்கும், இளநிலை, முதுநிலை இரண்டிலும் ஒரே பாடப்பிரிவை எடுத்து படித்தோரை (சேம் மேஜர்) ஒரு பங்கும் நியமிக்க 2000 அக்., 18ல் உத்தரவிடப்பட்டது.தற்போது, 'சேம் மேஜர்' முடித்தோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலும், பழைய உத்தரவுப்படியே முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் நடக்கிறது; இதனால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கில் 1:3 என்ற விகிதப்படி பதவி உயர்வு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, 1:3 என்ற விகிதத்தை மாற்ற 2016 நவம்பரில் கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது; ஆனால், முடிவு அறிவிக்கவில்லை.தற்போது, முதுநிலை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் எந்த விகிதப்படி பதவி உயர்வு அளிப்பது என்ற தகவல் இல்லை; இதனால், வரலாற்று ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு வரலாறு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன் கூறியதாவது:நீதிமன்றம் உத்தரவிட்டும், 1:3 என்ற விகிதத்தை மாற்றவில்லை. தற்போது 'சேம் மேஜர்' ஆசிரியர்களுக்கு 2002--03 ஆண்டின் படியும், 'கிராஸ் மேஜருக்கு' 2007--08 ன் படியும் பணிமூப்பு பட்டியல் கோரப்பட்டுள்ளது. இதன்மூலம் 1:3 என்ற பழைய முறைப்படியே பதவி உயர்வு அளிக்க கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இவ்வாறு கூறினார்.

சான்றிதழ்களில் பாதுகாப்பு அம்சம் : ஆதார் எண் இணைக்க அறிவுரை

பல்கலைகள், கல்லுாரிகளின் பட்ட சான்றிதழ்களில், ஆதார் எண் உட்பட பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற வேண்டும்' என, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், போலி சான்றிழ்கள், போலி அரசாணைகள், போலி உத்தரவுகள் மூலம், வேலையில் சேர்வது அதிகரித்துள்ளது. அதேபோல், சான்றிதழ்களில் மதிப்பெண் உள்ளிட்ட விபரங்களும் திருத்தப்படுகின்றன. இதை தடுக்க, ஒவ்வொரு கல்வி நிறுவனமும், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன.
இந்நிலையில், அனைத்து கல்லுாரி, பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து அனுப்பிய சுற்றறிக்கை: தொழில்நுட்ப வளர்ச்சி முன்னேறும் நிலையில், சான்றிதழ்களில் பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்வது அவசியம்.
சான்றிதழ் குறித்த முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ள வேண்டும். எனவே, மதிப்பெண் சான்றிதழ், பட்ட சான்றிதழ் போன்றவற்றில், வாட்டர் மார்க், தனி குறியீடு, ஆதார் எண், ஒருங்கிணைந்த சிறப்பு எண் போன்ற பல்வேறு வசதிகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Grant of Dearness Allowance to Central Government employees - Revised Rates effective from 01.01.2017

வியாழன், 30 மார்ச், 2017

பி.எஸ் 3 வாகனங்களுக்குத் தடை: டூ வீலர்ஸ்களுக்கு ரூ. 22,000 வரை தள்ளுபடி!

நாட்டின் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை, ஆய்வு செய்து விதிமுறைகளை வகுத்து வருகின்றன.
இந்நிலையில், சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்கும் வகையில் பி.எஸ்.3 ரக இன்ஜின் பொருத்திய வாகன விற்பனைக்கு, வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி, முதல் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  இதையடுத்து, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அந்த வாகனங்களை விற்பனை மற்றும் பதிவு செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 1-ம் தேதி முதல் பி.எஸ்.4 ரக இன்ஜின்கள் பொருத்திய வாகனங்கள் தயாரிக்கப்படுகிறது.
இதனால் சுமார், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட  பி.எஸ்.3 இரு சக்கர வாகனங்களை இரண்டு தினத்துக்குள் விற்க வேண்டிய கட்டாயம், இரு சக்கர வாகன நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்,  வாகன உற்பத்தியாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். இதையடுத்து ஹீரோ, ஹோண்டா, பஜாஜ், சுசுகி போன்ற நிறுவனங்கள் வானங்களை விற்க போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடி வழங்கி வருகின்றன. குறிப்பாக, இன்று காலை ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை அதன் விலையில் இருந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன.
இதையடுத்து இன்று மாலை முதல் பஜாஜ், ஹீரோ போன்ற நிறுவனங்கள் ஒரு வாகனத்துக்கு ரூ.22,000 வரை தள்ளுபடி செய்து விற்பனை செய்து வருகின்றன.
இந்நிலையில், வாகனங்களை விற்க நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் வழங்க வாகன உற்பத்தியாளர்கள் வாதிட்டனர். ஆனால், அதை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதற்கு முன் பி.எஸ். 3 விதிமுறைக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் அமலுக்கு வந்தபோது அதற்கு முன் இருந்த வாகனத்தை விற்க அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்

தமிழகப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், விழுப்புரம் கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

600 உடற்கல்வி ஆசிரியர்கள், 300 ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் 100, தையல் ஆசிரியர்கள் 100 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன என்றார்.

சரியான வினாக்கள்தான்: பிளஸ் 2 கணிதத் தேர்வில், பாடத் திட்டத்தில் இல்லாத கடினமான வினாக்கள் கேட்கப்பட்டது குறித்த கேள்விக்கு, பாடத் திட்டத்திலிருந்து தான் சரியாகக் கேட்கப்பட்டுள்ளது என்றார் ச.கண்ணப்பன்.

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தற்போது நடைமுறையில் இல்லாத திட்டக் குழு தொடர்பான வினா இடம் பெற்றது குறித்த கேள்விக்கு, திட்டக் குழுவின் தலைவர் யார் என்று, பொதுவானதாக சரியாகவே கேட்கப்பட்டுள்ளது. திட்டக் குழுவுக்கு பதிலாக நடைமுறையில் உள்ள நிதிஆயோக்கின் தலைவரும் பிரதமர் தான், அதனால், வினாவில் தவறில்லை என்றார்.

PGTRB : 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு மூலம் நியமனம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

2,100 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 600 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் 3 முறை பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. தகுதி தேர்வு இதையொட்டி 2,100 ஆசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் நியமிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வுவாரியம் தயாராக இருந்தது.

ஆனால் அதற்குள் ஆசிரியர் தகுதி தேர்வை விரைவில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துதேர்வு அறிவிப்பை நிறுத்தி வைத்து விட்டு, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து டி.பி.ஐ.வளாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- விரைவில் அறிவிப்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எழுத்து தேர்வுமூலம் நிரப்பப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறத்தேவை இல்லை.

தற்போது 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. அப்போது 1,000 பணியிடங்கள் கூடுதலாக உருவாகும். இதில் பதவி உயர்வு போக 500 பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நியமிக்கப்படும். இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கின் குறைந்தபட்ச இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு - தமிழக அரசு தகவல்

பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தகவல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வரும் 1 ஆம் தேதி முதல் தங்களது கணக்குகளில் ரூ.5 ஆயிரம் (பெருநகரம்), ரூ.3 ஆயிரம் (நகரங்கள்), ஆயிரம் ரூபாய்
(கிராமங்கள்) வரை இருப்பு வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
இருப்புத் தொகையை குறைவாக வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை மூலமாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்:-
மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு ஊதியம் அதில் போடப்படுகிறது.
 எனவே, ஊழியர்கள் குறித்த அடிப்படை விவரங்களை வங்கியில் சமர்ப்பித்து வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு பெறலாம்.
குறிப்பாக, ஊழியரின் பெயர், வங்கிக் கணக்கு எண், வருமான வரிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.
இவற்றை வங்கியில் சமர்ப்பித்த பிறகு, அவை வங்கியால் ஆய்வு செய்யப்படும்.
பின்பு, குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வங்கிக் கணக்கில் வைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

புதன், 29 மார்ச், 2017

50 மாணவர்கள்... 10 ஆயிரம் விதைப் பந்துகள்... அரசுப் பள்ளி மாணவர்களின் நெகிழ்ச்சி முயற்சி

50 மாணவர்கள்... 10 ஆயிரம் விதைப் பந்துகள்... அரசுப் பள்ளி மாணவர்களின் நெகிழ்ச்சி முயற்சி!

“பந்துனு சொன்னால், முன்னாடி எல்லாம் நாங்க விளையாடுற கிரிக்கெட் பந்துதான் ஞாபகத்துக்கு வரும். இப்போ, விதைப் பந்துதான் முதல்ல நினைவுக்கு வருது" என்று எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் சுந்தரமூர்த்தி, தன் கையில் இருக்கும் விதைப் பந்தை கிரிக்கெட்டில் பவுலிங்க் போடுவதுபோல செய்துக்காட்டினான்.

தருமபுரிலிருந்து ஒகேனக்கல் செல்லும் வழியில் இருக்கிறது, பள்ளப்பட்டி கிராமம். அங்கே இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6,7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களின் மொத்த எண்ணிக்கையே ஐம்பது தான். ஆனால், தங்கள் பள்ளியை முயற்சியால் முன்னோடி பள்ளியாக மாற்றி, எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறார்கள். இரண்டே வாரத்தில் 10 ஆயிரம் விதைப் பந்துகள் தயார்செய்து அசத்திவிட்டார்கள். மாவட்டத்தின் கல்வி அதிகாரிகள், இந்தப் பள்ளியை பாராட்டு மழையால் நனைத்து வருகின்றனர்.

"விதைப் பந்து எப்படி ரெடி பண்றது தெரியுமா?" என்று ஆர்வமுடன் முன்வந்தார் எட்டாம் வகுப்பு மாணவி, சி.விமலி. ''தெரியலையே... கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்' என்றோம்.

"முதலில் களிமண் அல்லது செம்மண்ணை தூசி இல்லாமல் எடுத்துக்கணும். அதோடு, பசுஞ்சாணம், இயற்கை உரம் இரண்டையும் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் கலந்து பிசையணும். அதைக் கையில் எடுத்துகிட்டு, ஒரு விதையை நடுவில்வைத்து, எலுமிச்சைப்பழம் அளவுக்கு உருட்டணும். அழகானப் பந்து மாதிரி ஆகிடும். அதை அன்றைக்கு முழுக்க நிழலிலேயே காயவைக்கணும். அடுத்த நாள், வெயிலில் காயவைக்கணும். அப்போதான் உருண்டையில் வெடிப்பு விழாமல் இருக்கும். இதுதான் விதைப் பந்து செய்யற விதம்" என்று தன் சொற்களாலே விதைப் பந்தை கண் முன் உருவாக்கிக் காட்டினார் விமலி.

"இந்த முயற்சிக்கு வித்திட்டது எஃப்.ஏ செயல்பாடுதான் என்றால் நம்பமுடிகிறதா?" என்ற கேள்வியோடு பேச ஆரம்பித்தார் ஆசிரியர் குணசேகரன். இவர்தான் மாணவர்களின் விதைப் பந்து முயற்சிக்குக் காரணகர்த்தா. சுட்டி விகடன் எஃப் ஏ பக்கங்களில் தொடர்ந்து பங்களித்து வருபவர்.
"சுற்றுச்சூழல் பற்றிய பாடத்துக்கு விதைப் பந்து செய்வதற்கு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்றுத்தந்தேன். பத்தோ, இருபதோ விதைப் பந்துகளைச் செய்துவருவார்கள் என நினைத்திருந்தேன். ஆனால், அடுத்த நாளே 500 விதைப் பந்துகளைத் தயார்செய்து வந்திருந்தனர். அதனால் உற்சாகமாகி, ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களையும் செய்யவைத்தேன். நான் கனவிலும் எதிர்பார்த்திராத அளவுக்கு மாணவர்கள் தன்னார்வத்தோடு ஆயிரக்கணக்கில் விதைப் பந்துகளைத் தயார்செய்து வந்தார்கள். இந்த விஷயத்தை நம் பள்ளியைக் கடந்தும் வெளியே கொண்டுசெல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதற்காக, மாணவர்களுக்கு ஒரு வாரம் அவகாசம் தந்ததும், பத்தாயிரட்துக்கும் அதிகமான விதைப் பந்துகளைத் தயார்செய்துவிட்டனர்.

விதைப் பந்துகளை பொதுமக்களிடம் தரலாம் என மாணவர்களிடம் கூறினேன். ஒரு மாணவி, இவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விளக்கும் துண்டுப் பிரசுரம் ஒன்றையும் தரலாம் என்ற யோசனையைச் சொன்னார். உடனே அதற்கான வாசகங்கள் எழுதி, அச்சடிக்கத் தந்தேன். தருமபுரி பேருந்து நிலையத்துக்குச் சென்று, அங்கே வருபவர்களிடம் விதைப் பந்துகளைத் தந்தோம். ஒகேனக்கல் சுற்றுலா செல்லுபவர்களிடமும் இவற்றைக் கொடுத்தோம்" என்கிறார் ஆசிரியர் குணசேகரன்.

"விதைப் பந்துகளை எப்படிப் பயன்படுத்துவது என்று சொல்லவே இல்லையே?" என்றதும், ஆசிரியரை முந்திக்கொண்டு பேசினான் ச.அஸ்வின் என்ற மாணவன்.

"நாம பஸ்ல அல்லது டூ வீலர்ல போகும்போது, சாலை ஓரங்களில் இந்த விதைப் பந்துகளை வீசினால் போதும். ஆறு மாதங்கள் வரை இதில் உள்ள விதை முளைப்பதற்குத் தயாராக இருக்கும். அதற்குள் நிச்சயம் மழை பெய்யும் இல்லையா? அப்போது விதைகள் முளைச்சுடும். நான் சைக்கிளில்தான் ஸ்கூலுக்கு வருவேன். அப்படி வரும்போது தினமும் ஒரு விதைப் பந்தை வீசுவேன்" என்றான்.

அஸ்வினைப் பாராட்டிய ஆசிரியர் குணசேகரன், "அஸ்வின் மட்டுமல்ல, ஒவ்வொரு மாணவரும் இந்த முயற்சியில் ஆர்வமாக இருக்கிறார்கள். அதனால்தான் பேருந்தில் துண்டுப் பிரசுரங்களைக் கொடுப்பதோடு, பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் பதில்களை அளிக்கின்றனர். வழக்கமாகச் செடி நடுவதைத்தானே செய்வீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். இயற்கையைப் பாதுகாக்க பல வழிகளில் இதுவும் ஒரு வழி. விதைப் பந்தில் என்னவிதமான விதைகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் கேட்கிறார்கள். சென்ற ஆண்டு வீசிய புயல் காற்றில் வெளிநாட்டு மர வகைகளே அதிகம் விழுந்தன. நம் நாட்டு மரங்களான வேம்பு, புளிய மரம், பூவரசு உறுதியாக நின்றன. அதனால் நம் நாட்டு மரங்களின் விதைகளையே விதைப் பந்துகளில் வைத்திருக்கிறோம்'' என்றார்.

தங்களின் முயற்சி சரியாகவும் முழுமையாகவும் சென்று சேர வேண்டும் என துண்டுப் பிரசுரத்திலும் ஒரு புதுமை செய்திருக்கிறார்கள். பேருந்தில் நம்மிடம் ஏதேனும் ஒரு பிரசுரத் தாளைத் தந்தால் என்ன செய்வோம்? படித்துவிட்டு, கிழித்துவிடுவோம். இதை உணர்ந்த மாணவர்கள், தாங்கள் தயாரித்த பிரசுரத்தில்..

* இதைப் படித்துமுடித்ததும் வழக்கம்போல கசக்கி தூக்கி எறியாமல் அடுத்து யாருக்கேனும் கொடுத்து முயற்சியைத் தொடர்ச் சொல்லுங்கள். ஏனென்றால் இந்தக் காகிதத்தை மீண்டும் தயாரிக்க மரம் வெட்ட வேண்டி வரும். இந்த நோட்டீஸ் குறைந்தது 50 நபர்களைச் சென்றடைந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்"

எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு விஷயத்தை கவனித்து செயல்படுகின்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்கள் இயற்கையைப் பாதுகாக்கும் உறுதியோடு களம் இறங்கியிருப்பது ஆரோக்கியமானது. சுற்றுச்சூழலை நேசிக்கும் பண்பு இளம் தலைமுறையினரிடம் வேர்கொண்டிருப்பதை மனம் திறந்து பாராட்டுவது நம் ஒவ்வொருவரின் கடமை.

அன்பாசிரியரையும் மாணவச்செல்வங்களையும் ASTA வாழ்த்துகிறது.

உயர் நீதிமன்ற உத்தரவின்படியே ஏப்ரல் இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

சென்னை உயர் நீதிமன்ற உத்தர வின் படிதான் ஏப்ரல் இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்குப் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு அவசர அவசரமாக நடத்தப்படுவதாகவும், தேர்வு நடத்துவதில் குழப்பம் உள்ளதாகவும், கடந்த 3 ஆண்டு களாக தகுதித்தேர்வு நடத்தப்பட வில்லை என்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளி யிட்டுள்ளார். தகுதித் தேர்வு தேர்ச் சிக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் கடந்த 3 ஆண்டுகளாக தகுதித்தேர்வு நடத்த இயல வில்லை.தமிழக அரசு எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. இன்னொரு வழக்கில் சென்னை உயர் நீதி்மன்றம், ஏப்ரல் மாதத்துக்குள் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று ஆணை வழங்கியது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கான அறிவிப்பு கடந்த பிப்வரி 24-ம் தேதி வெளியிடப்பட்டது. ஜுன் 1-ம் தேதிக்குள் ஆசிரியர் காலி யிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட தேதி களில் தகுதித் தேர்வு நடத்தப்படுகி றது. இத்தேர்வுக்காக 10 லட்சம் இளைஞர்கள் தீவிரமாக படித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை குழப்பும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் இதுபோன்று அறிக்கை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வரும் ஏப்ரல் முதல் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் பகலானாலும் சரி, இரவானாலும் முன்விளக்குகளை ஒளிர விடவேண்டும் என புதிய உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது

இந்த ஆண்டில் (2017) வரும் ஏப்ரல் முதல் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் பகலானாலும் சரி, இரவானாலும் முன்விளக்குகளை ஒளிர விடவேண்டும் என புதிய உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் முதல் இருச்சக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தங்களது பைக்குகளில் முன்விளக்குகள் தானாக தொடர்ந்து எரியும் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கவேண்டும் என மத்திய அரசு அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளது.முன்விளக்குகள் தானாக இயங்கும் தொழில்நுட்பத்தை AHO (Automatic Headlamp On) என ஆட்டோமொபைல் உலகம் கூறுகிறது. கார்களில் பகல் நேரங்களிலும் இயங்கும் லேம்ப்கள் போல AHOவின் இயக்கம் மோட்டார் சைக்கிளில்களில் இருக்கும். மத்திய அரசு சமீபத்தில் நடத்திய ஆய்வுப்படி, இந்தியாவிலேயே கர்நாடக மாநிலத்தில்தான் இருசக்கர வாகன விபத்து (30%) அதிகளவில் நடக்கிறது, ஒரு நாளைக்கு சராசரியாக 13,155 விபத்து நடப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) 2015ம் ஆண்டு இந்தியளவில் நடைபெற்ற 1.4 லட்சம் விபத்துக்களில் 32,524 விபத்துகள், இருசக்கர வாகனங்களால் நடைபெற்றவை என கூறுகிறது. அதிகரித்து வரும் இதுபோன்ற விபத்துகள் மீது தற்போது இந்திய அரசு தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அதன் முதல்கட்டமாகத்தான், தற்போது மோட்டார் சைக்கிள்களில் AHO அமைப்பில் இயங்கும் முன்விளக்கு பொருத்த, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

AHO தொழில்நுட்பத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள்களில் எப்போதும் முன்விளக்குகள் ஒளிர்ந்துகொண்டே இருக்கும், பகல் நேரத்தில் சில பெரிய கார்களின் முன்பக்கத்தில் இயங்கும் லேம்ப் போல இது ஒளிரும். எந்த நேரத்திலும் AHO விற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடலாம். இந்த உத்தரவுடன், சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காத பாரத் ஸ்டேஜ் IV இன்ஜின்களை, வாகனங்களில் பொருத்துவதையும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 1-ந் தேதி தொடங்குகிறது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு கடந்த 27-ந் தேதி தேர்வு முடிந்துவிட்டது. உயிரியியல் பாடத்தை விருப்பபாடமாக எடுத்த மாணவ-மாணவிகளுக்கும், சுத்த உயிரியியல் (விலங்கியல்- தாவரவியல்) பாடத்தை விருப்பபாடமாக எடுத்த மாணவ- மாணவிகளுக்கும் தேர்வு 31-ந் தேதி முடிவடைகிறது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 8-ந் தேதி தொடங்கியது. இந்த தேர்வை 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று சமூக அறிவியல் தேர்வுடன் முடிவடைந்தது.பிளஸ்-2 தேர்வு முடிவு மே 12-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மே 19-ந் தேதியும் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி செய்துள்ளார்.

விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்போது பிழை இன்றி இருக்கவேண்டும் என்றும், மதிப்பெண் கூட்டல் சரியாக இருக்கவேண்டும் என்றும், தவறாக மதிப்பீடு செய்யப்பட்டால் கண்டிப்பாக விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு தண்டனை உண்டு என்றும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 1-ந் தேதி தொடங்க இருக்கிறது. தமிழ் முதல் தாளுடன் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற உள்ளது. பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 5-ந் தேதி தொடங்குகிறது.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிப்பில் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர். 

பள்ளியில் மதிய உணவுக்கு ஆதார்; மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் விளக்கம்

திய உணவுத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவே, ஆதார் காட்ட உத்தரவிடப்பட்டது' என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

பள்ளியில் மதிய உணவு திட்டத்தில் சாப்பிடும் மாணவர்கள் ஆதார் கார்டு அளிக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

இதுகுறித்து விளக்கமளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்ததாவது: பள்ளி மாணவர்கள் மதிய உணவுக்கு ஆதார் கார்டு காண்பிக்க வேண்டும் என்ற உத்தரவு, மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கக்கூடாது என்ற நோக்கத்தில் அல்ல.

மதிய உணவுத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்து, அதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே மத்திய அரசு செயல்பட்டது.

ஆதார் கார்டு இல்லை என்றால், மாணவர்களுக்கு மதிய உணவு மறுக்கப்படாது. அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு கிடைக்கவும், ஆதார் கார்டு பெற்று தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

'டெட்' தேர்வு குழப்பம் நீடிப்பு ....பள்ளி கல்வித்துறை மவுனம்...

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்குவது குறித்து, பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுக்காததால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள், மார்ச், 23 வரை பெறப்பட்டு, பரிசீலனை நடக்கிறது. 'இந்த தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களாக, 2010 ஆக., 23க்கு பின் நியமனம் பெற்றவர்கள், தேர்ச்சி பெற வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு, அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. 
தமிழகத்தில், 2011 நவ., 15ல் தான், 'டெட்' தேர்வே அறிமுகமானது. அப்படியிருக்கையில், அதற்கு முன் பணி நியமனம் பெற்றவர்களுக்கு, 'டெட்' தேர்வு எப்படி கட்டாயமாகும் என, ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி செயலர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு, பல்வேறு சங்கத்தினர் மனு அளித்து உள்ளனர். அதற்கு, கல்வித் துறை அதிகாரிகள், விளக்கமளிக்கவில்லை.
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: சிறுபான்மை அந்தஸ்து பெற்ற, பள்ளி ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்ச்சி தேவையில்லை என, உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. அரசாணைக்கு முந்தைய தேதியில், பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, 'டெட்' தேர்ச்சியை கட்டாயம் ஆக்க முடியாது. 
அவர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை புத்தாக்க பயிற்சி வகுப்பு நடத்தி கொள்ளலாம் என்றே கூறப்பட்டுள்ளது. எனவே, 2010 ஆகஸ்ட்டுக்கு பின், 2011 நவம்பருக்கு முன் நியமிக்கப்பட்ட, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

செவ்வாய், 28 மார்ச், 2017

SALARY ACCOUNTS UNDER STATE GOVERNMENT SALARY PACKAGE (SGSP)

Salary Accounts under SGSP a gamut of privileges and other value added services to the employees of State Government, Union Territories and their Boards/Corporations.
Salary Accounts under this package are available in four variants, namely Silver, Gold, Diamond and Platinum depending on the designation of the personnel.

Benefits to the Employer
Convenient way to manage salaries across a large number of centers through Core Power and the Bank's award winning Corporate Internet Banking
Reduces employer's paperwork and salary administration cost.
No charges for uploading of salaries
Employees receive instant credit of salaries
Benefit to the Employee

Convenience of Anywhere Banking at
The largest network of more than 16,000 Core Banking Branches
Extensive alternative channels.
53,000 plus ATMs of State Bank Group
Free Internet Banking, Mobile Banking
Complete gamut of Banking Services including:-
Unique Lifetime Account Number
Zero Balance Account facility with no penal charges for non-maintenance of minimum balance

Auto sweep (in & out) facility (on request)-Surplus amount in Savings bank account beyond threshold balance is transferred automatically into Term Deposits (multi option deposits) in multiple of Rs.1000/- and vice versa

Facility for Auto Sweep Switch On/Off through Internet Banking
Free Personal Accident Insurance (Death) Cover to Primary Salary Package Account*
Free personalized Multi City Cheques
RTGS/NEFT
Free Core Power: Anywhere banking facility with the widest network of more than 16,000 branches. Free updating of pass-books at any branch
Easy overdraft up to 2 months' salary repayable within 6 months*
SMS Alerts

Free Debit Cards : Domestic cards for Silver Accounts, Gold Debit cards for Gold and Diamond Accounts and Platinum Debit Card for Platinum Accounts.
Maximum daily withdrawal of Rs. 40,000 on Domestic Cards, Rs. 50,000 on Gold Cards and Rs. 1,00,000 on Platinum Cards.
Various Personal loans like Home loan/ Auto loan/ Xpress Credit loan, etc. at attractive terms
Demat facility, 3-in 1 Trading Account available
Systematic Investment Plan in Mutual funds
Range of other value added benefits

Results of Departmental Examinations - December 2016

திங்கள், 27 மார்ச், 2017

கார், மோட்டார் சைக்கிள் மற்றும் மருத்துவ காப்பீடுகளுக்கான பிரிமியம் தொகை, ஏப்ரல், 1ம் தேதி முதல் உயர்கிறது.

கார், மோட்டார் சைக்கிள் மற்றும் மருத்துவ காப்பீடுகளுக்கான பிரிமியம் தொகை, ஏப்ரல், 1ம் தேதி முதல் உயர்கிறது.

இன்சூரன்ஸ் ஏஜென்ட்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்துவதற்காகவும், ஊக்கப்பரிசு அளிப்பதற்காகவும், ஐ.ஆர்.டிஏ.ஐ., எனப்படும் இன்சூரன்ஸ் காப்பீடு விதிமுறைகள் - 2016 ஏப்ரல், 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக, ஏற்கனவே எடுக்கப்பட்ட கார், மோட்டார் சைக்கிள் மற்றும் மருத்துவ காப்பீடுகளுக்கான பிரிமியம் தொகை சிறிதளவு உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்வு, 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாம் நபர் காப்பீடுக்கான பிரிமியம் தொகை உயர்த்தப்பட்டு, ஏப்ரல், 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் அடுத்த சலுகை

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

ஜியோ சிம் கார்டு வைத்துள்ளவர்கள், பிரைம் திட்டத்தில் சேர்ந்து வருகின்றனர். இவர்களுக்கான இலவச சேவை சலுகை, வரும், 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த சூழ்நிலையில் புதிய சலுகையை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ரூ.149 பிரீபெய்டு திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு,2ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படும். ரூ.303க்கு ரீசார்ஜ் செய்யபவர்களுக்கு, 5 ஜிபி கூடுதல் டேட்டாவும், ரூ.499க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு, 10 ஜிபி கூடுதல் டேட்டா அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட், மத்திய அரசிற்கு அறிவுரை வழங்கி உள்ளது.

அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட், மத்திய அரசிற்கு அறிவுரை வழங்கி உள்ளது.
ஆதார் தொடர்பான வழக்கை இன்று(மார்ச் 27) விசாரித்த சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், மத்திய அரசு, அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது. அதே சமயம் வங்கி கணக்கு துவங்குவது உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்பதை தடை செய்ய முடியாது. ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைப்பது தற்போதைக்கு சாத்தியமில்லை என மத்திய அரசிற்கு அறிவுரை வழங்கி உள்ளது.
பள்ளி சத்துணவு, ஓட்டுனர் உரிமம் பெற, வாகன பதிவு உள்ளிட்டவற்றிற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி வரும் நிலையில் சுப்ரீம் கோர்ட் இந்த அறிவுறுத்தலை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வங்கி கணக்கில் இருப்புத்தொகை ரூ.5000/- பராமரிப்பு செய்ய வேண்டுமா? இல்லையெனில் அபராதம் விதிக்கப்படுமா?

ஆசிரியர் தகுதித் (TET) தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால வரம்பை 2019 மார்ச்' 31 வரை நீடித்து மத்திய அரசு உத்தரவு.


6 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது அதிகரிக்கும் என வானிலை மையம் தகவல்

கோவை, கரூர், வேலூர் உள்பட தமிழகத்தில் 6 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலம் தொடங்குவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுகிறது. இந்த முறை வடகிழக்கு பருவமழையும் போதிய அளவு பெய்யாத நிலையில் வறட்சியும் தலைவிரித்து ஆடுகிறது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், வெயிலின் உக்கிரமும் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று கோவை, கரூர், வேலூர் உள்பட 6 நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கரூரில் 104 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.

இதை வைத்து பார்க்கும் போது, அடுத்து வரும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் வெயிலின் கொடுமை மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.



இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

இன்னும் 4 முதல் 5 நாட்கள் வரை தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு என்பது கிடையாது. தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் இந்த முறை அதிகமாக தான் இருக்கும்.

எதிர்பார்த்தது போல், வெயிலின் தாக்கம் ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கோடை மழை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. தற்போது வெயிலின் தாக்கம் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது. அதனால் தான் கோடை மழை இல்லாமல் இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

செல்போன் சந்தாதாரர் அனைவரிடமும் ஆதார் எண்ணை கட்டாயம் பெற வேண்டும்

நடப்பு செல்போன் சந்தாதாரர் அனைவரிடமும் ஆதார் எண்ணை கட்டாயம் கேட்டுப்பெற வேண்டும் என்று செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள், அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள் அனைத்துக்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போலிகள் அடையாளம் காணப்பட்டு, ஒழிக்கப்படுகின்றன. ஊழலும் தடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள நடப்பு செல்போன் சந்தாதாரர்களிடம் அவர்களது ஆதார் எண்களை கேட்டுப்பெற வேண்டும், அதன் அடிப்படையில் அவர்களை சரிபார்க்க வேண்டும் என்று தொலைதொடர்புத்துறை, செல்போன் சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பித்த ஒரு உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தொலைதொடர்புத்துறை கூறுகிறது.
சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், ‘‘பயனுள்ள ஒரு செயல்முறையின் மூலம், அனைத்து செல்போன் சந்தாதாரர்களின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும். ஒரு வருட காலத்திற்குள் இதை செல்போன் சேவை நிறுவனங்கள் செய்து முடிக்க வேண்டும். இதே போன்று புதிதாக செல்போன் சேவை இணைப்பு பெறுகிறவர்களின் முகவரிகளை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.
இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தொலைதொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறி இருப்பதாவது:–

அனைத்து லைசென்சுதாரர்களும் (செல்போன் சேவை நிறுவனங்கள்), நடப்பில் உள்ள அனைத்து சந்தாதாரர்களை (அவர்கள் பிரிபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு என எத்தகைய சந்தாதாரராக இருந்தாலும்) கே.ஒய்.சி. என்னும் பெயர், வயது, முகவரி, ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களை கட்டாயம் பெற்று, மீண்டும் சரிபார்க்க வேண்டும்.
அனைத்து சந்தாதாரர்களுக்கும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கே.ஒய்.சி. தகவல்களை சரிபார்க்க இருப்பது பற்றி செல்போன் சேவை நிறுவனங்கள், பத்திரிகை விளம்பரங்கள், டி.வி., ரேடியோ விளம்பரங்கள், எஸ்.எம்.எஸ். என்னும் குறுந்தகவல் சேவை வழியாக தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக தங்களது இணையதளத்திலும் செல்போன் சேவை நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்.
அதே நேரத்தில் செல்போன் சேவை நிறுவனங்கள் பொதுமக்களுக்கு அசவுகரியங்கள் ஏற்படாதவாறும், நீண்ட வரிசைகள் உருவாகாதவாறும், ஒரு பொதுவான நடைமுறையை ஏற்படுத்தி பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செல்போன் சந்தாதாரர்களிடம் பெயர், முகவரி, ஆதார் எண் பெற்று, சரிபார்ப்பதற்கான வழிமுறைகள் பற்றி விவாதிப்பதற்காக இந்த வாரம் தனது உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டப்போவதாக செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பு (சி.ஓ.ஏ.ஐ.) கூறி உள்ளது.
நாடு முழுவதும் 100 கோடிக்கும் மேற்பட்ட செல்போன் சந்தாதாரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 100 கோடி பேரின் ஆதார் எண் உள்ளிட்ட கே.ஒய்.சி. தகவல்களை செல்போன் சேவை நிறுவனங்கள் ஓராண்டுக்குள் பெற்று, சரிபார்த்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 26 மார்ச், 2017

ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க வேண்டும்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி

ஜூலை 1 முதல் வருமான வரி தாக்கல் செய்யக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆதார் அட்டையை உடன் நிரந்தரக் கணக்கு எண்ணான பான் எண்ணையும் இணைக்க வேண்டும். இல்லை என்றால் டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு உங்கள் பான் கார்டு செல்லாது.


 நிதி மசோதா திருத்தங்களின் படி வரி செலுத்துனர்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லையோ அவர்களது பான் கார்டுகள் காலக்கெடு முடிந்த பிறகு செல்லாது. பான் கார்டு வரி செலுத்தும் அனைவருக்கும் பான் கட்டாயம், வரி செலுத்தும் வரம்பில் இல்லாதவர்களும் பான் கார்டை அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம்.

 மானியம் என்றாலே ஆதார் கட்டாயம் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு அனைத்துத் திட்டங்களுக்கும் அதார் எண் தேவை என்பதைக் கொண்டு வருகின்றது, முக்கியமாக மானியம் பெறும் அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

பள்ளி சத்துணவு சாப்பாட்டிற்கும் ஆதார் அன்மையில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளிக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மதிய உணவிற்கும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறியுள்ளது.

ரயில்வே பாஸ் மத்திய அரசைப் பொருத்த வரை இன்னும் ரயில்வே ஊழியர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வரும் பாஸ்களுக்கு அதார் எண் கட்டாயம் ஆக்கப்படவில்லை.

 இந்தியர்களின் வருமானத்தைக் கண்டறிவது எளிது ஆதார் கார்டு, பாண் கார்டு மற்றும் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்படுவதினால் கோடி கணக்கான இந்தியர்களின் வருமானம் மற்றும் செலுத்த வேண்டிய வரி விவரங்களை வருமான வரித்துறையினரால் எளிதாகக் கண்டறிய முடியும்.

மாற்று அடையாள அட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வருங்காலத்தில் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அனைத்து அடையாள அட்டைகளுக்கும் ஆதார் அட்டை மாற்றாக இருக்கும் என்று வருமான வரிக்கு ஆதார் எண் கண்டிப்பாகத் தேவை என்று அறிவிக்கும் போது கூறினார்.

எதனால் பான் கார்டுக்கு ஆதார் கட்டாயம் மேலும் ஆதார் அட்டையைப் பான் கார்டுன் இணைக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்துள்ள விவரங்கள் கிடைக்கும் என்றும் அதன் மூலம் வருமான வரிச் செலுத்துவதில் ஏற்படும் முறைகேடுகளைக் குறைக்கலாம் என்றும் அருன் ஜெட்லி தெரிவித்தார்.

வரும் அக்டோபர் முதல் டிரைவிங் லைசென்சு எடுப்பதற்கு ஆதார் கார்டு அவசியம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பு

போலி பதிவுகள் மற்றும் மோசடியை தடுக்கும் வகையில் வரும் அக்டோபர் முதல் டிரைவிங் லைசென்சு எடுப்பதற்கு ஆதார் கார்டு அவசியம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுக்களின் பல்வேறு வகையான நலதிட்டங்களை பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது. இவ்வரிசையில் புதிதாக ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) பெறுவதற்கும் தற்போது ஆதார் எண் அவசியமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இருசக்கர மற்றும நான்கு சக்கர, கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான லைசென்சு பெறும் முறையில் மாற்றம் கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி புதிய டிரைவிங் லைசென்சு மட்டுமின்றி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள லைசென்சுகளை புதுப்பிப்பதற்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது.

இதன்மூலம் போலி லைசென்சு பயன்படுத்துவதை தடுப்பது மட்டுமின்றி போக்குவரத்து குற்றங்களையும் தடுக்க முடியும். போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுவோர் மீது எளிதாக நடவடிக்கை எடுக்க இது உதவும்.

நாடு முழுவதும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டால் போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் ஒரு வாகனமானது எந்த மாநில வாகனமாக இருந்தாலும் இதனை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

அத்துடன் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறுவிதமான லைசென்சு முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் உள்ள குறைகளை களைய ஆதார் எண் அவசியமாக்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீரான முறையில் டிரைவிங் லைசென்ஸ் வழங்க முடியும்.

மேலும் ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட டிரைவிங் லைசென்சு பெற்று மோசடியில் ஈடுபடுவதை தடுக்கவும், இத்திட்டம் பயன் உள்ளதாக இருக்கும் இத்திட்டம் அக்டோபர் மாதம் அமலுக்கு வரும்

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 25 மார்ச், 2017

தற்போது பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு

கடந்த பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட், மொபைல்போன் வைத்திருப்பவர் அனைவரிடமும் ஆதார் எண் மற்றும் கே.ஓய்.சி., படிவத்தை ஒராண்டிற்குள் வாங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம், யுஐடிஏஐ, டிராய் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவைதொடர்ந்து மத்திய அரசு தொலைதொடர்பு துறை அலுவலகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், புதிய மொபைல் போன் இணைப்பு மற்றும் டெலிபோன் இணைப்பு வழங்கப்படும்போது, அடையாளம் காண ஆதார் எண் வாங்கப்படுவது வெற்றியடைந்துள்ளது. இதே முறையை அடுத்த ஓரு வருடத்திற்குள் தற்போது பயன்பாட்டில் உள்ள போன் எண்களுக்கும் பயன்படுத்த வேண்டும். மொபைல் போன் எண்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதனையடுத்து தற்போது பயன்பாட்டில் உள்ள பிரிபெய்டு, போஸ்ட் பெய்டு எண்கள் வைத்திருப்பவர்கள் ஆதார் எண்களை 2018 பிப்ரவரிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு வழங்காத பட்சத்தில் 2018 பிப்ரவரி 6க்கு பின் மொபைல் போன் இணைப்பு துண்டிக்கப்படும். அமல்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணி - சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது.அரசு உத்தேசித்திருந்த நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்பட்டு இருக்கிறது.

அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு 'வெயிட்டேஜ்'மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு 2015-ம் ஆண்டு மே 30-ந் தேதி அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பட்டு, முடிவுகள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப 1:5 விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் முதன்மை கல்வி அலுவலர்களால் வெளியிடப்படும்.
இப்பட்டியல் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நடை முறையில் உள்ள இனசுழற்சி, விண்ணப்பதாரர்கள் அளித்திருந்த விவரங்கள் அடிப்படையிலும் தயார் செய்யப்படும். சான்றிதழ் சரிபார்த்தல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி அடுத்த மாதம் 9-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்படும் மையங்களில் நடத்தப்படும். மொத்த மதிப்பெண் 167. அதில் எழுத்துத்தேர்வுக்கு 150 மதிப்பெண். மீதம் உள்ள 17 மதிப்பெண்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது 'வெயிட்டேஜ்'அடிப்படையில் வழங்கப்படும். அதன் விவரம் வருமாறு:- வேலைவாய்ப்பக பதிவுமூப்புக்கு 10 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.
வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து முதல் 2 ஆண்டுகள் வரைகாத்திருப்பவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 4 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 4 மதிப்பெண்களும், 6 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 6 மதிப்பெண்களும்,8 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 8 மதிப்பெண்களும், 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் காத்திருப்பவர்களுக்கு 10 மதிப்பெண்களும் வழங்கப்படும். கூடுதல் கல்வி தகுதிக்கு 5 மதிப்பெண்கள்அளிக்கப்படும். பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2 மதிப்பெண்களும், இளங்கலை பட்டம் மற்றும் அதற்கு மேல் படித்தவர்களுக்கு 3 மதிப்பெண்களும், ஆய்வக உதவியாளராக முன் அனுபவம் உள்ளவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்களும் வழங்கப்படும். இப்பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாளான 6.5.2015 வரை தகுதியுள்ளவேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை, கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவை மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு அன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங் கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது.
பணி அனுபவத்தை பொறுத்தவரை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் பணிபுரிந்த 6.5.2015 வரையிலான பணிக்காலம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். பள்ளிக்கல்வி துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் பணி அனுபவ சான்றில் மாவட்ட கல்வி அலுவலரிடமும், கல்லூரிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் மேலொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் எழுத்து தேர்வு மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது அளித்த சான்றிதழுக்கான மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப்பட்டியல் தயார் செய்யப்படும்.
அதன் அடிப்படையில் நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள்இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்,காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு பட்டியல் உடனடியாக வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய பணி நியமன ஆணை வெளிப்படையான கலந்தாய்வு மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களால் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆய்வக உதவியாளர் தேர்வு செய்யப்படும் முறை- பள்ளிக்கல்வி இயக்குநர் செய்தி(சான்றிதழ் சரிபார்ப்பு - ஏப்ரல் 9,10,11 ஆகிய மூன்று நாட்கள் அந்தந்த மாவட்டத்தில் நடைபெறும்).




பள்ளிக்கல்வி - அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற உயர் நிலை / மேல் நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தல் சார்பான விவரத்தை 27.03.2017க்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

Lab Assistant Screening Test Result 2015 - Revenue District wise

வியாழன், 23 மார்ச், 2017

பள்ளிக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு புதிய தொழில் நுட்ப தொட்டுணர் (Bio-Metric) வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது.

EMIS STUDENT APPLICATION FORM(NEW)

EMIS STUDENT APPLICATION FORM(NEW)
EMIS STUDENTS NEW FORM DOWNLOAD PLEASE CLICK HERE

2017-ம் ஆண்டு அதிதீவிர காலநிலை மாற்றங்களைச் சந்திக்கும்’

வெப்பநிலை மாற்றங்கள் குறித்து உலக வளிமண்டலவியல் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இதுவரையில் அதிக வெப்பமான ஆண்டாக 2016 திகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  2017-ம் ஆண்டு கடந்த ஆண்டை விட அதிதீவிர காலநிலை மாற்றங்களைச் சந்திக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்விஸ் நாட்டினை தலைமையிடமாகக் கொண்ட ’உலக வளிமண்டலவியல் அமைப்பு’ கடந்த செவ்வாய்க்கிழமை உலக காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஆய்வறிக்கையினை வெளியிட்டது. 80 நாடுகளின் வெப்பநிலை மாற்றங்களைக் கணக்கில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், ”இதுவரையில் அதிக வெப்பமான ஆண்டாக 2016-ம் ஆண்டு திகழ்ந்துள்ளது. ஆனால் 2017-ம் ஆண்டு அதிதீவிர காலநிலை மாற்றங்களைச் சந்திக்கும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், உலக வெப்பமயமாதல் மட்டுமின்றி வெள்ளம், புயல், வறட்சி என இயற்கைச் சீற்றங்களும் பேரிழப்பினை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ''ஆர்டிக், அண்டார்டிக் பெருங்கடலில் ஏற்பட்ட வெப்ப அலைகள், வட அமெரிக்க நாடுகளில் தென்பட்ட அதீத வெப்பநிலை, அரேபிய நாடுகளை வாட்டும் கடுங்குளிர் என உலக காலநிலை மாற்றத்தின் அறிகுறிகள் ஏராளம். மேலும் சீர்கெடும் சுற்றுச்சூழல், கரிய அமில வாயுவின் அதீத வெளிப்பாடு ஆகியவை தட்ப வெட்ப மாற்றங்களின் முக்கிய காரணங்களாக திகழ்கின்றது. மேலும் இந்த தட்ப வெட்ப மாற்றங்களின் முக்கிய காரணி மனித ஆதிக்கம் தான்'' என்று வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை" - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ரட்டை இலை சின்னத்துக்காக ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கும், சசிகலா அணியினருக்கும் இடையே பெரும் போராட்டம் நடந்து வந்தது. இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், 'இரட்டை இலை' சின்னம் யாருக்கும் கிடையாது என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அ.தி.மு.க.வின் சட்ட விதிகளின் படி, தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது. சசிகலா குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, அதற்கான தண்டனையையும் பெற்று வருபவர். எனவே நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்று வரும் ஒருவர், அரசியல் நடவடிக்கைகளில் எப்படி ஈடுபட முடியும்? இதுகுறித்து சட்ட ஆணையம் ஏற்கனவே, தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து வந்தது. தேர்தலில் போட்டியிடக்கூட தகுதியில்லாத சசிகலா, எப்படி தேர்தல் வேட்பாளரை அறிவிக்க முடியும்? என்று பன்னீர்செல்வம் தரப்பினர் வாதத்தை முன் வைத்தனர். அதற்கு சசிகலா தரப்பினரோ 'எங்கள் வேட்பாளரை சசிகலா தேர்வு செய்யவில்லை. அ.தி.மு.க.வின் ஆட்சிமன்றக் குழுதான் தேர்வு செய்தது.' என்று மறுவாதம் செய்தனர்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் ஆர்.கே நகர் தேர்தலில் 'இரட்டை இலை' சின்னம் யாருக்கும் கிடையாது என்றும், கட்சியின் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்குப்பின், இரண்டாவது முறையாக 'இரட்டை இலை சின்னம்' முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 22 மார்ச், 2017

TRB கூடுதல் அவகாசம் அறிவிப்பு.

1111 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப
TET 2012,2013 மற்றும் SPECIAL TET 2014 தாள் 2 -ல் தேர்ச்சி பெற்றவர்கள் online -ல் தங்களது விவரங்களை சரிபார்க்க பணி நாடுநர்களுக்கு 23/3/17 வரை கூடுதல் அவகாசம் TRB அறிவிப்பு.

திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்கள் நன்னெறிகல்வியாக 6 முதல் 12ஆம் வகுப்பு பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டும் - அரசாணை வெளியீடு.

பள்ளிக்கல்வி - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டிற்கு 15 அதிகாரங்கள் வீதம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்கள் நன்னெறிகல்வியாக பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டு ஆணை வெளியிடப்படுகிறது | அரசாணை எண்: 51 நாள்: 21.03.2017


வெள்ளி, 17 மார்ச், 2017

தமிழக பட்ஜெட் 2017 - 2018: முக்கிய அம்சங்கள்

1.25 PM: பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 20 முதல் 24 வரை நடைபெறும்; 24-ம் தேதி நிதியமைச்சர் பதிலுரை இடம்பெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
1.15 PM: தமிழக பட்ஜெட்டை வாசித்து முடித்தார் நிதியமைச்சர் ஜெயக்குமார். தமிழக சட்டப்பேரவை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
1.12 PM: ஜிஎஸ்டி முறை அமலுக்கு வர உள்ளதால், வரிச்சலுகைகள் எதுவும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்
1.10 PM: 1 லட்சம் பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் ஜெயக்குமார்
1.05 PM: உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்ததால் ரூ.1,335 கோடி சேமிப்பு ஏற்படும்: அமைச்சர் ஜெயக்குமார்
உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்ததால் ரூ.1335 கோடி சேமிப்பு ஏற்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்த நிதி ஒதுக்கீடு சார்பான சில விவரங்கள்:
* விவசாயம் மற்றும் இதர பயன்பாட்டுக்கான மின்சார மானியத்திற்கு ரூ.8,538 கோடி ஒதுக்கீடு
* ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாடு திட்டத்திற்கு ரூ.3,100 கோடி, சாலை பாதுகாப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
* கிராம கோயில்களை புதுப்பிக்கும் திட்டத்தில் கோயில்களின் எண்ணிக்கை 500லிருந்து 1000 ஆக உயர்வு
* கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரை சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பயணிகள் சேவை தொடங்கப்படும் > அதன் விவரம்: சென்னையில் புதிதாக 3 மெட்ரோ ரயில் தடங்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு
* சுற்றுலாத்துறையில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.403 கோடி ஒதுக்கீடு
* தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.116 கோடி ஒதுக்கீடு
* முதலீடு ஊக்குவிப்பு திட்டத்திற்கு ரூ.1,295 கோடி ஒதுக்கீடு
* உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு
* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு ரூ.532 கோடி ஒதுக்கீடு
* சுகாதாரத்துறைக்கு ரூ.10,158 கோடி ஒதுக்கீடு. அதன் விவரம்: சுகாதாரத்துறைக்கு ரூ.10,158 கோடி ஒதுக்கீடு
1.00 PM: வரும் நிதியாண்டில் 100 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தி செய்ய இலக்கு: அமைச்சர் ஜெயக்குமார்
2017-18 நிதியாண்டில் தூய்மை இந்தியா இயக்கத்தின் (ஊரகம்) கீழ், 24 லட்சம் வீட்டு கழிவறைகளும், 50 சமூக சுகாதார வளாகங்களும் கட்டப்படும் என்று அமைச்ச ர்ஜெயக்குமார் தெரிவித்தார். அதன் விவரம்: கிராமப்புறங்களில் 24 லட்சம் வீட்டு கழிவறைகள் கட்டப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு
கால்நடைத் துறை, மீன்வளத் துறை உள்ளிட்ட சில துறைகள் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த பட்ஜெட்டின் சில முக்கிய அம்சங்கள்:
* நீதி நிர்வாகத்திற்கு ரூ.984 கோடி, நீதிமன்ற ஆவணங்களை கணினிமயமாக்க ரூ.37 கோடி ஒதுக்கீடு
* 10 புதிய வட்டாட்சியர் அலுவலகங்கள், 5 கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்ட ரூ.42.16 கோடி ஒதுக்கீடு
* வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்க 590 கூடுதல் மையங்கள் அமைக்கப்படும்
* வரும் நிதியாண்டில் 100 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தி செய்ய இலக்கு
* தலா 100 விவசாயிகளை கொண்ட புதிய 1000 உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களை தொடங்க திட்டம்> இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு
* 6 லட்சம் விலையில்லா ஆடுகள் வழங்க ரூ.182 கோடி ஒதுக்கீடு. ஏழை பெண்களுக்கு 25 ஆயிரம் கறவை பசுக்கள் வழங்கப்படும். நாட்டு மரபின மாடுகளை பாதுகாக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு
* 25 கால்நடை மருந்தகங்களை, கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த திட்டம்
* மதுரையில் ரூ.40 கோடி செலவில் பால் பதப்படுத்தும் நிலையம் புதியதாக தொடங்கப்படும் > இதன் விவரம்: மதுரையில் ரூ.40 கோடி செலவில் பால் பதப்படுத்தும் ஆலை: பட்ஜெட்டில் அறிவிப்பு
* எண்ணூர், காசிமேடு உட்பட 7 மீன்பிடி துறைமுகங்கள் ரூ.1105 கோடி செலவில் மேம்படுத்தப்படும்
* கடல் அரிப்பில் இருந்து மீனவர்களை பாதுகாக்க ரூ.20 கோடியில் திட்டம்.
* ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் ரூ.113 கோடி செலவில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்
* நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய டீசல் ஆண்டுக்கு 3000 லிட்டரில் இருந்து 3400 லிட்டராக வழங்கப்படும்
* விசைப்படகு மீனவர்களுக்கு மானிய டீசல் ஆண்டுக்கு 12,000 லிட்டரில் இருந்து 18,000 லிட்டராக வழங்கப்படும்
* இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த 18 மீனவ படகுகளுக்கு தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு
* மீனவர்களின் நிவாரண உதவித்தொகை ரூ.2700-லிருந்து, ரூ.4500 ஆக உயர்வு
* நீர்வள, நிலவள திட்டம் ரூ.3,042 கோடியில் செயல்படுத்தப்படும்...
12.52 PM: ஜவ்வாது மலையில் 2 உண்டு உறைவிட மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 
2.50 PM: ரூ.1,508 கோடி செலவில் நான்கு வழிச்சாலைகள் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்
12.45 PM: பிரதம மந்திரி கிராமப்புற சாலைத் திட்டத்திற்கு ரூ. 758 கோடி ஒதுக்கீடு
மருத்துவ கல்விக்கான பட்டமேற்படிப்பு இடங்கள் 1,188 லிருந்து 1,362 உயர்த்தப்பட்டுள்ளது.அதன் விவரம்: மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் 1,362 ஆக உயர்வு: பட்ஜெட்டில் அறிவிப்பு
பிரதம மந்திரி கிராமப்புற சாலைத் திட்டத்திற்கு ரூ. 758 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதி ரூ.1,00,300 கோடியை எட்டும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள இணைப்புச் சாலைகளை, நான்குவழி அல்லது ஆறுவழிச் சாலைகளாகவும் மேம்படுத்துவதற்கு முதற்கட்டமாக 232.20 கோடி ரூபாய்க்கான பணிகள் 2017-2018 ஆம் ஆண்டில் முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார். அதன் விவரம்> சென்னை, புறநகர் சாலை மேம்பாடு முதற்கட்ட பணிகளுக்கு ரூ.232 கோடி ஒதுக்கீடு
திறன்மிகு நகரங்கள் திட்டத்துக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்கு ரூ. 490 கோடி நிதி ஒதுக்கீடும், அட்டல் நகர்ப்புற புத்துணர்வு திட்டத்துக்கு ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
12.40 PM: 1000 கிராமப்புற கோயில்களை புதுப்பிக்க தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும், தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.116 கோடி நிதி ஒதுக்கீடு, சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறைக்கு ரூ.342.22 கோடி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த 18 மீனவ படகுகளுக்கு தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு, கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூ.875லிருந்து ரூ.1000 ஆக உயர்வு, காங்கேயம், பர்கூர் உள்ளிட்ட நாட்டுமாடுகளை பாதுகாக்க அரசு நிதி உதவி வழங்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
12.35 PM: ஈரோடு, பூதலூர், நெகமத்தில் ரூ. 22 கோடியில் தென்னை நார் கயிறு குழுமங்கள் அமைக்கப்படும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 50 சமூக சுகாதார வளாகங்கள் கட்டப்படும். வறட்சியை சமாளிக்க புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும்.
தருமபுரியில் உணவுப்பொருள் குழுமம் அமைக்கப்படும். ராமேஸ்வரத்தில் கடல் உணவுப்பொருள் குழுமம் அமைக்கப்படும். ஸ்ரீபெரும்புதூரில் மின்னணு பொருள் உற்பத்தி மையம் ஏற்படுத்தப்படும். காஞ்சிபுரம், கரூர் மாவட்டத்தில் தலா ஒரு ஜவுளி குழுமம் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
12.25 PM: போக்குவரத்து துறைக்கு மொத்தம் ரூ.2,192 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுவிநியோக திட்டம் - உணவு மானியத்திற்கு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
12.15 PM: முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.582.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.130 கோடியில் 330 ஏக்கரில் மருத்துவ பூங்கா அமைக்கப்படும்.
சென்னை, புறநகர் சாலைத் திட்டங்களுக்கு ரூ.744 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
12.05 PM: பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.26,932 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. > அதன் விவரம்: பட்ஜெட்: பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.26,932 கோடி ஒதுக்கீடு
உயர் கல்வித்துறைக்கு ரூ.3680 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் 200 புதிய ஆவின் பாலகங்கள் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். > அதன் விவரம்: பட்ஜெட்டில் உயர் கல்வித்துறைக்கு ரூ.3,680 கோடி ஒதுக்கீடு
2017 - 2018 நிதியாண்டில் 150 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார். >அதன் விவரம்: 150 நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர்
11.55 AM: அத்திக்கடவு-அவினாசி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும், 100 நாள் வேலை உறுதித் திட்டத்துக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
11.45 AM: தமிழ்நாடு உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும், பல துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதன் விவரம்: தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு
* ஊரக வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.469 கோடி ஒதுக்கீடு
* நகர்ப்புற வறுமை ஒழிப்புக்கு ரூ.272 கோடி ஒதுக்கீடு
* தமிழ் வளர்ச்சிக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு > அதன் விவரம்: பட்ஜெட்டில் தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு
* கோடையில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க ரூ.615 கோடி செலவிடப்படும்> அதன் விவரம்: சென்னை குடிநீர் தேவைக்காக 10 இடங்களில் போர்வெல்: பட்ஜெட்டில் அறிவிப்பு
* வார்தா புயல் மறுசீரமைப்பு பணிக்காக ரூ.585 கோடி செலவு
* சமச்சீர் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.282.22 கோடி ஒதுக்கீடு
* காவல்துறைக்கு ரூ.6,483 கோடி ஒதுக்கீடு
* தீயணைப்புத்துறைக்கு ரூ.253 கோடி ஒதுக்கீடு
* சிறைத்துறைக்கு ரூ.282 கோடி நிதி ஒதுக்கீடு
11.40 AM: தமிழக அரசு மின் உற்பத்தியிலும் மின் விநியோகத்திலும் தன்னிறைவு அடைந்துள்ளதாக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். அதன் விவரம்: மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு: அமைச்சர் தகவல்
11.35 AM: வேளாண் துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட 6 துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.
* வேளாண் துறைக்கு ரூ.1680.73 கோடி நிதி ஒதுக்கீடு
* மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி நிதி ஒதுக்கீடு
* தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,010 கோடி நிதி ஒதுக்கீடு
* ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.3,009 கோடி நிதி ஒதுக்கீடு
* நீர் வளத்துறைக்கு ரூ.4,791 கோடி நிதி ஒதுக்கீடு
* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.988 கோடி நிதி ஒதுக்கீடு
11.30 AM: 3.5 லட்சம் ஏழை எளிய குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். >அதன் விரம்: 3.50 லட்சம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க இலக்கு
11.25 AM: நடப்பு நிதியாண்டுக்கான மொத்த பட்ஜெட் மதிப்பு 1.59 லட்சம் கோடி என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
11.20 AM: ரூ.150 கோடி செலவில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி: அமைச்சர் ஜெயக்குமார்
கோவை, திருச்சி, மதுரையில் ரூ.150 கோடி செலவில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். >அதன் விவரம் ரூ.150 கோடி செலவில் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி
11.15 AM: உள்ளாட்சித் தேர்தல் நடத்த ரூ.174 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு. அதன் விவரம்: உள்ளாட்சித் தேர்தலுக்கு ரூ.174 கோடி ஒதுக்கீடு
11.12 AM: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா காய்கறி அங்காடி போன்ற அனைத்து முன்னோடி திட்டங்களும் தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். அதன் விவரம்: 'அம்மா உணவகம்' திட்டம் தொடரும்: அமைச்சர் ஜெயக்குமார்
11.10 AM: குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.615 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
நிதி ஒதுக்கீட்டின் 4 முக்கிய அம்சங்கள்:
* நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.13,996 கோடி ஒதுக்கீடு
* காவல்துறையினர் வீட்டு வசதிக்கு ரூ. 450 கோடி ஒதுக்கீடு:
* விவசாய பயிர்க் கடன்களுக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு
* மின்சாரம்- எரிசக்தித் துறைக்கு ரூ.16,998 கோடி ஒதுக்கீடு > அதன் விவரம்: மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு: அமைச்சர் தகவல்
10.55 AM: நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% ஆக இருக்கும் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.