ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி; வருகிற கல்வி ஆண்டு முதல் அமல் ஆகிறது

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று தொடங்கியது. அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

போட்டியில் பங்கேற்றுள்ள மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை தனியார் நிறுவனம் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் வைப்புத்தொகையாக செலுத்தப்படும். பள்ளி காலங்களில் மாதம் ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொள்ளும்படி ஏற்பாடு செய்யப்படும்.

‘நீட்’ தேர்வு

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. பிளஸ்-1 தேர்வை பொதுத்தேர்வாக மாற்ற அரசு பரிசீலித்து வருகிறது. பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதிகளில் கண்டிப்பாக வெளியிடப்படும்.

தனியார் கல்வி நிறுவனங்கள் உதவி மூலம் கிராமப்புறங்களில் அனைத்து பள்ளிகளிலும் நவீன கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் விளையாட்டு துறைக்கு போதுமான பயிற்சியாளர்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

யோகா பயிற்சி

தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்க 13 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வருகிற கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி அமல் ஆகிறது.  இவ்வாறு அவர் கூறினார்

மூன்றாண்டு பணிமுடித்ததால் ஏற்படவுள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சங்கம் வெளியிட்டது








சனி, 29 ஏப்ரல், 2017

தமிழகத்தில் நாளை போலியோ சொட்டுமருந்து முகாம்!

தமிழகத்தில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, நாளை போலியோ சொட்டுமருந்து வழங்கப்படுகிறது. 43,051 சொட்டுமருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழகத்தில் நாளை போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற உள்ளது. 43,051 சொட்டுமருந்து மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள்  மற்றும் முக்கியமான இடங்களில் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த சொட்டுமருந்து வழங்கும் மையங்கள், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். அனைத்து ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், கடந்த 2-ம் தேதி முதல் தவணை போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்பட்டது. இரண்டாம் தவணை, 30-04-2017 (நாளை) அன்று சொட்டுமருந்து  கொடுக்கப்பட வேண்டும்.
தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஓரிரு நாள்களுக்கு முன் சொட்டுமருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாள்களில் மீண்டும் சொட்டுமருந்து கொடுக்க வேண்டும். புதிதாகப் பிறந்த  குழந்தைகளுக்கும் முகாம் நாள்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.
சொட்டுமருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு, இடது சுண்டு விரலில் மை வைக்கப்படுகிறது. இது, விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய உதவுகிறது. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க, தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், முகாம் நாளன்று போலியோ சொட்டுமருந்து வழங்கப்படும்.
போலியோ சொட்டுமருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக, முக்கியப் பேருந்து நிலையங்கள், சுங்கச் சாவடிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1652 பயண வழி மையங்கள் நிறுவப்பட்டு, சொட்டுமருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  1000 நடமாடும்  குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கப்பட உள்ளது.
போலியோ சொட்டுமருந்து முகாமில், சுமார்  2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள்.
போலியோ சொட்டுமருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால், தமிழ்நாடு 13-வது வருடமாக போலியோ இல்லாத  நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையைத் தக்கவைத்துக்கொள்வதும், குழந்தைகளை  போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாதது. பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்' என்று கூறப்பட்டுள்ளது.

2017 - 18 கல்வி ஆண்டில் குறுவளமையபயிற்சி வகுப்பில் மாற்றம் !!

ஒவ்வொரு வருடமும் தொடக்க மற்றும் உயர் தொடக்கப்பள்ளிஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்தகல்வி ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சிகள் அனைத்தும் ஜுன் மாதம் முதல் வாரத்திலேயே 5 நாட்கள் நடைபெறும். இப்பயிற்சி இரண்டு கட்டங்களாக வழங்கப்படும். முதல் கட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் 50% ஆசிரியர்களுக்கு நடைபெறும்.

மீதமுள்ள ஆசிரியர்களுக்கு இரண்டாம் அல்லது மூன்றாம் பருவம் தொடக்கத்தில் இதே பயிற்சிகள் அந்தந்த வட்டார வளமையத்தில் வழங்கப்படும். பயிற்சி நடைபெறும் நாட்களில் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும் இப்பயிற்சியின் முற்னேற்பாடாக,  மே மூன்றாம் வாரத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் (மாவட்டத்திற்கு 10 ஆசிரியர் பயிற்றுனர்கள்)  பயிற்சி சென்னையில் வைத்து நடைபெறும். மே இறுதி வாரத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும் வழங்கப்படும்.

6 முதல் 8 வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அனைத்தும் RMSA வழியாக அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர்களின் உதவியுடன் நடைபெறும்.பள்ளி வேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் வட்டார அளவிலான பயிற்சிகள் மாணவர்களின் கல்வித்தரத்தினை பாதிக்கும் என்பதனை உணர்ந்து இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இனிவரும் காலங்களில் வட்டார அளவிலான பயிற்சிகள் பருவ ஆரம்பத்திலேயே வழங்கப்படும். குறுவள மைய பயிற்சிகள் வழக்கம் போலவே நடைபெறும்.

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

TNTET 2017 - தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்.

தேர்வர்கள் மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும்.

🔹 தேர்வு மைய நுழைவாயிலில் காவலர்கள் நடத்தும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

🔸 தேர்வர்கள் தேர்வறைக்குள் நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) மற்றும் நீலம் அல்லது கருப்பு பந்துமுனைப் பேனா மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

🔹 தேர்வு நடைபெறும் வேளையில், தேர்வர்கள் வெளியில் செல்ல அனுமதியில்லை.

🔸 தேர்வு முடிந்ததும் ஓஎம்ஆர் விடைத்தாளின் பிரதியை (கார்பன் காபியை) தேர்வர் பெற்றுச் செல்ல வேண்டும்.

🔹 அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தாள்கள் எவற்றையும் தேர்வு அறைக்குள் வைத்திருக்க அனுமதியில்லை.

🔸 கைபேசி, கைக்கணினி, மடிக்கணினி, தரவி அல்லது கணக்கிடும் கருவிகள் போன்றவற்றை இத்தேர்வறைக்குள் வைத்திருக்க அனுமதியில்லை.

🔹 தேர்வறைக்குள் அறைக் கண்காணிப்பாளர் அல்லது சக தேர்வர் ஆகியோருடன் முறை தவறி நடப்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

🔸 இந்த விதிமுறைகளை பின்பற்றாத தேர்வர்கள் அன்றையத் தேர்வினைத் தொடர்ந்து எழுத அனுமதிக்கப்படாததோடு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளைத் தொடர்ந்து எழுத நிரந்தரத் தடை விதிக்கப்படுவதுடன் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வியாழன், 27 ஏப்ரல், 2017

DIRECT RECRUITMENT OF B.T. ASSISTANTS AND B.T. ASSISTANTS (IEDSS) 2015 - 2016 NOTIFICATION / ADVERTISEMENT

தலைப்பைச் சேருங்கள்
NOTIFICATION-PLEASE CLICK HERE









அகவிலைப்படி அரசாணை வெளியீடு அரசாணை எண் 105 நாள் 26.04.2017

அகவிலைப்படி அரசாணை வெளியீடு  அரசாணை எண் 105 நாள் 26.04.2017
DOWNLOAD G.O-PLEASE CLILCK HERE




TNPSC-COMBINED CIVIL SERVICES EXAMINATION-II()2017-18) NON INTERVIEW POST GROUP II A SERVICES NOTIFICATION

TNPSC-COMBINED CIVIL SERVICES EXAMINATION-II()2017-18) NON INTERVIEW POST GROUP II A SERVICES NOTIFICATION


FOR MORE DETAILS PLEASE CLICK HERE

புதன், 26 ஏப்ரல், 2017

GPF RATE OF INTEREST FOR THE PERIOD OF 01.04.2017 to 30.06.2017 Order

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 1.1.2017 முதல் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன். 

01.01.2016 முதல் திருத்திய ஊதியம் பெறாத மத்திய அரசு அலுவலர்களுக்கு 01.01.2017 முதல் அகவிலைப்படியினை நான்கு சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 01.01.2017 முதல் நான்கு சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைத்து அரசு அலுவலர்கள், ஓய்வுதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும். 

இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு ரூ.244/- முதல் ரூ.3080/- வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.122/- முதல் ரூ.1540/- வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும்.இந்த கூடுதல் தவணை அகவிலைப்படி ஜனவரி, 2017 முதல் ஏப்ரல், 2017 வரையிலான காலத்திற்கு நிலுவையாகவும், மே, 2017 மாதம் முதல் சம்பளத்துடனும் வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் பதினெட்டு லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவர். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆண்டொன்றுக்கு தோராயமாக ரூ.986.77 கோடியாக இருக்கும்.

இவ்வாறு முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

டி.இ.டி., தேர்வர்கள் 'அஜாக்கிரதை' : டி.ஆர்.பி., மாற்று ஏற்பாடு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (டி.இ.டி.,) பலர் கையெழுத்தில்லாமலும், புகைப்படம் இன்றியும் விண்ணப்பித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அவர்களையும் தேர்வு எழுத வைக்க டி.ஆர்.பி., மாற்று நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் ஏப்.,29 மற்றும் 30ல் டி.இ.டி., தேர்வுகள் நடக்கின்றன. தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுக்கு ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பம் பரிசீலனையில், பலரது புகைப்படம் இல்லாதது, ஓ.எம்.ஆர்., தாளில் கையெழுத்து இல்லாததும் தெரிய
வந்துள்ளது. மேலும் விண்ணப்பம் ஒப்படைக்கும்போது பலரது ஓ.எம்.ஆர்., சீட்டுகள் மடிக்கப்பட்ட நிலையில் உள்ளன. அவற்றை கணினி மூலம் மதிப்பீடு செய்ய முடியாது என்பதால் அவை அனைத்தும், 'டேமேஜ்'ஆக கணக்கிட்டு மாற்று 'சீட்' வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்தேர்வுக்கு விண்ணப்பித்த 
தேர்வர்கள் பலர் அஜாக்கிரதையாக விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. விண்ணப்பமே சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும்,100க்கும் மேற்பட்டோர் இதுபோன்ற தவறுகள் செய்துஉள்ளனர். மாவட்ட அளவில் நடந்த நோடல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட 'ஹால் டிக்கெட்'டில், தேர்வரின் புகைப்படம் இல்லை என்றால், இணைய
தளத்தில் உள்ள அதற்கான சிறப்பு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். ஓ.எம்,ஆர்., ஷீட்டில் கையெழுத்து இல்லாத தேர்வர்களின் விண்ணப்பத்தில், பிறபக்கங்களில் உள்ள கையெழுத்தை 'ஸ்கேன்' செய்து, ஓ.எம்.ஆர்., ஷீட்டில் பயன்படுத்திக்கொள்ளவும் முடிவு 
செய்யப்பட்டுள்ளது, என்றார்.

திங்கள், 24 ஏப்ரல், 2017

விடுமுறைக்கான தோழன்..! அரசுப் பள்ளியின் ‘செம’ ஐடியா.....vikatan.com

விடுமுறைக்கான தோழன்..! அரசுப் பள்ளியின் ‘செம’ ஐடியா

பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சு. இனி ஜாலிதான்’’னு எல்லா மாணவர்களும் ஜாலி மூடில் இருக்க.. விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியாபட்டி, அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர்களில் 100 பேருக்கு மரக்கன்றுகளை கொடுத்து விடுமுறையில் தண்ணீர் ஊற்றி பராமரித்து பள்ளிக்கு வரும்போது பத்திரமாகக் கொண்டுவந்து நடச் சொல்லி விடுமுறையில் மரக்கன்று வளர்க்கும் பணியைக் கொடுத்திருக்கிறார் இப் பள்ளியின் தலைமையாசிரியர் மோகன்.பள்ளித்தலைமையாசிரியர் மோகனிடம் பேசினோம்,‘’ அமெரிக்காவில் வசிக்கிற தமிழர்களில் சுற்றுபுறச்சூழலில் அக்கறை கொண்டவர்கள் இணைந்து ’யுனேட்டட் தமிழ் பவுண்டேசன்’னு ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருக்காங்க. அதோட நோக்கமே மண், மரம், மழை ஆகியவற்றைக் பாதுகாக்கணும்னு என்பதுதான். அதாவது பாஸ்ட்புட் தவிர்த்து மண்ணில் விளையும் இயற்கை விவசாய உணவுப்பொருளை உண்ண ஊக்குவிப்பது, மரக்கன்றுகளை அதிகளவில் நடுவது, மழைநீரைச் சேமித்து வைப்பது இதுதான். இந்த அமைப்பு தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மரக்கன்றுகளை நட்டு அதை மாணவர்களையே பராமரிக்கச் செய்யவேண்டும்னு பள்ளிகளில் மரம் வளர்க்கும் திட்டத்தை தொடங்கியிருக்காங்க. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் முதலில் எங்க பள்ளியிலதான் அமல்படுத்தணும்னு சொன்னாங்க. இந்த பவுண்டேசனின் உதவியோடு வனத்துறையிடமிருந்து 70 வேம்பு மற்றும் 30 புங்கன் என மொத்தம் 100 மரக்கன்றுகளை வாங்கி நடலாம்னு முடிவுசெய்தோம். ஆனால், ஏப்ரல் 21-ம் தேதியோட எல்லா மாணவர்களுக்கும் தேர்வு முடிஞ்சு லீவு விட்டுடுவோம்.. மரக்கன்றுகளை நடமுடியாது, அப்படியே நட்டாலும் நட்டவுடனே விடுற உயிர்நீரோட மாணவர்கள் வீட்டுக்குப் போயிடுவாங்க. ஒன்றரை மாசம் லீவு முடிஞ்சு ஜூன் மாதம் பள்ளிக்கூடம் தொறந்ததும் வந்துப்பார்த்தா நூற்றுக்கு நூற்று மரக்கன்றுகளும் ஒன்னுபோல பட்டுப்போயிருக்கும். அதனால பள்ளி ஆசிரியர்களிடம் பேசி ஒரு முடிவெடுத்தோம்.
எங்க பள்ளியில படிக்குற 6-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 150 பேரில், விடுமுறைல அவரவர் சொந்த ஊருக்குப் போகும் மாணவர்கள் எண்ணிக்கையை கழிச்சுட்டு 100 மாணவ, மாணவிகளுக்கு ஆளுக்கு ஒரு மரக்கன்றை கொடுத்து, இந்த ஒன்றரை மாத லீவு நாட்கள்ல வீட்டுல வச்சு முறையாத் தண்ணீர் ஊற்றி பராமரிக்கணும். ஜூன் மாதாம் பள்ளிக்கூடத்துக்கு வந்ததும் அவரவர் மரக்கன்றுகளை பெஞ்சுகளில் அவரவர் பெயர் எழுதி ஒட்டியிருக்கும் இடத்துல அவரவர் மரக்கன்றுகளை வச்சிடணும். எத்தனை பேரோட மரக்கன்று உயரமாவும், செழுமையாவும் வளரந்திருக்கோ அத்தனை பேருக்கும் ஒரு பரிசுன்னு சொல்லியிருக்கோம். இந்த 100 மரக்கன்றுகள் வளர்க்குற பொறுப்பை எடுத்திருக்குற மாணவர்களின் வகுப்பாசிரியர், மூன்று நாளுக்கு ஒரு முறை மாணவரோட பெற்றோரின் போன் நம்பருக்கு போன் செய்து மாணவரிடம் பேசி, ’’தண்ணீர் ஊத்துனியா, கன்று எப்படி வளர்ந்துருக்குன்னு’’ கேட்பார்கள்.
7-ம்வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களிடம் இந்த லீவு நாட்கள்ல வீட்டுக்கு பக்கத்துல கிடைக்குற புங்கன், வேப்பமுத்து, வாதாங்கொட்டை, நாவல், கொடுக்காப்புளின்னு என்னென்ன விதைகள் கிடைக்குதோ அதை பாக்கெட் கவர்களில் மண்ணை நிரப்பி போட்டு முளைக்க வச்சு கொண்டுவரச் சொல்லியிருக்கோம். விதைபோட்டு வளர்த்துக் கொண்டுவரமுடியாதவர்கள் விதையைத் தேடி அலையாமல், கன்றுகளை வேரோட எடுத்து வளர்த்தும் கொண்டுவரலாம். இவர்களுக்கும் பரிசுன்னு சொல்லியிருக்கோம். லீவு நாட்கள்ல விளையாடினாலும் ஒரு மரக்கன்றை கொடுத்து முறையா தண்ணீர் ஊற்றி வளர்த்துடணும்னு சொல்லுறதுனால மாணவருக்கு ஒரு பொறுப்பு வந்துடும். ஜூன் மாசம் பள்ளிக்கூடம் ஆரம்பிச்சதும் அந்தந்த மரக்கன்றுகளை அந்தந்த மாணவர் கையாலயே குழி எடுத்து, நட்டு, பாத்தி கட்டி தினமும் தண்ணீர் ஊத்தி வளர்க்க சொல்லப்போறோம். அந்தந்த மரக்கன்றுக்கு அந்தந்த மாணவர் பெயரையே வைக்கப் போறோம்’.
இந்த பவுண்டேசன் மாணவர் மூலம் மரம்வளர்ப்பு திட்டத்தை மாவட்டத்துல முதல்ல எங்க பள்ளியில துவங்குறதுக்கு பள்ளியிலேயே மாடித்தோட்டம் போட்டு பராமரிச்சதும் ஒரு காரணம். ஆறு மாசத்துக்கு முன்னால விருதுநகர் ஜே.சி.ஐ அமைப்போட இணைந்து ‘என்பள்ளி என்தோட்டம்’’ங்குற திட்டத்தின் படி, கீரைகளை எப்படி வளர்க்குதுன்னு 11-ம் வகுப்பு மாணவர்கள் 80 பேருக்கு பள்ளியிலேயே பயிற்சி கொடுத்து, செடிகள் வளர்க்கும் 80 பைகளில் தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், மட்கிய சாணவுரம் ஆகியவற்றைக் கலந்து மாணவர்கள் கையாலயே நிரப்பச் சொல்லி அதில் பொன்னாங்கன்னி, கரிசலாங்கண்ணி, பசலை, முளைக்கீரை ஆகிய நாலு வகையான கீரை விதைகளை விதை போட்டு தினமும் காலையில வகுப்புக்குள்ள போறதுக்கு முன்னாலயும், மாலையில வகுப்பைவிட்டு வீட்டுக்கு போகும் போதும் என ரெண்டு தடவை தண்ணீர் ஊற்றி வளர்த்தாங்க. ஸ்டூடன்ஸ் கையாலயே மண் நிரப்பி, விதை போடச்சொல்லி , தண்ணீர் ஊத்தச் சொல்லி அந்தந்த செடிகளுக்கு அந்தந்த மாணவர்கள்தான் பொறுப்புன்னு சொன்னதுனால, தான் விதைச்ச கீரைவிதையை நல்லா வளர்க்கணும்னு எல்லா மாணவர்களுமே நல்லா வளர்த்தாங்க. இதுல சில மாணவர்கள் வீட்டுல இருந்து மட்கிய சாணத்தைக் கொண்டு வந்து போட்டும் வளர்த்தாங்க. ’’தாம் விதைத்த விதை கீரைகளாக வளர்ந்து வருகிறது’’ என்ற சந்தோசமும், இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வமும் நம்பிக்கையும் வந்துச்சு, இதுல, சரியாக விதை வளராவிட்டா மாணவர்களுக்கு வருத்தம் வந்துடக்கூடாதுன்னு மீண்டும் விதை விதைக்க கூடுதலாக விதைகள் வச்சிருந்தோம். ஆனா, எல்லா விதைகளும் முளைச்சு மாணவர்களுக்கு நல்ல மகசூலை கொடுத்துச்சு.
கீரை விதைதூவிய, 35 முதல் 40 நாட்களில் முழுமையாக வளர்ந்து அறுவடை நிலைக்கு வந்ததும், அவரவர் பைகளில் வளர்த்த கீரைகளை அவரவர் கையாலயே அறுவடை செய்யச் சொன்னோம். அறுவடை செய்த கீரைகளை என்னாப்பா செய்யலாம்னு மாணவர்களிடமே கேட்டதும், ‘’சத்துணவு சாம்பார் குழம்புல போட்டு எல்லாருமே கீரைக்குழம்பா சாப்பிடலாம் சார்’’னு மாணவர்களே சொன்னதுதான் ஆசிரியர்கள் எல்லாருக்கும் சந்தோசத்தை ஏற்படுத்துச்சு.
மாணவர்களோட ஆசைப்படியே ஒரு நாளுக்கு 5 பேர் வீதம் அறுவடை செய்யச் சொல்லி ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற கணக்கில் 16 நாளுக்கு அறுவடை செய்து சத்துணவு சாம்பார் குழம்பில் சேர்த்து மாணவர்களுக்கு பரிமாறினோம். இந்த 16 நாளும் பள்ளிக்கூடத்துல கீரைசாம்பார்தான். காய்கறி விதைகளைக் கொடுத்தால் பறிப்புக்கு வர குறைந்தது 65 நாட்கள் ஆகும். மேலும், மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தைப் பற்றி எளிதா புரிஞ்சுக்கணும்னுதான் 35 - 40 நாட்கள்ல பறிப்புக்கு வர்ற கீரைகளை விதைக்க சொன்னோம். இதுலயே இயற்கை விவசாயத்து மேல மாணவர்களுக்கு முழு நம்பிக்கை வந்துடுச்சு. இதே கீரைத்தோட்டத்தை திரும்பவும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப் போகிறோம். இந்த விசயம் எல்லாப் பள்ளிகளுக்கும் தெரிஞ்சு பின்பற்ற ஆரம்பிச்சாங்க.ஒரு நல்ல மாணவனுக்கு அடையாளம் மரக்கன்று நடுவது மட்டுமல்ல.. அதை வளர்த்துக்காட்டுவது..’’ இதுதான் எல்லா மாணவரிடமும் ஆசிரியர்கள் அடிக்கடி சொல்லும் வரிகள். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு வருடத்திலும் வீட்டில் ஒரு மரமும், பள்ளியில் ஒரு மரக்கன்றும் நட்டு பராமரித்தாலே போதும். வறட்சி ஓடிடும். பசுமை படர்ந்துவிடும் ’’ என்று சொன்னபடியே மாணவர்களிடம் ஒவ்வொரு மரக்கன்றையும் பத்திரமாக கொடுக்கத் தொடங்கினார்.

நாளை முதல் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் 4.5லட்சம் அரசு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 64 அரசு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அன்பரசு தெரிவித்துள்ளார்.
வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக மார்ச் 31-ம் தேதி அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாளைய தினம் விவசாயிகளை ஆதரித்து மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், புதிய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும் போராட்டத்தில் இறங்க உள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் 6 பேர் மாற்றம்

பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக திரு. இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் பள்ளிக்கல்வித்துறை தொடக்கக் கல்வி இயக்குநராக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடக்க கல்வி இயக்குநராக திரு.கார்மேகமும், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக திரு.அறிவொளியும் நியமிக்கப்பட்டுள்ளார். முறைசாரா கல்வி திரு.இயக்குநராக ராமேஸ்வர முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். பாடநூல் கழகத்தின் செயலாளராகதிரு. பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்

தகுதி தேர்வு அரசாணைக்கு முன்பு ஏற்பட்ட காலிப்பணியிடம்: ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

தகுதி தேர்வு கட்டாயம் என்ற அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பே காலிப்பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், 
ஆசிரியர் நியமனத்துக்கு கல்வித்துறை ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பதவி இடம் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி காலியானது. இந்த பதவியை நிரப்ப அதே ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி பள்ளி நிர்வாகம், உதவி தொடக்கப்பள்ளி அதிகாரிக்கு கோரிக்கை மனு அனுப்பியது. இதையடுத்து அந்த பதவியை நிரப்ப, உதவி தொடக்கப்பள்ளி அதிகாரி கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து வேலைவாய்ப்பு மையத்தில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியல் கேட்கப்பட்டன. பள்ளி நிர்வாகமும் காலிப்பணியிடம் குறித்து பொது விளம்பரம் வெளியிட்டது. இதன்பின்னர் நடந்த நேர்முகத் தேர்வில், சரவணபாபு என்ற ஆசிரியர் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி தேர்வு செய்யப்பட்டார். அன்றே அவர் பதவியையும் ஏற்றுக்கொண்டார்.
ஒப்புதல் அளிக்கவேண்டும்.
இவரது பணி நியமனத்துக்கு ஒப்புதல் கேட்டு, மாவட்ட தொடக்கல்வி அதிகாரிக்கு, பள்ளி நிர்வாகம் கடிதம் அனுப்பியது. ஆனால், '2000-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, பள்ளிக்கூடத்தில் ஆண், பெண் விகிதாச்சாரம் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்று கூறி, அந்த பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மாவட்ட அதிகாரி மறுத்து விட்டார்.இதை எதிர்த்து பள்ளி நிர்வாகம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்தார். ஆசிரியர் பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
தகுதி தேர்வு
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தொடக்கக் கல்வி இயக்குனர், நாகப்பட்டினம் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல், 'மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தகுதி தேர்வு மூலமே ஆசிரியர்கள் நியமனம் நடைபெறவேண்டும் என்று தமிழக அரசு 2011-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. இதை தனி நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார். எனவே, அவரது உத்தரவை ரத்து செய்யவேண்டும்' என்று கூறியிருந்தார்.
நாடவில்லை
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எஸ்.என்.ரவிசந்திரன், 'தகுதி தேர்வு மூலமே ஆசிரியரை தேர்வு செய்யவேண்டும் என்ற அரசாணை 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த காலிப்பணியிடம் அதற்கு முன்பே ஏற்பட்டு, அந்த இடத்தை நிரப்ப அரசிடம் அனுமதிக்கேட்டு அதே ஆண்டு அக்டோபர் மாதமே பள்ளி நிர்வாகம் மனு கொடுத்து விட்டது' என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-ஆசிரியர் சரவணபாபுவின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காததை எதிர்த்துத்தான் இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், இவரை தேர்வு செய்யவில்லை என்று இந்த ஐகோர்ட்டை நாடவில்லை.
நிரப்பலாம்
அதுமட்டுமல்லாமல், ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்று அரசு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பே, ஏற்பட்ட காலியிடத்தில்தான் ஆசிரியரை பள்ளிநிர்வாகம் நியமித்துள்ளது.மேலும், ஆண், பெண் ஆசிரியர்கள் விகிதாச்சாரம் தொடர்பாக பக்தவச்சலம் என்பவர் தொடர்ந்த வழக்கில், பெண்களை கொண்டு நிரப்பவேண்டிய அரசு பணியிடத்துக்கு தகுந்த பெண்கள் கிடைக்கவில்லை என்றால், ஆண்களை கொண்டு நிரப்பலாம்' என்று இந்த ஐகோர்ட்டு ஏற்கனவே ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.எனவே, சரவணபாபு நியமனத்துக்கு தொடக்கக் கல்வித்துறை ஒப்புதல் அளிக்கவேண்டும். தனி நீதிபதியின் உத்தரவில் எந்த குறைபாடுகளும் இல்லை. அவரது உத்தரவை உறுதி செய்கிறோம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

ஆசிரியர் பணிக்கு கணினி வழி தேர்வு

ஆசிரியர் நியமனத்தின் போது, அவர்களின் ஆங்கில மொழி மற்றும் பாட திறனை சோதிக்கும் வகையில், கணினி வழி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி உள்ளது.

அரசு பள்ளிகளில், ஒரு சிலரை தவிர, மற்ற ஆசிரியர்கள், ஆங்கில மொழி திறனின்றி உள்ளனர். இதற்காக, ஆங்கில மொழி அறிவு உடைய ஆசிரியர்களை, புதிதாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, ஆங்கில திறன் கொண்டவர்களை, ஆசிரியர்களாக தேர்வு செய்ய, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு முறை மாற்றப்பட உள்ளது.
முதலில் போட்டி தேர்வுகளுக்கான, விண்ணப்ப பதிவு, 'ஆன்லைனில்' மேற்கொள்ளும் திட்டம் அறிமுகமாகிறது. அதேபோல், வரும் காலங்களில் ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வையும், கணினி வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக, மற்ற துறைகளுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளை, கணினி வழி தேர்வாக மாற்ற, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2017-18ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கோரும் கூடுதல் / உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான தொடக்கக் கல்வி இயக்குனரால் வெளியிடப்பட்ட மாதிரி படிவம்

சனி, 22 ஏப்ரல், 2017

நிலம், வீடு வாங்க இ.பி.எப். சேமிப்பிலிருந்து 90% தொகையை எடுக்க மத்திய அரசு அனுமதி

நிலம், வீடு வாங்க ஊழியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (இபிஎப்) 90% தொகையை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த மத்திய அரசின் புதிய விதிமுறைகள் குறித்த அறிவிக்கையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் தங்கள் இ.பி.எப். சேமிப்பிலிருந்து ஒருமுறை பணம் எடுத்து ஃபிளாட் வாங்குவதற்காகவோ அல்லது நிலத்தில் வீடு கட்டவோ தவணைத் தொகை செலுத்தப் பயன்படுத்தலாம்.

இருப்பினும் நீங்கள் வீட்டுமனை அல்லது வீடு வாங்கும் திட்டத்தில் ஒரு கூட்டுறவு சங்கம் மூலம் வாங்க முடிவு செய்வதோடு அதே கூட்டுறவு சங்கத்தில் உங்களுடன் இபிஎப் கணக்கு வைத்திருக்கும் குறைந்தது 9 பேர் உடன் இணைய வேண்டும். எந்த ஒரு சட்டத்தின் கீழும் இந்த கூட்டுறவு சங்கம் பதிவு செய்யப்பட்டிருப்பது அவசியம் என்று ஏப்ரல் 12-ம் தேதி மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சக வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய தொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “2022-ல் அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் கனவுத்திட்டத்தின் முதல்படியாகும். இதன் மூலம் 4 கோடி இபிஎப் உறுப்பினர்கள் பயனடைவர். இவர்கள் தங்களாகவே ஒரு கூட்டுறவு சங்கம் தொடங்கி தங்கள் சேமிப்பிலிருந்தே வீடு வாங்கவோ, கட்டவோ செய்ய முடியும்” என்றார்.

முன்னதாக 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஊழியர்கள் தங்களது 36 மாத சம்பளத்துக்கு (பேசிக் மற்றும் டிஏ சேர்ந்த தொகை) இணையாக பி.எப். சேமிப்பிலிருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

“இபிஎப் திட்டத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் சேமிப்பு செய்து வந்த உறுப்பினர்கள் வீடு வாங்க, மனை வங்க 90% தொகையினை எடுத்துக் கொள்ளலாம். 90% பணம் எடுக்க முடிவதோடு கடன் தொகையை முழுதுமோ, பகுதியளவிலோ செலுத்துவதற்காக தங்கள் மாதாந்திர பிஎப் தொகையை பயன்படுத்தும் விருப்பத் தெரிவு அனுமதியும் உள்ளது” ஏப்ரல் 21-ல் வெளியான இபிஎப் தலைமை அலுவலக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து பிராந்திய இபிஎப் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், மனைகள் வாங்க, வீடு கட்ட, இபிஎப்ஓ அலுவலகம் நேரடியாக தொகையை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்திடமோ, ஹவுசிங் ஏஜென்சியிடமோ, பில்டர்களிடமோ கொடுக்கும், இபிஎப் உறுப்பினர்கள் கையில் தொகை கொடுக்கப் படமாட்டாது.

மேலும் இதற்காக கொடுக்கப்பட்ட பணத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக இபிஎப் உறுப்பினர்களுக்கு வீடுகட்டி முடிக்கப்படவில்லையென்றாலோ, குறிப்பிட்ட மனை ஒதுக்கப்படாவிட்டாலோ இபிஎப் சேமிப்பிலிருந்து இதற்காக எடுக்கப்பட்ட தொகை மீண்டும் கணக்கில் 15 நாட்களுக்குள் டெபாசிட் செய்யப்படுவதை உறுப்பினர்கள் உறுதி செய்ய உரிமை பெற்றவர்களாகின்றனர் என்று அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு நாள்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்': எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று மட்டும் சென்னை, கடலூர், மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட எட்டு நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 108 ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக திருச்சியில் 105 ஃபாரன்ஹீட் வெயிலும், மதுரை மற்றும் நெல்லையில் 104 ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. தலைநகர் சென்னையில் 101 ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதேபோல், புதுச்சேரியிலும் 101 ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. 

இந்நிலையில், "அடுத்த இரண்டு நாள்களில், தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரிக்கு வெயிலின் அளவு அதிகரிக்கும். முக்கியமாக  வேலூர், நாமக்கல், கரூர், தர்மபுரி, சேலம், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் 41 டிகிரி முதல் 44 டிகிரிக்கு வெயில் பதிவாகும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெட் தேர்வில், வினாத்தாள் வெளியாகாமல், மாணவர்கள், 'காப்பி' அடிக்காமல், கண்காணிக்க வேண்டும்' என, இயக்குனர்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

தமிழகம் முழுவதும், ஏப்., 29, 30ம் தேதிகளில், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. ஏப்., 29ல், 2.37 லட்சம் பேர்; 30ல், ஐந்து லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்காக, தமிழகம் முழுவதும், 1,861 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களுக்கு, வினாத்தாள் கட்டுகள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன; துப்பாக்கி ஏந்திய போலீசாரும் நிறுத்தப்பட உள்ளனர்.

பள்ளிக்கல்வி செயலர் உதயச்சந்திரன் உத்தரவுப்படி, பள்ளிக்கல்வி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன், டி.ஆர்.பி., என்ற, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் காகர்லா உஷா, நேற்று கூட்டம் நடத்தினார்.

அதில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்:

● டெட் தேர்வில் எந்த குளறு படியும் இல்லாமல், தேர்வை நடத்த வேண்டும்

● யாரும் காப்பி அடிக்காமல், கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்

● வினாத்தாள், 'லீக்' ஆகாமல், தேர்வு துவங்கும் வரை பாதுகாப்பு வழங்க வேண்டும்

● தேர்வு அறைகளில், போதிய அளவுக்கு, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

● அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு என்றால், தனியார் பள்ளி ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும்

● தேர்வு மையங்களில் கடிகாரம், குடிநீர், மின் வசதி, மின் விசிறி வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

● தாமதமாக வரும் தேர்வர்களை, அறைக்குள் அனுமதிக்கக் கூடாது

● பறக்கும் படை அமைத்து, தேர்வு நாளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். பொதுத் தேர்வு போல், இந்த தேர்வை நடத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

வியாழன், 20 ஏப்ரல், 2017

DEE - தொடக்கக்கல்வி - மாணவர் சேர்க்கை குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுரை...

1.25 கோடி பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்: பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்.

பெயர், பிறந்த தேதி, முகவரி, ரத்த வகை, ஆதார் எண் உள்ளிட்டவிவரங்களுடன் ஒரு கோடியே 25 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
 எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு மேற் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அனைத்து மாவட்டங்களி லும் (சென்னை நீங்கலாக) கடந்த 6, 7-ம் தேதி ஆகிய 2 நாட்கள் வழிகாட்டி முகாம்கள் நடத்தப்பட் டன. அந்த நேரத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தினால், சென்னை மாவட் டத்தில் மட்டும் வழிகாட்டி முகாம் நடத்தப்படவில்லை.கல்வி வழிகாட்டி முகாம்இந்த நிலையில், சென்னையில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாட்களாக 10 இடங்களில் வழிகாட்டி முகாம்கள் நடைபெற்றன. முகாம் நடைபெற்ற இடங்களில் ஒன்றான சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங் கிலோ-இந்தியன் பள்ளியில் நேற்று நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன், நிதித்துறை அமைச் சர் டி.ஜெயக்குமார், பள்ளிக்கல் வித்துறை செயலாளர் டி.உதயச் சந்திரன், மாவட்ட ஆட்சியர் வி.அன்புச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.விழாவில், மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டி கையேட்டை அமைச்சர் செங் கோட்டையன் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:கல்வித்துறையில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டும்வகையில் தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. கல்வித்துறை யில் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு புதுமையான திட்டங்களை கொண்டுவந்தார். கடந்த 5 ஆண்டு களில் பள்ளிக்கல்வித் துறைக்கு மட்டும் ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடியை ஒதுக்கியவர் ஜெய லலிதா. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கல்வித் துறைக்கு இவ்வளவு அதிக நிதிஒதுக்கப் பட்டது கிடையாது. கல்வியால் மட்டுமே ஏழ்மையை ஒழிக்க முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.26 ஆயிரத்து 862 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தற்போது பள்ளிகளில் ஒரு கோடியே 25 லட்சம் மாணவ-மாணவிகள்கல்வி பயின்று வரு கிறார்கள். அவர்களில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் வழிகாட்டி கையேட்டை உருவாக்கி யுள்ளோம். மாணவர்கள் தேர்வு செய்து படிக்கும் வகையில் 262 பாடப் பிரிவுகளை கொடுத்துள்ளோம். சுமாராக படிக்கும் மாணவர்கள் என்னென்ன தொழிற்கல்வி படிப்பு களில் சேரலாம் என்ற விவரங் கள் இந்த கையேட்டில் இடம்பெற் றுள்ளன. புதிய படிப்புகளை படிக் கும்போது வேலைவாய்ப்பு பெரு கும். ஏழை மாணவர்கள் கல்வியால் மட்டுமே வாழ்க்கையில் உயர முடியும்.பள்ளிகளில் படிக்கும் ஒரு கோடியே 25 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்க உள் ளோம். இது தொடர்பான அறி விப்பு பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின்போது வெளியிடப் படும். இந்த ஸ்மார்ட் கார்டில் மாண வர்களின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், முகவரி, ரத்தப் பிரிவு, ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும்.படிப்பில் மட்டுமின்றி உடல் நலன், பிறருக்கு உதவுவது, நாட்டுப் பற்று, சமூக சிந்தனை உள்ளிட்ட இதர விஷயங்களிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதற்காக பள்ளி களில் யோகா, நல்லொழுக்க வகுப்பு, சாலை பாதுகாப்பு விதிகள், பெற்றோரை நேசிப்பது, சமூக சிந் தனை ஆகியவற்றிலும் கவனம் செலுத்தும் வகையில் கல்வியில் பல புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன.இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது, “பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக இத்தகைய முகாம்கள் நடத்தப்படுகின்றன. மாணவர்களும் இந்த முகாம்களில் அளிக்கப்படும் வழிகாட்டுதல்களை மனதில்கொண்டு செயல்பட வேண்டும்” என்றார்.பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் தலைமை தாங்கிப் பேசும்போது, “மாணவர்கள் எதிர் காலத்துக்கு பயனளிக்கும் கல் வியை கற்கவும் அவர்களின் கனவு களை நனவாக்கவும் மேற்கொள்ளப் படும் முயற்சிதான் இந்த வழிகாட்டி முகாம். இந்த திட்டத்துக்கு வித் திட்டவர் பள்ளிக்கல்வி அமைச்சர் தான்.

இது, மாணவர்கள் தங்களின் திறமைக்கேற்ப என்ன படிப்பை தேர்வுசெய்யலாம் என்ற கலந்துரை யாடல் நிகழ்ச்சியாகும். மாணவர் கள் இந்த முகாமை நல்ல முறை யில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.முன்னதாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்றார். நிறைவாக, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா நன்றி கூறினார்.

புதன், 19 ஏப்ரல், 2017

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2017ம் கல்வியாண்டிற்கான உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாறுதல் மூலம் நியமனம் - 31.10.2010 முடிய தகுதியுள்ள அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பட்டியல் தயார் செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு

பிரிவு உபச்சார விழா

பாப்பாக்குடி வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர்  திருமதி. வசந்தி அவர்கள் பணி ஓய்வு பெறுவதால் பாப்பாக்குடி சரக ஆசிரியர்களின் சார்பில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. விழாவிற்கு புதுப்பட்டி T.D.T.A  நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. அருள்மணி அகஸ்டின்அவர்கள்  தலைமை தாங்கினார். அணைந்தநாடார் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. A.C.ஆறுமுகம் அவர்கள்  முன்னிலை வகித்தார். மானாபரநல்லூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சுரேஷ் முத்துக்குமார்  அவர்கள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர்கள்  திரு. திலகர் தியோடர் ,திரு. ஜோசப், திரு. அகஸ்டின், திரு. முத்தையா ராஜேந்திரன், திருமதி. ரோஸ்லின்,திருமதி .சிரோன்மணி ,திரு. அலெக்சாண்டர் , திரு. ராம்சந்தர் ஆசிரியர்கள் திரு. லாரன்ஸ், திரு.முத்துராஜ்   ஆகியோர்   வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் தலைமையாசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப்பயிற்றுனர்கள் திரளாகக் கலந்து கொண்டனர் . தலைமையாசிரியர் திரு. அகஸ்டின் அவர்கள் நன்றி கூறினார் .
















பள்ளிக் கல்விக்கு தனி இணையதளம்

அரசு துறை இணையதளங்களை மாநில அரசுகள் 'அப்டேட்' செய்வதில்லை. இதனால் காலாவதியான தகவல்களே இடம்பெற்றுள்ளன. இதையடுத்து இணையதளங்களை நவீனப்படுத்தி, அடிக்கடி 'அப்டேட்' செய்ய வேண்டுமென, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளிக்கல்வித்துறைக்கு அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கூடிய தனி இணையதளம் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட வாரியாக அனைத்து வித பள்ளிகளின் தகவல்களும் இடம்பெற உள்ளன. இதில் பள்ளிகளின் வரலாற்று சிறப்பு, விளையாட்டு சாதனை, தேர்ச்சி விகிதம், இதர சாதனைகள், இலக்கியம் போன்றவை இடம் பெறும். மேலும் அதுதொடர்பான படங்கள், வீடியோ தொகுப்புகளும் இருக்கும். இப்பணிகளில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல அரசு பள்ளிகள் தனியாருக்கு இணையாக உள்ளன. அப்பள்ளிகளின் பெருமைகள், மாணவர்களின் சாதனைகளை இணையதளத்தில் வெளியிடும்போது, மற்ற பள்ளிகளும் மாற வாய்ப்புள்ளது. மக்களிடம் அரசு பள்ளி மீதான தவறான கண்ணோட்டம் குறையும், என்றார்.

SCERT - விக்கிபீடியா வலைத்தளத்தில் பங்களிப்பதற்கு ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள்!!

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

TRB - Annual Planner - 2017

தனிக்கவனம் / மிக அவசரம் :* *அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு

*தனிக்கவனம் / மிக அவசரம் :*

*அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு :*

பின்வரும் கால அட்டவணைப்படி மூன்றாம் பருவத்தேர்வினை நடத்தி முடிக்குமாறு அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

19.04.17 பிற்பகல் - தமிழ்
20.04.17 முற்பகல் - ஆங்கிலம்
20.04.17 பிற்பகல் - கணக்கு
21.04.17 முற்பகல் - சூழ்நிலையியல் / அறிவியல்
21.04.17 பிற்பகல் - சமூக அறிவியல்

மேற்குறித்த தேதிகளில் தேர்வுகள் நடைபெறுவதைச் சார்ந்த தலைமையாசிரியர்கள் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

தொடக்கக்கல்வி வேலை நாட்கள் குறைத்தமைக்கான இயக்குனரின் செயல்முறைகள்

தொடக்க பள்ளி தேர்வுகளை மாற்றியமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தமிழக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: வெப்பக்காற்று வீசுவதால், வரும் ஏப்ரல் 21ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்க பள்ளி தேர்வுகளை மாற்றியமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஏப்ரல் 21 முதல் 29ம் தேதி முதல் நடைபெற உள்ள தேர்வுகள் வேறு தேதியில் நடத்தப்படும். வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், தனியார் பள்ளிகள் சிறப்பு பயிற்சி வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடும் வெயில் காரணமாக ஏப்ரல் 21ம் தேதிக்கு பிறகு அரசு பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது ஆண்டு இறுதித் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டார்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 21-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாகவும், ஏப்ரல் 21 முதல் 30-ம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


மேலும், ஏப்ரல் 21-ம் தேதிக்கு பின்னர் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளோ பயிற்சி வகுப்புகளோ நடத்தப்படக்கூடாது என்றும், தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
முதலில் ஏப்ரல் 30-ம் தேதிக்குப் பிறகுதான் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைப்பதாலும், அனல் காற்று வீசுவதாலும் முன்கூட்டியே விடுமுறை விட முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார். 

திங்கள், 17 ஏப்ரல், 2017

CPS ACCOUNT SLIP, ALLOTMENT LETTER DOWNLOAD- PLEASE CLICK HERE

CPS ACCOUNT SLIP, ALLOTMENT LETTER DOWNLOAD- PLEASE CLICK HERE

USER NAME: YOUR CPS NUMBER

PASS WORD: YOUR DATE OF BIRTH

பள்ளிக்கல்வி - மின் ஆளுமை - மாவட்டங்கள் வாரியாக இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ளுதல் சார்ந்த அறிவுரைகள்

தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை 21.04.2017 அன்று பள்ளிக்கல்வித்துறை செயலர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

PF கணக்கில் விரைவில் 5 மாற்றங்கள் (50,000 ரூபாய் போனஸ், புதிய வட்டி விகிதம்)

ருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 2016-2017 நிதி ஆண்டிற்கான வட்டி விகிதம், ஆதார் இணைப்பு, புதிய போனஸ் திட்டம் எனப் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அனைவரும் பிஎப் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. முன்பு ஆதார் எண்ணை இணைக்க மார் 31-ம் தேதி தான் கடைசித் தேதி என அறிவித்து வருங்கால வைப்பு நிதி ஆணையம் அதனைச் சற்று தளர்த்தி ஏப்ரல் 30-ம் தேதி என அறிவித்தது.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் இதே போன்று டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை 50 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இவை மட்டும் இல்லாமல் அன்மையில் பிஎப் திட்டத்தில் பிற மாற்றங்கள் பற்றி இங்குப் பார்ப்போம்.
வட்டி விகிதம்
வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ள 4 கோடி சந்தாதார்களும் 2016-2017 நிதி ஆண்டிற்கான வட்டி விகிதமாக 8.65 சதவீதம் அளிக்க வேண்டும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் கமிட்டி முடிவு செய்துள்ளது, அதனை உறுதி செய்யும் விதமாக மத்திய அரசு இன்னும் ஓர் இரு நாளில் 8.65 சதவீதமாக வட்டி விகிதத்தை அறிவிக்கும் என்று அதிகாரப் பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  
50,000 ரூபாய் போனஸ்
வருங்கால வைப்பு நிதி திட்டங்களில் நீண்ட காலம் முதலீடு செய்து இடையில் எடுப்பதைத் தவிர்க்கும் வண்ணமாக 20 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பயன்பாட்டில் உள்ள பிஎப் கணக்குகளுக்கு 50,000 ரூபாய்க் கூடுதலாக வழங்கப்படும். 20 ஆண்டுகளுக்கும் குறைவாகப் பங்களிப்பு செலுத்தி வந்த பிஎப் கணக்குகளுக்கும் பணத்தைத் திரும்பப் பெறாமல் இருந்தால் 50,000 ரூபாய் வழங்கப்படும். இதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்த பிறகு இந்தத் தொகை வழங்கப்படும்.
  
இறந்த பிஎப் சந்தாதார்களைச் சார்ந்தவர்கள்
வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்துள்ள சந்தாதார்கள் இறந்து விட்டால் தற்போது அவர்களைச் சார்ந்தவர்களுக்கு அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய் வழங்கப்படுகின்றது, ஆனால் குறைந்தபட்ச தொகை என்று ஒன்று இல்லை. எனவே புதிதாகக் குறைந்தபட்ச தொகையாக 2.5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றது.
  
பங்குச் சந்தை முதலீடு
வருங்கால வைப்பு நிதி ஆணையம் இப்போது 10 சதவீதம் பிஎப் தொகையைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகின்றது, இப்போது அதனை 15 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதனை வர்த்தகச் சங்கங்கள் எதிர்த்து வருகின்றன. 2017 பிப்ரவர் 15-ம் தேதி வரை வருங்கால வைப்பு நிதி ஆணையம் 18,069 கோடி ரூபாயை ஈடிஎப் திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 18.13 சதவீதம் வரை லாபமும் பெற்றுள்ளது.
  
பிஎ பணத்தை எளிதாகத் திரும்பப் பெற செயலி
4 கோடி பேர் பிஎப் சந்தாதார்களாக உள்ள நிலையில் பணத்தை எளிதாகத் திரும்பப் பெற ‘யூமங்' என்ற பெயரில் மொபைல் செயலி ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கின்றது. இதன் மூலம் இணையதளம் மூலம் பிஎ பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கை அளிப்பது மிகவும் எளிமைப்படுத்தப்படும்.