புதன், 31 மே, 2017

ஜுன் 6 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்..

தந்தி TV:-முடிந்தது கோடை விடுமுறை, இயக்குநர் அதிரடி உத்தரவுஆசிரியர்கள் ஜீன் 6 வரை விடுமுறை என கருதக் கூடாது. நாளை முதல் பள்ளிக்கு சென்று மாணவர்கள் சேர்க்கை, மாணவர்களை வேறு பள்ளிக்கு விடுவித்தல் , இலவச பொருட்கள் பெற்றுக் கொண்டு வழங்கப்பட்ட பொருட்களை சரிபார்த்தல் போன்ற பணிகளை துவங்க வேண்டும். அனைத்துஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்ததை பள்ளி தலைமையாசிரியர் மூலம் உயர் அதிகாரிகள் உறுதி படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வி மற்றும் பள்ளி கல்வி  இயக்குநர்கள் உத்தரவு ..

பள்ளிக்கல்வி இயக்குனர் & தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு.

SOURCE:- THANTHI TV

திங்கள், 29 மே, 2017

பள்ளிகல்விதுறை ஆலோசனை கூட்டம்

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இதில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டள்ளனர். பள்ளிகல்வித்துறை மானிய கோரிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை : 'வாட்ஸ் ஆப்'பில் விழிப்புணர்வு

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, வாட்ஸ் ஆப், கேபிள், 'டிவி' மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள, ௩௭ ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ௪௧ லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளில், இன்னும், 50 சதவீத மாணவர்கள் படிக்கும் வகையில், உள் கட்டமைப்பு வசதியும், ஆசிரியர்கள் எண்ணிக்கையும் உள்ளது. ஆனால், ஆங்கில மொழி திறன் வளர்ச்சி, முன்னேறிய கற்பித்தல் முறை இல்லாததால், பெற்றோர், பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.இந்நிலையில், இந்த ஆண்டு முதல், தனியார் பள்ளிகளுக்குநிகராக மாணவர் சேர்க்கையை உயர்த்தவும், கற்பித்தல் முறையை முன்னேற்றவும், பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக, தொடக்க பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆட்டோ விளம்பரம் செய்யவும், அரசு பள்ளிகள் தரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும், பாடல்கள், குறும்படங்களை ஒளிபரப்பவும், வாட்ஸ் ஆப், கேபிள், 'டிவி' மற்றும் தியேட்டர்களில் விளம்பரம் செய்யவும், தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித் துறையில் நாடே வியக்கும் அளவுக்கு மேலும் புதிய திட்டங்கள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 409 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு 2018 மே மாதம் வரையிலான தற்காலிக அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கி அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோது, “வரும் கல்வி ஆண்டு முதல் 6-ம்வகுப்பிலேயே கணினிப் பாடம் நடத்தப்படவுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அவர்களது விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் ரூ.2.13 கோடியில் மாவட்டந்தோறும் ஐஏஎஸ் பயிற்சி மையம் ஏற்படுத்தப்படவுள்ளது” என்றார்.நிகழ்ச்சிக்கு ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார்.

மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன், எம்பி-க்கள் ப.குமார், டி.ரத்தினவேல், சந்திரகாசி, எம்எல்ஏ-க்கள் ஆர்.டி.ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், ராமஜெயலிங்கம், பரமேஸ்வரி, எஸ்ஆர்வி கல்வி நிறுவன செயலாளர் சாமிநாதன், தமிழ்நாடு நர்சரி- பிரைமரி- மெட்ரிகுலேசன்- சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கப் பொதுச் செயலாளர் நந்தகுமார் ஆகியோர் பேசினர்.முன்னதாக, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமிவரவேற்றார். 9 மாவட்டங்களைச் சேர்ந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது: 10 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் நவீன கழிப்பிட வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நிதிநிலைக்கு ஏற்ப பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்படும். வரும் கல்வி மானியக் கோரிக்கையின்போது நாடே வியக்கும் அளவுக்கு கல்வித் துறையில் மேலும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார்

சனி, 27 மே, 2017

PF பங்கீட்டு அளவை 10 சதவீதமாக குறைக்க EPFO ஆலோசனை

ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தது ஊழியர்கள் தரப்பிலும், நிறுவன தரப்பிலும் தலா 12 சதவீத பணத்தை இ.பி.எப்(ஊழியர் சேம லாப நிதி திட்டம்), இ.பி.எஸ் (பணியாளர் ஓய்வூதியத் திட்டம்)மற்றும் EDLI (பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்புறுதித் திட்டம்) திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் நிறுவனம் முதலீடு செய்து வருகிறது.
இந்த அளவீட்டை ஒய்வூதிய அமைப்பான இ.பி.எப்.ஓ, 10 சதவீதமாகக் குறைக்க ஆலோசனை செய்து வருகிறது. இதற்கானஇறுதி முடிவு நாளை(மே-27) முடிவு செய்யப்பட உள்ளது. வளர்ச்சிக்கு உறுதுணை இந்த 10 சதவீதம் என்பது ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ கீழ் அளிக்கப்படும் பணத்தில் பிடிக்கப்படுவது.

12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்படுவதன் மூலம் ஊழியர்களுக்கு அதிகமான பணம் கையில் கிடைக்கும் .இது நாட்டின் வளர்ச்சி உறுதுணையாக இருக்கும் என மத்திய தொழிலாளர் அமைச்சகம்இ.பி.எப்.ஓ அமைப்பிற்குப் பரிந்துரை செய்துள்ளது. இ.பி.எப்.ஓ தான் இதற்கான இறுதி முடிவு எடுக்கும்.

பிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு.

ஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்டாட்சியர்களான, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
வேலுார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த, ஆர்.டி.ஓ.,க்களுக்கு, பிறப்பு, இறப்பு பதிவு செய்வது தொடர்பான, சிறப்பு பயிற்சி முகாம், வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமீபத்தில் நடந்தது.

இது குறித்து, பிறப்பு, இறப்பு கூடுதல் பதிவாளரும், பொது சுகாதாரத் துறை இணை இயக்குனருமான, ஈஸ்வரன் கூறியதாவது: பிறப்பு, இறப்பை ஓராண்டுக்கு மேல் பதிவு செய்யாமல் இருந்தால், நீதிமன்ற அனுமதி பெற்றே, பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.

தற்போது, அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி, நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்.அதை, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்த பின், ஆர்.டி.ஒ., பிறப்பு, இறப்பை பதிவு செய்து, சான்றிதழ் வழங்குவார்.இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 26 மே, 2017

G.O:NO:138 Dt: May 26, 2017-ஓய்வூதியம் - மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டையை (Aadhar Card) ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரகளின் வயது சான்று ஆவணமாக கருதுதல் - ஆணை வெளியிடுதல் - தொடர்பாக!




தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும்-அமைச்சர் மாண்புமிகு .செங்கோட்டையன்

 

கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து வரும் ஜீன்.7-ல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார். பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிகள் திறந்து ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் அதிகமாக நிலவுகிறது. ஒவ்வொரு நாளுமே பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்து வாட்டிவதைத்துக் கொண்டிருக்கிறது.
இதனால், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரப்பட்டது.
இந்நிலையில், அண்மையில் பிளஸ் 1-க்கு பொதுத் தேர்வு, மதிப்பீடு முறையில் மாற்றம் என பல்வேறு சீர்திருத்தங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
அப்போது பள்ளிகள் திறப்பு தொடர்பாக அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பெற்றோர், ஆசிரியர்களிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும்" என அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

வியாழன், 25 மே, 2017

7வது ஊதியக்குழு பரிந்துரை கருத்துக்கேட்புகூட்டம்! 4 நாட்கள் நடக்கிறது!!

7வது ஊதியக்குழு பரிந்துரை தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் சென்னை லேடிவெலிங்டன் கல்லூரி வளாகத்தில் 4 நாட்கள் நடைபெற இருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வதுஊதியக்குழு பரிந்துரைகளை கடந்த ஆண்டு அமல்படுத்தியது. அந்த 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழக அரசும் செயல்படுத்த அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.இதுகுறித்து கடந்த பிப்ரவரி 22ந்தேதி தலைமை செயலகத்தில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அப்போது தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவில் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்த்திருத்தத்துறை செயலாளர் மற்றும் உறுப்பினர் செயலாளராக டாக்டர் P. உமாநாத் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.இந்த குழுவினர்  மத்திய அரசின் 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறது.இதைத்தொடர்ந்து சென்னை லேடி வெலிங்டன் கல்லூரியில் 4 நாட்களாக கருத்து கேட்பு முகாம் நடைபெற உள்ளது.

நாளை  தொடங்கி,  சனிக்கிழமை (27ந்தேதி), மற்றும் 02.06.2017 (திங்கட்கிழமை), 03.06.2017 (செவ்வாய்க்கிழமை)  ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் நிதியமைச்சர் ஜெயக்குமார், மற்றும் ஊதியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

புதன், 24 மே, 2017

6 - 10-ம் வகுப்பு வரை தகவல் தொழில் நுட்ப கல்விஅறிமுகம்.

பள்ளிக்கல்வித் துறை செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
தகவல் தொழில்நுட்பவியல் கல்வியை புதிய பாடத்திட்டத்தில் 6 முதல் 10-ம் வகுப்புவரை அறிவியல் பாடத்தில் ஒரு பகுதியாக கற்பிக்க வசதியாக பாடத்திட்டத்தில் உரிய மாற்றம் கொண்டுவரப்படும். புதிய பாடத்திட்டத்தில் பின்வரும் வழிகாட்டி நெறிமுறைகள் கவனத்தில் கொள்ளப்படும்.

* மனப்பாடம் சார்ந்ததாக இரா மல் படைப்பாற்றல் சார்ந்த கல்வி.

* தோல்வி பயம் மற்றும் மன அழுத்தத்தை உருவாக்கும் தேர்வாக இல்லாமல் கற்றலின் இனிமையை உறுதிசெய்வது.

* தமிழர்களின் தொன்மை வரலாறு, பண்பாடு மற்றும் கலை, இலக்கியம் குறித்த பெருமித உணர்வுகளை மாணவர்கள் பெறுவதுடன் அவர்கள் தன்னம்பிக் கையுடன் அறிவியல் தொழில்நுட் பத்தை கையாளச் செய்வது.

* அறிவுத்தேடலை வெறும் பாடப்புத்தக அறிவாக குறைத்து மதிப்பிடாமல் பலதரப்பட்ட புத்தகங்களை வாசிக்கச்செய்து வழிகாட்டுதல்.

இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தலை (இ-லேனிங்) ஊக்கு விக்கும் வகையில் விரிவான கற்றல் மேலாண்மை தளத்தை உருவாக்கி ஆசிரியர்களும், மாணவர்களும் எளிதில் பயன்படுத் தக்கூடிய மொபைல் செயலிகள் உருவாக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

G.O Ms 101 - தொடக்கக்கல்வி - தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் "RECORD SHEET" பதிலாக TC - அரசாணை வெளியீடு



செவ்வாய், 23 மே, 2017

அரசாணை நிலை எண்99 நாள் 22.05.2017-பாடத்திட்டம் மாற்றம் -அரசாணை

அரசாணை  நிலை எண் 99 நாள்  22.05.2017-பாடத்திட்டம் மாற்றம் -அரசாணை





2018-19 கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்-ள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்



தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வரும் தமிழக அரசு, '11-ம் வகுப்பில் நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் இனி 600 மார்க்குக்கு மட்டுமே தேர்வு. தேர்வு நேரம் மூன்று மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கப்படும்' போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இத்தகவல்களை கூறியுள்ளார்.  இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், '11 மற்றும் 12-ம் வகுப்புகளில் 1200 மதிப்பெண்கள், 600 மதிப்பெண்களாக குறைக்கப்படும். நடப்பாண்டு முதல் 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். தேர்தல் நேரம் மூன்றிலிருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட உள்ளது. மாலை நேரங்களில் அரசுப் பள்ளிகளில் ஒரு மணி நேரமும், சனிக்கிழமைகளில் மூன்று மணி நேரமும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இதன் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் அதிக திறன் உள்ளவர்களாக மாற்றப்படுவார்கள்.செய்முறை கையேடுகளை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இருக்கும் பொதுநிலை பட்டதாரிகளுக்கு தற்கால பணிகள், அரசுப் பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது. பெற்றோர், ஆசிரியர் சங்கம் இந்தத் தற்காலிக பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க உறுதுணையாக இருப்பர். 2018-19 கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும். அதேபோல 2019-2020 கல்வியாண்டில் 2,7,10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம் இருக்கும். 2020-2021 கல்வியாண்டில் 3, 4, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.சிறந்த கல்வியாளர்களை வைத்து பாடத்திட்டத்தில் மக்கள் மன ஓட்டத்துக்கு இணையாக மாற்றங்கள் கொண்டு வரப்படும். அனைத்துத் தரப்பினர் கருத்தும் பாடத்திட்டம் வரைவுக்குப் பெறப்படும். புதிய பாடத்திட்டத்தை பயிற்றுவிக்க ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். 11ஆம் வகுப்பில் தேர்ச்சியடையவில்லை என்றால், மாணவர்கள் தொடர்ந்து 12ஆம் வகுப்பு படிப்பார்கள். தோல்வியடைந்த மாணவர்கள் அந்த ஆண்டு ஜூன் மாதமே மறுதேர்வு எழுதுவர்' என்று கூறினார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு,விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்

மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அதன் அடிப்படையில், `ஊதியக் குழு ஊதிய மாற்றம் - ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்துத் துறைகளில் இருந்தும் விபரம் கோரியுள்ளது.

அதாவது, "அரசுத் துறைகளில்01.05.2017அன்று பணியாற்றுவோர் விபரம், அவர்களின் ஊதிய விபரம், காலிபணியிட விபரம்,2017 முதல் 2022-ம் ஆண்டு வரை ஓய்வுபெறுவோர் விபரம், தர ஊதிய அடிப்படையில் வெவ்வேறு நிலைகளில் வீட்டு வாடகை படிபெறுவோர் விபரம்" ஆகியவற்றையும்30.6.2017-க்குள்கோரியுள்ளது.

இந்தத் தகவல் கிடைத்த பிறகு, மத்திய அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழுவுக்கு இணையான சம்பளம் தமிழக அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 22 மே, 2017

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2017-TENTATIVE KEY

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு - மொத்த மதிப்பெண் 200ல் இருந்து 100 ஆக குறைப்பு.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முடிவு...

# பாட வாரியாக மொத்த மதிப்பெண் 200ல் இருந்து 100 ஆக குறைப்பு...

# தேர்வு நேரம் மூன்றில் இருந்து 2.30 மணி நேரமாக குறைகிறது - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்...

# 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் சராசரி கணக்கிட்டு வழங்கப்படும்

செயல்வழிக் கற்றலை ஊக்குவிக்கும் செல்போன் செயலி: பள்ளிக் கல்வித் துறையின் முன்னோடித் திட்டம் மேம்படுத்தப்படுமா?

புத்தகப் பாடத்தை எளிமைப்படுத்த பள்ளிக் கல்வித் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலை மேம்படுத்தி விரிவு படுத்தினால், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ரேங்கிங் முறை நீக்கம், பொதுத் தேர்வு முறையிலும், பாடத்திட்டங்களிலும் மாற்றம் என அடுத்தடுத்த படிநிலைகளை நோக்கி பள்ளிக் கல்வித் துறை முன்னேறிக்கொண்டு இருக்கிறது. அதேவேளையில், மாணவர்கள் பாடத்திட்டத்தை புரிந்துகொண்டு படிப்ப தற்கான செயல்வழிக் கற்றல் முறையையும் ஊக்குவிக்க வேண்டியது அவசியம். அதை தொழில்நுட்பரீதியில் சாத்தியப்படுத்தும் வகையில் 2015-ம் ஆண்டு tnschool live என்ற மொபைல் செயலியை பள்ளிக் கல்வித் துறை அறிமுகப்படுத்தியது. இந்த செயலி, புத்தகத்தில் இருக்கும் பாடத்தை, நாற்பரிமாண (4டி) பிம்பமாக திரையில் விளக்கிக் காட்டும். பாடம் குறித்த விளக்கம் வீடியோவாகவும் ஒளிபரப்பாகும்.
பாடம் நடத்தும் செயலி
கடினமான பாடத்தை எளிதில் புரிந்து கொள்ளவும், செயல்வழிக் கற்றலுக்கான அடித்தளத்தையும் இந்த செயலி ஏற்படுத்திக் கொடுத்தது. இவ்வளவு பலன்கள் இருந்தும் இதன் பயன்பாடு விரிவுபடுத்தப்படவில்லை. வரும் கல்வியாண்டில் இருந்தாவது, இதன் பயன்பாட்டை விரிவுபடுத்தி, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
கோவையைச் சேர்ந்த ஆசிரியர் ராஜேஷ்குமார் கூறும்போது, ‘‘தகவல் உணர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பள்ளிக் கல்வித் துறையால் வடிவமைக்கப்பட்டது tnschool live செயலி. கணினி, செல்போனில் ஆன்லைன், ஆஃப்லைன் முறையில் இயக்க முடியும். உதாரணமாக, உடல் பாகங்கள் பற்றிய பாடத்தில் புத்தகத்தில் இதயத்தின் படம் உள்ளது. அதை அப்படியே சொல்லிக் கொடுத்தால் மேலோட்டமாக மட்டுமே மாணவருக்கு புரியும்.
அதே படத்தை இந்த செயலியில் ஸ்கேன் செய்தால், நாற் பரிமாணக் காட்சியாக திரையில் விரியும். அனிமேஷன் படம் போல இதயத்தின் செயல்பாட்டை அனைத்து கோணத்திலும் பார்க்கலாம். பாகங்களை அறிய முடியும்.
புத்தகத்தோடு இணைந்த தொழில்நுட்ப வழிக் கல்வி என்பதால், நல்ல பயனளிக் கும். வகுப்பறையில் ஏற்படும் சந்தேகங் களுக்கு இந்த செயலி விடை கொடுக்கும். தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியக் குறிப்புகளை ஒளி, ஒலி வடிவில் தனியே சொல்லிக் கொடுக்க வீடியோ இணைப்பும் இருப்பதால் மனப்பாட வழிமுறையை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை.
இந்த செயலிவழிக் கல்வியானது, எளிமையான செயல்வழிக் கல்வியாகும். பெற்றோர் துணையுடன் செல்போனிலும், வகுப்பறைகளில் கணினி உதவியுடனும் மாணவர்களுக்கு இந்த செயலி வழிக் கல்வியை வழங்க முடியும்’’ என்றார்.
கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘இடைநிலைக் கல்வித்திட்டத்தின் கீழ் அறிவியல் ஆசிரியர்களுக்கு இந்த செயலி மூலம் கற்பிப்பது எப்படி என்ற பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல ஒவ்வொரு பள்ளிக்கும் ஆஃப்லைனில் செயலியை இயக்கும் சிடிக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஆசிரியர்கள் பெரும்பாலும் அதை பயன்படுத்துவதில்லை.
காரணம், சமச்சீர் கல்வித் திட்டத்தில் தமிழ்வழியில் படிக்கும் 10, 12-ம் வகுப்பு அறிவியல் புத்தகங்கள் மட்டுமே இந்த செயலியில் இணைக்கப்பட்டுள்ளன. அதுவும் 141 படங்கள் மட்டுமே தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
வரும் கல்வியாண்டு முதல் இந்த செயலிக்கு ஏற்ப புத்தகங்களை அச்சிட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோல அனைத்து பாடங்களுக்கும் பொருந்தும் வகையில், தமிழ், ஆங்கில வழியில் இந்த செயலியை மேம்படுத்த வேண்டியுள்ளது. செயல்வழிக் கற்றல் திறனை ஊக்குவிக்க இதுபோன்ற முயற்சிகளை ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.
வகுப்பறையில் ஏற்படும் சந்தேகங்களுக்கு இந்த செயலி விடை கொடுக்கும். தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியக் குறிப்புகளை ஒளி, ஒலி வடிவில் தனியே சொல்லிக் கொடுக்க வீடியோ இணைப்பும் இருப்பதால் மனப்பாட வழிமுறையை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை.
நன்றி:தி இந்து 22/05/2017

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கைகொடுத்த ‘ஸ்பார்க்’ திட்டம்: 10, 12 ம் வகுப்பு தேர்வில் உயர் மதிப்பெண் பெறுவது அதிகரிப்பு

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட ‘ஸ்பார்க்’ திட்டத்தால், இந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னை மாநகராட்சி கட்டுப் பாட்டில் மொத்தம் உள்ள 281 பள்ளிகளில் 32 மேல்நிலைப் பள்ளிகள், 70 உயர்நிலைப் பள்ளிகள் ஆகும். இப்பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் மற்றும் உயர் மதிப்பெண்கள் பெறுவது குறைவாக இருந்தது.
இந்நிலையில், 10, 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தவும், உயர் மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், மாணவர்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வரும் ‘தீப்பொறி’ என பொருள்படும் ‘ஸ்பார்க்’ என்ற புதிய திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் சோதனை அடிப்படையில் கடந்த ஜனவரியில் தொடங்கியது. இத்திட்டத்தால் தற்போது மாணவர்களின் தேர்ச்சி விகிதமும், உயர்மதிப்பெண் பெறுவதும் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ‘ஸ்பார்க்’ திட்டத்தை சோதனை அடிப்படையில் தொடங்கி இருக்கிறோம். அதில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை ஆய்வு செய்து, பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் என வகை பிரித்து, அவர்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அதற்காக, 5 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் வீதம் நியமித்து, காலை மற்றும் மாலை வேலைகளில் சிறப்பு வகுப்புகளை நடத்தினோம். மேலும் மாநகராட்சி பள்ளிகளில் உள்ள அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட்டது. கூடுதல் பயிற்சி ஏடுகள் மூலமும் பயிற்சி அளிக்கப்பட்டது. காலை உணவும் அளிக்கப்பட்டது.
இதனால், கடந்த ஆண்டு 86.21 சதவீதமாக இருந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம், இந்த ஆண்டு 88.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் 1100-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 136 ஆக (கடந்த ஆண்டு 61 மாணவர்கள்) உயர்ந்துள்ளது. 1000-க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 524 ஆக (கடந்த ஆண்டு 326 மாணவர்கள்) உயர்ந்துள்ளது. பல்வேறு பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 119 ஆக (கடந்த ஆண்டு 51 மாணவர்கள்) உயர்ந்துள்ளது.
மேலும் 90 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி அளித்த பள்ளிகளின் எண்ணிக்கை 18 ஆக (கடந்த ஆண்டு 16 பள்ளிகள்) உயர்ந்துள்ளது.
10-ம் வகுப்பு தேர்வில் 1.8 சதவீதம் தேர்ச்சி குறைந்தாலும், 100 சதவீதம் தேர்ச்சி அளித்த பள்ளிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு பாடங்களில் 100 சதவீதம் மதிப் பெண்கள் வாங்கிய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 78 ஆக இருந்தது. இந்த ஆண்டு 189 ஆக உயர்ந்துள்ளது. 450-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 312 (கடந்த ஆண்டு 249) ஆக உயர்ந்துள்ளது. அதற்கு ‘ஸ்பார்க்’ திட்டம் செயல்படுத்தப்பட்டதுதான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மாதத்துக்கு 6 பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும்: கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவு

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாதந்தோறும் சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாதந்தோறும் சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். இதன்படி, வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தலா 6 பள்ளிகளையும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தலா 5 பள்ளிகளையும், செப்டம்பர், டிசம்பர் மற்றும் 2018-ம் ஆண்டு பிப்ரவரி ஆகிய மாதங்களில் தலா 2 பள்ளிகளையும், 2018 ஜனவரி மாதத்தில் 4 பள்ளிகளையும் ஆய்வு செய்ய வேண்டும். செவ்வாய், வியாழக்கிழமைகளில் இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டாய்வு மேற்கொள்ளப்படாத மேல்நிலைப் பள்ளிகளை முன்னுரிமை கொடுத்து ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஆய்வின்போது முதன்மைக் கல்வி அலு வலர் நாள் முழுவதும் பள்ளியிலேயே இருந்து, அனைத்து வகுப்புகளி லும் கற்றல், கற்பித்தல் நிகழ்வுகளைப் பார்வை யிட வேண்டும். மாண வர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, பள்ளி யின் அனைத்துக் கூறு களையும் துல்லியமாக ஆய்வு செய்ய வேண்டும்.
மாணவர்கள், ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டையும் ஆய்வு செய்ய வேண்டும். குறைந்தது 10 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அடிக்கடி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில் திறந்தவெளிக் கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பங்கள், பழுதடைந்த கட்டிடங்கள் போன்றவை ஆய்வின்போது கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நலத்திட்டங்கள் அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைந்து விட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
சார்நிலை அலுவலகங்களில் ஆய்வுக்கு செல்லும்போது அனைத்துப் பிரிவுகளிலும் தன்பதிவேடு, முன்கொணர் தன்பதிவேடு, ஆய்வுக் குறிப்பேடு, நினைவூட்டுக் குறிப் பேடு, இருப்புக் கோப்பு ஆகியன முறையாக பராமரிக்கப் பட்டு மாதந்தோறும் அலுவலரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு அறிக்கைகளை மாதம்தோறும் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு இந்த கல்வியாண்டில் 40 ஆயிரம் துாய தமிழ் அகராதிகள் வழங்கப்பட உள்ளன


ஊதியக் குழு ஊதிய மாற்றம்- ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்து துறை விபரம் கோரியுள்ளது

ஞாயிறு, 21 மே, 2017

6-ம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட்டம் என செங்கோட்டையன் கூறியுள்ளார். 2 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடத்தை 12-ம் வகுப்பு படிக்கும் போது எழுதலாம் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறை எடுத்தால் நடவடிக்கை பள்ளிகல்வித்துறை இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பள்ளிகள் ஆய்வு

முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகளை ஆண்டு ஆ ய்வு செய்யும் போது சில நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்யப்படாத பள்ளிகளை ஆய்வு செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்தாய்வு செய்வதுடன், நாள் முழுவதும் பள்ளியில் இருந்து துல்லியமாக ஆய்வு செய்ய வேண்டும்.சிறந்த ஆசிரியர்களை பாராட்ட வேண்டும். நீண்ட நாள் விடுமுறையில் இருக்கும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆசிரியர் மீது நடவடிக்கை

நீண்ட நாள் விடுமுறையில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, கழிப்பறை, குடிநீர் வசதி, நூலகப்பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் திறந்தவெளிக்கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பங்கள் பழுதடைந்துள்ள கட்டிடங்கள் ஆபத்தான முறையில் இருந்தால் அவற்றை சீர் செய்து தர வேண்டும். அரசின் அனைத்து திட்டங்களும் மாணவர்களுக்கு சென்று அடைந்துள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

மேல்நிலை அறிவியல் பாடங்களுக்கான செய்முறைகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதுடன், மாணவர்கள் சேர்க்கை பதிவேடு உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகளில் காணப்படும் குறைபாடுகளை களைய கால அவகாசம் அளிக்க வேண்டும். ஆண்டு ஆய்வு செய்யப்பட்ட பள்ளிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களின் விவரங்களை மாதம் தோறும் இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சனி, 20 மே, 2017

3 வண்ணங்களில் அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகள் மாற்றப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகளை மாற்றி அமைக்க உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: - அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை மூன்று வண்ணங்களில் இருக்கும் அளவு புதிய சீருடைகள் கொண்டுவரப்படும்.

இதுகுறித்து இன்னும் 2 மூன்று தினங்களில் அரசாணை வெளியிடப்படும். ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் அளவுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்

வெள்ளி, 19 மே, 2017

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 20,21.05.2017 அன்று வேலை நாட்களாக அறிவிப்பு!!

DEE - தமிழகத்தில் உள்ள கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை போன்ற அவசர பணிக்காக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 20,21.05.2017 அன்று வேலை நாட்களாக அறிவிப்பு.

அடுத்து என்ன படிக்கலாம்: பள்ளி கல்வித் துறை நடத்தும் இலவச ஆலோசனை முகாம்

தமிழக அரசு சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் அடுத்த கட்டமாக என்ன படிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.
இதற்கான அறிவிப்பை பள்ளி கல்வித் துறை செயலர் வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை“மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் இணைந்து நடத்தும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான""உயர்கல்விவழிகாட்டி நிகழ்ச்சி"" 20/05/2017 (சனி) அன்று காலை 09.30 மணியளவில், கிண்டி பொறியியல் கல்லூரி, விவேகானந்தர் அரங்கம், அண்ணா பல்கலைக்கழக வளாகம்,சென்னை-25இல் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு அனுமதி இலவசம்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதலில் வருபவர்களுக்கு இருக்கை வசதியில் முன்னுரிமை அளிக்கப்படும்.மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என பள்ளி கல்வித் துறை செயலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாணவர் எண்ணிக்கை 10 கீழ் குறைந்தாலும் பள்ளி மூடப்படாது -ஆண்டுகளுக்கு வாய்ப்பு - தொடக்கக் கல்வித்துறை

தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
தனியார் பள்ளிகள் வருகை, ஆங்கிலவழிக் கல்வி மோகம் போன்ற காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.ஐந்து ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. 2016 ஆக., 1 கணக்கெடுப்பின் படி பல ஆயிரம் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்களே உள்ளன. அரசுக்கு அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூடிய பள்ளியை மீண்டும் திறப்பது கஷ்டம். இதனால் அப்பள்ளி மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.மேலும் மாணவர்களை இடமாற்றினாலும் பள்ளியை மூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அப்பள்ளிகளில் கிராம முக்கியஸ்தர்கள் மூலம் அதிக மாணவர்களை சேர்க்க3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பே இல்லாத பள்ளிகள் மட்டும் மூடப்படும் என, தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வியாழன், 18 மே, 2017

நன்றி ..நன்றி ..நன்றி






தமிழக கல்வித்துறையை புதிய வளர்ச்சிப் பாதையில்  கொண்டு சென்று கொண்டிருக்கும்  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு. செங்கோட்டையன்  அவர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திரு. உதயசந்திரன் IAS அவர்களுக்கும் தென்மண்டல அரசு உதவிபெறும் பள்ளிகள் ஆசிரியர் சங்கம்(ASTA) வணக்கத்தினையும், வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது 

 

தொடக்கக் கல்வி துறை நடுநிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்வுக்கு வழங்கப்பட்டிருந்த தடையை நீங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை!!

தொடக்கக் கல்வி துறையின் சார்பில்நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரிய வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் தடையை நீக்கியது.
அனைத்து சங்கங்களும் தடையை நீக்கக்கோரி வைத்த கோரிக்கையினைதொடக்கக் கல்வி துறையின் சார்ப்பில்தடையை நீக்கக்கோரி வழக்கு போடப்பட்டிருந்தது. இன்று மதியம் இவ்வழக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளையில் எடுத்துக்கொள்ளப்பட்டுதடையை விலக்கியது.

1. மதுரை மாவட்டம் திருபரங்குன்றம் ஒன்றியம் தவிர மற்றஇடங்களில் கலந்தாய்வுக்கு நடைபெற தடையில்லை.

2. திருப்பரங்குன்ற ஆசிரியர் தொடத்துள்ள இந்த வழக்குதனிவழக்காக தொடர்ந்து நடக்கும்.

3. பட்டதாரி ஆசிரியர்களுக்கான  பணி நிலை பற்றி தொடக்ககல்வித்துறையின் பணிவிதிகளில்  திருத்தத்தினைசெய்யஅரசுக்கு உத்தரவு.

ப்ளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை

அரசாணையை மீறி ப்ளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறையின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பொதுத்தேர்வுகளில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான தரப் பட்டியல் வெளியிடும் முறை கைவிடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது.

மேலும் தேர்ச்சி தொடர்பாக பள்ளிகள் சாதனைப் பட்டியலை வெளியிடக்கூடாது என்றும் கூறப்பட்டது. ஆனால் ஏராளமான தனியார் பள்ளிகள் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் கொடுத்து வருகின்றன.இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன்தனியார் தொலைக்காட்சியிடம் பேசும்போது,''அரசாணையை மீறி ப்ளஸ் 2 தேர்ச்சி விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முதற்கட்டமாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.அரசாணையை மீறியது ஏன் என்று 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். அதிகபட்ச தண்டனையாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். விளம்பரங்கள் அளித்த அனைத்து பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

அரசு பள்ளிகளை தனியார் நிறுவனங்கள் தத்தெடுக்கும் : 3 ஆண்டில் பாடத்திட்டம் மாற்றம்

 ''கழிப்பறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளுக்காக அரசு பள்ளிகளை, தனியார் கல்வி நிறுவனங்கள் தத்தெடுக்கும்,'' என, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார்.


பள்ளிக் கல்வியில் முன்னேற்றங்கள் கொண்டு வருவது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு அறிவுரை வழங்கும் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் செங்கோட்டையன், செயலர் உதயசந்திரன், பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், அமைச்சர் பேசியதாவது: பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், அரசின் போக்குவரத்து செலவில் வழங்கப்படும். கழிப்பறை கட்டுதல், பராமரித்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் போன்ற வசதிகளை செய்து தர, அரசு பள்ளிகளை, 17 ஆயிரம் தனியார் கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் தத்தெடுக்க உள்ளன. உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நிறுவனங்களுக்கு, நற்சான்றிதழ் வழங்கப்படும். தமிழக மாணவர்கள், 'நீட்' போன்ற தேர்வுகளில், மற்ற மாநிலத்துடன் போட்டியிட முடியவில்லை. எனவே, பிளஸ் 1க்கு பொது தேர்வு வருகிறது. அதை அமல்படுத்த, அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். மேலும், 12 ஆண்டுகளாக, பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. இதுகுறித்து, கல்வியாளர்களிடம் கருத்து கேட்டுள்ளோம்; மூன்று ஆண்டுகளில், பாடத்திட்டங்கள் மாற்றப்படும்.தனியார் பள்ளிகளுக்கு நிகராக, பள்ளி
நுாலகங்கள் விரிவுபடுத்தப்படும். ஒவ்வொரு வகுப்பிலும், விளையாட்டு பிரிவுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும். சி.பி.எஸ்.இ.,க்கு மாறும் பள்ளிகளுக்கு, தடையில்லா சான்று வெளிப்படையாக வழங்கப்படுகிறது. இதில், முறைகேடு இருக்கக்கூடாது.மாணவர் எண்ணிக்கையை அதிகரித்தல், யோகா பயிற்சி அளித்தல், தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வைக்கவும், புதிய
திட்டங்கள் வர உள்ளன. அரசு ஒதுக்கிய, 26 ஆயிரத்து, 913 கோடி ரூபாயை எப்படி செயல்படுத்த வேண்டும் என, பட்டியல் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

SSLC தேர்வு முடிவுகள்- LINK

SSLC  தேர்வு முடிவுகளை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்

LINK 1- CLICK HERE

LINK 2- CLICK HERE

LINK 3- CLICK HERE

புதன், 17 மே, 2017

100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களை கல்வித்துறைக்கு பயன்படுத்த திட்டம்.

பாடநூல்கள் பாடத் திட்டத்தில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும். இது தொடர்பான அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையன் கூறும்போது,"கல்வித்துறையில் அரசு புரட்சியை உருவாக்கி வருகிறது. மேலும் பள்ளிக் கல்வித்துறைக்கு 26,913 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைய அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் போதிய கழிப்பிட வசதி ஏற்படுத்தவும் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.பாடநூல்கள் பாடத் திட்டத்தில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும். எதிர்காலத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும்.

பள்ளிக் கல்வித்துறையில் இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழகம் திகழும். 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களை கல்வித்துறைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.பள்ளிக் கல்வித்துறைக்கு தொழில் நிறுவனங்கள் உதவ வேண்டும் என்ற வேண்டுகோளையும் செங்கோட்டையன் முன் வைத்தார்.