வெள்ளி, 30 ஜூன், 2017

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017-Publication of Result

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017
EXAMINATION RESULTS

1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு.




ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை - சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

''அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை,'' என, அமைச்சர் செங்கோட்டையன்.தெரிவித்தார். தி.மு.க., - ரகுபதி: தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீதம் அரசு ஒதுக்கீட்டில், இடம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கல்வி கட்டணத்தை மட்டும், அரசு வழங்குகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்குவழங்கப்படும், இலவச பொருட்கள், அவர்களுக்கு கிடைப்பதில்லை; அதை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் செங்கோட்டையன்: அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்தியஅரசு இன்னமும் நிதி வழங்கவில்லை. எனினும், மாநில அரசு,176 கோடி ரூபாய் ஒதுக்கி, கல்விக் கட்டணம் வழங்கி உள்ளது. இலவசப் பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை.

தி.மு.க., - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: தொடக்கப் பள்ளிகள் சிலவற்றில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. ஒரு மாணவனுக்கு, இரண்டு ஆசிரியர்கள் உள்ள நிலை உள்ளது. இப்பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் செங்கோட்டையன்: நீங்கள் கூறியது, அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகள், கிராமம் கிராமமாகச் சென்று, மாணவர்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். எதிர்காலத்தில் இது போன்ற நிலை ஏற்படாது. இந்தியாவே திரும்பி பார்க்கும்விதமாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை செயல்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

வியாழன், 29 ஜூன், 2017

G.O MS 127 - தொடக்க/நடுநிலைப்பள்ளிகள் - பள்ளி வேலை நாட்கள் 210 நாட்களாக மாற்றப்பட்டதற்கான அரசாணை

தமிழகத்தில் 7வது ஊதியக்குழு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு - அரசாணை வெளியீடு

7வது சம்பள கமிஷன் பரிந்துரை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைத்த வீட்டு வாடகைப் படி உள்ளிட்ட முக்கிய அம்சங்க ளுக்கு சில திருத்தங்களுடன் மத்திய அமைச் சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் 50 லட்சம் பேர் பலனடைவர்.இது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:

மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரையில் சிறிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. குறிப்பாக எச்.ஆர்.ஏ., எனப்படும் வீட்டு வாடகைப் படி உயர்த்தப்பட்டு உள்ளது; அவை ஊழியர்கள் வசிக்கும் நகரங்களுக்கு ஏற்ப மாறுபடும். இதன் மூலம் 7.5 லட்சம் ஊழியர்கள் பலனடைவர்.

அதே போல் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சில படிகளும் உயர்த்தப்பட்டு உள்ளன. ஓய்வூதியர் களுக்கானமருத்துவப் படி மாதம் 500 ரூபாயிலி ருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதர மருத்துவப் படிகளும் உயர்த்தப்பட்டு உள்ளன. இதே போல், ஏழாவது சம்பள கமிஷனின் பல பரிந்துரை கள் ஏற்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

'ஏர் - இந்தியா' பங்குகளை விற்பனை செய்ய அனுமதி

கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கும், பொதுத் துறை விமான சேவை நிறுவனமான 'ஏர் - இந்தியா' வின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.விமான சேவை நிறுவ னமான ஏர் - இந்தியா 52 ஆயிரம் கோடி ரூபாய் கட னில் சிக்கி மீண்டும் வர முடியாமல் தவித்து வருகி றது.
2012ல் அப்போதைய ஐ.மு., கூட்டணி அரசு ஏர் - இந்தியாவின் கடன் பிரச்னைகளுக்கு உதவும் வகை யில் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை அறிவித்தது.

அதன் உதவியுடன் இதுவரை ஏர் - இந்தியா இயங்கி வருகிறது.இந்நிலையில் ஏர் - இந்தியா வின் கடன் பிரச்னைகளுக்கு தீர்வாக அந்த நிறு வனத்தில் அரசுக்கு உள்ள பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி டில்லி யில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: ஏர் - இந்தியா நிறுவன பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. விற்கப்படும் பங்குகளின் எண்ணிக்கை, அதற்கான நடைமுறைகள் குறித்து அமைச்சர்கள் கொண்டு அமைக்கப் படும் குழு முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் ! : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்; அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: தி.மு.க., - சபா.ராஜேந்திரன்: கடலுார் மாவட்டம், நெய்வேலி தொகுதி, கீழிருப்பு ஊராட்சியில், நுாலகம் அமைக்கும் திட்டம் உள்ளதா?
அமைச்சர் செங்கோட்டையன்: தற்போது இல்லை.
சபா.ராஜேந்திரன்: அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட, நுாலக கட்டடம் உள்ளது. எனவே, அங்கு நுாலகம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
தி.மு.க., - ஆடலரசன்: திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நுாலகம் திறக்கப்பட்டு உள்ளது. அந்த கட்டடத்தில், வவ்வால்கள் உள்ளன.
அவற்றை வெளியேற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்ல நுால்களை, நுாலகங்களுக்கு வழங்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., - ரங்கநாதன்: வாசிப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலை மாற, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் நுாலகம் அமைக்க வேண்டும். நல்ல புதிய நுால்களை வழங்க
வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தேவையான நுால்களை வாங்கி வைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க., - தென்னரசு: எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், நுாலகங்களுக்கு கட்டடம் கட்ட, நிதி
ஒதுக்க அனுமதி வழங்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: நிதி ஒதுக்கலாம்.
அ.தி.மு.க., - கதிர்காமு: கல்வித் துறையில், அமைச்சர் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். தேனி நகரில், ஒரே ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி
உள்ளது. மாணவர் நலன் கருதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, தனித்தனி பள்ளி அமைக்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்; அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும்.
இவ்வாறு விவாதம்
நடந்தது.

புதன், 28 ஜூன், 2017

தமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள் !!

அரசு பள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில்.

*தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்.

1)அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன் ?

2)2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன ?

3)தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ?

4)ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா ?

5)அரசு பள்ளியை விடுத்து தனியார் பள்ளிகளை,பெற்றோர் நாட காரணம் என்ன ? என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

6)பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ?

7)ஆசிரியர்கள் சங்கங்கள் துவங்குவதை ஏன் தடை செய்யக் கூடாது ?

8)ஊரகப் பகுதிகளில் அரசு பள்ளிகளை நிர்வகிக்க ஏன் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது ?

9)பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ?

10)இதுவரை எத்தனை ஆங்கில வழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் ? என்றும் நீதிமன்றம் வினா தொடுத்துள்ளது.

11)ஆங்கில வழி ஆசிரியர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர் ?

12)அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்காணிக்க பறக்கும் படையை தமிழக அரசு அமைத்துள்ளதா ?

13)ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்டறிய ஏன் கை விரல் ரேகையை பதிவிடும் இயந்திரத்தை (Bio metric) பொருத்தக்கூடாது ?

14)ஆசிரியர்களின் வருகையை நாள் முழுவதும் கண்காணிக்க வகுப்பறையில் சிசிடிவி கேமரா பொருத்த வாய்ப்புள்ளதா ?

15)கடந்த 10 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதம் என்ன ? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

16)கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் என்ன ?

17)கடந்த 10 ஆண்டுகளில் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

18)கிராமப்புற அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

19)மாறி வரும் கல்வி கற்பிக்கும் முறைக்கு ஏற்ப, அரசு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுகிறதா ?

20)அரசு ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில் பணிபுரிவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன ? என்றும் நீதிபதி சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

செவ்வாய், 27 ஜூன், 2017

2012 முதல் எத்தனை மாணவர்கள் ஆங்கில வழியில் படிக்கின்றனர்? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரிக் கேள்வி

தஞ்சையில் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆங்கில வழி வகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் சரமாரிக் கேள்விகளை எழுப்பினார்.

அரசுப் பள்ளிகளில் அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது?

அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்?

பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கக் காரணம் என்ன?

அரசுப் பள்ளி ஆசியர்கள் சங்கம் தொடங்க ஏன் தடை விதிக்கக் கூடாது?

ஆங்கிலவழிக் கல்வி எனில் தமிழ்ப்பாடம் நடத்துபவர்களே ஆங்கிலத்திலும் பாடம் எடுப்பார்களா?

2012 முதல் எத்தனை மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வியில் படிக்கின்றனர்?

2012 அரசாணைப்படி எத்தனைப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது?

உரிய நேரத்துக்கு வராத ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

அரசு பள்ளி ஆசிரியர்கள் வருகையை சிசிடிவி காமராக்கள் மூலம் கண்காணிக்காதது ஏன்?

கிராமப்பகுதி, மலைப்பகுதி பள்ளி ஆசிரியர்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசியர்கள் தங்கள் கடமைகளைச் செய்யாவிடில் கிராமப்புற மாணவர்களை யாரும் காப்பாற்ற முடியாது என்று கூறிய நீதிபதி கிருபாகரன் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய 2 வாரங்கள் அவகாசம் என உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதை கட்டாயம் ஆக்காதது ஏன்?சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

BIG BREAKING NEWS

அரசு ஊழியர்களின் குழந்தைகளை
அரசு பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாயம் ஆக்கக்கூடாது?

நேரந்தவறி வரும் ஆசிரியர்களை கண்காணிக்காதது ஏன்?

காலம் தவறி வரும் ஆசிரியர்களை கண்காணிக்க CCTV அமைக்காதது ஏன்?

ஆசிரியர் சங்கங்கள் தொடங்க தடைவிதிக்காதது ஏன்

உரிய நேரத்திற்கு வராத ஆசிரியர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?

தனியார் பள்ளிகளை பெற்றோர் நாடக் காரணம் என்ன?

ஆங்கில வழிக் கல்வி அரசு பள்ளியில் நடக்கிறதா?

தமிழ்வழி ஆசிரியர்களே ஆங்கில வழிக் கல்வியை நடத்துகின்றனரா?

உயர்நீதி மன்ற நீதிபதி திரு.கிருபாகரன் 
சரமாரி கேள்வி

அரசு பதில் அளிக்க உத்தரவு.

திங்கள், 26 ஜூன், 2017

நீட் தேர்வை எதிர்கொள்ள 54 ஆயிரம் கேள்வி-பதில்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படும்.

மத்திய அரசு கொண்டுவரும் பொதுத் தேர்வுகளை தமிழக மாணவர்கள் சமாளிக்கும் வகையில் 54 ஆயிரம் கேள்வி}பதில்கள் அடங்கிய புத்தகம் விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட 12 வார்டுகளில் 14 இடங்களில் ரூ. 21 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர்த் தேக்கத் தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். 
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நீட் தேர்வு குறித்து 85 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து பொதுத் தேர்வுகளையும் தமிழக மாணவர்கள் சமாளிக்கும் வகையில் 54 ஆயிரம் கேள்வி}பதில்கள், வரைபடங்கள் அடங்கிய புத்தகம் தயாராகி வருகிறது. இதுகுறித்து, சட்டப்பேரவையில் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

ஞாயிறு, 25 ஜூன், 2017

தொடக்கக்கல்வி செயல்முறைகள் - நாள்:23/6/17-மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர்கள் இயக்குனரிடம் தெளிவுரை கேட்டல் என்ற பெயரில் காலம் கடத்தாமல் உடனடி முடிவெடுக்க இயக்குனர் உத்தரவு

மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து பொதுத்தேர்வுகளையும் இந்த அரசு சமாளிக்கும்: அமைச்சர் செங்கோட்டையன்

கோபி வந்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அங்கு பல்வேறு அரசு நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது.-
மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து பொது தேர்வுகளையும் சமாளிக்கும் வகையில் கல்வித்தரத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்காக கேள்வி தாள் அடங்கிய 54 ஆயிரம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும். நீட் தேர்வு குறித்து அழுத்தம் தரும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பற்றி எந்த தகவலும் வரவில்லை. கோபி அருகே உள்ள வேட்டைக்காரன் குளம் தூர் வாரும் பணி நடந்து வருகிறது. அதில் படகு இல்லம் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக வேட்டைக்காரன் குளம் தூர்வாரும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.

மருத்துவக்கல்வி-இடஒதுக்கீடு-அரசாணை

படிக்கும்போது எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது; ஆட்சியரானதும் ரூ.110 கோடி வழங்கினேன்- பள்ளிக்கல்வித்துறை செயலர் திரு.உதயசந்திரன் அவர்கள் உருக்கம்


நான் படிக்கும்போது பல்வேறு காரணங்களால் எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது. அதன் பிறகு, ஈரோடு ஆட்சியராக பொறுப்பேற்றபோது, ஒரே ஆண்டில் ரூ.110 கோடி கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுத் தேன் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் டி.உதயசந்திரன் தெரிவித்தார்.

ஈரோட்டில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஈரோட்டில் உள்ள சாலை மற்றும் போக்குவரத்து பொறியி யல் கல்லூரியில் 1989 1993-ம் ஆண்டு பயின்ற மாணவ, மாணவி யர்களின் 25-ம் ஆண்டு நிறைவு வெள்ளிவிழா நேற்று நடந்தது. விழாவில், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் டி.உதயசந்திரன் பேசியதாவது:

கடந்த 1989-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நாள் இந்த கல்லூரியில் சேர்ந்தேன். நான் விரும்பிய கல்லூரி கிடைக் காமல் சாலை மற்றும் போக்கு வரத்து கல்லூரியில் என் விருப்பத்துக்கு மாறாக என் பெற்றோர் சேர்த்தனர். இத்தனை ஆண்டுகள் கழித்து நான் திரும்பி இந்த கல்லூரிக்கு முன்னாள் மாணவனாக வரும் போது, அன்றைய நாட்களில் நான்கண்ட கனவுகளில் சில வற்றை செயல்படுத்திட, இந்த கல்லூரி அடித்தளமிட்டுள்ளதை பெருமிதமாக கருதுகிறேன்.

என்னுடைய தந்தை நாமக்கல் லில் பாரத ஸ்டேட் வங்கியில் எனக்காக கல்விக் கடன் வாங்க சென்றபோது பல்வேறு காரணங் களால் கல்விக் கடன் மறுக்கப்பட் டது. அதனை நினைவில் கொண்டு நான் 2007-ல் ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, ஒரே ஆண்டில் ரூ.110 கோடியை கல்விக் கடனாக மாணவர்களுக்கு வழங்கினேன்.

நான் இந்த கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும்போதே குடிமை பணி (சிவில் சர்வீஸ்) தேர்வு எழுத தீர்மானித்தேன். என்னுடன் விடுதியில் தங்கியிருந்த ஒரு சில நண்பர்கள் எனக்கு உறுதுணை யாக இருந்தனர். அதில் சிலர் என்னை அப்போதே ‘ஜில்லா கலெக்டர்’ என்றே அழைப்பர். பின்னாளில் அவை அனைத்தும் நனவானது. இதே நாள் 1995 ஜூன் 23-ல் இந்திய ஆட்சிப் பணி தேர்வு எழுதி அன்றைய தினம் அதில் நான் இந்திய அளவில் 38-ம் இடம் பெற்று தேர்ச்சி பெற்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்லூரி வெள்ளி விழாவில் 1989-1993ல் பயின்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 110 மாணவ, மாணவியர்கள் குடும் பத்தினருடன் கலந்துகொண்டு தங்களது கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

சனி, 24 ஜூன், 2017

மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு தமிழக அரசு உத்தரவு

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஓரிரு நாளில் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அதிர்ச்சியைத் தணிக்கும் வகையில், மருத்துவ படிப்பில் 85 சதவிகித இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை அரசு எதிர்த்து வந்தது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தது. அதன்படி நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க சட்டம் ஒன்றை நிறைவேற்றிய தமிழக அரசு, அதை ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அந்த சட்டம் ஒப்புதலுக்காக மத்திய அரசால் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.
இதன் காரணமாக தமிழகம் உட்பட நாடுமுழுவதும் நீட் தேர்வுகள் நடந்து, நேற்று முடிவுகளும் வெளியானது. இதில், தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய சுமார் 90 ஆயிரம் மாணவர்களில் 90 சதவிகிதம் பேர் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்கள் ஆவர். மீதமுள்ள 10 சதவிகிதம் பேர் மட்டுமே சி.பி.எஸ்.சி. பாடப்பிரிவின் கீழ் பயின்றவர்கள்.
இந்நிலையில், நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்துக்கு வெளியே இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அகில இந்திய அளவில் முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. இது மாணவர்கள், கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீட் தேர்வு முடிவுகளில் மாநில அளவிலான ரேங்கிங் வெளியிடப்படாது என்பதால், மாநில அளவில் யார் முதலிடம் பிடித்தார்கள், மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களின் தேர்ச்சி விகிதம் போன்ற விவரங்கள் தெரியவில்லை.
நீட் தேர்வு சி.பி.எஸ்.சி. பாடப்பிரிவை மையப்படுத்தி நடந்தது என்பதால், தமிழகத்தில் பெரும்பாலும் சி.பி.எஸ்.சி. பாடப்பிரிவில் பயின்றவர்களே மருத்துவ பாடத்தைப் பயில முடியும் என்ற சூழல் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 1150 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் பலர் நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்களையே எடுத்துள்ளனர். இதனால், மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் பலருக்கு, மருத்துவக் கல்வி என்பது எட்டாக்கனியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடை தவிர்த்த இடங்களில், 85 சதவிகிதம் இடங்கள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 சதவிகிதம் இடங்கள் மட்டுமே சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.ஓரிரு நாளில் விண்ணப்ப வினியோகம் துவங்கும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில், அரசின் இந்த அறிவிப்பு ஓரளவு ஆறுதலைத் தரக்கூடும் என நம்பப்படுகிறது. மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் நடைமுறையை ஏற்கெனவே குஜராத் மாநிலம் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
'நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்  மருத்துவ பாடச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்' என தமிழக அரசு ஏற்கெனவே சட்டம் நிறைவேற்றியுள்ள நிலையில், அந்த சட்டத்துக்கு அனுமதி பெற தொடர்ச்சியாக முயற்சிப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்தால் நீட் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை செல்லாததாகிவிடும். தற்போதைய சூழலில் நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது என்பதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது.ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்காத நிலையில், தற்போது மருத்துவ படிப்பில் 85 சதவிகித இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி அரசு அறிவிக்கும்போது அதற்கு எதிராகவும் சிலர் நீதிமன்றத்தை நாட வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. மருத்துவ கல்விக்கான சேர்க்கை என்பது இந்த முறை மிகுந்த குழப்பத்துக்குள்ளாகியுள்ளது.

மாவட்டத்திற்கு 3 சிறந்த தொடக்க/நடுநிலைபள்ளிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப இயக்குனர் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வெள்ளி, 23 ஜூன், 2017

Aided School Teachers Association(ASTA): 30 ஸ்மார்ட் நகரங்கள் அறிவிப்பு: நெல்லை, தூத்துக்கு...

Aided School Teachers Association(ASTA): 30 ஸ்மார்ட் நகரங்கள் அறிவிப்பு: நெல்லை, தூத்துக்கு...: மத்திய அரசின் ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் புதிதாக 30 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. புதிய ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலை இன்று வெள்...

30 ஸ்மார்ட் நகரங்கள் அறிவிப்பு: நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர் நகரங்கள் தேர்வு.

மத்திய அரசின் ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் புதிதாக 30 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. புதிய ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலை இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 23) மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார்.


‘ஸ்மார்ட் நகரங்கள்’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதில் 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. ஏற்கனவே 60 நகரங்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு திட்டமான ஸ்மார்ட் நகரம் திட்டத்தின் இரண்டாம் ஆண்டையொட்டி, தில்லியில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு 30 புதிய நகரங்கள் பட்டியலை இன்று வெளியிட்டார்.

தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட் நகங்கள் எவை?

கேரள மாநிலம் திருவனந்தபுரம், சத்தீஸ்கர் மாநிலம் நயா ராய்பூர், குஜராத் மாநிலம் ராஜ்கோட், ஆந்திர மாநிலம் அமராவதி, பிஹார் மாநிலம் பாட்னா, தெலங்கானாவில் கரீம்நகர், பிஹாரில் முசாபர் நகர், புதுச்சேரி, குஜராத் காந்திநகர், ஜம்மு - காஷ்மீர், மத்தியப் பிரதேசத்தின் சாகர், ஹரியாணாவின் கர்னால், மத்தியப்பிரதேசத்தின் சட்னா, கர்நாடகாவின் பெங்களூரு, இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா, உத்தராகண்டின் டேராடூன், தமிழகத்தின் திருப்பூர், மகாராஷ்டிரா மாநிலத்தில் சின்ச்வாட், பிம்ப்ரி, சத்தீஸ்கரின் பிலாஸ்பூர், அருணாச்சலப் பிரதேசத்தின் பாசிகட், ஜம்மு, குஜராத்தின் தாஹோத், தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி, மிசோரம் மாநிலத்தின் அய்ஸ்வால், உ.பி.யின் அலகாபாத், அலிகார் மற்றும் சிக்கிம் மாநிலத்தின் கேங்டோக் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி ஆகிய 4 நகரங்கள் ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

தேர்வு செய்யப்பட்டுள்ள 30 நகரங்களில் 26 நகரங்கள் கையடக்க விலையில் வீட்டுமனை திட்டங்கள், அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. 26 நகரங்கள் புதிய பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள்யும் 29 நகரங்கள் சாலை மேம்பாடு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளையும் முன்வைத்துள்ளதாக வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

இதற்காக ரூ.57,33 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நகரங்களின் எண்ணிக்கை 90-ஆக அதிகரித்துள்ளது.

வியாழன், 22 ஜூன், 2017

அரசு சார்பில் விரைவில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு சார்பில் விரைவில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஏழாம் நாள் கூட்டம் காலை பத்து மணிக்குக் கேள்வி நேரத்துடன் தொடங்கியது.  இன்றைய கூட்டத்தில் நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத்துறை மற்றும் சுற்றுலாத்துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

கேள்வி நேரத்தின்போது, உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தருமபுரி அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அரசு சார்பில் விரைவில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேல்நிலைப் பொதுத்தேர்வு இனி எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த” தேர்வுத் திட்டத்தை வெளியிட்டது பள்ளிக்கல்வித் துறை


தமிழகத்தில் மாணவர்கள் நீட், ஐ.ஐ.டி உள்ளிட்ட பவ்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பிளஸ் ஒன், பிளஸ்-டூ தேர்வுத் திட்டத்தை மாற்றி அமைத்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை பிறப்பித்து, அதை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டில் இருந்து மேல்நிலை இரண்டாம் ஆண்டு போலவே, மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களும் மாநில அளவிலான பொதுத்தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேர்வு நேரம், மதிப்பெண், தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, புதிய தேர்வுத்திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


மத்திய அரசால் 1964-ம் ஆண்டு அமைக்கப்பட்ட கோத்தாரி கல்விக் குழுவின் (1964-66) நாடு முழுவதும் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வியில் 10+2+3 என்ற அளவில் ஒரே மாதிரியான கல்வி முறை அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை வழங்கியது. அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று ‘‘தேசியக் கல்விக் கொள்கை’’ (1968) வகுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் 10 ஆண்டு இடைநிலைக் கல்வி முறையும், இரண்டு ஆண்டு மேல்நிலைக் கல்வி முறையும், மூன்று ஆண்டு உயர் கல்வி பட்டப்படிப்பு முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் மேல்நிலைக் கல்வி முறை பள்ளி அளவில் நடத்தப்பட்டு வருகிறது.

1978-79-ல் தொடங்கப்பட்ட தற்போதைய மேல்நிலைக் கல்வி முறையில், அன்றைய சூழல்களைக் கருத்தில் கொண்டு இரண்டாம் ஆண்டில் மட்டும் மாநில அளவில் அரசுப் பொதுத் தேர்வு நடத்திடலாம் எனவும் முதலாம் ஆண்டை பொறுத்தவரை (பிளஸ் ஒன்) மாவட்ட அளவில் மட்டும் தேர்வு நடத்திடலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. 1980-ம் ஆண்டு மார்ச் மாதம், முதல்முறையாக மாநில அளவில் மேல்நிலை இரண்டாம் ஆண்டில் மாணவர்கள் மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதினர். அப்போது, தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 1.25 லட்சம். பல மாநிலங்களும், மேல்நிலை வகுப்பைத் தனியாக இளங்கல்லூரிகளாக நடத்த திட்டமிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மேல்நிலை வகுப்புகள் பள்ளிகளுடன் இணைத்து நடத்தப்பட்டது.

இதன் விளைவாக, மேல்நிலைக் கல்வி வசதி, தமிழ்நாட்டில் பல்வேறு உள்புற கிராமப் பகுதிகளுக்கும் சென்றடைந்தது. இதன்தொடர்ச்சியாக 2017-ம் ஆண்டு மேல்நிலைப் பொதுத் தேர்வில் 8.75 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். மேல்நிலைக் கல்வி பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டபோது, முழு பாடத்திட்டத்தை இரு சமமான தனித்தனிப் பகுதிகளாக பிரித்து, முதலாம் ஆண்டுப் பாடத்திட்டமும், இரண்டாம் ஆண்டுப் பாடத்திட்டமும் வகுக்கப்பட்டன. ஆனால், மாநில அளவிலான பொதுத்தேர்வு, மேல்நிலை இரண்டாம் ஆண்டில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இரண்டாம் ஆண்டுப் பாடப்பகுதியில் நடத்தப்பட்டப் பொதுத்தேர்வில் மாணவர் பெறும் மதிப்பெண்களே மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம், கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான அடிப்படையாக அமைந்தன.

இதில் மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகள் அதிமுக்கியத்துவம் பெற்றதால் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வின் மதிப்பெண்களும் அதிமுக்கியத்துவம் பெற்றன. தனியார் சுயநிதிப் பள்ளிகள் பெருகிய நிலையில் பொதுத் தேர்வு மதிப்பெண்களுக்கான போட்டிச் சூழலும் வெகுவாக அதிகரித்து பள்ளிகளில் பாடங்கள் கற்பிக்கும் முறையில் மேல்நிலை முதலாம் ஆண்டு பாடங்களைக் கற்பிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இரண்டு ஆண்டுகளுமே பிளஸ் டூ பாடங்களுக்கே முக்கியத்துவம் அளித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனால் பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, உயர்கல்விப் படிப்புகளில் சேரும் மாணவர்களும்கூட கல்லூரிகளின் முதலாம் ஆண்டில் தடுமாறும் நிலையும் தேர்வுகளில் தோல்வியுறும் நிலையும் உருவாகியுள்ளதை அண்ணா பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களும் கல்வியாளர்களும் சுட்டிக்காட்டினர். இந்நிலை, தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களிலும் உணரப்பட்டதால், அந்தமாநில அரசுகள் மேல்நிலை முதலாம் ஆண்டில் பொதுத்தேர்வு நடத்த முடிவெடுத்து நடைமுறைப்படுத்தி விட்டனர். ஆந்திரப் பிரதேசம் 1978-79-ம் ஆண்டும், கேரள மாநில அரசு 2008-ம் ஆண்டில் இருந்தும் பிளஸ் ஒன் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தும் நடைமுறையை அமல்படுத்தியுள்ளது.

அதாவது, தமிழகத்தில் 11-ம் வகுப்பு  பாடத்திட்டத்தை முறையாக படிக்காததால், அகில இந்திய அளவில் நடத்தப்பெறும் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு போட்டி நுழைவுத் தேர்வுகளிலும், திறனறித் தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை உருவானது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வியின் தரத்தை ஆய்வுசெய்து முன்னேற்ற வழிவகைகளைக் கண்டறிய, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் மூத்த கல்வியாளர்கள் அடங்கிய வல்லுநர் குழு ஒன்று சமீபத்தில் அமைக்கப்பட்டது. அக்குழுவிற்கு அளிக்கப்பட்டப் பணிகளில், "மேம்படுத்தப்பட்ட கல்வி முறைக்கேற்ப தேர்வு முறையில் சீர்த்திருத்தங்கள் பரிந்துரை செய்தல்" என்ற பணியும் ஒதுக்கப்பட்டது. வல்லுநர் குழு பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு மூன்று துணைக் குழுக்களை அமைக்க முடிவு செய்தது. அவற்றில் ஒன்று தேர்வுகள் சீர்த்திருத்தக் குழு. இந்தக் குழு தனது அறிக்கையில் மேல்நிலை முதலாம் ஆண்டிலும் பொதுத்தேர்வு முறையை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று பரிந்துரை செய்தது.

துணைக்குழுவின் ஆலோசனையை ஆழ்ந்த பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட ‘வல்லுநர்குழு’ அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 11-5-2017 அன்று கூடி,‘‘பல பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு பாடங்களைக் கற்பிப்பதில், முழுகவனம் செலுத்தாத சூழ்நிலை உள்ளது. ஆனால், நீட் போன்ற போட்டித்தேர்வுகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு பாடத்திட்டத்திலிருந்து ஏறத்தாழ 50 விழுக்காடு வினாக்கள் கேட்கப்படுகின்றன. தமிழக மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் பொதுத்தேர்வினை இந்த கல்வி ஆண்டில் இருந்து (2017-18) தேர்வுத் துறை நடத்தலாம்’’ என்று தீர்மானம் நிறைவேற்றியது.

இதையடுத்து, தற்கால பரிணாமம், இன்றைய உலகளாவிய கல்விச் சூழல், தேசிய அளவிலான போட்டிச் சூழல், மாணவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சி இவற்றையெல்லாம் அரசு கருத்தில்கொண்டு, அரசுத் தேர்வுகள் இயக்குநர், 'தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தலாம்' என்று பரிந்துரை வழங்கினார். அதன்படி, பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வு குறித்து ஏற்கெனவே உள்ள தேர்வு முறைகளில் சில மாற்றங்களைச் செய்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை (ஆணை: எண் 100, பள்ளிக் கல்வி (அ.தே.1) தேர்வுத் துறை 22 மே 2017) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

2017-18-ம் ஆண்டில் இருந்து மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் மாநில அளவில் அரசு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்விற்கு 600 மதிப்பெண்களும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்விற்கு 600 மதிப்பெண்களும் என இரண்டு ஆண்டுகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மொத்தம் 1200 மதிப்பெண்கள் வழங்கலாம். மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வில் சில பாடங்களில் தோல்வியுறும் மாணவர்கள், ஆண்டு விரயமின்றி இரண்டாம் ஆண்டுக்குச் செல்லவும், தோல்வியுற்ற பாடத்தை / பாடங்களை ஜூன்/ஜூலை மாதத்தில் நடைபெறும் உடனடி சிறப்புத் தேர்விலோ அல்லது இரண்டாம் ஆண்டு இறுதித் தேர்வின்போதோ அல்லது இரண்டிலுமோ பின்னடைவுப்பாடமாக (அரியர்) கல்லூரிகளில் உள்ளது போன்ற நடைமுறையில் தேர்வு எழுதிக் கொள்ளலாம்.

அனைத்துப் பாடங்களிலும் மாணவர்கள் தொடர் கற்றலை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு பாடத்திலும் 10 விழுக்காடு மதிப்பெண் அகமதிப்பீடாக அளிக்கப்படும். மேலும், தற்போது நடைமுறையில் உள்ள மூன்று மணி நேர பொதுத்தேர்வின் கால அளவானது, தேர்வு முறையில் கொண்டு வந்துள்ள புதிய மாற்றத்தை கருத்தில் கொண்டு, வினாக்களைக் குறைத்து இரண்டரை மணி நேரமாகக் குறைக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்ச தேர்ச்சி விழுக்காடு 35 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்படுகிறது. முதலாம் ஆண்டு செய்முறைத் தேர்வினை இரண்டாம் ஆண்டு நடைபெறும் செய்முறைத் தேர்வுடன் இணைத்து நடத்தப்படும்.



இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்குப் பின்னர் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த சான்றிதழ் (Consolidated Markstatement) வழங்கப்படும். மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மதிப்பெண் வழங்கும் முறை, அதாவது தேர்வுத் திட்டம் இணைப்பு-1ல் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வரசாணை வருகின்ற 2017-18-ம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இந்தப் புதிய தேர்வுத்திட்ட வழிமுறைகளை 2017-18-ம் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்துவற்கு உரிய தொடர்நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்" என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 21 ஜூன், 2017

திங்கள், 19 ஜூன், 2017

சிபில் ஸ்கோர் -அடிப்படை விஷயங்கள்

www.vikatan.com
கடன் சம்பந்தப்பட்ட  விஷயமென்றால் முதலில் நம் காதில் விழுவது: “எல்லாம் ஓகே சார். சிபில் ஸ்கோர்ல ஒரு சின்ன பிரச்னை. பார்த்துக்கலாம் சார்”. சரி, அது என்ன சிபில்?
CIBIL என்றால் என்ன?
Credit Information Bureau (India) Limited. இது, கடன் பெறுவோர் பற்றிய இந்தியாவின் முதல் தகவல் நிறுவனம். வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடம் பெறுவோர் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் ( சில வங்கிகள் 60 நாட்களுக்கொரு முறை ) சிபில் நிறுவனத்தில் அப்டேட் செய்யும். சிபில் போன்று மேலும் சில அமைப்புகள் இருந்தாலும், வங்கிகள் சிபில் ரேட்டிங்கிற்கே முக்கியத்துவம் தருகின்றன.
யாருடைய விவரங்கள் சிபிலில் இருக்கும்?
க்ரெடிட் கார்ட், பர்சனல் லோன், கார் லோன், வீட்டுக் கடன் அல்லது வேறு எந்த வகைக் கடனாவது வங்கிகளிலிலோ அல்லது வங்கி சாராத தனியார் நிதி நிறுவனங்களிலோ பெற்றுள்ள ஒவ்வொருவர் பற்றியும், சிபில் நிறுவனத்தில் தகவல் இருக்கும்.
இதனால் என்ன பயன்?
நீங்கள் க்ரெடிட் கார்ட் அல்லது வேறு வகைக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது அந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்கள் விவரங்களை வைத்து சிபில் பதிவுகளை சோதிக்கும். சிபிலில் உங்கள் ஸ்கோர் எவ்வளவு, உங்களின் கடன் விவரங்கள், அவற்றை திருப்பி செலுத்தி இருக்கும் விதம் ஆகியவற்றை பார்த்துவிட்டு உங்களுக்கு க்ரெடிட் கார்ட் அல்லது கடன் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும். இதன் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கு கடன் கொடுத்து, அதை வசூலிக்கும் பிரச்சனையை வங்கிகள் தவிர்க்க முடியும்.
கடன் பெறுவோர் விவரங்களை சிபில் எப்படிப் பெறுகிறது?
ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி, வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் பெறுவோர் குறித்த விவரங்களை தானாகவே சிபில் நிறுவனத்திற்கு அளிக்கும்.
என்னென்ன தகவல்கள் இடம் பெறும்?
க்ரெடிட் கார்ட் அல்லது மற்ற வகைக் கடன் பெறுவோரின் தனிப்பட்ட தகவல்கள், கடன் வகை, கடன் தொகை, கடன் செலுத்த வேண்டிய காலம், ஒவ்வொரு மாதமும் சரியாக கடன் செலுத்தி இருக்கிறார்களா அல்லது எத்தனை நாள் தாமதமாக செலுத்தி இருக்கிறார்கள் ஆகிய விவரங்களுடன் கடனை கட்டி முடித்து விட்டார்களா அல்லது செட்டில்மெண்ட் அல்லது வராக்கடன் ஆகியவை பற்றிய தகவல்களுல் இடம் பெறும்.
ஸ்கோர் எவ்வளவு இருந்தால் கடன் கிடைக்கும்?
சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும். பொதுவாக 750க்கும் மேல் சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும். வட்டியும் குறைவாக இருக்கும். 750க்கும் கீழ் ஸ்கோர் இருப்பவர்களுக்கு கடன் கிடைப்பது கடினம். மேலும் அப்படியே கொடுத்தாலும் வட்டி அதிக அளவில் இருக்கும்.
சிபில் ஸ்கோர் தெரிந்துக் கொள்வது எப்படி?
சிபில் இணையதளத்திற்கு சென்று தெரிந்துக் கொள்ளலாம். ஆண்டிற்கு ஒரு முறை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம். மேலும் பார்க்க ஒவ்வொரு முறையும் ரூ.550 செலுத்த வேண்டியிருக்கும். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். இதில் உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம். விவரங்கள் சரியாக இருக்கின்றனவா என்றும் பார்த்துக் கொள்ளலாம்.
தவறான விவரங்கள் இருந்தால் எப்படி சரி செய்வது?
சிபில் நிறுவனம் உங்கள் விவரங்களில் எந்த மாறுதலையும் செய்யாது. முறையான ஆவணங்களுடன் நீங்கள் கடன் பெற்றிருக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தை அணுகி சரி செய்துக் கொள்ளலாம். உங்கள் வங்கி, சிபில் ரிப்போர்ட்டில் தவறுகளை சரி செய்துவிடும்.
சிபில் ஸ்கோர் குறைவதற்கான காரணங்கள் என்ன?
க்ரெடிட் கார்ட் அல்லது பிற வகைக் கடன்களுக்கான தவணைத் தொகையை சரியான நேரத்தில் முழுமையாக செலுத்தாமல் இருப்பது, கடன் அட்டையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் க்ரெடிட் லிமிட்டில் 50 சதவிகிதத்திற்கும் மேல் பயன்படுத்துவது, வங்கிகளில் கடன் கேட்டு அடிக்கடி விண்ணப்பிப்பது, சரியாக கடனை திருப்பிச் செலுத்தாதவருக்கு ஜாமீன் கையெழுத்துப் போடுவது ஆகியவை உங்கள் சிபில் ஸ்கோரை குறைத்துவிடும்.
கடன் கேட்டு விண்ணப்பிப்பது கூட ஸ்கோரை குறைக்குமா?
ஆமாம். நீங்கள் ஒவ்வொருமுறை க்ரெடிட் கார்ட் அல்லது கடனிற்கு விண்ணப்பிக்கும் போதும், சிபிலில் உங்களைப் பற்றிய விவரங்கள் அந்த வங்கியால் பார்க்கப்படும். அப்படி அடிக்கடி பார்க்கப்படுவது எதிர்மறையாக கருதப்படும். ஆண்டிற்கு 2 முறைக்கும் மேல் கடனிற்காக விண்ணப்பிக்க வேண்டாம். ஒவ்வொரு முறை உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போதும் அடுத்த வங்கி உங்களுக்கு கடன் கொடுக்க தயங்கும்.
சிபில் ஸ்கோர் உயர்த்துவது எப்படி?
இதுவரை கடன் பெறாதவர் என்றால், உங்கள் வருமானத்தின் அடிப்படையில் க்ரெடிட் கார்ட் அல்லது சிறிய தொகையில் கடன் பெற்று அதைச் சரியாக திருப்பிச் செலுத்துங்கள்.
ஏற்கனவே வாங்கிய கடன்களில் நிலுவைத் தொகை இருந்தால் அதை முழுமையாக செலுத்தி விடுங்கள். குறைவான சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கும் சில தனியார் நிதி நிறுவங்கள் சிறிய அளவில் கடன் கொடுக்கின்றன. வட்டி சற்றுக் கூடுதலாகத்தான் இருக்கும். அவர்களிடம் கடன் பெற்று தாமதமில்லாமல் சரியாக மாதத் தவணையைக் கட்ட வேண்டும். நகைக்கடன் போன்றவையும் இதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
பெரும்பாலான வங்கிகள், தங்களிடம் பிக்சட் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு, அதை உத்தரவாதமாக வைத்துக் கொண்டு பிக்சட் டெபாசிட் தொகையில் 70 சதவிகிதம் வரை க்ரெடிட் லிமிட் வைத்து க்ரெடிட்க் கார்டுகளை தருகின்றன. ஒவ்வொரு மாதமும் மிகக் குறைந்த அளவு செலவளித்து அதை சரியாக திருப்பிச் செலுத்துவதன் மூலம் சிபில் ஸ்கோரை உயர்த்தலாம். எந்தக் காரணம் கொண்டும் இதிலும் தாமதமாக மாதத் தவணைக் கட்டக்கூடாது.
அடமானக் கடன் மற்றும் அடமானமற்றக் கடன் என்ற கலவையில் கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்துவதன் மூலமும் சிபில் ஸ்கோரை எளிதில் அதிகரிக்கலாம்.
நம் சிபில் ஸ்கோரை நாம் அடிக்கடிப் பார்ப்பதால் ஸ்கோர் குறையுமா?
குறையாது. அவ்வப்போது சிபில் ஸ்கோர் பார்த்துவிடுவது நல்ல பழக்கமே. அப்போதுதான் தவறுகள் ஏதும் இருந்தால் அதை வங்கியில் சொல்லி திருத்திக் கொள்ளலாம். சில நேரங்களில் அடுத்தவர் கடனெல்லாம் நம் கணக்கில் வைத்துவிடுவார்கள். அது, நம் க்ரெடிட் ஸ்கோரை வெகுவாக பாதிக்கலாம்.சில வங்கிகள், சிபில் ஸ்கோர் அடிப்படையில் வீட்டுக் கடன் போன்ற கடனுக்கான வட்டியை நிர்ணயிக்கின்றன. எனவே உங்கள் சிபில் ஸ்கோர் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

யார் இந்த ராம்நாத் கோவிந்த்?

பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் அத்வானி, வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், ஜார்க்கண்ட் கவர்னரான திரெளபதி முர்மூ என்றெல்லாம் பெயர்கள் அடிபட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத பி.ஜே.பி-யின் பரிட்சயமான முகம் அல்லாத ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது பி.ஜே.பி தலைமை. யார் இந்த ராம்நாத் கோவிந்த்?
வழக்கறிஞர் படிப்பை முடித்தவரும், பி.ஜே.பி-யின் நீண்ட நாள் உறுப்பினருமான ராம்நாத் கோவிந்த், இந்துத்துவா கொள்கையை அடிப்படையாகக் கொண்டவர். தலித் தலைவர் என்ற தகுதிகளை உடைய ராம்நாத் கோவிந்தை, இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான பி.ஜே.பி வேட்பாளராக அமித்ஷா இன்று அறிவித்துள்ளார். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் என்ற அமைப்பின் மூலம் பி.ஜே.பி-யின் கொள்கைகளை உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் பரப்பிவந்தவர்.
1998 முதல் 2002 வரை பி.ஜே.பி-யின் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவின் தலைவராகப் பதவிவகித்தவர். 1994 - 2006-ஆம் ஆண்டுகள்வரை உத்தரப்பிரதேசத்தின் ராஜ்ய சபா எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பி.ஜே.பி-யின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த இவர், ஆகஸ்ட் 8, 2015 முதல் பீகாரின் ஆளுநராக ஜனாதிபதி மூலம் நியமிக்கப்பட்டுப் பணியாற்றி வருகிறார்.
லக்னோ அம்பேத்கர் பல்கலைக்கழகத்திலும், கொல்கத்தா ஐ.ஐ.எம்-மிலும் பல்கலைக்கழகக் குழுவிலும் இடம்பிடித்துள்ளார் ராம்நாத் கோவிந்த். டிமானிடைஷேன் மூலம் கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்க முடியும் என்று மோடிக்கு முழு ஆதரவை வழங்கியவர். 2002 அக்டோபரில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் சார்பாக உரையாற்றியவர். 1971-ம் ஆண்டு பார் கவுன்சிலில் இணைந்த ராம்நாத் கோவிந்த், 1993 வரை உச்ச நீதிமன்றத்தில் 16 வருடங்கள் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.
அதுமட்டுமின்றி, பாராளுமன்றக் குழுக்களில் உள்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலன், பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் ஆணையம், சமூக நீதி மற்றும் மேம்பாடு, சட்டம் - ஒழுங்கு எனப் பல்வேறு குழுக்களில் பணியாற்றியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினராகத் தாய்லாந்து, நேபாளம், பாகிஸ்தான், சிங்கப்பூர், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். பி.ஜே.பி., இவரைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்த இரண்டு காரணங்கள் முக்கியமாகக் கூறப்படுகின்றன. ஒன்று, அத்வானியை முன்மொழிந்தால் அவர்மீது உள்ள வழக்குகள் தடையாக வந்து நிற்கும் என்பதும், ஒரு தலித் தலைவரை முன்மொழிந்தால் எதிர்ப்புகள் பெருமளவில் எதிர்க்கட்சியிடமிருந்தும் இருக்காது என்பதுதான் பி.ஜே.பி-யின் யுக்தியாகக் கூறப்படுகிறது. என்னதான் செயலளவு அதிகாரங்கள்கொண்ட பதவி என்றாலும், இதுவரை பரிட்சயமில்லாத ஒருவரை பி.ஜே.பி வேட்பாளராக அறிவிப்பது அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் நபராக ராம்நாத் கோவிந்த் இருப்பார் என்பதே. கையெழுத்துத் தலைவராக மட்டும் இருப்பாரா... இல்லை, கடினமான முடிவுகளை எடுக்கும் நபராக இருப்பாரா இந்த ராம்நாத் கோவிந்த்?

பள்ளிக்கல்வித் துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் தமிழக முதல்வர்

110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி, பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புக்களை இன்று சட்டசபையில் வெளியிட்டார்.
அவை,
 * உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.. இதற்காக ரூ.437 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* பள்ளி கல்வி இயக்ககத்திற்கு ரூ.33 கோடி மதிப்பில் எம்.ஜி.ஆர்., பெயரில் கட்டடம்.

* எம்ஜிஆர் பெயரில் பள்ளிகளில் தனிக்கட்டடங்கள்* கிராமப்புற தொடக்க மற்றும் நடுத்தர 3090 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.

* 43 அரசு கல்லூரிகளில் எம்.ஜிஆர் பெயரில் கட்டடங்கள் கட்ட ரூ.210 கோடி ஒதுக்கீடு

* பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.39 கோடி ஒதுக்கீடு

* 2017- 2018ம் கல்வியாண்டில் 268 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.இதற்காக 660 பேராசிரியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும்.

* 7 அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 3 பல்கலை., உறுப்பு கல்லூரிகள் நடப்பாண்டில் தொடங்கப்படும்.

* காஞ்சிபுரத்தில் ரூ.15 கோடியில் விளையாட்டு அரங்கு அமைக்கப்படும்.

* நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., வளாகத்தில் ரூ.5 கோடி செலவில் நீச்சல்குளம் அமைக்கப்படும்.

பிற துறை அறிவிப்புக்கள் :

* மாதவரத்தில் ரூ.25 கோடியில் புதிய சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.

* வனத்துறை பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் இழப்பீடு தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.

* கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிகக் கடன் ரூ.10,000லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புகள் ஏமாற்றமே..! என்ன சொல்கிறார்கள் ஆசிரியர்கள்?

சட்டசபையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 37 அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த அறிவிப்புகள் குறித்து கல்வியாளர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். "அமைச்சரின் அறிவிப்பில் பள்ளிக்கல்விக்கும், ஆசிரியர்களுக்கும் பெரிய அளவில் ஏதுவும் செய்யவில்லை" என்கிறார் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அமைப்பாளர் பாலசந்தர். மாணவர்களுக்குக் கல்விக்கடன் முகாம்கள், புத்தகக் கண்காட்சிகள், கலைத்திருவிழாக்கள், கிராமப்புற மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சிகள் போன்றவற்றை நடத்த முன்வந்திருப்பதைப் பாராட்டுகிறோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பல அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது.
பள்ளிக்கல்வி துறைபல நூறு தொடக்கப் பள்ளிகள் மூடி வரும் நிலையில் 30 தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும் என்ற அறிவிப்பு பெருத்த ஏமாற்றமே. வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்பது குறித்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல் ஆசிரியர்களை நியமித்திட வேண்டும். அதுகுறித்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆரம்பப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளி வரை 10,000-க்கும் மேற்பட்ட தேவைப்பணி இடங்களும், 5,000-க்கும் மேற்பட்ட காலிப்பணி இடங்களும் இருக்கின்றன. ஆனால் 4,084 காலிப்பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்து இருக்கிறார் அமைச்சர். இதைப்போலவே, 60,000-க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகப் பணியாளர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்குத் தொடர் நீட்டிப்பு வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் 17,000 பணியிடங்கள் நிரந்தரப்பணியிடங்களாக மாற்றப்படும் என்ற அறிவித்து இருக்கிறார்கள். இது நல்ல விஷயம் என்றாலும், இன்னும் 43,000க்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியிடங்களையும் நிரந்தரப்பணியிடங்களாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்குச் செயல்வழிக்கற்றல் அட்டைகளுக்கு 31.82 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இதுவரை அரசால் சமச்சீர் கல்வியைத் தனியார் பள்ளிகளில் அமல்படுத்த முடியவில்லை. இதைப்போலவே, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு வழங்குவது போல் செயல்வழிக்கற்றல் அட்டைகளை சுயநிதிப்பள்ளிகளிலும் வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கமுடியவில்லை என்றால் பொதுக்கல்வியைப் பாதுகாக்க முடியாது.
பகுதி நேரக் கணினி ஆசிரியர், ஓவிய ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அரசு கண்டு கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது. அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கணினிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறும் அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்வோம் என்ற அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.  விளையாட்டுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பும் இல்லை.
பள்ளிக்கல்வி துறைபென்சன் திட்டம் குறித்த அறிவிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்து இருந்தார். பென்சன் திட்டம் குறித்த ஆலோசனை குழு அறிக்கை தயாரித்து ஆலோசனைகளை ஏற்கெனவே வழங்கி விட்டது. இந்த நிலையில் பென்சன் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று காத்திருந்தோம். அதுவும் வெளியாகவில்லை. மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களில் புதிய பென்சன் திட்டம் முற்றிலும் ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தைக் கொண்டு வந்து இருக்கிறார்கள். இதைப்போலவே, தமிழ்நாட்டிலும் அமுல்படுத்துவார்கள் என்ற அறிவிப்பு எதிர்நோக்கி இருந்த ஊழியர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

பள்ளிகளில் வை-பை வசதி: சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
 11,12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

முதற்கட்டமாக 3,000 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத்திறன் வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) ஏற்படுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி வாசித்த அறிக்கை:

 1.வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணாக்கர்கள் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும்.இதன்படி, 3,090 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 10 கணினிகளும், 2,939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும், அதனுடன் தொடர்புடைய இதர சாதனங்களும் வழங்கப்படும். இதற்கென அரசுக்கு 437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

2.அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை, அதாவது ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பள்ளிக்கும் 2 லட்சம் ரூபாய் வீதம்60 கோடி ரூபாய் இதற்கென செலவிடப்படும்.

3.பள்ளிக் கல்வி இயக்ககம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இக்கட்டடம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இதனால், இதனை பராமரிப்பது கடினமாகவும், மிகுந்த செலவினம் கொண்டதாகவும் உள்ளது. அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து அலுவலர்களும், பணியாளர்களும் அதிக அளவு இங்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.மேலும், இந்த இயக்ககத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகளுக்காக கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது. இதற்காக, ஒரு லட்சம் சதுர அடியில் 33 கோடி ரூபாய் செலவில் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும்.இந்த கட்டடம் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடம்" என்ற பெயரில் அழைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

4.தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணாக்கர்களும் தரமான கல்வியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் சிறப்பான சூழ்நிலையில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவைப்படும்கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், அறிவியல் உபகரணங்கள், கலை மற்றும் கைவினை அறைகள், கணினி அறைகள், நூலகம், கழிவறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் 39 கோடியே ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைப்பது, ஸ்மார்ட் கிளாஸ் அமைப்பது, டிபிஐ வளாகத்தில் கூடுதல் கட்டிடங்கள் அமைப்பது, பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.

ஞாயிறு, 18 ஜூன், 2017

ஆதார் இணைக்காத 1 லட்சம் பேருக்கு பென்ஷன் நிறுத்தம் : பிஎப் அதிகாரிகள் தகவல்

தமிழகம் முழுவதும் ஓய்வூதியர்களுக்கு உயிர்வாழ் சான்றுடன் ஆதார் எண் இணைக்காத 1 லட்சம் பேருக்கு மே மாதம் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. காஸ் மானியம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கான தொகையை வங்கி கணக்கு மூலம் நேரடியாக வழங்கும் முறையை மத்தியஅரசு அறிமுகம் செய்தது.இதற்கு அனைவருக்கும் வங்கிக்கணக்கை இலக்காக கொண்டு தொடங்கப்பட்ட ஜன்தன் திட்டத்தை பயன்படுத்திக் கொண்டது. இதுதவிர மத்திய அரசின் 19 அமைச்சகங்களின் 92 திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.நூறு நாள் வேலை உறுதி திட்டம், உணவு மானியம், பள்ளிகளில் இலவச மதிய உணவு, விவசாயிகள் பயிர்க்காப்பீடு மற்றும் இழப்பீடு தொகையை பெறுவதற்கு, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச சமையல் காஸ் பெறுதல், அரசின் மானிய உதவிகளை பெறுதல், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான மத்திய அரசின் பீம் ஆப்பில் வங்கிக் கணக்கை இணைத்து பணம் அனுப்புதல் போன்றவை ஆதார் அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுதவிர வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், அடையாளச்சான்று, முகவரிச்சான்று என எண்ணற்ற வகையில் ஆதார் பயன்பாடு உள்ளது. ஜூலை 1க்கு பிறகு புதிய பான் கார்டு விண்ணப்பிக்கவும், ஆதார் வைத்திருப்பவர்கள் பான் அட்டையுடன் இணைத்து ரிட்டர்ன் தாக்கல் செய்யவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திட்ட பயன்கள் உரியவருக்கு சென்று சேர வேண்டும், போலி பயனாளிகளை ஒழிக்க வேண்டும், மானியச்சுமையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே ஆதாரை கட்டாயப்படுத்தி வருகிறது மத்திய அரசு.இதே வரிசையில், ஓய்வூதியர்கள் ஆதார் மூலம் உயிர்ச்சான்று சமர்ப்பிக்கலாம்.

ஜீவன் பிரமாண் இணையதளம் மூலம் அல்லது பொது சேவை மையங்களில் சம்பந்தப்பட்ட வங்கி, கருவூலத்துக்கு செல்லாமலேயே இருந்த இடத்தில் இருந்தே எளிதாக உயிர்ச்சான்று சமர்ப்பிக்க ஜீவன் பிரமாண் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோல் அரசு ஓய்வூதிய தாரர்கள் மட்டுமின்றி, பிஎப் ஓய்வூதியம் பெறுவோரும் ஆதாரை இணைக்க வேண்டும். பி.எப் திட்டத்தில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் மத்திய அரசாங்கத்திடம் இருந்து மானியம் பெறும் தகுதி படைத்தவர்கள். இதில், ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் எண் கட்டாயமாகிறது.

ஆதாரை கட்டாயமாக்குவதை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.ஓய்வூதியம் பெறுவோர் ஆதார் எண் மற்றும் தங்களது டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழினை (டிஜிட்டல் ஜீவன் பிரமாண் பத்திரம்) சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதுவரை உயிர்வாழ் சான்றிதழை அதற்குரிய படிவத்தில் வங்கியில் சமர்ப்பித்த ஓய்வூதியதாரர்களும் இந்த ஆதார் முகாமில் பதிவு செய்து கொள்ளலாம். அங்கு ஆதார் எண் மற்றும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறலாம்.ஏப்ரல் 17ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டபோது அந்தந்த பி.எப் அலுவலகங்கள் மற்றும்இ-சேவை மையங்களில் இணைக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில் ஆதார் எண் இணைக்க தவறியவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தமிழகத்தில் சுமார் 1 லட்சம் பேருக்கு ேம மாதம் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் உடனடியாக அருகில் உள்ள பிஎப் அலுவலகத்துக்கு சென்று உயிர்வாழ்சான்றிதழுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அரசின் 19 அமைச்சகங்களின் 92 திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு  முதல் வங்கி கணக்கு வரை ஆதார் முக்கியமாகி விட்டது.ஆதார் இணைக்காவிட்டால் வங்கி கணக்கு ரத்தாகும்காஸ் மானியம் உட்பட பல்வேறு மானியங்கள் பெற ஆதார் வேண்டும். பிஎப் பென்ஷனுக்கு ஆதார் எண் இணைக்க அவகாசம் முடிந்து விட்டது.ஆதார் இணைக்காவிட்டால் பென்ஷன் நின்று விடும் ஆபத்துஉள்ளது.

தொடக்க/நடுநிலைப்பள்ளி வேலை நாள் குறைக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

நடுநிலைப் பள்ளி வரை, பள்ளி வேலை நாள், 210 நாட்களாக குறைக்கப்படவுள்ளது,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், கோபியில் பேசினார்.ஈரோடு மாவட்டம், கோபி கலை அறிவியல் கல்லுாரியில், இதய நிறைவு தியான பயிற்சி விழா, நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்பேசியதாவது:இன்னும் ஐந்தாறு நாட்களுக்கு பின், நீங்கள் வியக்கும் வகையில், பள்ளிக்கல்வித் துறையில்அறிவிப்பு வெளியாகவுள்ளது.எதிர்காலத்தில், நீங்கள்எதை சந்திக்க வேண்டுமோ, அதை சந்திக்கும் திறமை, உங்களுக்கு வரவேண்டும் என்பதற்காக, அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற இருக்கிறது. 'நீட்' தேர்வு கொள்கையில், அரசுக்கு மாற்றமில்லை.தமிழகத்தில் கொண்டு வரக்கூடாது என்பதில், அரசு உறுதியாக இருக்கிறது. பிளஸ் 1 தேர்வு குறித்து, நீங்கள் கவலைப்பட தேவையில்லை.சிறந்த கல்வியாளர்களாக உங்களை உருவாக்க, பல்வேறு பயிற்சிகள் அளிக்க, இந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, 450 இடங்களில் உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். நடுநிலைப்பள்ளி வரை, 220 நாட்கள் பள்ளி நாட்களாக உள்ளது.அதை, 210 நாட்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.இதய நிறைவு தியான பயிற்சியில், கோபி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, 31 பள்ளிகளைச் சேர்ந்த, 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு கலெக்டர் பிரபாகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரங்கில் அமர்ந்திருந்த மாணவர்களுடன் சேர்ந்து, தியானத்தில் ஈடுபட்டனர்.'அனைவரும் தேடி வருவர்'''பள்ளிக் கல்வியை தரம் உயர்த்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்னும் ஒரே ஆண்டில், அனைவரும் அரசு பள்ளிகளை தேடி வருவர்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பழநி முருகன் மலைக்கோவிலில், சாயரட்சை பூஜையில், சுவாமி தரிசனம் செய்த பின், அவர் கூறியதாவது:அரசு ஊழியர் குழந்தைகள் உட்பட அனைவரும், இன்னும் ஓராண்டில், அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் சூழ்நிலை ஏற்படும். அரசு பள்ளிகள் கூடுதலாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.