திங்கள், 31 ஜூலை, 2017

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி வரை காலக்கெடு: மத்திய அரசு


பான் எண்ணுடன் ஆதார் எண்ணைஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு காலக்கெடு நீட்டித்துள்ளது.ஆதார் எண்ணை இணைத்த பிறகே வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும் என்றும், 
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் அட்டை ரத்து செய்யப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், வருமான வரித் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், பான் எண்ணுடன்ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவசாகம் நீட்டிக்கப்பட்டுள்ளது.பான் எண் வைத்திருக்கும் ஏராளமானோர், இதுவரை ஆதார் எண்ணை இணைக்காததால், கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு, 30 ஜூலை, 2017

பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ள பதிவுகளை சரிபார்க்கத் தேவையான குறிப்புகள்.

*பணிப்பதிவேட்டில் விடுபட்ட விபரங்களை பதிவு செய்வது போல் இதுவரை பதியப்பட்ட விபரங்களை சரிபார்பது மிகவும் முக்கியமானது*

பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ள பதிவுகளில் உள்ள

1. ந.க. எண் / தேதி
2. வரிசை எண்
3. பதிவு எண்
4. வழங்கப்பட்ட தேதி
5. தேர்ச்சி பெற்ற தேதி
6.பணியேற்ற தேதி மற்றும் மு.ப/பி.ப
7.விடுவித்த தேதி மற்றும் மு.ப/பி.ப

*மேற்கண்ட அனைத்தையும் உங்களிடம் உள்ள சான்றிதழ்களுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பது மிகவும் அவசியம் ஆகும்*

💥 அதே போல் துறை சார் அலுவலரின் கையொப்பம் முத்திரை இல்லாத பதிவுகளை சுட்டிக்காட்டவும்.

💥 வாரிசுதாரர் பெயர்களை பதிவு செய்யும் பொழுது பின்புறம் இரண்டு ஆசிரியர்களிடம் சாட்சிக் கையெழுத்து வாங்கிய பின் தங்களின் கையொப்பத்தையும் செய்யவும்.

💥 ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு பெற்றதற்கான பதிவுகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டுள்ளதா?

💥 பணி நியமனம் பெற்றது முதல் 31.12.2016 வரை பணிப்பதிவேடு சரிபார்த்தல் என்ற பதிவு தொடர்ச்சியாக உள்ளதா...?

💥 ஈட்டிய விடுப்பு கையிருப்பை கணக்கீடு செய்ததில் தவறுகள் ஏதேனும் உள்ளதா..? (365÷21.47=?)

💥 அதே போல் உயர் கல்வி பயின்ற அனைத்து படிப்பிற்கும் பட்டயச்சான்றினை (கான்வகேசன்) பதிவு செய்வது அவசியம் ஆகும்.

📡📡📡📡📡📡📡📡

🔴 *பணிப்பதிவேட்டினை சரிபார்ப்பதற்கான check list -ஐ கொண்டு சரிபார்க்கும் பொழுது*

10th, 12th,

DTEd,

UG degree,
PG degree,
B.Ed,
M.phill/M.Ed,
போன்ற சான்றிதழ்களின் நகல்கள் (அனைத்திற்கும் பட்டயச்சான்று அவசியம்)

*{ இதுவரை பதிவு செய்யாத கல்வித் தகுதியினை பதிவு செய்ய ஒரிஜினல் சான்றிதழையும், பதியப்பட்டதை சரிபார்க்க நகலினையும் கொண்டுசெல்லவும் }*

🔴 துறை தேர்வு தேர்ச்சி பெற்ற ஆணை,

🔴 CPS / TPF எண்,

🔴 துறை முன் அனுமதி /பின் அனுமதி,

🔴 உண்மைத்தன்மை சான்றிதழ்கள்,

🔴 பணியேற்பு ஆணை,
பணிவிடுப்பு ஆணை,
மாறுதல் பெற்ற ஆணை,
பதவி உயர்வு பெற்ற ஆணை,
தகுதிகாண் பருவத்திற்கான ஆணை,

🔴 Pay commission Pay fixation / arrear/P.P ஆணை,

🔴 தேர்வுநிலை/சிறப்புநிலை பெற்றதற்கான ஆணை,

🔴 கற்பித்தல் பயிற்சி சென்றதற்கான ஆணை

🔴 இதுவரை ML, EL, halfpay, loss of pay, மகப்பேறு விடுப்பு,
& கருச்சிதைவு விடுப்பு எடுத்த விபரம்,

🔴 EL ஒப்படைத்த விபரம்,

🔴 இன்சென்டிவ் பெற்ற ஆணை,

🔴 அரசு கடன் பெற்ற ஆணை,

*மேற்கண்டவற்றில் தங்களிடம் உள்ள ஆணைகளின் நகல்கள் மற்றும் விபரங்களை வைத்து தங்களின் பணிப்பதிவேட்டினை சரிபார்க்கவும்.*

சனி, 29 ஜூலை, 2017

1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 16-ந்தேதி எழுத்து தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் 2017-2018-ம் ஆண்டுக்கான பல்தொழில்நுட்ப (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு 17-6-2017 முதல் 7-7-2017 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, 1 லட்சத்து 34 ஆயிரத்து 982 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான கல்வி தகுதியை எதிர்த்து சிலர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின்படி, கல்வித்தகுதியை திருத்தி அறிவிக்கை வெளியிட தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பின் அடிப்படையில், ஏற்கனவே 1,058 விரிவுரையாளர் (பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்கள்) பணியிடங்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிக்கை ரத்து செய்யப்பட்டு, புதிய அறிவிக்கை 28-ந்தேதி (நேற்று) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.

இணையதளம் மூலம் இன்று (சனிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 11-ந்தேதி ஆகும். ஏற்கனவே இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்தவர்கள் தற்போது புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை. அவர்கள் பதிவு செய்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த அறிவிக்கையின்படி, எழுத்து தேர்வு செப்டம்பர் 16-ந்தேதி நடைபெற உள்ளது.

ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி -இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர்

மன அழுத்தத்தை போக்க ஆசிரியர்களுக்கு அடுத்த மாதத்திற்குள் (ஆகஸ்டு) யோகா பயிற்சி அளிக்கப்படும் என்று இடை நிலைக்கல்வி திட்ட இயக்குனர் எஸ்.கண்ணப்பன் கூறினார். 
பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே யோகா வகுப்பு நடைபெற்று வருகிறது. பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களும் மன அழுத்தம் இன்றி இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் மாணவ-மாணவிகளுக்கு நன்றாக கல்வி கற்பிக்க முடியும். இதை கருத்தில் கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

யோகா பயிற்சி அளிப்பதால் ஆசிரியர்களுக்கு மன நலமும், உடல் நலமும் நன்றாக இருக்கும். இதற்காக யோகாவில் நிபுணத்துவம் பெற்ற சமுதாய சேவை மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 67 கல்வி மாவட்டங்களிலும் தலா 85 ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மொத்தம் 5 ஆயிரத்து 695 ஆசிரியர்கள் பயன் அடைவார்கள். இவர்கள் யோகா பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் ஆக இருக்கவேண்டும். மேலும் விருப்பம் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், சாரண ஆசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர்கள், தேசிய மாணவர் படை ஆசிரியர்கள், தேசிய பசுமைப்படை ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படும். பயிற்சி வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை 2 நாட்கள் நடைபெறும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி நாட்களில் யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அடுத்த (ஆகஸ்டு) மாதம் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் யோகா பயிற்சி முடிவடையும்.

இவ்வாறுஇடை நிலைக்கல்வி திட்ட இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.

7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல்படுத்தப்படும் அரசு ஊழியர் சங்கம் தகவல்

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கத்தினர் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். பின்னர் இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு அலுவலர் சங்கங்கள் இணைந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்து பேசினோம். அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அதில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வழங்க வேண்டும், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், தொழில் வரி ரத்துசெய்யப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை விரிவாக விவாதித்தோம்.

இடைக்கால நிவாரணம் குறித்து அரசு அதிகாரிகளுடன் பேசி முடிவு செய்வதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும், அதன் அறிக்கையை பெற்ற பிறகு, அந்த திட்டத்தை ரத்துசெய்வதற்கான வழிமுறைகளை தமிழக அரசு ஆராயும் என்று உறுதி அளித்துள்ளார்.

மாநிலத்துக்கான 7-வது ஊதியக்குழு அறிக்கைகளைப் பெற்று செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பரிந்துரைகளை அமல்படுத்துவதாகவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றுபவர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்கள் என அதுபோன்ற அனைத்துவகை பணியாளர்களையும் ஊதியக்குழுவுக்கு உட்படுத்தி அதன் அடிப்படையில் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதாகவும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. விரைவில் இதற்கான அரசாணைகளையும் அவர் பிறப்பிப்பார் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 28 ஜூலை, 2017

TNPSC GROUP 2 HALLTICKET PUPLISHED

CLICK HERE-DOWNLOAD HALL TICKET
Memorandum of Admission (Hall Ticket) for the Written Examination (Objective Type) to the Post of COMBINED CIVIL SERVICES EXAMINATION–II (2017-2018) (NON-INTERVIEW POSTS) (GROUP-II A SERVICES) 

மாணவர்கள் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடவும், குறைவான சேர்க்கை உள்ள பள்ளிகளை ஒன்றாக இணைக்கவும் மத்திய அரசு ஒப்புதல்

மத்திய அரசின் சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளிகளை பகுத்து, ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மாநிலங்களுக்காக மத்திய மனித வளத்துறைஅமைச்சகம் வகுத்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பிரதமர் மோடி, பள்ளிக் கல்வி துறைக்கு கட்டளைகள் பிறப்பித்துஇருந்தார்.அதன்படி, சில பள்ளிகளை உருவாக்கி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டநிலையில், அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். தேவைக்கு அதிகமான இருக்கும்பள்ளிகள், தேவைப்படும் இடங்களில் பள்ளிகள் என பகுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

தற்போது மாநிலங்களில் அதிகமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன, அருகருகே பள்ளிள் இருக்கின்றன, இதனால்,சில பள்ளிகளில் மாணவர்கள் இல்லாமலே செயல்பட்டு வருகிறது, சில பள்ளிகளில் குறைவான மாணவர்களே படித்து வருகிறார்கள். இதனால் பள்ளிகளை கண்காணிப்பதிலும், மேற்பார்வையிடுவதிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன.இதைப் போக்கும் வகையிலும், மனித வளத்தைசிறப்பாக பயன்படுத்தும் வகையிலும், மாணவர்கள் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடிவிட்டு, குறைவான மாணவர்கள் சேர்க்கை உள்ள பள்ளிகளை இணைக்க மத்தியமனித வளத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் 2.04 லட்சம் தொடக்கப்பள்ளிகளும்,1.59 லட்சம் உயர் தொடக்கப்பள்ளிகளும் 2015-16ம் ஆண்டுவரை தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 26 ஜூலை, 2017

பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்க தமிழக அரசின் 5 அறிவுரைகள் வெளியீடு.

வாகனங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பாக ஏற்றி இறக்கி, பெற்றோரிடமோ அல்லது அனுமதிக்கப்பட்ட நபரிடமோ சேர்க்கப்பட்டதை ஓட்டுநர் உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அறிவுரைகளைத் தமிழக அரசு வழங்கியுள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பள்ளிப்  பேருந்தில் பயணிக்கும் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அரசாணை எண் 727 (போ.வ.7) உள்துறை நாள் 30.09.2012 அன்று சிறப்பு விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நடப்பாண்டில் 28,615 பள்ளிப் பேருந்துகள் மாவட்டக் குழுவால் ஆய்வுசெய்யப்பட்டு, தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோ ரிக்‌ஷா, மேக்சி கேப் மற்றும் மோட்டார் கேப் வாகனங்களில் பயணிக்கும் பள்ளிக் குழந்தைகளின் நலனை முன்னிட்டு, அவ்வகை வாகனங்களுக்கு சில ஒழுங்குமுறைகள் போக்குவரத்துத்துறையில் சுற்றறிக்கை எண் 31/2012 நாள் 10.10.2012 வாயிலாக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:

 பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ரிக்‌ஷா, மேக்ஸிகேப் மோட்டார் கேப் போன்ற வாகனங்கள் உரிய வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பித்துப் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.

* வாகனங்களின் உரிமையாளர்கள் அல்லது ஓட்டுநர்களால் பதிவுசெய்யப்படுவதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தில், உரிய பள்ளியின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியரிடம் மேலொப்பம் பெற்றிருக்க வேண்டும்.

* இவ்வாகனங்களில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஏற்றிச் செல்லும்போது, அனுமதிக்கப்பட்ட இருக்கை அளவைவிட 1.5 மடங்குக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச் செல்லக்கூடாது.

* வாகனத்தின் முன்புறமும் பின்புறமும் ‘On School Duty’ என ஆங்கிலத்திலும் "பள்ளிப் பணிக்காக" எனத் தமிழிலும் எழுதப்பட்ட பலகை பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

* வாகனங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பாக ஏற்றி இறக்கி, பெற்றோரிடமோ அல்லது அனுமதிக்கப்பட்ட நபரிடமோ சேர்க்கப்பட்டதை ஓட்டுநர் உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும், பள்ளிக் குழந்தைகள் பாதையைக் கடந்துசெல்வதற்கு உதவிட வேண்டும்.

மேற்படி அறிவுரைகள், போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களால் செயலாக்கம் செய்யப்பட்டும் தவறு நடக்கும் பட்சத்தில், வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பள்ளி முதல்வர்கள், பெற்றோர்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பள்ளிக் குழந்தைகளை வாகனங்களில் அழைத்துச் செல்லும்போது, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்திட, மேற்கண்ட அறிவுரைகளைத் தவறாது பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 25 ஜூலை, 2017

நெல்லைக்கு வரும் மற்றொரு பொக்கிஷம்... வரவேற்றுமகிழும் நெல்லை இளைஞர்கள்....

நெல்லைக்கு வரும் மற்றொரு
பொக்கிஷம்...
வரவேற்றுமகிழும் நெல்லை இளைஞர்கள்....

யார் இந்த elam bahavath k

வேலைக்காக காத்திருந்து சலித்து வேலை வாங்கும் இடத்தில் அமர வேண்டும் என்ற கனவால் IAS ஆன எடுத்துக்காட்டு இளைஞன்......

தமிழ் மொழிப்பற்றாளர்....
நேர்மை வழி தவறாதவர்....
தஞ்சை மண்ணுக்கு சொந்தக்காரர்.....
விகடன் 2016 10 சிறந்தவர்கள் பட்டியலில் இடம் பெற்ற ஒருவர்

இளம்பகவத்தின் சொந்த கிராமம், சோழன்குடிகாடு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் இருக்கும் சிறிய கிராமம். படித்தது எல்லாம் அரசுப் பள்ளி, தமிழ்வழிக் கல்வி. சென்ற வாரம் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் இளம்பகவத்தின் அகில இந்திய ரேங்க் 117. `இதில் என்ன விசேஷம் இருக்கிறது?’ எனத் தோன்றலாம். இளம்பகவத் ஏன் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதினார் என்ற காரணம்தான் இதற்கான விடை.
இளம்பகவத் ஒரு சாதாரண விவசாயக் குடும்பப் பிள்ளை. இவருடைய அப்பா கந்தசாமி, சோழன்குடிகாடு கிராமத்தின் முதல் பட்டதாரி. பல்வேறு சமூக இயக்கங்களில் தீவிர ஈடுபாடுகொண்டவர். வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர். நேர்மையாகவும் உண்மையாகவும் பணிபுரிந்த ஓர் அரசு ஊழியர். இளம்பகவத்தின் தாயாரும் ஒரு பொதுவுடமைப் போராளி. உழைக்கும் பெண்களின் நலனுக்காக, தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் பங்கெடுத்தவர். இப்படி ஒரு நல்ல சூழலில் வளர்ந்தவர் இளம்பகவத்.
ப்ளஸ் டூ நேரத்தில் இளம்பகவத்தின் அப்பா உடல்நலம் இன்றி இறந்துபோனார். ஒற்றை நபர் வருமானத்தில் இயங்கிய குடும்பம் தடுமாறி நின்றது. ப்ளஸ் டூ-வுடன் தன் படிப்பை நிறுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் இளம்பகவத்துக்கு.
அரசுப் பணியில் இருப்பவர் இறந்துபோனால் அவரது வாரிசு ஒருவருக்கு, கருணை அடிப்படையில் கொடுக்கப்படும் அரசுப் பணியை தனக்கு வழங்கிடக்கோரி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார் இளம்பகவத். இது நடந்தது 1998-ம் ஆண்டு. ஓர் ஆண்டு காலம் கடந்தும் எதுவும் நடக்கவில்லை. சான்றிதழ்கள் அரசாங்க அலுவலக பீரோக்களில் முடங்கியதால் கல்லூரியிலும் சேர முடியவில்லை. திடீரென அழைப்பு வரும். குறிப்பிட்ட ஒரு சான்றிதழைப் பெற்றுத்தரச் சொல்வார்கள். அவசர, அவசரமாக அதைத் தயார்செய்துகொண்டு ஓடுவார். மீண்டும் காத்திருக்கச் சொல்வார்கள். அரசு அலுவலகங்களில் காத்திருப்பது இளம்பகவத்துக்கு தினசரி வேலையானது. வேலை மட்டும் கிடைக்கவே இல்லை.
தன் தந்தை கற்றுக்கொடுத்த நேர்மை இவரை மாற்றுவழிகளுக்கு இட்டுச்செல்லவில்லை. சில ஆயிரங்கள் கொடுத்திருந்தால், இவருக்கு வேலை கிடைத்திருக்கும். ஆனால், அதற்கு இவர் தயாராக இல்லை. தனக்கான உரிமைக்காக ஒவ்வொரு நாளும் போராடினார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நீண்ட வராண்டா இவருடைய வசிப்பிடமாக மாறியது. அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு இந்தப் போராட்டம் தொடர்ந்தது.
‘`வாரிசு அடிப்படையிலான கருணைப் பணிக்கு, எனக்கு முன்னும் பின்னும் 18 பேர் காத்திருந்தனர். சிலர், இடையில் புகுந்து குறுக்கு வழியில் வேலை வாங்கிச்சென்றனர். எங்களுக்குப் பிறகு வந்த அவர்களுக்கு எப்படி வேலை கிடைத்தது என்ற கேள்விக்கு, யாரிடமும் பதில் இல்லை. வேலை கிடைக்காமல் காத்திருந்த நாங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஆலோசனை நடத்தினோம். அப்போதுதான் நாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்தோம்’’ என்று அந்தக் கொடும் தினங்களை நினைவுகூர்கிறார் இளம்பகவத்.
ஒருகட்டத்தில் சலித்துப்போனவர், மாவட்ட ஆட்சியர் தொடங்கி உயர் அதிகாரிகள் வரை சகலரையும் பார்த்து புகார் மனு கொடுக்க ஆரம்பித்தார்.
‘`நாம் யாரைப் பற்றி புகார் கூறுகிறோமோ, அவரிடமே அந்தப் புகார் மனு போய்ச்சேரும். ஒரு மாதம் கழித்து மட்டித்தாளில் ஒரு பதில் வரும். `உங்கள் கோரிக்கை பரிசீலனையில் இருக்கிறது’. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முதல் தலைமைச் செயலகம் வரை இதே அனுபவம்தான். ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் எல்லாமே மிக மோசமானவை’’ என்கிறார் இளம்பகவத்.
அப்பாவின் நிலத்தில் விவசாயம் பார்த்து அதில் கிடைத்த வருமானத்திலும், அப்பாவின் சிறிய பென்ஷனிலும்தான் குடும்பம் நகர்ந்துகொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித்தவித்தது. இரண்டு சகோதரிகளுக்கும் திருமண வயது வந்துவிட, அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கவேண்டிய நிலை. இதற்கு நடுவில் 2001-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ (வரலாறு) படித்து பட்டம் பெற்றார் இளம்பகவத்.
2005-ம் ஆண்டு வாக்கில் இந்தப் போராட்டம் இளம்பகவத்துக்கு சலிப்பை உண்டாக்கத் தொடங்கியது. இனி எதுவுமே நடக்காது; வேலை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தார். `இந்த வேலை வேண்டாம், இந்த முயற்சிகள் போதும்’ என நினைத்தார்.
`இனி இந்த அலுவலகத்துக்குத் திரும்பி வந்தால், இவர்களிடம் வேலை கேட்டு வரக் கூடாது. வேலை வாங்குகிறவனாகத்தான் வரவேண்டும்’ எனத் தீர்மானித்தார். அப்போது இளம்பகவத்தின் மனதுக்குள் விழுந்ததுதான் ஐ.ஏ.எஸ் கனவு. ஆனால், அதுவும் அத்தனை சுலமாக நிறைவேறிவிடவில்லை.
‘`என் லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ளும் பயணம் நீண்டது என்பதை நான் அறிந்திருந்தேன். அதற்காக என் குடும்பத்தை பத்து ஆண்டுகளுக்கு வறுமையில் வைத்திருக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால் ஏதாவது ஓர் அரசு வேலையில் சேர்ந்துவிட்டு அங்கிருந்து ஐ.ஏ.எஸ் ஆவது என முடிவு எடுத்தேன்’’ என்கிறார் இளம்பகவத்.
2007-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு எழுதினார். அதில் வெற்றிபெற்று காவல் துறை அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர் பதவி ஏற்றார். அடுத்த ஆறு மாதங்களில் குரூப்-2 தேர்வு எழுதி, சென்னை தலைமைச் செயலகத்தில் உதவியாளர் ஆனார். அங்கு இருந்து உள்ளாட்சி நிதி உதவி தணிக்கை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். இதற்கு நடுவில் 2010-ம் ஆண்டில்
குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்று, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பணியில் சேர்ந்தார். 2011-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆனார். 2014-ம் ஆண்டு சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றிபெற்றபோது ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய் பணி) பணி கிடைத்தது. இதற்கு இடையே, மீண்டும் டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 தேர்வில் வெற்றிபெற்று போலீஸ் டி.எஸ்.பி பணி கிடைத்தது. அடுத்த ஆறு மாதங்கள் டி.எஸ்.பி பயிற்சியில் இருந்த இவர், அதன் பிறகு ஹரியானா மாநிலத்தில் உள்ள நேஷனல் அகாடமி ஆஃப் கஸ்டம்ஸ் அண்ட் எக்சைஸ், நார்காட்டிக்ஸ் மையத்தில் பயிற்சியில் சேர்ந்தார். இப்படி 2007-ம் ஆண்டு தொடங்கி 2016-ம் ஆண்டு வரை ஏழு அரசு அலுவலகங்களில் பணியாற்றினார் இளம்பகவத். ஒரே ஓர் அரசுப் பணிக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்த இவரை நோக்கி விதவிதமான அரசுப் பணிகள் தேடிவந்தன. ஆனால், அவரது லட்சியம் அது அல்ல… ஐ.ஏ.எஸ்!
2005-ம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸஸ் தேர்வை அவர் எழுதிக்கொண்டே இருந்தார். இதுவரை மொத்தம் ஐந்து முறை நேர்முகத் தேர்வு வரை சென்று வந்துள்ளார். ஆனால், ஒருமுறைகூடத் தகுதி பெறவில்லை. இருந்தும் மனம் தளரவில்லை. ஒருவழியாக இந்த ஆண்டு தன் கனவை எட்டிவிட்டார். அகில இந்திய அளவில் 117-வது ரேங்க் பெற்றிருக்கும் இளம்பகவத், சிவில் சர்வீஸஸ் தேர்வை, தமிழில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘`நான் ஆண்டுக்கணக்கில் கிடையாய்க் கிடந்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். இப்போது அந்த இடம் அருங்காட்சியகமாக மாறிவிட்டது. அதன் நீண்ட வராண்டாவில் அமர்ந்திருந்தேன். எத்தனையோ நாட்கள், வாரங்கள், ஆண்டுகள் அங்கே அமர்ந்திருக்கிறேன். காத்திருந்து காத்திருந்து சலித்திருக்கிறேன். ஆனால், இப்போது நான் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன். அதற்குக் காரணம் இந்த இடம்தான். ஒருவேளை அன்று எனக்கு என் அப்பாவின் வேலையைக் கொடுத்திருந்தால், நான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா எனத் தெரியவில்லை. அன்று நான் சந்தித்த அவமானங்களும் வலிகளும்தான் என்னை இங்கு கொண்டுவந்திருக்கின்றன’’ எனப் புன்னகைக்கிறார் இளம்பகவத்.
இளம்பகவத், தன் திறமையை தனக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்பவர் அல்ல; ஊருக்காக உழைக்கும் பொதுவுடைமை வாழ்க்கைமுறையைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர், மற்றவர்களுக்காகவும் சிந்திப்பவர்.
தன் கிராமத்தில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்து பல ஆண்டுகளாக வைத்திருக்கிறார். தானும் தன் நண்பர்களும் படிப்பதற்காக வாங்கிய அத்தனை நூல்களையும் இந்த அறையில் வைத்திருக்கிறார். இவற்றை போட்டித் தேர்வுகளுக்கு முயற்சிசெய்யும் எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
‘`அந்த அறைக்கு எத்தனை சாவிகள் இருக்கின்றன என்றுகூட எனக்குத் தெரியாது. வாடகை மட்டும் கொடுத்து விடுவோம். கூடவே வேண்டிய நூல்களையும், படிப்பதற்கான உதவிகளையும் செய்வோம்’’ என்கிறார் இளம்பகவத். இன்று 30-க்கும் அதிகமான இளைஞர்கள் இவருடைய படிப்பகத்தின் மூலம் படித்து அரசுப் பணிகளில் இருக்கிறார்கள்.
‘`நாம் கற்கும் கல்வி, பகிர்தலைத்தான் நமக்குக் கற்றுத்தருகிறது. நாம் செய்ய வேண்டியதும் அதைத்தான்’’ எனப் புன்னகைக்கிறார் இளம் ஐ.ஏ.எஸ் இளம்பகவத்!

இந்த இளம் பகவத் தான் நெல்லைக்கு உதவி ஆட்சியராக பயிற்சிக்கு வந்துள்ளார் வரவேற்க தயாரா

பள்ளிக்கல்வித்துறை வலைதளத்தில் உங்கள் பள்ளி விவரங்கள் பதிவேற்றும் வழிமுறைகள் - செயல்முறைகள்


கல்வித்துறையில் மாதம் 2 புதிய திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் வகையில், கல்வித் துறையில் மாதந்தோறும் 2 புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு மாவட்டம் கோபியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
அரசு நடுநிலைப் பள்ளிகளில், முதல் கட்டமாக 3 ஆயிரம் பள்ளிகளில், ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையிலும், மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவும், ஒன்றிய மற்றும் நகராட்சி அளவில் பயிற்சி மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாவட்ட நூலகங்களில் பயிற்சி அளிக்கப்படும். எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்க, பள்ளிக் கல்வித்துறையில் மாதந்தோறும் 2 புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் என்றார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 700 டெக்னிக்கல் உதவியாளர், கள உதவியாளர்கள் வேலை

பள்ளிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாடவேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

வந்தே மாதரம் பாடலை அனைத்து கல்வி நிலையங்களிலும் கட்டாயம் பாட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் எனவும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திங்கள், 24 ஜூலை, 2017

ஊழியர்களின் பணிப்பதிவேடு 'டிஜிட்டல்' ஆக்கும் பணி முடிந்தவுடன், புதிய 'இ-பேரோல்' செயல்படுத்தப்படும்

அரசு ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய நடைமுறைப்படி 'இ-பேரோல்' மென்பொருளில் ஊழியர்களின் ஊதியம், பணப்பலன் பட்டியல் பதிவு செய்யப்பட்டு,கருவூலத்திற்கு சி.டி.,யாகவும், 'பிரின்ட்' படிவமாகவும் அனுப்பப்பட்டு வருகிறது. இதில், தாமதம் ஏற்படுவதோடு, காகித பயன்பாடும் அதிகமாக உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் புதிய 'இ-பேரோல்' மென்பொருள் கொண்டு வரப்பட உள்ளது. இதில் ஊதியம், பணப்பலன் பட்டியல் தயாரித்து 'ஆன்லைன்' மூலமே கருவூலத்திற்கு அனுப்பப்படும்.இதற்காக வரைவு அலுவலர்கள், இளநிலை உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது மென்பொருளை கம்ப்யூட்டரில் ஏற்றுவதற்காக கருவூலகங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. பெரும்பாலான கம்ப்யூட்டர்கள் பழையதாகவும்,'மெமரி' குறைவானதாகவும் உள்ளன. இதனால் அவற்றில் புதிய மென்பொருளை ஏற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கருவூல அதிகாரி ஒருவர் கூறியதாவது: வரைவு அலுவலர், பட்டியல் தயாரிக்கும் ஊழியர்களுக்கு தனித்தனியாக இரண்டு கம்ப்யூட்டர்கள் வேண்டும். மேலும் புதிய 'இ-பேரோல்' மென்பொருள் இயங்குவதற்கு 4 ஜி.பி., 'ரேம்' வேண்டும். இதனால் பழைய கம்ப்யூட்டர்களை மாற்றிவிட்டு, புதிதாக வாங்க அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஊழியர்களின் பணிப்பதிவேடு 'டிஜிட்டல்' ஆக்கும் பணி முடிந்தவுடன், புதிய 'இ-பேரோல்' செயல்படுத்தப்படும் என்றார்.

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பொது தேர்வு

5 மற்றும் 8 வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறை, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் விரைவில் ரத்து செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி தொடர்பான விவாதக் கூட்டத்தில், அவர் மேலும் பேசியதாவது:

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மே மாதத்தில் மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்விலும், தோல்வியடையும் மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியாது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு 25 மாநிலங்கள் ஒப்புதல் அளித்து விட்டன. 8-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், 9-ஆம் வகுப்புக்குச் செல்வதை அனுமதிக்க முடியாது. 5 மற்றும் 8-ஆம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களை, அதே வகுப்பில் நிறுத்தி வைப்பதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படும்.

இதற்காக, அனைத்து மாநிலங்களின் கல்வித் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.கல்வி உரிமைச் சட்டப்படி, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை எந்த மாணவரையும் தேர்ச்சிபெறவில்லை என்று கூறி நிறுத்தி வைக்க முடியாது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்த முடிவால் மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.பெரும்பாலான அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை தேர்வுகளே நடத்தப்படுவதில்லை. கிட்டத்தட்ட மதிய உணவுபள்ளிகளாகவே அவை இயங்குகின்றன. காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள், மதிய உணவு சாப்பிட்ட பிறகு வீட்டுக்குச் சென்று விடுகிறார்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கச் செய்யும் வகையில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.மத்திய அரசைப் பொருத்தவரை கல்வி என்பது தேசியக் கொள்கையாகும். அதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

சான்றிதழ்களின் உண்மைத்தன்மையின் காலதாமதத்தை தவிர்க்க Online முறை அறிமுகம்!

அரசுத் தேர்வுத் துறையில்  உண்மைத் தன்மை (geniuness) பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் வகையில் online முறை கொண்டுவரப்பட உள்ளது.அந்தந்த Drawing officers தங்களது password மூலம் பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம்.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது