புதன், 22 நவம்பர், 2017

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த ஐகோர்ட் உத்தரவு!

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதி குறித்து திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து பினாக பாணி என்பவர் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும்அடிப்படை வசதி குறித்து திடீர் ஆய்வு நடத்த வேண்டும்என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2004-ம் ஆண்டு கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கையின் படி, சம்பவத்திற்கு காரணமானவர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதேபோல தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும், 2002-2004 வரை மாவட்ட கல்வி அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வகித்த பினாகபாணி, தீ விபத்துக்குள்ளான பள்ளியை ஆய்வு செய்ய தவறி விட்டதாக கூறி அவரை பணிநீக்கம் செய்து 2012-ல் பள்ளி கல்விதுறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இந்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும், தனக்கு பணி பயன் வழங்க வேண்டும் என கோரியும் உயர்நீதிமன்றத்தில் பினாகபாணி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை நீதிபதி முரளிதரன் விசாரித்தார். அப்போது, மனுதாரரை மட்டுமே குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அரசு சார்பில், தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்படி பள்ளியை ஆய்வு செய்யமனுதாரரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் பள்ளியை முழுமையாக ஆய்வு செய்யாமல் மெத்தன போக்குடன்செயல்பட்டதால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும் 12 அதிகாரிகளின் மேல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் 6 பேர் மீது குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை, 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரருடன் பணியாற்றிய 5 பேர் நடவடிக்கையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 இவருக்கு முன் பணியாற்றிய தலைமை கல்வி அதிகாரி தான் அந்த பள்ளிக்கு அங்கீகாரம்வழங்கியுள்ளார். அதனால் இவர் மீதான நடவடிக்கை தன்னிச்சையானது. அதனால் இவரை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, 8 வாரங்களுக்குள் இவரை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராக கருதி, இவருக்கு சேர வேண்டிய பண பலனை வழங்க உத்தரவிட்டார்.மேலும், கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்றாலும் அதில் பாதுகாப்பான முறையில் கல்வி பெறுவது அடங்கும்.

பள்ளிகள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என கருத்துதெரிவித்த நீதிபதி விதிகளின்படி அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் வழங்க பெற்றுள்ளதா எனஅரசு திடீர் சோதனை நடத்த வேண்டும். விதிமீறல்கள் இருந்தால் அந்த பள்ளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் சொத்துக்களான குழுந்தைகளுக்கு பாதுகாப்பன சூழ்நிலையை வழங்க வேண்டியது அரசின் கடமை எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

சனி, 18 நவம்பர், 2017

தலைமை ஆசிரியர்களுக்கு எகிறும் சம்பளம் : கூடுதல் பொறுப்பு வழங்க அரசு திட்டம்

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், 1.25 லட்சம் ரூபாய் சம்பளம் பெற உள்ளனர். அதனால், அவர்களுக்கு கூடுதல் பணி வழங்க, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில், 57 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், 1.30 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளில், 5.58 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆறு லட்சம் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதை கணக்கிடும் போது, அதிகபட்சமாக, 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் உயர்ந்துள்ளது. இதைக் கண்டு, அதிகாரிகளே அதிர்ச்சியில் உள்ளனர். இத்துறையின் அதிகாரிகளுக்கே, அதிகபட்சம், 90 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் கிடைக்கும் நிலையில், தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுவது, பள்ளிக்கல்வி, நிதித்துறை அதிகாரிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இந்த சம்பள உயர்வால், அரசுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில், தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கலாம் என, ஆலோசனை நடந்து வருகிறது.
நகர, ஊரக பகுதிகளில், மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, கூடுதலாக சில பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் இணைத்து வழங்கலாமா அல்லது கல்வி அலுவலக பொறுப்புகளை பகிர்ந்தளிக்கலாமா என, ஆலோசனை நடந்துள்ளது.
அதேபோல், மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கும், கூடுதல் பாட வகுப்புகள் மற்றும் சிறப்பு பயிற்சி பணிகள் வழங்குவது குறித்து, அதிகாரிகள் பரிசீலினை செய்வதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

கற்றல் விளைவுகள் பயிற்சி ஒத்திவைப்பு

G.O Ms 224 - 04.11.2017 - பொது நிகழ்ச்சிகள் மற்றும் வெளி நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்லுதல் குறித்து -சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டலின் படி பள்ளிக்கல்வி துறைக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு

சனி, 11 நவம்பர், 2017

NAS 2017 - தேர்வு (13/11/2017) அன்று ஆசிரியர்களின் பணிகள்

+ Date: 13/11/2017

+ Shambling schools HM BRC யில் வினாத்தாள் வாங்கி செல்ல வேண்டும்

+ Survey யின் போது ஆசிரியர் & மாணவர் 100% வருகை தரவேண்டும்


+ Field Investigaters பணிகள்
1) தேர்வை நடத்துவது
2) 3 க்கும் 5 க்கும் OMR sheets நிரப்புவது
3) ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் Interview எடுத்து பதிதல்


+ தயார்நிலையில் இருக்க வேண்டியவை:
1) பள்ளியின் U-DISE NO
2)மாணவர்களின் DOB /ஆதார் என் / சேர்ந்த ஆண்டு / Community / special need

+ NAS questioner ஐ போட்டோ /Xerox /எடுப்பதும் what's app ல் அனுப்புவதும் தடை செய்யப்பட்டு உள்ளது

+ உதவுவோரும் உரியோரும் தண்டிக்கப் படுவர்

+ Monitoring officers:
DEE / DSE / SCERT / NCERT / MHRD அலுவலர்கள்

+ Supervising Flying squad:
BDO / REVENUE துறை அலுவலர்கள்

+ FIELD INVESTIGATER :
B.Ed பயிற்சி மாணவர்கள்

+ Portion: ஆங்கிலம் தவிர்த்த பிற பாடங்கள்