வியாழன், 8 மார்ச், 2018

முன்மாதிரி அரசுப்பள்ளி ஆசிரியர் தங்கராஜ்....


திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சரகம் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் திரு. தங்கராஜ் அவர்கள் ஒரு முன்மாதிரி ஆசிரியராகத் திகழ்கிறார். அன்னாரை இன்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.பள்ளியில் பயிலும் மாணவர்கள் அன்னாரின் மீது கொண்ட அன்பும்  பற்றும்  மெய்சிலிர்க்க வைத்தது. அனைத்து மாணவர்களையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தினை மிக சரளமாக வாசிக்க வைத்துள்ளார். கணிதப்பயிற்சி செய்யும் முறை வெகுவாக கவர்ந்தது. பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறை முழுவதும் பாடம் சம்பத்தப்பட்ட ஓவியங்கள், பொதுஅறிவு  மற்றும் வாழ்வியல் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது .. திறன் வகுப்பறை(SMART CLASS) மூலம் பாடங்களை நடத்துகிறார். அவரிடம் பேசும்போது அனைத்துமே  பள்ளி வளர்ச்சி குறித்தே  பேசினார். எந்த அளவிற்கு பள்ளியையும் தன் மாணவர்களையும் நேசிக்கிறார்  என்பது அவரின் பேச்சிலேயே புரிந்தது.(மதிய உணவினை மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்துதான் உண்கிறார் ) புளியம்பட்டி பள்ளிக்கு கிடைத்த தங்க ஆசிரியர்  அன்பு நண்பர் தங்கராஜ் என்றால் அது மிகையாகாது.அன்னார் மென்மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறோம்.