Aided School Teachers Association(ASTA) Reg.No 15/2015 J.THOMAS 9585577005 R.BALASUBRAMANIAN 9585656575 L.BHASKAR 9345658249
வியாழன், 31 ஆகஸ்ட், 2017
பான் - ஆதார் எண்ணை இணைக்க டிச.31 வரை காலக்கெடு நீட்டிப்பு
தொடக்க கல்வி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்
பயிற்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்து பேசியதாவது:–
மத்திய அரசு கொண்டு வரும் தேர்வுகள் எதுவாக இருந்தாலும் அந்த தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில், அவர்களுக்கு 54 ஆயிரம் வினா–விடைகள் அடங்கிய புத்தகம் வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கணினி மயமாக்கப்படுகிறது. அனைத்து பள்ளி மாணவ–மாணவிகளுக்கும் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்பட உள்ளது. ஸ்மார்ட் கார்டில் மாணவர்கள் பற்றிய முழுவிவரங்கள் இருக்கும். ஸ்மார்ட் கார்டுடன் ‘சிம்’ பொருத்தி வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இந்த பயிற்சி மையங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இருப்பார்கள். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நூலகங்களிலும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
புதிய பாடத்திட்டம் 3 ஆண்டுகளில் முழுமையாக செயல்படுத்தப்படும். புதிய பாடத்திட்டம் மூலமாக நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் திறனை மாணவர்கள் பெறுவார்கள். இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
பயிற்சி முகாமில் தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழக பேராசிரியர் குமார் சுரேஷ், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் நந்தகுமார், தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
புதன், 30 ஆகஸ்ட், 2017
பான் எண்ணுடன் ஆதார் இணைக்க நாளையே கடைசி... எஸ்.எம்.எஸ் மூலம் எளிய வழி
மாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர்கள் தெரிந்துகொள்ள விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்-பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டில் ஒரு சிம் ஒன்றை பொருத்தியிருக்கிறது. இதன் மூலம் பள்ளிக்கு வரும் மாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வருவதற்கு முதல்வர் அவர்கள் 110 விதியின் கீழ் அறிவித்திருக்கிறார்கள்.
இதனால் அதன் பணிகள் விரைவில் நடைபெறும். அதேபோல் ஏரத்தாழ 6,029 பள்ளிகள் அனைத்திலும் கம்ப்யூட்டர் மயம் ஆக்கப்பட்டு, மாணவர்களுக்கு சிறந்த கல்வி தரவும் இந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்காக ஏறத்தாழ ரூ.462 கோடி நிதிஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசை பொறுத்தவரையில் புதிய புதிய திட்டங்கள் கொண்டு வந்து தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு திடீரென அறிமுகப்படுத்தும் புதிய தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் ஏறத்தாழ 54000 கேள்விகள், வரைபட த்துடன் அதற்குள்ள விடைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்க நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறோம்.
உயர்மட்ட குழுவின் ஆலோசனையை பெற்ற பிறகு, முதன்மை பள்ளி கல்வித்துறை செயலர், இயக்குநர் உள்ளிட்டோருடன் கலந்து பேசி அதன் பிறகு 1 மாத காலத்தில் வெளியிடப்படும். அந்த வெளியீடு மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் என்றும், எந்த பொதுத் தேர்வு வந்தாலும் மாணவர்கள் அதை எதிர்கொள்ளும் அளவில் வழிகாட்டியாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுபோல் எந்த தேர்வாக இருந்தாலும் அதை சந்திப்பதற்கு 412 இடங்களில் புதிய மையங்கள் அமைக்கப்பட்டு விடுமுறை நாளாக இருக்கும் சனிக்கிழமை அன்று ஏறத்தாழ 3 மணி நேரம் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சிறந்த பயிற்சியாளரை தேர்வு செய்து பயிற்சி அளிக்க இருக்கிறோம்.
ஆதார்-கெடு நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு
வரும் டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு-மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல்.
ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குககளும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் நவம்பர் முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்தது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இவ்வாறு தெரிவித்தது. முதலில், ஆதார் தொடர்பான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை வழங்கிய பின்னர் இந்த வழக்குகள் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் கூறினர். அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், “பல்வேறு சமூக நலத்திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை வரும் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தது.
ஏற்கெனவே, ஆதார் தொடர்பான வழக்கில் அந்தரங்க தகவல்கள் அடிப்படை உரிமை என கடந்த வாரம் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நிலையில் ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் -உதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நீடிக்கிறார்.
கூடுதலாக முதன்மை செயலர் பதவியை உருவாக்கி அந்த பொறுப்புக்கு பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், தமிழக பள்ளிக்கல்வி செயலர் உதயச்சந்திரன், அவருடைய பொறுப்பில் நீடிப்பார் என்றும், பிரதீப் யாதவுக்கு கீழ், உதயச்சந்திரன் பணியாற்றுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு துறைக்கு இரண்டு செயலர் என்ற விநோத நடவடிக்கையை தமிழக அரசு அறிவித்துள்ளது. உதயச்சந்திரன் கல்வி துறையில் பல்வேறு புரட்சிகர திட்டங்களை அறிவித்து வந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வியாழன், 24 ஆகஸ்ட், 2017
புதன், 23 ஆகஸ்ட், 2017
2020 ம் ஆண்டுக்குள் புதிய பாடத்திட்டம் -பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் உதயச்சந்திரன்.
* 2020 ம் ஆண்டுக்குள் புதிய பாடத்திட்டம்
*2018 ம் ஆண்டில் 1,6,9,11 ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும்
*2019 ம் ஆண்டில் 2,7,10,12 வகுப்புகளுக்கும்
*2020 ம் ஆண்டுக்குள் 3,4,5,8 ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும்-அரசு
வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017
ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017
பாலியல் புகார் வந்தால் கடும் நடவடிக்கை! - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை
பாலியல் புகார்களுக்கு ஆளாகும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பல இடங்களில் ஆசிரியர்கள் மீதான பாலியல்புகார்கள் அதிகரித்து வருகின்றன. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோது,ஒருசில ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களால் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.அதனால், பாலியல் புகார்களுக்கு ஆளாகும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஆசிரியர்கள் தங்கள் பணியைச் சிறப்பாக செய்துவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த அம்மாபேட்டையில் உடற்கல்வி ஆசிரியர் மீது பாலியர் புகார் எழுந்தது. எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சனி, 12 ஆகஸ்ட், 2017
Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade - I - 2016 - 2017 PUBLICATION OF EXAMINATION RESULTS
College Road, Chennai-600006
|
Direct Recruitment of
Post Graduate Assistants for the year 2016 - 17
EXAMINATION RESULTS AND PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST
|
|
|
Dated:
11-08-2017
|
Chairman
|
வியாழன், 10 ஆகஸ்ட், 2017
செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017
கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து வரும் 12-ம் தேதி விவாதிக்கத் தயார்: அமைச்சர் செங்கோட்டையனுக்கு அன்புமணி அழைப்பு
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து தம்முடன் விவாதம் நடத்தத் தயாரா? என்று அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்திருந்த நிலையில், அதையேற்று அவருடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தேன். அதன்படி விவாதத்திற்கான நாளையும், இடத்தையும் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அமைச்சர் அதை விடுத்து விவாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் நாங்களே செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார்.
பள்ளிக்கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதும், சவால்களை எதிர்கொள்வதும் பாமகவுக்கு புதிதல்ல. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி என்ற பதத்தையே ராமதாஸ்தான் 20 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கி, தமிழகத்தில் அதை நடைமுறைப்படுத்துவதற்கு காரணமாக இருந்தார். 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5,6,7 ஆகிய தேதிகளில் சென்னையில் இன்றையத் தேவைக்கு ஏற்ற கல்வி முறை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்திய பாமக, அதில் 24 முன்னாள் துணைவேந்தர்களை அழைத்து பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி குறித்து விவாதித்தது.
அதுமட்டுமின்றி பள்ளிக்கல்வி: இன்றையத் தேவைக்கேற்ற கல்வி முறை என்ற தலைப்பில் ஆவணம் தயாரித்து வெளியிட்டோம். இந்த ஆவணத்தை அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன்சிங் உள்ளிட்டோரிடம் ஒப்படைத்து கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி வலியுறுத்தியது.
ஆனால், செங்கோட்டையன் அங்கம் வகிக்கும் அதிமுக அரசு தமிழகத்தில் கல்வித்துறைக்கு செய்த சேவை என்ன? என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க அவருடனான விவாதம் உதவியாக இருக்கும். தமிழகத்திலுள்ள பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டு வந்த நிலையில், மெட்ரிகுலேஷன் பள்ளிகளை அனுமதித்து கல்வியை கடைச் சரக்காகவும், தரமற்றதாகவும் மாற்றியது அதிமுக தான். இப்போதும் கூட பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றவுடன், சொந்த வருவாயை பெருக்கிக் கொள்வதற்காக நடத்திய ஆசிரியர்கள் இடமாற்ற ஊழலால் பின்தங்கிய மாவட்டங்களில் ஏழைகளின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக கலந்தாய்வு மூலம் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும்போது அனைத்துப் பள்ளிகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.
எனினும், செங்கோட்டையனும், அவருக்கு முன்பு இருந்த அமைச்சர்களும் ரூ. 5 லட்சத்தை அளவீடாகக் கொண்டு இடமாற்ற ஆணைகளை வழங்கியதால் ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும், வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளிலும் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் 60% காலியாக உள்ளன. அதேநேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, ஈரோடு, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளனர். இதனால் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன.
இவை குறித்து விவாதிப்பதுடன், தமிழகத்தின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும் தெரிவிக்க இந்த விவாதம் சிறந்த வாய்ப்பாக அமையும். இவ்விவாதத்தை ஆக்கபூர்வமான வகையில் நடத்த வேண்டும் என்பது தான் எனது விருப்பம். அதன்படி, அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டவாறு வரும் 12-ம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை விவாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் இந்த விவாதம் நடைபெறும்.
இதையேற்று இவ்விவாதத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன். செங்கோட்டையன் தேவையில்லாத வேறு சில விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார். அவர் விரும்பினால் அதுகுறித்தும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்விவாத நிகழ்ச்சியை மக்கள் பார்த்து அறிய வசதியாக தொலைக்காட்சிகளில் தொடர் நேரலையாக ஒளிபரப்புவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் பயிற்சிபெற 54 ஆயிரம் கேள்விகள் அடங்கிய சி.டி வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சென்னை வட்டார பண்பாடு, தொன்மை என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
பள்ளி மாணவர்களுக்கு 3 விதமான சீருடைகள் வழங்கப்படும். வரும் காலங்களில் 2 செட் பள்ளி சீருடைகள் , 2 செட் சீருடைகள் வாங்கத் தேவையான பணத்தை, மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சிபிஎஸ்இக்கு இணையாக, மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வித் தரம் உயர்த்தப்படும். மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள சனிக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய 30 மணி நேரம் கொண்ட சிடி வழங்கப்படும். அதில் பாடத் திட்டங்கள் அடங்கும். 54 ஆயிரம் கேள்விகள் அதில் இடம்பெற்றிருக்கும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பள்ளிகளில் யோகா கட்டாயம்: மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
தேசிய அளவிலான யோகா கொள்கையை வகுத்து, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல், 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகா மற்றும் சுகாதாரக் கல்விக்கான பாடப் புத்தகங்களை வழங்க மனித வள மேம்பாட்டுத் துறை, என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ, என்சிடிஇ ஆகியவற்றுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி எம்.பி.லோகுர் தலைமையிலான பெஞ்ச், இம்மனுவையே கோரிக்கையாகக் கருதி, இவ்விவகாரம் குறித்து 3 மாதத்துக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என கடந்த நவம்பரில் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகாவை கட்டாயப் பாடமாக்குவது குறித்த மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்த மனுவை நீதிபதி எம்.பி.லோகுர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது நீதிமன்றத்தின் தரப்பில், ''மத்திய அரசே இது குறித்து முடிவெடுக்க வேண்டும். பள்ளிகளில் என்ன கற்பிக்க வேண்டும் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. அது எங்களின் வேலையும் இல்லை. எங்களால் எப்படி வரையறை செய்ய முடியும்?'' என்று கேள்வி எழுப்பியது.
அத்துடன், ''பள்ளிகளில் என்ன கற்பிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை உரிமை கிடையாது'' என்றும் நீதிபதிகள் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தமிழக கல்வித்துறை அடுத்த 2 மாதங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் : பள்ளி கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன்
போர்க்கொடி..! கல்வி செயலரை மாற்ற எதிர்ப்பு -சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி
தமிழக பள்ளிக் கல்வி துறை, பல ஆண்டுகளாக, பாடத்திட்டத்தை மாற்றாமலும், நவீன தொழில்நுட்பத்துக்கு மாறாமலும், தடுமாறி வந்தது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தும், எந்த மாற்றமும் நிகழாமல் இருந்தது.
பாராட்டு :
இந்நிலையில், பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டையனும், செயலராக உதயசந்திரனும் பொறுப்பேற்ற பின், தேசிய அளவில், தமிழக பள்ளிக் கல்வி துறைக்கு, புதிய பிம்பம் கிடைத்து உள்ளது. 14 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த பாடத்திட்டத்தை புதுமைப்படுத்தும் பணிகள், துரிதமாக நடந்து வருகின்றன. தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமே, தமிழக அரசின் முயற்சியை பாராட்டி உள்ளது. மார்ச், 6ல், பள்ளிக்கல்வி செயலராக பொறுப்பேற்ற உதயசந்திரன்,அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை படி, நேற்று வரையிலான,155 நாட்களில், எண்ணற்ற பணிகளை துறையில் செய்துள்ளார்.இந்நிலையில், பெற்றோர், மாணவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், செயலர் உதயசந்திரனை இடம் மாற்றம் செய்ய, முதல்வர் பழனிசாமி அரசிடம், சிலர் அழுத்தம் தருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பல்கலை துணைவேந்தர்கள், பள்ளி தாளாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினர், மாணவர் பேரவையினர் என, அனைத்து தரப்பினரும், அதிர்ச்சி அடைந்துள்ளனர். 'செயலர் உதயசந்திரனை மாற்றக்கூடாது' என, அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் வலியுறுத்த துவங்கிஉள்ளனர்; இதுதொடர்பாக, அரசுக்கு கடிதங்களும் எழுதி வருகின்றனர்.
துவக்கம்:
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தேசிய அளவில், 'கோமா' நிலையில் இருந்த, தமிழக பள்ளிக் கல்வி துறை, அதிலிருந்து மீண்டு, நாட்டிற்கு முன்மாதிரியாக மாறுவதற்கான பயணத்தை துவக்கி உள்ளது. தற்போது, நடுவழியில் கப்பலை கவிழ்த்து விடுவது போல, பள்ளிக்கல்வி செயலரை மாற்றும் முயற்சியில், அரசியல்வாதிகளும், வணிக நோக்கில் செயல்படும் ஏஜென்டுகளும், அரசுக்கு அழுத்தம் தருவது தெரிய வந்துள்ளது. அவர் மாற்றப்பட்டாலோ அல்லது அவரதுசெயல்பாடுகளை முடக்கினாலோ, தமிழகத்தில் படிக்கும், 1.5 கோடி மாணவர்களின் எதிர்காலம், மீண்டும் இருளில் தள்ளப்படும். இது போன்ற அதிகாரிகளுக்கு, கூடுதல் ஆதரவு கொடுத்து, பணிகளை முடிக்க, அமைச்சரும், அரசும் உதவ வேண்டும். மாறாக, சுய கவுரவம், லஞ்சம், ஊழலில்ஈடுபடுவதற்காகவும், யாரையாவது திருப்திபடுத்தவும், அவரை மாற்ற முயற்சித்தால், முதல்வர் பழனிசாமியின் அரசு, மாணவர்களுக்கு துரோகம் இழைப்பதாகி விடும். எனவே, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், செயலர் உதயசந்திரனின் கூட்டுப் பணி, துறையில் தொடர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டணியின் 155 நாள் சாதனைகள் :
* பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், தனியார் பள்ளிகள், வியாபார பொருளாக பயன்படுத்திய, மாநில, மாவட்ட, 'ரேங்க்' முறை, அதிரடியாக ஒழிக்கப்பட்டது.
* மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார்பள்ளிகளில், ஏழை மாணவர்கள் இலவச இடம் பெற, 'ஆன்லைன் அட்மிஷன்' முறை கொண்டு வரப்பட்டது.
* புதிய கல்வி ஆண்டில், பள்ளிகள் திறந்து, பாதி பாடம் முடிந்த பின், ஆகஸ்டில் ஆசிரியர்களை இட மாற்றம் செய்யும் கவுன்சிலிங் முறை ஒழிக்கப்பட்டு, கல்வி ஆண்டு துவங்கும் முன்னரே, வெளிப்படையான இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
* 100 உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாகவும்; 150 நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
* டி.ஆர்.பி., எனப்படும், ஆசிரியர் தேர்வு வாரியத்தில், ஆன்லைன் விண்ணப்ப முறை கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்வு முறையும், விரைவில், 'ஆன் லைன்' மயமாகிறது.
* 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் திட்டமிட்டு படிக்கும் வகையில், பள்ளி திறக்கும் நாளிலேயே, பொது தேர்வு நடக்கும் தேதியும், தேர்வு முடிவு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* மதிப்பெண் சான்றிதழ்களின் விபரங்கள், தமிழில் அச்சிடப்பட்டுள்ளன. இந்த சான்றிதழ்களை, மத்திய அரசின் டிஜிட்டல் இணையதளத்தில்,பதிவிறக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* அண்ணா நுாலக நிர்வாகம் சீரமைக்கப்பட்டு, முதல் முறையாக, தமிழக அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியான ஆசிரியர்களை தேடிப்பிடித்து, விருதுக்கு பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
* கிடப்பில் போடப்பட்ட, சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ராமதாஸ் வலியுறுத்தல்
'நேர்மையாக செயல்படும் கல்வித் துறையின் இரு செயலர்களையும் இடமாற்றம் செய்யும் முடிவை, தமிழக அரசு கைவிட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலராக, உதயசந்திரன், மார்ச்சில் நியமிக்கப்பட்டார். அதன்பின், அத்துறை, புதிய பாதையில் பயணிக்கத் துவங்கியது. பொதுத் தேர்வுகளில், தர வரிசையை ஒழித்தது; பிளஸ் 1க்கும், பொதுத் தேர்வை அறிமுகம் செய்தது; பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான குழுக்களை அமைத்தது உள்ளிட்ட, உதயசந்திரனின் சிறப்பான பணிகளை மக்கள் அறிவர். அவர் பொறுப்பேற்று, ஐந்து மாதங்களே முடிந்துள்ள நிலையில், அவரை, அத்துறையிலிருந்து மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை,தமிழக அரசு துவங்கி உள்ளது. இதற்கு காரணம், ஆட்சியாளர்களின் ஊழலுக்கு, உதயசந்திரன் ஒத்துழைக்க வில்லை என்பது தான்.ஆசிரியர்களை இடமாறுதல் செய்வதில் எழுந்த சிபாரிசு பிரச்னையால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.பாரதியார் பல்கலையில் நடந்த ஊழல்கள் தொடர்பாக, துணைவேந்தர் கணபதி மீது விசாரணை நடத்த, உயர் கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவிட்டார். பெரியார் பல்கலை, திருச்சி பாரதிதாசன் பல்கலை ஆகியவற்றில் நடந்த ஊழல்கள் குறித்து, விசாரணை கமிஷன் அமைப்பதற்கான ஏற்பாடுகளையும், அவர் செய்து வருகிறார். அவரையும் மாற்ற முயற்சி நடப்பதாக தெரிகிறது.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படை தேவை, தரமான கல்வி வழங்குவது தான். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள, இரு அதிகாரிகளை மாற்றத் துடிப்பது கண்டிக்கத்தக்கது. பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட, கல்வி வளர்ச்சி சார்ந்த அனைத்து பணிகளும் பாதிக்கப்படும். எனவே, கல்வித் துறையின் இரு செயலர்களையும் இடமாற்றும் முடிவை, தமிழக அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
உதயசந்திரன் சாரை நீக்கக் கூடாது!' - வலுக்கும் ஆசிரியர்களின் குரல்!!
வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017
5,8ம் வகுப்புக்கு பொது தேர்வு?: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
ஆசிரியர் படிப்பை முடித்த 4 லட்சம் பேருக்கு பணி வழங்க எவ்வளவு ஆண்டுகள் ஆகும்?: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
வியாழன், 3 ஆகஸ்ட், 2017
புதன், 2 ஆகஸ்ட், 2017
பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான TNTET லிருந்து முழு விலக்கு தொடர்பான அரசாணை தமிழக அரசு விரைவில் வெளிவிடும்" என தமிழக பள்ளி வளர்ச்சி ஆசிரியர் குழுமம் நம்பிக்கை.
செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017
நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களின் எதிர்காலம் என்ன?
ஆசிரியர்கள் உபரியாக பணியாற்றும் நிலையினைக்கருத்தில் கொண்டு உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை ,ஊராட்சி ஒன்றிய /நகராட்சி தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணீயிடங்களில் தற்காலிகமாக மாற்றுப்பணிபுரிய (Deputation) நியமிப்பது என்பதாகும்.
இதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட்டத்தில் நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் என கண்டறியப்பட்ட ஆசிரியர்கள் ,ஊராட்சி ஒன்றிய /நகராட்சி தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடத்தில் மாற்றுப்பணிபுரிய உத்திரவிட்டு,அவ்வாணை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பொதுவாக வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
காரணம் போதிய மாணவர்கள் இல்லாத பள்ளியில் ஆசிரியர்கள் மட்டும் பணியாற்றுவதும் அதற்கான ஊதியத்தை அவர்கள் பெறுகிறார்கள் என்பதும் நடைமுறைக்கு முரணானதே. மேலும் அவ்வாறு மாற்றுப்பணிபுரிய ஆணைபெற்ற ஆசிரியர்கள் பலரும் இதனை மனமுவந்தே ஏற்றனர் என்பதும் கண்கூடு. எனினும் இதனை ஓர் தற்காலிக தீர்வாக மட்டுமே நாம் கருதுகிறோம்.இதற்கான நிரந்தரத்தீர்வை அரசு எடுக்க வேண்டும் என்பதே நமது அவா,
ஏனெனில் மாற்றுப்பணிபுரிய உத்திரவிட்ட காலிப்பணியிடங்கள் அரசால் நிரப்பப்படும்போது இவ்வாசிரியர்களின் நிலை என்ன என்பதும் கேள்விக்குறியே.
மீண்டும் ஆசிரியர்கள் அவரவர் தாய்ப்பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டால் அப்போதும் உபரி ஆசிரியர்களின் நிலை என்ன? மேலும் தற்போது மாற்றுப்பணி புரியும் இடத்தில் ஆசிரியர்களால் மாணவர்களுக்கோ, மாணவர்களால் ஆசிரியருக்கோ, பள்ளி நிர்வாகத்தினை நடைமுறைப்படுத்துவதில் தலைமை ஆசிரியருக்கும் பிற ஆசிரியருக்கும்,மற்றும் ஊர் பொதுமக்களால் ஏற்படும் பிரச்சினைகள் போன்ற காரணங்களால் ஏதாவது எழும் பிரச்சினை காரணமாக அவ்வாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டிய சூழல் ஏற்படின் , அதனை நடைமுறைப்படுத்துவது கல்வித்துறை அதிகாரிகளா? அல்லது அவர் சார்ந்த பள்ளியின் தாளாளரா என்பதில் பெரும் குழப்பம் நேரிட வாய்ப்புள்ளதாக நாம் கருதுகிறோம். அதுமட்டுமில்லாமல் மாற்றுப்பணி என்பதால் ஆசிரியர் ,’தான் எத்தனைக்காலம் இப்பள்ளியில் பணிபுரிவோம்’ என்பது அவருக்கே தெரியாத நிலை.மேலும் இது ’தன் பள்ளியல்ல’ என்ற மனநிலையால் கொடுக்கப்பட்ட பணியினை சிறப்பாக செயதில் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.மேலும் ’இங்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டால் ,நம் பணி அடுத்து எங்கே’ என்ற ஒரு வித இரண்டும் கெட்டான் மன நிலையுடன் , பணிப்பாதுகாப்பு இல்லாத ஒருவித பயத்துடன் பணியாற்ற வேண்டிய கட்டாய நிலைக்கு அவ்வாசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இக்காரணங்களை கருத்தில் கொண்டு தொடக்கக்கல்வித்துறை இப்பயத்தினை போக்கும் நிலையை மேற்கொள்ள வேண்டும் என்பதே நம் கோரிக்கையாகும். கல்வித்துறையில் பல மாற்றங்களை செயல்படுத்திவரும் மாண்புமிகு அமைச்சர்,மதிப்புமிகு கல்வித்துறை செயலர், மரிஒயாதைக்குரிய தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் ஒன்றிணைந்து ஆலோசித்து இப்பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு. ஆசிரியர்கள் உபரியாக பணியாற்றும் பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு, அப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விருப்பத்தின் அடிப்படையில்,எட்தனை பணியிடம் உபரி என கணக்கிடப்பட்டதோ அதற்கேற்றார்போல் விருப்பம் தெரிவித்தா அசிரியர்களில் பணியில் மூத்தோரை அரசுப்பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நிரந்தரமாக பணிமாற்றம் செய்வதே (பணி ஈர்ப்பு) இதற்கு நிரந்தர் தீர்வாக அமையும்.
மூத்தோரை ஈர்க்க கோருவதன் அவசியம் என்னவெனில் இவ்வாண்டு பணியில் இளையோர் பணிமாற்றம் செய்யப்பட்டால் அவர் ஒன்றியப்பள்ளியில் இளையோராக கருதப்படுவர் ஆனால் எதிர்வரும் ஆண்டுகளில் இதேபோல் உபரி ஆசிரியர்கள் ஈர்க்கப்பட்டால் நிதி உதவிப்பள்ளியின் இன்றைய மூத்தோர் எதிர்வரும் காலத்தில் ஒன்றியத்தில் ஏற்கனவே பணி மாற்றம் பெற்ற இளையவரைவிட நிதி உதவிப்பள்ளியில் மூத்தவரான இவர் இளையவராக பணியேறகும் சூழல்கள் உருவாகும்.
எனவே இம்முரண்பாடுகள் ஏற்படாவண்ணம் அரசும். தொடக்கக்கல்வித்துறையும் இணைந்து தற்போது நிதி உதவி பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை நிரந்தரமாக அரசின் ஒன்றிய /நகராட்சி தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் பணி ஈர்ப்பு செய்து நியமித்திட வேண்டுகிறோம்.
அரசின் இந்த நடவடிக்கையால் நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு பேணிக்காப்பதுடன், அவர்களின் எதிர்கால வாழ்க்கை குறித்தான பயத்தினையும் போக்கும் என்பது மட்டுமல்லாது., மாணவர்கள் போதுமான எண்ணிக்கையுள்ள ஒன்றிய பள்ளிகளுக்கு உள்ள ஆசிரியர் தேவையினை உடனடியாக பூர்த்தி செய்திடும் வகையில் நிரந்திர தீர்வாக இது அமையும் என்பதால் இதனை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதே நமது அவா,.
கல்விப்பணியும் மாணவர் நலமும் பேண ...... ..முடிவு அரசின் கைகளில்
அரசு ஊழியர்களே 7வது சம்பள கமிஷன் தான் கடைசி.. அடுத்த ஆண்டு முதல் வருடந்தோறும் ஊதிய உயர்வு!
சம்பள கமிஷன் ஒன்றை அமைத்து 10 வருடத்திற்கு ஒரு முறை மத்திய அரசுஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அளிப்பதற்குப் பதிலாக வருடந்தோறும் ஊதிய உயர்வு அளிக்கும் முறையைத் துவங்கஉள்ளது.எப்படி அரசு ஊழியர்களின் சம்பளங்கள் மாற்றி மதிப்பாய்வு செய்யப்படும்? மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் இனி வருடந்தோறும் தனியார் ஊழியர்களைப் போன்று மதிப்பாய்வு செய்யப்படும். எனவே இனி மத்திய அரசு ஊழியர்கள் சம்பள கமிஷனுக்காக 10 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே கொடுப்பனுவுகளை எளிதாக மாற்றி அளிக்கப்படும். மத்தியரசு ரூபாய் மதிப்பு மற்றும் பணவீக்கத்தினை வைத்துச் சம்பளத்தினை மதிப்பாய்வு செய்யும்.
ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு
அக்ரோரிட் சூத்திரம் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை மதிப்பாய்வு செய்யும் போது அரசாங்கம் அக்ரோரிட் சூத்திரத்தை கருத்தில் கொள்ளும். இந்தச்சூத்திரம் ஒரு பொதுவான மனிதனின் அன்றாடச் செலவுகள் எப்படி அதிகரித்துள்ளதோ அதைப் பொருத்துச் செயல்படும்.10 வருடங்கள் காத்திருக்க வேண்டியதில்லை மத்திய அரசு ஊழியர்கள்சம்பள உயர்வுக்காகப் பத்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. பின்னர் அரசாங்கம்ஊதியக் கமிஷன்களை ரத்துச் செய்ய முடிவு செய்தால், இனிபத்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு
அரசாங்க ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் சம்பளம் திருத்தம் பணவீக்கத்தைச் சார்ந்தது. இது ஓய்வூதிய காரணிக்கும் பொருந்தும். 7 வது சம்பள கமிஷனை உருவாக்குவதற்கான முடிவு கடைசியாக மத்திய அரசுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்? காலம் பதில் சொல்லும்.
-
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி வாரியமான, டி.ஆர்.பி., மூலம், 1,500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, ஒரு ...
-
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில்"தமிழ் கற்பித்தலில் அடிப்படைத் திறன்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் இரண்டு ந...



















