மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர்
செங்கோட்டையன் கூறியுள்ளார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டில் ஒரு சிம் ஒன்றை பொருத்தியிருக்கிறது. இதன் மூலம் பள்ளிக்கு வரும் மாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வருவதற்கு முதல்வர் அவர்கள் 110 விதியின் கீழ் அறிவித்திருக்கிறார்கள்.
இதனால் அதன் பணிகள் விரைவில் நடைபெறும். அதேபோல் ஏரத்தாழ 6,029 பள்ளிகள் அனைத்திலும் கம்ப்யூட்டர் மயம் ஆக்கப்பட்டு, மாணவர்களுக்கு சிறந்த கல்வி தரவும் இந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்காக ஏறத்தாழ ரூ.462 கோடி நிதிஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசை பொறுத்தவரையில் புதிய புதிய திட்டங்கள் கொண்டு வந்து தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு திடீரென அறிமுகப்படுத்தும் புதிய தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் ஏறத்தாழ 54000 கேள்விகள், வரைபட த்துடன் அதற்குள்ள விடைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்க நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறோம்.
உயர்மட்ட குழுவின் ஆலோசனையை பெற்ற பிறகு, முதன்மை பள்ளி கல்வித்துறை செயலர், இயக்குநர் உள்ளிட்டோருடன் கலந்து பேசி அதன் பிறகு 1 மாத காலத்தில் வெளியிடப்படும். அந்த வெளியீடு மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் என்றும், எந்த பொதுத் தேர்வு வந்தாலும் மாணவர்கள் அதை எதிர்கொள்ளும் அளவில் வழிகாட்டியாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுபோல் எந்த தேர்வாக இருந்தாலும் அதை சந்திப்பதற்கு 412 இடங்களில் புதிய மையங்கள் அமைக்கப்பட்டு விடுமுறை நாளாக இருக்கும் சனிக்கிழமை அன்று ஏறத்தாழ 3 மணி நேரம் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சிறந்த பயிற்சியாளரை தேர்வு செய்து பயிற்சி அளிக்க இருக்கிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக